Friday, December 27, 2019

சிரிப்பு வெடிகள் - 5

1. டாக்டர், நீங்க சொன்ன மாதிரி தினம் அல்வா சாப்பிடறேன், இருந்தாலும் தொப்பை குறைய மாட்டேன் என்கிறது.

நாசமாப் போச்சு. நான் அளவா சாப்பிடச் சொன்னேன் சார்.
***************

2. பேஷண்ட் : டாக்டர்! நாலு நாளா ஒரே வயித்துவலி. என்னால பொறுக்கவே முடியல.

டாக்டர் : வயித்து வலி இருக்கும்போது உன்னை யாரும்மா 'பொறுக்கச்' சொன்னது?
*****************

3. சார்! என்னோட செக் புக் தொலைஞ்சு போச்சு!

பாத்து சார்! நல்லா தேடிப் பாருங்க. எவனாச்சும் உங்க கையெழுத்தப் போட்டு பணத்தை லவுட்டீரப் போறான்.

நான் என்ன லூஸா? இதுமாதிரி ஏதாச்சும் நடக்கும்னுதான் ஏற்கெனவே எல்லா செக்லயும் கையெழுத்துப் போட்டு வெச்சிட்டேன்.
*********************

4. சார், நீங்க கொடுத்த செக்கை பாங்க்லே போட்டேன், பணம் இல்லைனு திரும்பி வந்துடுச்சு.

பாங்க்லே பணம் இல்லைனா நா என்ன பண்ணுவேன் சார்?
****************

5. டாக்டர் : நீங்க நிறைய டிவி பாப்பீங்களோ?

பேஷண்ட் : இல்லையே டாக்டர்! நான் ஒரே ஒரு டிவிதான் பாக்கறேன்!
*****************

6. நீங்க ரொம்ப 'பேஸ்புக்'ல இருப்பீங்களோ?

எப்படிங்க கண்டுபிடிச்சீங்க?

பின்ன என்னங்க, பேங்க் 'பாஸ்புக்'-க நீட்டி, "இதுலே கொஞ்சம் லைக் பண்ணி கமெண்ட் பண்ணுங்க"-னு சொல்றீங்களே?!
*************************

7. என் மனைவி என்கூட பேச மாட்டேங்கறா ஜோசியர் சார்.

ஐயோ, இது மாதிரி ஆயிரத்திலே ஒருத்தருக்குத்தான் அமையும்.
********************

8. வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?

கிராமத்தான் : கயிற்றாலே தான்.
********************

Sunday, December 22, 2019

சிரிப்பு வெடிகள் - 4

1. இருட்டுலே எதைப் பார்த்தாலும் பயமா இருக்கு டாக்டர்.

இருட்டுலெ எதுவுமே தெரியாதே, அப்புறம் எதைப் பார்த்து பயப்படறீங்க?
***********

2. மனைவி: என்னங்க, உங்களுக்கு ஒரு கோடி ரூபா லாட்டரிலே பரிசு கிடைக்குது. அன்னிக்கு என்னை ஒருத்தன் கடத்திக்கிட்டு போயி, ஒரு கோடி ரூபா கொடுத்தாதான் விடுவேன் என்கிறான். என்ன செய்வீங்க?

கணவன்: ஐயோ, ஒரே சமயத்திலே இரண்டு சந்தோஷத்தையும் தாங்க முடியாம, எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்.
*************

3. சார், என் பொண்டாட்டியைக் காணோம் சார்.

யோவ், இது போஸ்ட் ஆபீஸ்யா.

ஐயோ, சந்தோஷத்திலே எங்கே போறதுன்னு தெரியல்லையே.
***************

4. என்ன சார் ! அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டீங்க ? முன்னாடி குடுமி வெச்சுருந்தீங்கல்ல ?

இல்ல சார். நான் பின்னாடிதான் வெச்சுருந்தேன்.
*******************

5. போன வாரம் நா உங்களை ஜூலே [ஸூ] பார்த்தேனே.

அப்படியா, நா கவனிக்கல்லே. எந்தக் கூண்டிலே இருந்தீங்க?
******************

6. ஏன் சார், மிக்சர் பாக்கெட் என்ன விலை? 

பத்து ரூபாய்.

லூசுன்னா என்ன விலை?

