Monday, November 27, 2017

வயதான தந்தையின் வேதனை.

டேய், என்னைத் தெரியுதா? நான் தான் உன் அப்பாடா. எனக்கு இன்னைக்கு 85 வயசு ஆவுது. உனக்கு என் பிறந்த நாள் ஞாபகம் இருக்கா? டேய், உன் கூட பேசணும். உனக்கு நேரம் இல்லைனு எனக்கு தெரியும். உனக்கு பல ஜோலீ. பெண்டாட்டிய கவனிக்கணும், பிள்ளையைப் பாக்கணும், பல இடத்துக்கு போவணும். 

அப்பதான் பணம் பண்ண முடியும். நீ பணக்காரன் என்று எனக்கு தெரியும். உலகத்தில் உள்ள பணம் எல்லாம் உங்கிட்டெ இருக்கு. எனக்கு பல சௌகரியம் பண்ணி கொடுத்து இருக்கே. ஆனா நான் எத்தன நாளைக்கு இப்படியே படுத்துக்கிட்டு இருக்க முடியும்? 


எத்தன  நாளைக்கு மோட்டு வளைய பாத்துக்கிட்டு இருக்க முடியும்? இந்த பாட்டை எத்தன  நாளைக்கு கேட்டுக்கிட்டு இருக்க முடியும்? முதுகு எல்லாம் வலிக்கறதுடா. என்னைக் கொஞ்சம் தூக்கி பிடிச்சுக்கோ. கை எல்லாம் நடுங்குது. எதையும் கையாலே பிடிக்க முடியல்லெ. புத்தகம், போன் எதையும். 


கண்ணு சரியா தெரியல்லெ. எழுத்தெல்லாம் சின்னதா இருக்கு. படிக்க முடியல்லெ. வேலைக்காரி குடுக்கற கஞ்சி கசக்குது. மாத்திரை சாப்பிட்டு நாக்கெல்லாம் செத்துப் போச்சு. உன் அம்மா ஞாபகம் வருது. புண்ணியவதி போய் சேர்ந்துட்டா. அவ இருந்தா  சொர்க்கமா இருக்கும்.


கிட்ட வாடா. பக்கத்துல உட்காருடா. என்னைப் பாருடா. என்னோட கலங்கிய கண்ணைப்  பாருடா. என் முடியெல்லாம் கொட்டி போச்சு. தோல் எல்லாம் சுருங்கிப் போச்சு. கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு. வயசாயிப் போச்சு. என்னடா சிரிக்கரே. அதுலே கொஞ்சம் கூட பிரியத்தை  காணோமே.


தனிமை கொல்லுது. நான் உனக்கு அப்பாடா. என் வாழ்க்கை முடிஞ்சு போச்சுடா. உன் மேலே எவ்வளவு பிரியம் வைத்து இருந்தேன். உனக்காக எதையும் செய்வேன்டா. உன் கூட ஒரு நிமிஷம் இருந்தா போதும் எனக்கு. யாராவது என்னைப் போல கிழவன் செத்துப் போய்ட்டா ரொம்ப வருத்தப்படரே. 


உன் கண் முன்னாலே நான் செத்து கிட்டு இருக்கிறது உனக்கு தெரியெல்லே. யாராவது சின்ன வயசுலே செத்துப் போய்ட்டா  கண்ணுலே ரத்தம் வருது. ஆனா உன் கண் முன்னாடி நான் தினமும் கிழவனாகிறது உனக்குத் தெரியல்லெ. பணம் பண்ணுவதிலேயே  குறியா இருக்கே. 


நான் சாகும் போது கூட உன் மேல் உள்ள பிரியம் போகாதுடா. நாளைக்கு நான் இருக்க மாட்டேன். அடுத்த வாரம் சந்தேகம். எனக்காக நீ நிச்சயம் கண்ணீர் விடுவாய். என்னுடன் பேச வில்லையே என்று உன் நெஞ்சு வலிக்கும். உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன். உன் கண்ணீர் என் நெஞ்சைத் தொடும்.


நாம் இப்பொழுது உயிரோடு இங்கே இருக்கிறோம். நாம் இருவரும் மனம் விட்டுப் பேசுவோம் . தகப்பனும் பிள்ளையுமா இல்லை. ஒரு நல்ல நண்பரா  பேசுவோம். உனக்கு சில விஷயம்  நான் சொல்லணும். உன்னை பெற்றதே என் அன்பை உன்னுடன் பகிர்ந்து கொள்ளத்தான். ஆனா நீ வித்யாசமா  இருக்கே.


உன்னைப் பற்றி எனக்கு நல்லாத்  தெரியும். நீ என் மகன். உன்னை நான் மிகவும் விரும்புகிறேன். எனக்காக கொஞ்சம் என் அருகில் வா. உன் நெஞ்சைத் திறந்து பேசு. சீக்கிரம் வா. இந்தக் கடைசி நிமிடங்களில் நாம் ஒருவரை  ஒருவர் புரிந்து கொள்வோம். வா ராஜா வா.

Sunday, November 19, 2017

ஒரு ஹோட்டல் முதலாளியின் சிநேகிதம்.

1967 ம் வருடம் நான் சென்னை தியாகாராய நகரில் குடி இருந்தேன். பாண்டி பஜாரில் சாந்தா பவன் என்ற ஹோட்டல் ஒன்று உண்டு. இப்பொழுது அதற்கு பாலாஜி பவன் என்று பெயர். அப்பொழுது அது மிகச் சிறிய ஹோட்டல். பொருட்கள் வெளியே தயாரிக்கப்பட்டு இங்கே கொண்டு வந்து விற்கப் படும்மொத்தம் 6-8 மேஜைகள் தான். 

தரம் நன்றாக இருக்கும். அதனால் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட வேளையில் குறிப்பிட பொருட்கள் தான் கிடைக்கும். சாப்பாடு கிடையாது. டிபன் மட்டும்தான். சினிமா துறையைச் சேர்ந்த பல பெரும் புள்ளிகள் இரவில் இங்கு வந்து சாப்பிடுவார்கள். இரவில் ஹோட்டலுக்கு வெளியே மேஜை போட்டு வியாபாரம் நடக்கும். அங்கு தக்காளிச் சட்னி மிகவும் பிரசித்தம்.


ஹோட்டல் முதலாளியின் பெயர் தேஜு ஷெட்டி. 45 வயது இருக்கும். கொண்கனி நாட்டைச் சேர்ந்தவர். கரகரத்த குரலில் நன்றாகத் தமிழ் பேசுவார். பருத்த உடல், பெரிய தொப்பை, அழகில்லாத தோற்றம், உதடுகள் வெட்டுப் பட்டு இருக்கும். எப்பொழுதும் வெள்ளை உடை அணிந்து இருப்பார். என்னிடம் மிக சிநேகிதமாகப் பழகுவார். 


ஹோட்டலில் பொருட்களின் தரத்தைப் பற்றி அக்கறையுடன் விசாரிப்பார். எனது காப்பியில் சிறிது குடித்துப் பார்த்து தரத்தைப் பரிசோதிப்பார். ஹோட்டலில் என்ன முன்னேற்றம், மாறுதல் செய்யலாம் என்று கேட்பார். தொழிலில் அவருக்கு இருந்த அக்கறையும், கஸ்டமர்களிடம் உள்ள மரியாதையையும் நான் மிகவும் பாராட்டுவேன். 

சாப்பிட்டபின் பணம் கொடுக்காமல் நானோ, வாங்காமல் அவரோ இருந்ததில்லை. 

