Hi friends,
1. கடமைகள்
தியானம் என்பதே மிகச் சிறந்த அந்தரங்க நிலை. அதற்கு அநுகூலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை. அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் என்பவை. எவருக்கும்,
எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனசை அன்புமயமாகச் செய்து கொள்வது அஹிம்சை.
மனம், வாக்கு, காயம் மூன்றையும் உண்மையிலே ஈடுபடுத்துவது சத்தியம்.
அஸ்தேயம் என்றால் 'திருடாமல் இருப்பது' என்று அர்த்தம். அதாவது, பிறர் பொருட்களில் ஆசையே எழாதபடி வைராக்கியமாக இருப்பது.
சௌசம் என்றால், தூய்மைப்படுத்திக் கொள்வது. ஸ்நானம், மடி, ஆச்சாரம், ஆகாராதிகளின் சுத்தி எல்லாம் சௌசத்தில் அடங்கும்.
இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்களை அவற்றின் போக்கில் விடாமல் ஒவ்வொர் இந்திரியத்துக்கும் இவ்வளவுதான் ஆகாரம் கொடுப்பது என்று நிர்ணயமாக வைத்துக் கொள்வது. 'கண் இதைப் பார்க்கக்கூடாது. வாய் இதைத் தின்னக்கூடாது. இதைப் பேசக்கூடாது. வாய் தின்னக்கூடாது. இதைப் பேசக்கூடாது. உடம்பு இந்தப் பாவத்தை செய்யக்கூடாது' என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய நிக்ரஹம்.
சாதனை செய்வதற்காக மட்டுமே சரீரம் வேண்டும். சரீரம் உயிர் வாழ்வதற்காக இந்திரியங்களுக்கு எவ்வளவு அதம பட்சம் தீனி கொடுக்க வேண்டுமோ அவ்வளவே கொடுக்க வேண்டும்.
அந்த ஐந்தும் 'சாமானிய தர்மங்கள்' எனப்படும்
CORRECT YOURSELF
நாம் நான்கு வழிகளில் பாவங்கள் செய்கிறோம். உடலினால் தீய காரியங்கள் செய்வது, வாயினால் போய் பேசுவது, சொல்லத்தகாத வார்த்தைகளை சொல்வது, மனதில் கெட்ட எண்ணங்களை நினைப்பது, பணத்தின் மூலம் பாவச் செயல்களைச் செய்வது. இந்த நான்கின் மூலமாகவே நன்மை செய்ய நாம் பழக வேண்டும்.
மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்கோ, கடவுளுக்கு தொண்டு செய்வதற்கோ உடலைப் பயன்படுத்தலாம். வாயினால் பகவானின் நாமங்களை உச்சரிக்க வேண்டும். மனம் தான் கடவுள் குடி கொள்ளும் இடம்.
அதை நாம் ஒர குப்பைத்தொட்டியாக்கிவிட்டோம். அதை சுத்தம் செய்து கடவுளை வீற்றிருக்க செய்ய வேண்டும். அவ்வாறு செய்து நிம்மதியாக இருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடமாவது நாம் தியானம் செய்யலாம். பணத்தினால் ஏழைகளுக்கு உதவி செய்யலாம். கடவுளுக்கு தொண்டு செய்யும் காரியங்களுக்காகச் செலவிடலாம்.
- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

No comments :
Post a Comment