எல்லோருக்கும் ஒரே விலை தான்.
**************

7. மனைவி: ஏங்க, நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா. அவருக்குப் பார்த்த பொண்ணு நல்லாவே இல்லை.

கணவர்: நான் ஏன் சொல்லணும்? பாவிப்பய எனக்கு அவன் சொன்னானா?
******************

8. டீச்சர்: உன் பேர் என்ன?

மாணவி: பொன்னி மிஸ்.

டீச்சர்: ஸ்வீட் நேம்.

மாணவி: ஸ்வீட் நேம் இல்லை மிஸ். ரைஸ் நேம்.
***************



Wednesday, December 18, 2019

சிரிப்பு வெடிகள் - 3

1) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"

"ஏன் கேக்கறே"

"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"

**************

2 ) நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்.., எக்ஸ்யாம்-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!!

*********************

3) உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.

*****************

4) உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே ஸ்பெலிஂக் சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

*****************

5) ( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க  அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா.

****************

6) நடிகர்: இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே.

******************

7) டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..

******************

8. ஒரு கணவனும் அவர் மனைவியும் ஹோட்டலில் ஏழாவது மாடியில் அறை எடுத்துத் தங்கினர். சிறிது நேரத்தில் கணவன் ரிஸப்ஷனுக்குப் போன் செய்தார்.

ரிசப்ஷன்: வணக்கம் சார், என்ன வேணும்?

கணவர்: எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை சார். அவ ஜன்னல் வழியாக வெளியே குதித்து விடுவேன் என்று என்னை பயமுறுத்துகிறாள் சார்.

ரிசப்ஷன்: சார் அது உங்க சொந்த விஷயம், நான் என்ன பண்ண முடியும் சார்?

கணவர்: முட்டாள், ஜன்னலைத் திறக்க வரவில்லை, அதுதான் போன் பண்ணினேன். சீக்கிரம் சரி பண்ணுங்க.


Tuesday, December 17, 2019

சிரிப்பு வெடிகள் - 2

1. "ஏன் சார் என் பையன அடிச்சீங்க?"

"ட்ராக்ல ரெண்டு தண்டவாளம் இருக்கே எதுக்குன்னு கேட்டா, ஒன்னு ஊருக்கு போக இன்னோன்னு திரும்பி வர'னு சொல்றான்"

***********

2. "எனக்கு சுகர் இல்லையாம்"

"யார் சொன்னா ? டாக்டரா ? நர்ஸா ?"

"ரேஷன் கடையில.."

*************

3) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?

"நாய்கிட்டதான் கேக்கணும் "

"அதாண்டா கேட்கிறேன் பதிலை சொல்லு!!"

*************

4) "சார், என்ன இது ?"

"கொஸ்டீன் பேப்பர்"

"சார், இது என்ன?"

"ஆன்சர் பேப்பர்"

"என்ன ஒரு அக்கிரமம் சார், கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு,

ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!

*************

5) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"

"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"

****************

6)""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"

"கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"

**************

7) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"

"அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"

***************

8) ( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!!

நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?

பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!!"

Monday, December 16, 2019

சிரிப்பு வெடிகள் - 1

1. "மன்னா,எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்"

"அரண்மனைக்கு நாம் ஏற்கனவே 'கான்கீரிட்' போட்டாச்சு,ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்!"
***********

2. 'தூக்கு மாட்டிக்கிட்ட சாந்தியோட புருஷன் லெட்டர்ல என்ன எழுதி இருக்காராம்?'

''என் ஆன்மா 'சாந்தி'அடையணும்னு யாரும் வேண்டிக்காதீங்கன்னுதான்!'
**********

3. "நீயே போஸ்ட் போட்டு.. நீயே லைக்கும் பண்ணிக்கிறே.. என்ன கருமம் இது..?!! "

"இதான் 'நமக்கு நாமே' திட்டம்"
**********

4. "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.

"அப்புறம்"

அப்புறம் என்ன........காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!
************

5. "நடிகை பேசினப்போ ஓவர் கூட்டம்.. !"

"தலைவர் பேசினப்போ...?"

"கூட்டம் ஓவர்...!"
************

6. "வீட்டைக் கட்டிட்டு மனசு படக் படக்குன்னு அடிச்சுக்குது?"