என் வேண்டுகோளை ஏற்று இரண்டு கடை தள்ளி இருந்த ஹோட்டல் ஒன்றை வாங்கி சாப்பாடு போட்டு நல்ல முறையில் நடத்தினார். அந்த அளவு நேர்மையாகவும், பக்தியுடன் வியாபாரம் செய்வது கஷ்டம். சிறிது சிறிதாக வியாபாரத்தை மேலே கொண்டு வந்தார். நம்பிக்கை, நாணயமாக வேலை செய்ய சொந்த ஊரில் இருந்து ஆட்களை கொண்டு வந்து, ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, தங்க வைத்து,  சாப்பாடு  போட்டு, சம்பளம், விடுமுறை கொடுத்து கவனித்துக் கொண்டார்.


எல்லோரும் ஒரு குடும்பம் போல் வாழ்ந்தனர். பக்கத்து கடைகளை விலைக்கு வாங்கி, மாடியில் இடத்தைப் பெருக்கி, பெரிய ஹோட்டல் ஆக  மாற்றினார். வியாபாரம் நன்றாக நடந்தது. விலை ஏற்றம் செய்யும் போதெல்லாம் என்னிடம் விவரம் கூறுவார். லாப நஷ்டம், உணவில் விஷம் கலக்கும் ஆபத்து, பலருக்கு சாப்பாடு போடும் திருப்தி பற்றி பேசுவார்.


இடத்திற்கு வாடகை, வேலைக்காரர்களுக்கு சம்பளம், மூலப் பொருட்கள், பகடி, கடை  விஸ்தாரிப்பு செலவு, மின்சாரம், ஏஸீ, மேஜை நாற்காலிகள் பழுது பார்ப்பது, தேய்ந்து போன தரையை மாற்றுவது, மருத்துவ செலவு, கடன் பேரில் கட்டும் வட்டி என்று பலவிதமான கஷ்டங்களை என்னிடம் சொல்வார். 


ஹோட்டல் நடத்துவது, தினம் கல்யாணம் செய்வது போல். வெற்றியும் வரும் தோல்வியும் வரும். நடிகரின்  வாழ்க்கையைப் போல் இது நிரந்தரம் இல்லை என்று கூறுவார். ஏன் பல ஹோட்டல்கள் சீக்கிரம் மூடி விடுகிறார்கள் என்று எனக்கு அப்பொழுது புரிந்தது. 1974 இல் எனக்குத் திருமணமான போது எங்கள் இருவருக்கும் ஒரு விருந்து கொடுத்தார். 


அதன் பிறகு நான் திருவல்லிக்கேணி சென்று விட்டதால், அடிக்கடி ஹோட்டலுக்கு செல்வதில்லை. ஒரு நாள் போனபோது கடையை விற்று விட்டு சொந்த ஊருக்குச் சென்று விட்டார் என்று கேள்விப் பட்டேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. கொஞ்சம் வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. பிறகு அவரைப் பார்க்க முடியவில்லை. ஒரு நல்ல நண்பரை இழந்த வருத்தம் இப்பொழுதும் எனக்கு உண்டு. 

























  
  

Saturday, November 11, 2017

MY PRIDE VANISHED INTO THIN AIR / என் கர்வம் காற்றில் பறந்தது.

MY PRIDE VANISHED INTO THIN AIR
I belong to Tamil Nadu and I resided in Chennai for 50 years since 1967. To the extent of my knowledge, the standard of English was reasonably good in Tamil Nadu. For the past year, I am now residing in Hyderabad. The standard of English here is not so good and people mostly talked in Telugu or Hindi.

Yesterday, I went to a leading nationalized bank on some work. I met the branch manager who was a lady in her 40s. She was a Telugu but talked fluent English. She said she had worked in Erode in Tamil Nadu for 5 years and she knew Tamil also. During the talk, I told her that in the whole of India, only in Tamil Nadu, people could manage in English without knowing Tamil.


What she replied was a great shock to me. She said, "Sir, what you say is an old story. When I was in Erode, I suffered a lot, in dealing with people, without knowing Tamil. No one understood English and I had to learn Tamil with great difficulty." I had to cut a sorry figure before her. My pride about my native state vanished in thin air.


என் கர்வம் காற்றில் பறந்தது

நான் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன். 1967இல் இருந்து சென்னையில் 50 வருடங்கள் வாழ்ந்தவன். என் மாகாணத்தைப் பற்றி எனக்கு ஒரு கர்வம் உண்டு. 1990 வரை ஆங்கிலத்தில் மிகப் புலமை வாய்ந்தது. 

இப்பொழுது மூன்று வருடங்களாய் ஹைதராபாத்தில் இருக்கிறேன். இங்கு ஆங்கிலம் பலருக்குத் தெரியவில்லை. எல்லோரும் தெலுங்கும் ஹிந்தியும் தான் பேசுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு பெரிய வங்கிக்கு ஒரு வேலையாய்ப் போய் இருந்தேன். அங்கு தலைமை அதிகாரியை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு 40 வயது மதிக்கக்கூடிய மங்கை. அவர் தெலுங்கு பேசுபவர். 

ஆனாலும் நல்ல ஆங்கிலத்தில் பேசினார். பேசும் பொழுது, அவர் நல்ல தமிழிலும் பேசினார். தமிழ் நாட்டில் ஈரோடில் 5 வருடங்கள் வேலை பார்த்ததாகவும் அதனால் தமிழ் தெரியும் என்று சொன்னார். 

நான் சொன்னேன், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒன்றில் மட்டும் தான் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழ் தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் பேசி சமாளிக்க முடியும் என்று சொன்னேன்.

அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு மிக அதிர்ச்சியாய் இருந்தது. " சார், நீங்கள் சொல்வது ஒரு பழைய கதை. இப்பொழுது அப்படியில்லை. நான் ஈரோடில் வேலை பார்க்கும் பொழுது தமிழ் தெரியாமல் மிகவும் கஷ்டப் பட்டு விட்டேன். 

பலருக்கு ஆங்கிலத்தில் பேசினால் புரியவில்லை. அதற்காக நான் கஷ்டப் பட்டுத் தமிழ் கற்றுக்கொண்டேன்" இதை கேட்டு எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. தமிழ் நாட்டைப் பற்றிய என் கர்வம் காற்றில் பறந்தது.

Tuesday, November 7, 2017

யார் சிறந்த நடிகர்?

வெற்றி அடைந்து விட்டால் ஒருவர் சிறந்த நடிகர் இல்லை. அது அவரது வியாபாரத் திறமையைக் காட்டுகிறது. அவர் படம் அதிக நாட்கள் ஓடி விட்டால் அவர் சிறந்த நடிகர் இல்லை. அந்தப் படத்தில் மற்றவர்களின் பங்கு இருக்கிறது. 

சிலருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். நல்ல இயக்குநர்கள் அவரை நடிக்க வைத்து இருப்பார்கள். நல்ல தயாரிப்பாளர்கள் அவரை உபயோகப் படுத்தி இருப்பார்கள். நல்ல கதையோ, பாட்டோ அந்தப் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கும்.


எப்பொழுதும் கதாநாயகனாகவே நடித்து, ஒரு பெண்ணுடன் பல நாடுகளில் காதல் பாட்டுக்கள் பாடி, பத்து பேரை அடித்து வீழ்த்தி, "." வசனம் பேசி, ஊருக்கெல்லாம் நல்லவனாக நடிப்பவர் சிறந்த நடிகர் இல்லை. அவர் ஒரு சிறந்த வியாபாரி. மக்களின் ரசனையை நன்கு புரிந்து கொண்டவர்.


ஒரு திறமையான நடிகர் கதாநாயகன், வில்லன், அப்பா, சகோதரன், இளைஞன், வயதானாவன் என்று பலவிதமான பாத்திரங்களை ஏற்று, இயற்கையாக நடித்து, பல கோணங்களில் அந்தப் பாத்திரத்திற்கு உயிர் ஊட்ட வேண்டும். அவர் நடிப்பைப் பார்த்து மக்கள் உணர்ச்சி வசப் பட  வேண்டும்.