"ஏன் வாஸ்து சரியில்லையா..?"

"நிலமே யாருதுன்னு தெரியலையே"
************

7. "அப்பா நா ஸ்கூல் போமாட்டேன்... வேலைக்கு போறேன் பா"

"டேய்.. UKG ,படிச்சுண்டு என்ன வேல பாப்ப டா"

"LKG பசங்களுக்கு ட்யூஷன் எடுப்பேன் பா"
*************

8) அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி ஆக்ஸிடெஂட் ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

Friday, December 13, 2019

RANDOM THOUGHTS 616 TO 630

616. A doctor friend told me that if we are able to see our palm lines by holding our palm one foot away then cataract is not serious.

617. A loose motion may be due to indigestion. Diarrhea is infection & watery. Better to pass motion a few times to clear the infection.

618. Many people do not know the difference between diarrhea and dysentery. Diarrhea is loose motion and dysentery is with blood&mucus.

619. When a person suffers frequently from diarrhea, he should consult a gastroenterologist and undergo a colonoscopy and other tests.

620. The waist is the part of the body below the ribs and above the hip. The hip is the projection on both sides above the thigh bones.

621. Ideal couples use the same soap. Understanding couples use the soap of the same brand. Other couples use soap of different brands.

622. Some are of the view that their spouse is only to scratch their itching back when they are not able to reach it in their old age.

623. Among the mother, sister, wife, daughter and the DIL, who is the most important person in one's life? Can you put them in order?

624. The most critical period of life, both physical and emotional, is old age when only the DIL is the saviour. The wife comes next.

625. Mother during early life, wife during middle life and DIL during later life play a major role. Daughter and sister play minor role.

626. If a person fails to be in the good books of his DIL, no doubt, he will surely become a soup, be it tomato, corn, mushroom, etc.

627. In brahmin weddings, the gothram of the bride is changed and she is given to the groom as a gift. Other communities practice this?

628. Two trains cannot be on the same platform. Similarly, the parents of the bride and groom cannot live in the same house due to ego.

629. After giving the daughter or sister as a gift to the groom during the wedding, what obligations their people can expect from them?

630. Three best qualities of my DIL 1. She will never argue. 2. She will always say 'yes' dad. 3. She will get me anything immediately.



Thursday, December 12, 2019

AFTER ALL

After crossing 70 years in my life, what sort of feeling I have in me? You may find the following lines very interesting which I would like to share with you.

1) After my parents, siblings, spouse, children, and friends I have started to love myself. After all, my happiness is more important now.

2) I have realized that I am not the only one on earth. The world does not rest on my shoulders. After all, I am just another human being.

3) I have stopped bargaining with vegetables & fruits vendors. After all, a few Rupees extra is not going to burn a hole in my pocket but it might help the poor fellow.

4) I leave the cab/auto without asking for the change. The extra money might bring a smile on their face. After all, they are toiling much harder than me for a living.

5) I do not tell the elderly that they have already narrated that story many times. After all, telling the story makes them walk down their memory lane & relive the past.

6) I have learned not to correct people even when I know they are wrong. After all, the onus of making everyone perfect is not on me. Peace is more precious than perfection.

7) I compliment others freely & generously without any hesitation. After all, it is a mood enhancer not only for the recipient but also for me

8) I have learned not to bother about a crease or a spot on my dress. It came without my knowledge. After all, personality speaks louder than appearances.

9) I walk away from people who don't value me. They may lack how to evaluate. After all, they might not know my worth, but I do know what I am.

10) I remain cool when someone plays dirty politics to outrun me in the rat race. After all, I am neither a rat nor I am in any race with them.

11) I am learning not to be embarrassed by my emotions. Emotion is a part of life. After all, it's my emotions that make me human.

12) I have learned that it is better to drop the ego than to break a relationship. After all, my ego will keep me aloof whereas with relationships I will never be alone*.

13) Nowadays, I have learned how to live every day as if it's the last day of my life. After all, there may not be a tomorrow for me.

14) I am doing what makes me happy. After all, I am responsible for my happiness, and I owe it to me.


Wednesday, December 11, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1321 TO 1335

1321. பெண்கள் இரவில் தனியாக சாலையில் நிற்க நேர்ந்தால் 1091 அல்லது 7837018555 எண்ணை அழைக்ககவும். போலீஸ் உங்களை வீட்டில்  பத்திரமாக விடும்.