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். தமிழில் "ஆசை" என்று ஒரு படம். திரு. பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருப்பார். படத்தில் அவரைப் பார்த்தால் அவரைக் கொலை செய்ய வேண்டும் போல் ஒரு வெறுப்பை உண்டாக்குவார். அதற்குப் பெயர் நடிப்பு.


தனக்காக நடிக்காமல் பாத்திரத்திற்காக நடிக்க வேண்டும். ஓரளவுக்கு தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் அப்படி நடிக்கும்  நடிகர் தமிழ் நாட்டில்  திரு பிரகாஷ் ராஜ் ஒருவர் மட்டும் தான். ஹிந்தியில் அநுபம் கெர் .இது என் தாழ்மையான அபிப்பிராயம். உங்கள் அபிப்பிராயம் வேறு மாதிரி இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது?


Monday, November 6, 2017

HOW TO BE A GOOD GUEST? / நல்ல விருந்தாளியாக இருப்பது எப்படி?

HOW TO BE A GOOD GUEST?

There was a time, with no communication facility, friends and relatives longed to see each other once in a while and enjoy their company to develop love, affection, and intimacy. Now with modern development in communication people do not have the mind or means to visit the other. However, there are certain unwritten rules to be observed during a visit to have smooth sailing. 


1. The visit may be voluntary and or on the invitation. But it should be mutual.

2. The guest must get gifts for the host according to his status.
3. If there is a lack of space in the host's house, the guest must stay outside.
4. The guest should not visit when the host has another guest.
5. The guest should not visit during exam time for children.
6. The guest must come forward to share outside expenses with the host.
7. The guest must share the domestic chores with the host.
8. The guest must adhere to the timings, food habits etc of the host.
9. It is better to avoid discussions on controversial topics.
10. If the visit is for sightseeing, the guest should make his own arrangements.
11. The stay must not exceed 3 to 5 days covering weekends/holidays.
12. It is better not to give special attention to our family members.
13. We should ignore the fight, if any, among the children.
14. We must handle their household equipment with care and concern.
15.Any other welcome steps you are already following.

நல்ல விருந்தாளியாக இருப்பது எப்படி? 

சில வருடங்களுக்கு முன்பு வரை உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து மகிழ எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இப்போது அதற்கு நேரமில்லை மேலும் தொலைபேசியில் பேச முடிகிறதால் சந்திக்க ஆர்வமில்லை. நாம் நமது உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து, அவர்களுடன் தங்கி நமக்குள் அன்பு, பாசம், அன்நியோனியம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி அவர்களுடன் தங்கும் பொழுது சில வழி முறைகளைப் பின் பற்ற வேண்டும். அது ஒருவருக்கு ஒருவர் நல்ல உறவை ஏற்படுத்தும். 

1. தானாக அல்லது அழைப்பின் பேரில் நாம் போகலாம். ஆனால் அது பரஸ்பரமாக இருக்க வேண்டும்.

2. போகும் போது, நமது தகுதிக்குத் தகுந்தால் போல் பரிசுகள் வாங்கிச் செல்ல வேண்டும்.
3. அங்கு இடப் பற்றாக்குறை இருந்தால் வெளியே ஹோட்டலில் தங்குவது நல்லது.
4. அங்கு ஏற்கனவே ஒரு விருந்தாளி இருக்கும் போது,  போவது நல்லது அல்ல.
5. பள்ளி நாட்களிலும் பரிட்சை சமயத்திலும் போவதை தவிர்க்க வேண்டும்.
6. வெளியே செல்லும் போது,  ஆகும் செலவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
7. வீட்டு வேலைகளில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும்.
8. அவர்களுடைய நேரம், உணவுப் பழக்கம் முதலியவற்றை அனுசரிக்க வேண்டும்.
9. பிரச்சனைகள் வரும் விஷயங்களைப் பற்றி விவாதிக்காமல் இருப்பது நல்லது.
10.போவது, ஊர் சுற்றிப் பார்க்க என்றால், நாமே தனியாகப் போவது நல்லது.
11. அங்கு 3-5 நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது. விடுமுறை நாட்களில் செல்வது நல்லது.
12. தன்னுடைய குடும்பத்தைத் தனிப்பட்ட முறையில் கவனிப்பதை தவிர்க்க வேண்டும்.
13. குழந்தைகள் சண்டையை பெரிது படுத்தக் கூடாது.
14. அவர்கள் வீட்டுப் பொருட்களை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.
15. நீங்கள் ஏற்கனவே அனுசரிக்கும் வேறு நல்ல வழிமுறைகளைக் கடைப் பிடிப்பது நல்லது.





Sunday, November 5, 2017

ராமன் எத்தனை ராமன் ?

காலை மணி ஆறு . எழுந்தவுடன் பல் விளக்கி, முகம் கழுவி சாப்பாட்டு மேஜைக்கு வந்தேன். என் மனைவி காப்பி கொடுத்தாள். "அப்பாவிற்கு" என்றேன். "இன்னம் எழ வில்லை" என்றாள். 

காப்பியுடன் மெதுவாக அவர் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். அப்பொழுதான் விழித்திருப்பார் போல. என்னை பார்த்து மெலிதாக புன்னகை செய்தார். அந்த அழகே தனி. 


பணம், வசதி, நல்ல வகையான கவனிப்பு, சாப்பாடு, நிம்மதியான உறக்கம் மட்டும் தாய், தகப்பனை சந்தோஷப்படுத்தாது. அதற்கும் மேலே தன் பிள்ளைகளிடம் அவர்கள் எதிர்பார்ப்பது.


காப்பியை பக்கத்தில் வைத்துவிட்டு, அவரது வலுவற்ற புஜங்களுடன் சேர்த்து அணைத்து கையைப் பிடித்து நிற்க வைத்தேன். 85 வயதிலும் எல்லாம் தானே செய்து கொள்ள விரும்புவார். பிறர் உதவி பிடிக்காது, என்னைத் தவிர.  


என் மீது அவருக்குத் தனிப் பாசம் உண்டு. ஏன் என்றால் நான் ஒரு மகன் தான். மற்ற இருவரும் பெண்கள். அம்மா இல்லை. எழுந்து பல் விளக்கி நாற்காலியில் அமர்ந்தார். காப்பியைக் கொடுத்தேன். 


அவர் கைக்கு தாங்குவது போல் சூடு இருந்தது. அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி எதுவும் கிடையாது. அவர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். எனக்கு ஒரு ரோல் மாடல்.


குடித்து முடித்ததும் இரவு தூக்கம் பற்றி விசாரித்தேன். என்னப்பா, எப்படி இருக்கீங்க? சாப்பாடு டேஸ்டா இருக்கா? பேரன்,பேத்திகள் ஏதும் உங்களுடன் பேசினார்களா? இன்றைக்கு  உங்க பிறந்த நாளுப்பா! நான் ஆபிசுக்கு லீவு போட்டிருக்கேன்பா.


அதான் உங்களுக்குப் பிடிச்ச லைட் ரோஜா கலர்ல ஒரு சட்டை, சிம்பிளா ஒரு 4 முழ வேஷ்டி வாங்கியிருக்கேன். உங்க பிறந்த நாளுக்கு, காலைல நம்ப தெரு பிள்ளையார் கோவிலில் காலை, மதியம் இரண்டு வேளை அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்கேன்.


சாயந்திரம் உங்களுக்கு புது கண்ணாடியும், நீங்கள் கேட்ட புத்தகமும் ஆர்டர் பண்ணி இருக்குப்பா. அவருக்கு பிடித்த பால் பாயசம் மனைவி செய்து இருந்தாள். அவர் குளித்த பின் கிளம்ப வேண்டும். வாளியில் சரியான சூட்டில் சூடுநீர் வைத்து விட்டு டவல்ஐ  கொடுத்து குளியல் அறைக்கு அனுப்பி வைத்தேன். 


நான் செய்த ஏற்பாடுகளை கேட்டு மனதில் சந்தோஷப் படுவார். அன்ன தானம் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஏழைகளை கண்டு இறங்கும் குணம் அவரது.  என் கையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் வந்து அமர்ந்தார். மூக்குக் கண்ணாடியைத் துடைத்து விட்டு அவருக்குப் போட்டு விட்டேன். இதோ இன்னம் சிறிது நேரத்தில் கிளம்ப வேண்டும். அப்புறம் பார்க்கலாமா?

குழந்தைகளை யார் கெடுத்தது?

நான் என் குழந்தைகளின் தாயார். நீ பாட்டி. நீ அவர்களுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறாய். நீ அவர்களுக்கு இல்லை என்று சொல்வதே இல்லை. நான் கண்டிப்பாக வளர்க்க நினைத்தால் அதை நீ கெடுக்கிறாய். தானே பல் தேய்க்க, தலை வாரிக் கொள்ள, தானே சாப்பிட, தானே ட்ரெஸ் போட்டுக்க, நேரத்துக்குத் தூங்க, வீட்டுப் பாடத்தை எழுத. எல்லாவற்றிலும் நீ தலை இடுகிறாய்.

நான் அவர்கள் கெட்டுப் போவதை விரும்பவில்லை. அவர்கள் நல்ல குழந்தைகள் ஆக வளர வேண்டும். அவர்களுக்கு டிசிப்லின் வரணும். தானே எல்லாவற்றையும் செய்து கொள்ள, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க, பகிர்ந்து கொள்ளத் தெரியாது. அவர்கள் குழந்தையாய் இருந்த போது தானே தூங்க வேண்டும் என்று நான் நினைத்தால், நீ அவர்களை தோளில் போட்டு தூங்கப் பண்ணுவாய்.


அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனே ஓடுகிறாய். எப்படி அவர்கள் தானே செய்து கொள்வார்கள்? அவர்களுக்கு நிறைய பரிசுகள் கொடுக்கிறாய். அவர்கள் அதை பார்த்து சந்தோஷப் படுகிறார்கள். அந்த மாதிரி என்னால் கொடுக்க முடியாது. என்னை பற்றி என்ன நினைப்பார்கள்?


பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வந்தால் உடனே அவர்களிடம் ஓடுகிறாய். அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, பணியாரம் எல்லாம் செய்து கொடுக்கிறாய். அதனால் அவர்கள் எப்பொழுதும் உன்னிடம் வருகிறார்கள். எல்லாப் பாட்டிகளும் இப்படித்தான். குழந்தைகளைக் கெடுக்கிறார்கள். உன்னை ஊருக்கு அனுப்பி விடலாமா என்று கூட யோசித்தேன்.


நீ இறந்து போகும் வரை.


எப்படி அவர்களுக்கு சொல்வது? சாவு என்றால் என்ன வென்று தெரியாதே. நம்ப மாட்டார்களே. தினம் உன்னை நினைத்து அவர்கள் அழுகிறார்கள். இப்பொழுது எனக்கு புரிகிறது. அவர்களுக்கு நீ எவ்வளவு முக்கியம் என்று. உன்னை எவ்வளவு நேசித்தார்கள் என்று. இவ்வளவு சீக்கிரம் நீ இறப்பாய் என்று நான் நினைக்கவில்லை.


இப்பொழுது அவர்கள் யார் உதவியும் இல்லாமல் எல்லா வேலைகளையும் தானே செய்து கொள்கிறார்கள். நல்ல மார்க்கு வாங்குகிறார்கள். படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். உன் சமையல், சாப்பாடு, கதைகள், அன்பான வார்த்தைகள், கை மருந்துகள், எல்லாவற்றையும் விட உன் அன்பு எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள்.


நான் தவறு செய்து விட்டேன். உன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உன்னை நினைத்து என் குழந்தைகள் ஏங்குகின்றன. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக இருக்கும் பாட்டி நீ. உன்னுடைய அறிவுரை, கவனிப்பு, அன்பு அவர்களுக்கு இப்பொழுது கிடைக்க வில்லை.


இப்பொழுது அவர்கள் வெற்றி காணும் பொழுது உன்னை நான் நினைக்கிறேன். உன்னைக் கடும் சொற்களால் பேசியது என் தவறு. நீ உடனே திரும்பி வா. நான் ஒரு வார்த்தை கூட கடிந்து சொல்ல மாட்டேன். நீ அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் கொடு. எனக்கு சம்மதம். திரும்பி வா.


உன்னால் வர முடியாது என்று எனக்குத் தெரியும். அவர்கள் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகிறது என்று என்னை விட உனக்குத்தான் நன்கு தெரியும். அவர்கள் நம்பிக்கை, பயம், தனிமை எல்லாவற்றையும் பற்றி உனக்குத் தெரியும். வா. வந்து அவர்கள் எவ்வளவு மாறி விட்டார்கள் என்று பார்.


அவர்கள் கண்களைப் பார், புதிய உடைகளைப் பார், காற்றில் அவர்கள் முடி பறப்பதைப் பார், அவர்கள் வயது வந்தவர்களாக பொறுப்புடன்  இருப்பதை பார். நீ அவர்களை விட்டுப் போகவில்லை. அவர்களுடன் நீ சந்தோஷமாக இருந்தாய். உன்னுடைய அன்பு தான் எல்லாமே. உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரிய வில்லை. நீ திரும்பி வந்தால் மிகவும் சந்தோஷப் படுவேன். வருவாயா?


இப்படிக்கு உன் அன்புள்ள 

மருமகள் / மகள்

Saturday, November 4, 2017

THE BED IS THE SAME / படுக்கை ஒன்றுதான்

THE BED IS THE SAME 
It is anybody's guess that a  husband and wife sleep on the same bed during the night unless there are other reasons. But it is totally different how they make use of it when they are in their 30s and 70s. When they are in the latter part of their life, mutual understanding, and help during the night are more important than making love. 

They may not have a proper vision in the dark through the night lamp is there. They have to wake up their spouse for any help disturbing their sleep. The spouse should not get annoyed and be persevering. Their love at this stage is totally different. To advise, to control, to reprimand, and to put conditions are all called love.


It may take time for them to recoup strength and to have the physical balance to get down from the bed. To walk slowly to the bathroom in the dark, to switch on the light, not to forget to keep the door unlocked, to answer the call of nature, and to slowly come back to bed is not as easy as others imagine. You will realize their plight only when you are in their condition.


Still, the worse, if they have other age-related physical ailments. Their sleep may get disturbed afterward and they may like to talk at the dead of night. To be mutually helpful, instead of being self-interested, is more important. Have you ever thought about the plight of a single person who has lost the best half?


படுக்கை ஒன்றுதான்  

கணவன் மனைவி இருவரும் ஒரே படுக்கையில் படுப்பது என்பது தினசரி வழக்கம். வேறு காரணங்கள் இருந்தால் ஒழிய அவர்கள் தனித்தனியே படுக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் இளமையிலும் முதுமையிலும் வேறு வேறு விதமாக உபயோகப் படுத்துகிறார்கள். வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் புரிதலும், உதவி செய்தலும் மிக முக்கியம்.

இரவு விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது. அதனால் இன்னொருவரை எழுப்ப வேண்டும். தூங்குபவரை தொந்திரவு செய்ய வேண்டும். அவர்கள் கோபம் வராமல் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த வயதில் பிரியம் என்பது தனி. அறிவுரை கூற, கோபிக்க, திட்ட, கண்டிக்க எல்லாம் இந்தப் பருவத்தில் அன்பு எனப்படும்.

படுக்கையில் இருந்து இறங்க கஷ்டப்பட வேண்டும். நிதானமாக இறங்க வேண்டும். கழிவு அறையை நோக்கி நிதானமாக செல்லவேண்டும். கீழே விழுந்து விடக் கூடாது. விளக்கைப் போட்டுவிட்டு, கதவை தாள் போடாமல் சாத்தி விட்டு இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும். மறுபடியும் படுக்கைக்கு நிதானமாக வரவேண்டும். இது சுலபமான காரியம் இல்லை. ஜாக்கிரதையாக செய்யவேண்டும்.