1322. அழகிய பெண் மானைப் போன்றவளே, இளமைப் பார்வையும் நாணமும் உடையவளே, இயற்கையிலேயே அழகான உனக்குப் பொருத்தமற்ற அணிகலன்களை அணிவது ஏனோ?

1323. "வீட்டுக்காரம்மாள் அந்த தெய்வம் போல தானே. அது கோயில் தெய்வம், இது குடும்ப தெய்வம். அங்கேயும், இங்கேயும், சரணாகதியே"  சரிதானே ஐயா?

1324. கட்டுபாடான வாழ்வுக்கு, கட்டுபாடான உணவு மகா அவசியம் என்பதை சித்தர்கள் வலியுறுத்தினர், ரிஷிகளும் ஞானிகளும் அப்படித்தான் வாழ்ந்தனர்.

1325. மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம். கற்பு நெறி உள்ள பெண் ஒருவனுக்கு மனைவியாக வாய்த்தால் அதை விட சிறந்த பெருமை அவனுக்கு வேறில்லை. 

1326. இரக்க குணம் பொருந்தி, தன் கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை செம்மையாக நடத்துபவளே உண்மையான மனைவி ஆவாள்.

1327. ஒரு தந்தையின் இறுதிக்காலங்களில் அவருடைய சில எண்ணங்கள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் மகனால் உணரப்படாத நேரங்கள் அவருக்கு மரண வேதனையே!.

1328. தான் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்பவர் சிலர். தான் கற்றது உலகளவு, கல்லாதது கைமண் அளவு  என்பவர் பலர். காலம் மாறிப் போச்சு.

1329. தாய், சகோதரி, மனைவி, மகள், மருமகள் இவர்களில் யார்   வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்று உங்களால் வரிசைப் படுத்திக் கூற முடியுமா?

1330. மனதைத் தொடுகிறது: "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி. என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா, என் உயிர் நின்னதன்றோ"

1331. மனதைத் தொடுகிறது: இல்லை என்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லை என்றால், மடி நிறைய பொருள் இருக்கும், மனம் நிறைய இருள் இருக்கும்.

1332. மனதைத் தொடுகிறது: விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன? உயிர் விட்டு விட்டால், உடல் சுட்டு  விட்டால் அதில் அடுத்த கதை என்ன?

1333. மனதைத் தொடுகிறது: எங்கே வாழ்க்கை தொடங்கும்? எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.

1334. மனதைத் தொடுகிறது: உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும்.

1335. மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. அதை தன்னம்பிக்கையுடன் அமைதியாய் ரசிக்கும்போது மகிழ்ச்சி தானே வந்து சேர்ந்துவிடும்!



Tuesday, December 10, 2019

PAKODA AS SIDE DISH

In the late 1960s, when I was a bachelor, I was residing near Pondy bazaar in T.Nagar, Chennai. I was having night dinner in the hotels mainly in Geetha cafe in Pondy bazaar. It was an unlimited meal for Re.1. If I bought tickets, then 30 tickets cost Rs.25. I used to buy one ticket book every month.

Daily at 7 PM, they put up a blackboard outside the hotel mentioning the items for the dinner. If it was to my liking, I would enter. Otherwise, I would go to another hotel until I finally settle in a hotel. Sometimes, for obvious reasons, I had to dine at Geetha cafe using the tickets.

Mr. Jayaraman was a regular and he used to come at the same time when I came. Sometimes, he sat beside me and we became friends. Later I came to know that he was my close friend's uncle. He was working in Sundaram Clayton and he was a great fan of Liz Taylor. 

I did not tell him I liked Gina Lollobrigida. He used to buy Pakoda regularly for a side dish. It was 25 paise for 100 grams. He used to give me a few pieces even if I rejected it for I did not want to get into a habit.

Slowly, I was caught in the vicious cycle. To reciprocate his gesture, I started buying on alternate days. It was wonderful to have pakoda as a side dish for a meal. That habit remained with me until I got married. After marriage, I left the habit with great difficulty as my wife cooked wonderful side dishes.

N.B. I came to know that Mr. Jayaraman has recently died. May his soul rest in peace.