உடலில் வேறு கஷ்டங்கள் இருந்தால் இன்னும் மோசம். அதன் பின் தூக்கம் வராது. நடு இரவில் ஏதாவது பேசலாம் என்று தோன்றும். சுயநலவாதியாக இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது இந்த வயதில் மிக முக்கியம். இருவரில் ஒருவர் இல்லாமல் தனியாக கஷ்டப் படும் ஒருவரை பற்றி நீங்கள் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்தது உண்டா?

I AM SUBMISSIVE. / நான் ஒரு சமாதானப் பிரியன்

I AM SUBMISSIVE.
I am not ashamed but proud to admit it. I am quite submissive. I am not for any confrontation with anyone. I have my own views. But I don't insist on my views on others. I try to explain my stand to convince him. The moment I understand that he is not convinced and is firm in his views I just leave it.

I also try to respect his views and to understand him. If I am convinced with what he says, I accept it without any reservation. Otherwise, just to please him, I pose as if I have lost. I don't believe in the win or loss, defeat or victory. Let him be happy that he has won. Let him hold the trophy and run around the ground.


Why should I quarrel with others and develop misunderstanding, hatred, blood pressure etc? What am I going to gain? Will I become a world champion in the argument? God has not given equal intelligence to everyone. It varies from person to person according to bringing up, living conditions, education and in the lifestyle. Let the bygones be bygones is my policy.


நான் ஒரு சமாதானப் பிரியன்

உண்மையில் இதை ஒத்துக்கொள்ள நான் வெட்கப் படவில்லை. கர்வப் படுகிறேன். நான் ரொம்ப சாது. சண்டை என்றாலே காத வழி ஓடி விடுவேன். எனக்கு என்று சில கருத்துக்கள் உண்டு. ஆனால் அதைப் பிறரிடம் வற்புறுத்த மாட்டேன். 

அவர்களுக்கு விளக்கி கூறி புரிய வைக்க முயலுவேன். அவர்கள் ஒத்துக் கொள்ளாமல் தாங்கள் தான் சரி என்று இருந்தால் விட்டு விடுவேன். வற்புறுத்த மாட்டேன். அது அவர்கள் இஷ்டம்.


நான் அவருடைய எண்ணங்களை மதித்து புரிந்து கொள்ள முயலுவேன். எனக்கு அவர் சரி என்று பட்டால் ஒத்துக் கொள்வேன். இல்லாவிடில், அவர்களை திருப்தி படுத்த நான் தோற்று விட்டதாக காட்டிக் கொள்வேன். 


வெற்றி தோல்வியில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவரே ஜெயித்து விட்டுப் போகட்டும். அவர் திருப்தி அடையட்டும். அவரே வெற்றி கோப்பையை எடுத்துக் கொண்டு மைதானத்தை சுற்றி ஓடி வரட்டும். எனக்கென்ன நஷ்டம்?


எதற்கு சண்டை போட வேண்டும்? எதற்கு கருத்து வேறுபாடு, கோபம், வெறுப்பு, ரத்த அழுத்தம் எல்லாம் வர வேண்டும்? இதனால் என்ன சாதிக்கப் போகிறோம்? வாக்கு வாதத்தில் உலகக் கோப்பையை வென்று விடுவோமா? 


இறைவன் எல்லோருக்கும் ஒரே மாதிரி அறிவையும் அனுபவத்தையும் கொடுக்கவில்லை. வாழ்க்கை முறை, வளர்ந்த விதம் இதற்குத் தகுந்தால் போல் ஒருவருக்கு ஒருவர் அது மாறு படுகிறது. போனது போகட்டும், வருவதை கவனிப்போம்.





நான் கிடந்து முழிக்கிறேன்.

காலை மணி 5. விழிப்பு வந்து விட்டது. சரியான தூக்கம் இல்லை. வெறும் கோழி தூக்கம் தான். 6 மணிக்கு மற்றவர்கள் எழுந்து காப்பி கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். நானே போட சோம்பல், இஷ்டமில்லை. 

மணி ஆறு. காப்பி குடிச்சாச்சு. இனி கடவுளை வேண்டிக் கொண்டிருந்தால் காலைக் கடன் வரும்.  நடைப் பயிற்சி போனால்  கால் வலிக்கிறது. செய்தித் தாள் படிக்கலாம் என்றால் முடியவில்லை. எழுத்து பொடிப் பொடியாக இருக்கு.


பின்பு குளியல். தியானம்  பண்ணலாம் என்றால் அதிக நேரம் உட்கார முடியவில்லை. முதுகு வலிக்கிறது. மனம் அதில் ஈடுபட மறுக்கிறது. பக்தி கொஞ்சம் கூட வர மாட்டேன் என்கிறது. 11 மணி வாக்கில் சாப்பாடு. 


தினம் சாம்பார், பொரியல், மோர். அலுத்து விட்டது. வேறு சாப்பிட்டால் வயிறு ஒத்துக் கொள்ளாது. உண்ட மயக்கம். படுத்த உடன் தூக்கம் வராது. புத்தகத்தை எடுத்துப் படித்தால் தூக்கம் வரும். புத்தகத்தை மூடினால்  தூக்கம் போய் விடும். 


படிக்கலாம் என்றால் எழுத்து பொடிப் பொடியாக இருக்கு. படித்தால் தலை வலி வருகிறது. மதியம் 2 மணிக்கு காப்பி. பின் மாலை 4 மணிக்கு இட்லி அல்லது தோசை. வேறு கிடையாது. அதுவும் அலுத்து விட்டது. 


முகநூலைப் பார்க்கலாம் என்றால் எல்லாம் போர். ஒரே அரசியல், சினிமா, பிரச்சனை, வாக்குவாதம். கருத்தை கவரும்படியாக எதுவும் இல்லை. இரவு மணி 8. அதே சாம்பார், பொரியல், மோர். என்ன செய்வது என்றே தெரிய வில்லை. 


72 வருடங்கள் ஓடிவிட்டன. தினம் இப்படியே இன்னும் எவ்வளவு நாட்கள் போகணும். வெளியே போக முடியாது. வழி தெரியாது, காது கேட்காது, பாஷை தெரியாது. வீட்டிற்கு உள்ளே இருக்க கஷ்டமாய் இருக்கு. பகவான் கருணை வேண்டும். 


பற்கள் இல்லை, காது கேட்க வில்லை. கண் சரியாகத் தெரியவில்லை. உணவு ஜீரணம் ஆகவில்லை. எல்லோரும் சந்தோஷமாக இருப்பது போலவும் நான் மட்டும் கஷ்டப் படுவது போலவும் தோன்றுகிறது.


அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு. அவர்கள்  வேலையை அவர்கள் பார்க்கிறார்கள். எனக்கு விடிவு காலம் எப்பொழுது வரும் ? காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் கிடந்து முழிக்கிறேன்.














Friday, November 3, 2017

நேற்று விதைத்தது இன்று முளைத்தது.

என் தந்தையின் குடும்பம் ஒரு நடுத்தரக் குடும்பம், அம்மா, மனைவி, மாமனார், மாமியார், 9 குழந்தைகள் ஆக  மொத்தம் 14 நபர்களைக் காக்கும் கடமை அவருக்கு இருந்தது. அதனால் தீபாவளி வந்தால் மிகவும் கஷ்டம். செலவு மிக அதிகம் ஆகும். 

எல்லோருக்கும் புதிய ஆடைகள் எடுத்து விட்டு தனக்கு ஒன்றும் வாங்கிக் கொள்ள மாட்டார். உள்ளே இருக்கும் பழைய புது ஆடை ஏதாவது ஒன்றை அணிந்து கொள்வார். பட்டாசுக்குப் பணம் கொஞ்சம் தான் கொடுப்பார். நாங்கள் மிகவும் வருத்தப் பட்டு அவரை மனதில் திட்டுவோம்.