Sunday, December 8, 2019

RANDOM THOUGHTS 601 TO 615

601. To know about a subject matter is knowledge. To distinguish whether it is right or wrong, good or bad, needed or not is wisdom.

602. The affection shown to a woman is called love, to a man is friendship, to a suffering person is kindness and to Almighty is bhakti.

603. According to Indian philosophy, the husband and wife are considered to be the two wheels of the same chariot which is called LIFE

604. In Hindu philosophy, when the couple performs household affairs which are Bhog (enjoyment) the wife stands left to the husband.

605. In Hindu philosophy, when the couple performs Dharmkarya and Puja which are called Yogh, the wife stands right to the husband.

606. In Hindu philosophy, while doing Yogh [auspicious] wife is right to the husband and while doing Bhog[inauspicious] she is on the left.

607. A few months back, I visited a close relative. At dinner time, the housewife placed 5 big silver plates for 5 people. How nice?

608. Silver is used for cutlery and utensils. It has antibacterial properties. It is healthy and prevents disease-causing bacteria.

609. If a person is successful in education and employment by sincere means, other people should emulate him instead of denouncing him.

610. People will throw a stone only on the fruit-bearing tree. It is natural there will always be opposition to a particular community.

611. I find many people are still cooking in Aluminium vessels even after becoming economically sound. It is not at all good for health

612. I am using the "Filcafe" coffee/tea maker. It is good and saves money. Oriental Enterprises, Phone 72990 29700 Mambalam, Chennai.

613. When I write something personal, some may feel apprehensive. It is just for motivation. I am an old soul and nothing to worry about.

614. All my snippets are written at the spur of the moment when random thoughts occur to me and when my mind is idle and not engaged.

615. I see only classical movies with subtitles. My preference is 1. Korean 2. Japanese 3. Russian 4. Turkey 5. Malayalam 6. Bengali.








Thursday, December 5, 2019

RANDOM THOUGHTS 586 TO 600

586. In case women get stranded during the night, they can call 1091 or 7837018555. The police will take them safely to their homes.

587. The irony of our culture is that people are constantly telling other people to go to hell but no one tells them to go to heaven.

588. When we grieve the death of a person, we think of all the things we did not do for our beloved one and not the things we had done.

589.  A man cannot perform his rituals without the presence of his wife by his side. Such is the status given to women in our culture.

590. While performing rituals, the wife should stand on his right for auspicious occasions and on his left on inauspicious occasions.

591. When performing rituals, sacred thread should be on his right for auspicious occasions and on his left for inauspicious occasions.

592. Human feelings are universal. It does not vary because of religion, caste, community or creed. Everyone feels in the same way. OMG

593. I am deaf. I use a hearing aid. Do you know, I can stop anyone from talking. But no one can stop me from talking. Can you guess how?

594. Hearing loss is a blessing in disguise. One will never get angry, emotional or sensitive. He will experience silence everywhere.

595. To have some physical defect is God's wish [Karma]. One should not worry too much about it. He should try to make humor out of it.

596. When I was not financially sound, I bought the cheapest vegetable even if I had to take the same vegetable for any number of days.

597. No one on earth can dispute a statement if it is made in first person singular ie 'I' or 'in my opinion'. It is a personal view.

598. It is heartening to see the Indians residing in an area in US, visiting mutually and dining together. Do we follow this in India?

599. Snowfall has started in the US. It is a beautiful sight. Coconut flakes are falling everywhere for a few inches. It will be severe later today.

600. Today, I checked the snowflakes fallen from the sky. It looks like foam and feels like stone salt. Salt will be used to dissolve it.



ANGER

Once, Shri Adhi Sankara was on his way seeking Biksha. He stood before a house and called "Bavathi Bikshaan Dhehi" meaning please give me alms.

A lady from the house came out and shouted at him. She said "You look hale and healthy. Why do you take alms? Why can't you work and earn?"

Adhi Sankara stood his ground without saying a word in reply. The lady accused him further with derogatory words with anger. 

Even then Sankara stood calmly. When the lady asked him "Don't you get what I say? Don't you have any brain? Don't you hear my words? Are you deaf?

Adhi Sankara told her, Mother, only if I am willing to receive, you can give anything to me. When I am not willing to receive, how can you give me? I am not receiving even your anger" Then he proceeded on his way to the next house.


Wednesday, December 4, 2019

THE INVITATION

Many years back, when I was young, a very close relative of my wife, fixed the wedding of his daughter. He sent me an invitation. But he failed to send the invitation to my mother. I was not happy. I decided not to attend the wedding. 

Meanwhile, my wife had talked to him over the phone and on her request, he sent an invitation to my mother. I sent my wife to the wedding but I did not attend. I firmly believe that an invitation is an honour and the elders in the family should be respected.

Whenever I send an invitation to a relative, I always mention the name of the elder person in the family or I send a separate invitation for the elder if he is a close relative. In the case of friends, we may or may not follow this rule.

Only important and close people should be invited. Everyone is not a relative or friend. Only people with blood relations are relatives and only people in whose family we have dined mutually are our friends. 

When invitees are reduced, the expenditure proportionately comes down. When I conduct a function in my house, I always see that the income is more than the expenditure and the gifts are 70% of the expense. I have a thumb-rule for finalizing the invitees. 

1. My parents and in-laws. 
2. Living sambandhis of parents.
3. My sambandhis. 
4. My brothers and sisters
5. Wife's brothers and sisters
6. Their married children.
7. Close friends. 
8. Neighbours. 

[friends and neighbours are invited only for the wedding day]

Tuesday, December 3, 2019

RANDOM THOUGHTS 571 TO 585

571. When a person helps another wholeheartedly who is happier? The person who extended the help should feel happier than the receiver.

572. I can only sympathize with people who keep their cellphones glued to their ears all the time without knowing its repercussions.

573. Why people have a peculiar tendency to show more of their love towards a person at the time of the departure than during the stay?

574. People use WhatsApp because it is free. Even the rich want it free. Mental balance is affected to go through hundreds of messages.

575. In every technological development, there are both good and bad effects. The human mind is attracted to the bad and not the good.

576. To err is human. To repent is great. The mind should come to normal. No point in crying over the spilt milk. It is a waste of energy.

577. Friend, take a book, just read two pages a day for a month. You will see the result. Then you cannot live without a book. I swear.

578. Selecting a DIL is more difficult than a SIL. If she is a good DIL, she is more than a daughter as she is quite new to your family.

579. When I suffered from Shingles, it was my DIL who applied medicines in my eyes every half an hour, 30 times a day, for 90 days.

580. All my deposits, renewal, remittance, withdrawal, taxes, insurance, medicines, food are taken care of by my DIL. What else I need.

581. My entire family knows my plus and minus. I keep no secrets. I am an open book. My mind gets relaxed and my confidence develops.

582. I adore my children.They worship me.We are east and west but not cat and mouse.We have to carry on till the end.It is God's wish!!

583. When I conduct a function in my house, I always see that the income is more than the expense and the gifts are 70% of the expense.

584. You are living with your son's family. His friend, also known to you, has invited him to his birthday party. Will you go or not?

585. The biological clock in our body is designed to our activities. If we do not sleep or wake up on time we will suffer from Insomnia.




Monday, December 2, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1306 TP 1320

1306. இளம் வயதில் பெரியவர்கள் நமக்குப் பாடங்கள் போதிக்கும் போது கற்கத் தவறினால் பிறகு வாழ்க்கையில் பாதிக்கும் போது கற்க வேண்டி வரும்.

1307. இறை தேடலும், இரை யாவதும், மறை படிப்பதும், நரை வருவதும், கறை போவதும், பிறை காண்பதும், திரை விழுவதும், பறை அடிப்பதும் இயற்கை நண்பரே.

1308. கசகசா,பார்லி,ஜவ்வரிசி சம அளவு அரைத்து,ஒரு முறைக்கு 30 கிராம் கஞ்சி வைத்து 3 மாதம் தினம் இரு வேளை சாப்பிட முதுகு வலி காணாமல் போகும்.

1309. பிரம்மாவுக்கு வணக்கம், அக்ிக்கு வணக்கம், பூமிக்கு வணக்கம், மூலிகைகளுக்கு வணக்கம், பேசும் சக்திக்கு வணக்கம், பகவான் விஷ்ணுக்கு வணக்கம், பரம்பொருளுக்கு வணக்கம்.

1310. எல்லாம் "கிரகச்சாரம்" என்று சொல்வது உண்டு. எந்த ராசியில் எந்த கிரகம் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்கிறது என்பது கிரகச்சாரம்.