1985ல் அவர் இறந்த பொழுது எனக்கு 9 வயதில் ஒரு பெண்ணும், 5 வயதில் ஒரு பையனும் இருந்தனர். 1980ல் வீடு கட்டியதாலும், மற்ற செலவுகளால் வாழ்க்கை மிகவும் கஷ்டம். தீபாவளி வந்தால்  மிகவும் பணக் கஷ்டம். என் எண்ணங்கள் என் தந்தையை நினைத்து ஓடும். 

4 பேர்களை காப்பாற்ற மூச்சுத் திணறும் எனக்கு, 14 பேர்களை வைத்து காப்பாற்ற எப்படி அவர் கஷ்டப் பட்டு இருப்பார் என்று தோன்றும். அதனால் நானும் அவரைப் போல தீபாவளிக்கு மற்றவர்களுக்கு வாங்கி விட்டு எனக்கு ஒன்றும் வாங்கிக் கொள்ளாமல் இருக்கப் பழகி விட்டேன்.

My father belonged to a middle-class family consisting of 9 children, wife, mother and in-laws totaling 14. For Deepavali, he could not afford to spend much. I used to curse him for not getting me crackers. He used to get new dresses for all excepting himself. He died in 1985 when I had a daughter 9 and a son 5. 

Since I had constructed a house, and due to other expenses, I also could not spend much for Deepavali. At that time, I felt how much my father would have suffered with 14 people whereas I could not manage even with 4. I then decided to follow his style of spending for others sacrificing my need.

HEAVEN / சொர்ககம்.

HEAVEN
An aged couple died in an accident and they went to the abode of God. A person welcomed them with open arms and showed them a beautiful independent house and told them that they can stay there. The man asked how much was the rent. The messenger replied that it was heaven and it was free. 

The wife was so happy because there was a beautiful greenery around the house with various types of trees and flowers. She loved flowers. Everything was white. All people were fair, handsome, beautiful and happy. Everything looked rich and attractive. 


There were different collections of dresses, jewels, ornaments, food, fruits, flowers, snacks, and sweets. When they inquired about the price, they were told that everything was free and they could take anything they needed. They said if they knew this already, they would have come quite earlier.


சொர்ககம்.

வயதான கணவன் மனைவி இருவரும் ஒரு விபத்தில் இறந்தனர். அவர்கள் சொர்க்கம்  அடைந்தனர். ஒருவர் அவர்களை வரவேற்று ஒரு அழகான வீட்டைக் காண்பித்து "இது தான் நீங்கள் தங்கும் வீடு" என்று கூறினார். அதற்கு வாடகை எவ்வளவு என்று கேட்ட பொழுது அவர் அது இலவசம் என்றார்.

மனைவிக்கு மிக சந்தோஷம். வீட்டைச் சுற்றி நிறைய புல்வெளி, மரங்கள், செடிகள், மலர்கள் என்று மிக அழகாக இருந்தது. அவருக்கு மலர்கள் என்றால் உயிர். எல்லாம் வெள்ளை நிறத்தில் இருந்தது. எல்லோரும் அழகாக இருந்தனர். சந்தோஷமாக இருந்தனர். 


பணக்காரக்களை எங்கும் இருந்தது. எங்கு பார்த்தாலும் விலை உயர்ந்த ஆடைகள், நகைகள், தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள், பழங்கள், பூக்கள், பணியாரங்கள், இனிப்புகள் எல்லாம் இருந்தது. அவர்கள் அதன் விலையை கேட்ட பொழுது எல்லாமே இலவசம் என்றனர். 


அவர்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றனர். அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? இது முன்னமே தெரிந்து இருந்தால் நாங்கள் எப்பவோ இங்கு வந்திருக்கலாம் என்று.




அது ஒரு கேள்விக்குறிதான்

உலக அளவில் நம் நாட்டில் தான் சினிமா மீது அதிக அளவு ஈடுபாடு காட்டுகிறார்கள். சினிமா நடிகர்களை விளம்பரங்களுக்கு உபயோகப் படுத்துவது, பால் அபிஷேகம் செய்வது, கோவில் கட்டுவது போன்ற வேலைகள் நாம் நாட்டில் தான். ஒரு ஆணை இன்னொரு ஆண் விரும்புவது இயற்கைக்குப் புறம்பானது.

தனி நபர் வழிபாடு நமது பிறப்பு உரிமை, நமது ரத்தத்தில் ஊறியது. யாரும் அதை மாற்ற முடியாது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒருவருக்கும் சினிமா பற்றித் தெரியாது. நடிப்பு என்றால் என்னவென்று தெரியாது.

அருவருப்பான ஆடைகளில் அசிங்கமான பாட்டுக்கள் பாடுவது, ஒரு ஆள், சட்டை கசங்காமல், சொட்டு ரத்தம் வராமல், பத்து பேரை பந்து ஆடுவது, இதையெல்லாம் நடிப்பு என்று எண்ணி கண் கொட்டாமல் பார்ப்பது, இது தான் நாம் அறிந்த சினிமா.

நம் நாட்டில் ஓரளவு நன்றாக நடிக்கத் தெரிந்தவர்கள் திரு. சிவாஜி கணேசன், திரு. அநுபம் கெர், திரு. பிரகாஷ் ராஜ் இவர்கள்தான். திரு. சிவாஜி கணேசன் பல படங்களில் அதிகப் படி நடிப்பு காட்டுவார். எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுத் தர லண்டனில் இதற்கென்று தனியாகப் படிப்பு இருக்கிறது. 

மற்ற துறைகளிலும் படிப்பு இருக்கிறது. அதன் தரம் மிகவும் உயர்ந்தது. செலவும் அதிகம். உலக நடிகர்கள் அங்கு சேர்ந்து படித்து, பின் திரைப் படங்களில் நடிக்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் அதெல்லாம் தேவையில்லை.

ஒரு நல்ல திரைப் படம், பார்ப்பவர்களின் முழு கவனத்தையும் கவர வேண்டும். கதை ஒரு அறுவை சிகிச்சைக்கு முன் காத்திருப்பவரின் மனம் போல் இருக்க வேண்டும். ரயில் நிலையத்திற்கு  தாமதமாகச் செல்லும் ஒருவரின் மன நிலை போல இருக்க வேண்டும். கதை, வசனம், நடிப்பு, ஒளிப்பதிவு எல்லாம் மிகத் திறமையாகக் கையாளப்பட வேண்டும் 

நடிப்பு என்பது வெறும் வசனம் பேசுவது மட்டும் இல்லை.  ஒருவர் நடிக்கும் போது, முகம், கை கால்கள் எந்த நிலையில் இருக்கிறது, அவர் முகம் என்ன உணர்ச்சியைக் காட்டுகிறது, எதிரில் இருப்பவர் என்ன உணர்ச்சியை பதிலுக்கு காட்டுகிறார்.

அதை எப்படி எந்தக் கோணத்தில் படம் ஆக்கினால் நன்றாக இருக்கும் என்ற தரங்களை வைத்து ஒரு நல்ல படம் தீர்மானிக்கப் பட வேண்டும். நமது நாடு அந்த அளவு எப்பொழுது முன்னேறப் போகிறது? அது ஒரு கேள்விக்குறிதான்.

50 வருடங்களுக்கு முன், 1967 ஆம் ஆண்டு வெளிவந்த "GUESS, WHO IS COMING TO DINNER"  என்ற திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சியைப் பாருங்கள்.







Thursday, November 2, 2017

FIND THE TRUTH / தீர விசாரிப்பதே மெய்

FIND THE TRUTH
Sometime back, I was traveling in Brindhavan Express going to Bangalore from Chennai. You have only seating accommodation on the train. Opposite to my seat was a family. consisting of a father, mother and an 8-year-old son. 

On the request of the son, the father went out and got a few cans of a cool drink. After the train departed, the son, asked the father to give him a can. The father gave him one, after opening it. The boy drank it with great joy, smiling at the father. The father also was pleased. 


On such occasions, I find it difficult to remain quiet. Out of curiosity, I asked the father how can he give his son something without even checking on it. The liquid is not even visible to the naked eye to see whether it is of good quality or not. He laughed and said one must have belief. 


After an hour, the son started vomiting. The parents were worried. I asked them what he ate in the morning and also to check another can. When its contents were poured into a vessel, it was found to be contaminated. Just seeing and believing is not enough. One must thoroughly check to get the truth.


தீர விசாரிப்பதே மெய் 

சில நாட்களுக்கு முன் நான் சென்னையில் இருந்து பங்களூர் செல்லும் பிருந்தாவன் புகை வண்டியில் பிரயாணம் செய்து கொண்டு இருந்தேன். அந்த வண்டியில் உட்காரும் இடம் மட்டும் தான் உண்டு. எனக்கு எதிர் வரிசையில் ஒரு குடும்பம் வந்து இருந்தார்கள். ஒரு அப்பா, அம்மா. 8 வயதில் ஒரு மகன்.

மகனின் விருப்பப்படி, அப்பா வெளியில் சென்று அலுமினிய டப்பாவில் அடைத்த குளிர் பானம் 4, 5 வாங்கி வந்தார். வண்டி புறப்பட்டவுடன், அந்த சிறுவன் தகப்பனாரிடம் ஒரு குளிர் பானம் கேட்டான். அவர் அவனுக்கு ஒன்று கொடுத்தார். அதைத் திறந்து அவன் குடித்தான். மகன், தந்தை இருவருக்கும் சந்தோஷம்.


என்னால் சும்மா இருக்க முடியவில்லை. ஆர்வத்தின் காரணமாக, நான் அந்த தகப்பனாரிடம், "ஏன் ஸார், உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்காமல் ஒரு சிறுவனுக்குக் கொடுக்கலாமா?" என்று கேட்டேன்.அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, "அதில் எல்லாம் நம்பிக்கை வேண்டும் ஸார்" என்றார். 


ஒரு மணி நேரம் கழித்து அந்த சிறுவன் திடீர் என்று சில தடவை வாந்தி எடுத்தான். இன்னொரு குளிர் பானத்தை சோதனை பண்ணிப் பார்த்த போது அது கெட்டுப் போய் இருந்தது தெரிந்தது. கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.



GOD IS BEYOND KNOWLEDGE / இறைவன் அறிவுக்கு அப்பால்

GOD IS BEYOND KNOWLEDGE.

Everyone is asking where God is and to show Him to them. God is everywhere, He is shapeless, colourless, odourless, and invisible to the naked eye. Only from our life incidents, we can feel the presence of God. He is beyond our knowledge.

After we get up from bed, we brush our teeth and before taking coffee or tea, we should pray to God for a few minutes. Then we wish ”good morning” to others to develop a cordial relationship. Then we talk about good matters to get peace of mind.

Knowledge can be explained in three ways. 1. Known 2. Unknown 3. Unknowable.

You go to a fruit shop and you see an apple. You know very well that it is an apple. This is KNOWN to you.

But you do not know how many seeds are there inside the apple. This is UNKNOWN to you. You cut the apple and count the seeds. Now the unknown becomes known to you.

But you do not know how many trees, fruits, and seeds those seeds will produce. This is UNKNOWABLE. Whatever the effort you take, you will never know. That is GOD. Let us pray to that God.

இறைவன் அறிவுக்கு அப்பால்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. எல்லோரும் இறைவன் எங்கிருக்கிறான், இறைவனைக் காட்டு என்று கேட்கிறார்கள். எங்கும் நிறைநத இறைவனை எப்படிக் காட்டுவது? அவன் நிறமற்றவன், உருவமற்றவன். நமது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்துத் தான் இறைவனைக் காணமுடியும். இறைவன் அறிவுக்கு அப்பால்.

விடியற்காலையில், பல் துலக்கிய உடன், காப்பி, தேநீர் அருந்து முன்பு இறைவனை தியானிக்க வேண்டும். பிறகு காலை வணக்கம் சொல்வது நல்ல உறவை வளர்க்கும். நல்ல விஷயங்களைப் பேசுவது மன அமைதி தரும்.

இது அறிவு சம்பந்தப் பட்டது. வாழ்க்கையில் ஒரு புரியாத உண்மை மிக எளிதாக புரியவைக்கப் பட்டிருக்கிறது. அதன் அழகில் நான் மெய் மறந்து  விட்டேன். இந்த காலை நேரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல விஷயம் கூற இதை எழுதுகிறேன்.

அறிவு என்பதை மூன்று விதமாகப் பிரிக்கலாம். 1. தெரிந்தது 2. தெரியாதது 3. தெரிந்து கொள்ள முடியாதது.

நீங்கள் ஒரு பழக் கடைக்குப் போகிறீர்கள். அங்கு ஆப்பிள் விற்கிறார்கள்.

1. உங்களுக்கு ஆப்பிள் நன்றாகத் தெரியும். அது உங்களுக்குத் தெரிந்தது.

2. ஆனால் அந்த ஆப்பிள் உள்ளே எத்தனை விதைகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியாது. இது தெரியாதது. அந்த ஆப்பிளை கத்தியால் நறுக்கி உள்ளே உள்ள விதைகளை எண்ணினால் தெரியாதது தெரிந்து விடும்.

3. ஆனால் அந்த விதைகள் எத்தனை ஆப்பிள்களைக் கொடுக்கும் என்பது தெரியாது. இது தெரிந்து கொள்ள முடியாதது. நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் உங்களால் தெரிந்து கொள்ள முடியாது. அது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அது தான் இறைவன். அந்த இறைவனைத் தினம் பிரார்த்தனை செய்வோம்.



SO NEAR YET SO FAR / கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

SO NEAR YET SO FAR
For many people, coffee or tea is not just a beverage. It is their life. They give so much importance to it. In most of the households, the housewife reserves one pocket of milk in the fridge to have the coffee/tea early next morning, in case the milk man arrived late. 

Most of the time, the milkman delivers the milk in time. However, the lady in the house uses only the old milk and not the fresh one. The old milk can be made into curd and the fresh milk can be used for coffee/tea. But it is not done for no reason. So you are deprived of a fresh coffee/tea. It is so near yet so far.


கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

பலருக்கு காப்பி அல்லது டீ ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும் பானம் இல்லை. அதுவே அவர்கள் உயிர். அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 

எல்லா வீட்டிலும் காலையில் காப்பி போடுவதற்காக ஒரு பாக்கெட் பால் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து இருப்பார்கள். ஒரு வேளை பால் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டால் என்ன செய்வது? 


படுக்கையில் இருந்து எழுந்தவுடன் காப்பி குடிக்கவில்லை என்றால் உயிர் போய் விடும். ஆனால் எல்லா நாட்களிலும் பால்காரன் சரியாகப் பால் கொண்டு வந்து விடுவான். 


ஆனாலும் நாம் வீட்டுப் பெண்மணி பழைய பாலையே உபயோகித்து காப்பி போடுவார்கள். ஏன் என்றால், பழைய பால் கெட்டுப்  போய் விடும் என்று. 


புதுப் பால் இருந்தும் பழைய பாலில் காப்பி குடிப்பது நம் துரதிர்ஷ்டம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.



Wednesday, November 1, 2017

அன்று முதல் குடிக்க மாட்டேன்

1981, எனக்கு 36 வயது. சென்னையில் ஒரு பெரிய கம்பனியில்  வேலை. அந்த வருடம் தமிழ் நாட்டில் மது விலக்கு ரத்து செய்யப் பட்டது. என் அலுவலகத்தில் ஒரு 6 நண்பர்கள் சேர்ந்து மாலையில் அலுவலகம் முடிந்தவுடன் எல்லோரும் சேர்ந்து மது அருந்தலாம் என்று முடிவு எடுக்கப் பட்டது. என்னையும் அதில் சேர்த்து விட்டனர். 