1311. எத்தனை வெற்றி,தோல்விகள், எத்தனை மகிழ்ச்சி,துன்பங்கள், எத்தனை நண்பர்,பகைவர்கள்,எத்தனை உறவு,பிரிவுகள், எத்தனை பிறப்பு,இறப்புகள்.

1312. நல்ல மனிதர்களும், நண்பர்களும், தீய மனிதர்களும், பகைவர்களும் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளவும்.

1313. ஆசையும் பாசமும் மனிதனின் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணம். ஆனால் கௌதம புத்தர் துன்பத்திற்கு மட்டும் என்று கூறி உள்ளார். ஏன்?

1314. ஆசையும் பாசமும் மனிதனின் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணம் என்பது நம் எண்ணம். ஆனால் புத்தர் துன்பத்திற்கு மட்டுமே காரணம் என்கிறார்.

1315. குழந்தைகளுக்கு இதிகாசங்களும் புராணங்களும் சொல்லிக்கொடுத்து நமது கலாசாரமும், பண்பாடும் தழைத்தோங்கச் செய்வதே நமது தலயாய கடமை ஆகும்.

1316. நாம் நோய்வாய்ப்படும் போதுதான்  நமது உடலில் "உபயோகமில்லாத பாகம்" எதுவுமில்லை என்று நமக்கு நன்கு புரிகிறது,

1317. இலவசமாக எது நமக்குக் கிடைத்தாலும் அதைப் பெற்றால் அது சோம்பேறித்தனத்தை வளர்த்து விடும். உழைக்கும் சிந்தனையை மறக்க வைத்து விடும்,

1318. ஒரு மொழியில், ஒரு சொல் பல அர்த்தங்களைக் கொடுக்கும். எந்த இடத்தில், என்ன அர்த்தம் தருகிறது என்பதைப் புரிந்து கொண்டு எழுத  வேண்டும்.

1319. "வாச ரோஜா வாடிப் போகலாமா", "வா சரோஜா வாடி போகலாமா" ஆகிய இரு வரிகளும் வெவ்வேறு அர்த்தங்களைத் தருகிறதை நன்கு கவனித்து எழுத வேண்டும்.

1320. பெண்கள் தலைமுடியை முடியாவிட்டால் கெடுதல் என்பதற்கு திரௌபதியும், கண்ணகியும் உதாரணம். இறந்த வீட்டில் பெண்கள் தலை முடியமாட்டார்கள்.



Sunday, December 1, 2019

RANDOM THOUGHT 556 TO 570

556. When educated & well-placed people themselves are mad after free items, how can we find fault with the poor for accepting freebies?

557. Two ears drawn, facing each other, form a heart. Within the word heart, you get the ear. So lending the ear is a way to the heart.

558. Today is 'Thanksgiving day' in the US. Huge discounts are offered on products. People throng the shops day and night to buy them.

559. 'Thanksgiving' originated as a harvest festival.The first 'Thanksgiving Day' was proclaimed by President George Washington in 1789.

560. 'Thanksgiving' did not become a regular holiday. In 1863, Abraham Lincoln declared the last Thursday in November as Thanksgiving.

561. Abraham Lincoln declared it in 1863 as a day of "Thanksgiving and Praise to our beneficent Father who dwelleth in the Heavens"

562. Black Friday is the next day after Thanksgiving. It is called so because the shoppers created traffic accidents and even violence.

563. A language has its own beauty. To appreciate its beauty, one must-read. Without reading, one is in the dark without seeing light.

564. You can give me anything only if I am willing to receive it. When I am not willing, how can you give me, including your ANGER?

565. Culture means the manifestations of human intellectual achievement. Over time, some belief remains fixed and some subject to change.

566. One requires not more than 5 sets of dresses. It is a luxury. Why waste hard-earned money in accumulating dresses in the cupboard?

567. If children are on their spouse's side, parents should move away. If his wife is on children's side, the husband should move away.

568. An invitation is different from intimation. If received from a close person it is an invitation. Otherwise, it is just intimation.

569. On line, purchases are done only by the elite. If the "return option" is not extended, I think, no one will prefer to buy online.

570. Beware! Housing, children's education/wedding, parent's medical expenses, his retired living are to be planned when he is 35. OMG.