எனக்கு அதில் பழக்கம் கிடையாது. இருந்தாலும் ஒரு நண்பனின் வற்புறுத்தலால் சரி என்று சொன்னேன். எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப் பட்டு அதற்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் வாங்கப் பட்டது. மாலை ஒரு 7 மணி வாக்கில் ஆரம்பம். எனக்கு ஒரு பக்கம் வீட்டை நினைத்து பயம். மறு புறம் ஒரு விதமான ஆர்வம். 

கொரிக்க சிப்ஸ், பகொடா, காரக் கடலை எல்லாம் இருந்தது. அப்பொழுதுதான் வாந்தி வராதாம்.. எனக்கு ஒரு க்ளாஸ் கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கச் சொன்னார்கள். குடித்து முடிந்ததும் தலை கிர் என்று சுற்றியது. மயக்கம் வந்தது. உடனே வாந்தியும் வந்தது.  

கழிவு அறைக்குச் சென்று எல்லாவற்றையும் வாந்தி எடுத்தேன். தலை வலி பயங்கரமாக  இருந்தது. அப்படியே படுத்து விட்டேன். ஒரு மணி நேரம் கழித்து எழுந்தேன். தலைவலி நிற்க வில்லை. மயக்கம் குறைந்து இருந்தது. இரவு மணி 9 ஆகிவிட்டது. பஸ் பிடித்து வீடு போக நேரம் ஆகிவிடும். மனைவி கோபப் படுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். 

நண்பன் ஒருவன் என் வீட்டுக்கு அருகில் இருக்கிறான். மோட்டார் சைக்கிளில் வருவான். மயக்கம் காரணமாக அவனால் வண்டி ஒட்ட முடியவில்லை.அவனை வீட்டில் கொண்டு போய் விட முடியுமா என்று கேட்டான். சரி என்று அவனைப்  பின்னால் வைத்துக் கொண்டு, அவன் வீட்டில் விட்டு விட்டு, என் வீடு வந்தேன். 

ஒன்றும் பேசாமல், சாப்பாடு வேண்டாம் என்று கூறி விட்டுப் படுக்கையில் விழுந்தேன். மறுநாள் காலை எழுந்த உடன் மனைவி ஒன்றும் கேட்க வில்லை. ஏதோ குற்றம் செய்தது போல இருந்தது. அதன் பிறகு 36 வருடங்களில் ஒரு முறை கூட மது குடித்தது கிடையாது. மதுப் பழக்கம் வராமல் தப்பியது இறைவன் அருள்.

யாராவது குடித்தவர் அருகில் இருந்தால் வாந்தி வந்து விடும். இதை ஏன் குடிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். மதுவை அதிகம் குடிக்காமல் இருந்த தமிழ் நாட்டில் பலர் குடிக்க ஆரம்பித்தனர். அதிலும் ஏழைகள் அதிகமாக குடிக்க ஆரம்பித்தனர்.  எனக்கு தெரிந்த காரணத்தை சொல்கிறேன்.

வெளி நாட்டில் வயது வந்த ஆணும் பெண்ணும் மது அருந்துகிறார்கள். ஆனால் அவர்கள் குளிருக்காக, உடல் நலம் கருதி சிறிய அளவு குடிக்கிறார்கள். ஆனால் நாம் குடிப்பது அது தரும் மயக்கதிற்காக. மயக்கம் குறையக் குறைய அளவு அதிகம் ஆகிறது. அதனால் வார்நிஷ் போன்ற அதிக மயக்கம் தரும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் குடிக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் சினிமாவில் குடிப்பது போல் காட்ட மாட்டார்கள். காதலில் தோல்வி, வாழ்க்கையில் தோல்வி என்றால் குடிப்பது போல் காட்டுவார்கள். இப்பொழுது அப்படி இல்லை. குடிப்பதே தொழில். குடிக்கும் காட்சி இல்லாமல் ஒரு சினிமா கிடையாது. நம் நாட்டிற்கு மது ஏற்றதல்ல. குடிப்பதை உடனே நிறுத்த வேண்டும். அது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு.

மனதில் தோன்றிய எண்ணங்கள் 136 TO 150

136. நான்  வயதானவன் . பழமையான எண்ணங்களைக் கொண்டவன். என்னுடைய குழந்தைகளுடன் பழகிப் பழகி தற்கால எண்ணங்களை மிக நன்றாகப் புரிந்து கொண்டவன்.

137. ஒரு வயதில் விரும்பியதை பத்து வயதில் விரும்புவதில்லை. அறிவு வளர்ச்சி ஒரு பயணம். நடுவில் நின்று விட்டால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

138. நமக்கு இருப்பதோ ஒரு வயிறு. ஆனால் அந்த ஒரு வயிறுக்கு உணவு அளிக்க, உழைப்பதற்கு இறைவன் கொடுத்திருப்பதோ இரண்டு கைகள். பிறகு என்ன கவலை?

139. நல்லதோ கெட்டதோ, ஒரு விஷயத்தை அறிந்த பிறகு அது எவ்வளவு தூரம் உண்மை என்று நன்கு விசாரித்த பிறகே வேறு ஒருவரிடம் சொல்ல வேண்டும்.

140. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நன்கு திட்டம் போட்டு ஒரு பத்து நாள்,சுற்றுலா இடமோ, உறவினர் வீடோ சென்றால் சந்தோஷம், மன அமைதி உண்டாகும்

141. நம் நாட்டில் கலைச் செறிவு மிகுந்த கோவில்களும் அழகான இடங்களும் லக்ஷக் கணக்கில் இருக்கின்றன.ஆனால் நாம் எப்பொழுது பார்க்கப் போகிறோம்?

142. ஏழை தன்னிடம் உள்ள கொஞ்சம் பணத்தை பிறருக்கு உதவக் கொடுக்கும் பொழுது சிறிதும் யோசிப்பதில்லை. ஆனால் பணக்காரன் அதிகம் யோசிக்கிறான்.

143. பணமில்லாத ஒருவனை யாரும் அனாதை என்று சொல்வதில்லை. ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அவன் ஒரு அனாதை தான்.

144. உங்களை யாரும் புறக்கணித்தால் தயவுசெய்து அவரைத் தவறாக நினைக்காதீர்கள். ஏதோ ஒரு சூழ்நிலை. அது அவருக்கு மட்டும் தான் தெரியும்.

145. நமது அரசாங்கம் இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறது. "ஏழைகளுக்குப்" பாதகமாக எதுவும் செய்தால் தட்டிக் கேட்கலாம்.

146. படித்தவன் படிக்காதவனைப் பார்த்து இரக்கம் கொள்ள வேண்டும். அவனுக்கு தகுந்த அறிவுரை செய்தால் நாடும், வீடும் மக்களும் முன்னேறு வார்கள்

147. எதுவும் நமக்கு சொந்தமில்லை. நாம் இறந்த பின் எந்த பொருளையும் எடுத்து செல்ல முடியாது.ஒரு பொருளை தவிர. அதுதான் நாம் செய்த தான தர்மம்.

148. வாழ்க்கையில் நம்பிக்கை மிகவும் முக்கியம். தன்னம்பிக்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

149. சிலர் எதிர்மறையாகப் பேசி தன்னை அறிவாளியாகக் காட்டுகிறார்கள். சிலர் நேர்மையாகப் பேசி அடக்கமாக இருக்கிறார்கள். இறைவனின் சிருஷ்டிகள்.

150. பகவான் கிருஷ்ணன்: குளிர்ச்சி நீரின் இயல்பு. வெப்பம் நெருப்பின் இயல்பு. உலகில் எல்லா உயிர்கள் மீது அதிக கருணை காட்டுவது என் இயல்பு.