Wednesday, October 18, 2017

மனதில் தோன்றிய எண்ணங்கள் 121 TO 135

121. பலர் வெற்றி தன்னைத் தேடி  வரவில்லையே என்று வருத்தப் படுகிறார்கள். அது தவறு. அவர்கள் தான் வெற்றியைத் தேடிப் போக வேண்டும்.

122. கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. பிச்சை எடுத்தாவது கல்வியை கற்க வேண்டும். பிறகு  எல்லா விதமான  சந்தேகங்களும் அகன்று விடும்.

123. சமூக அந்தஸ்த்தில் உள்ள சிலர், கற்றறியாமல் கூறும் சில அபத்தங்களை, உண்மை என்று பாமரர்கள் நம்புவது, மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்

124. சங்கு சக்கரத்தோடு மகாவிஷ்ணு வந்து உபதேசம் செய்ய மாட்டார். நம் நல விரும்பிகள் மூலம் சொல்லுவார்.அதைக் கேட்பதும் விடுவதும் நம் இஷ்டம்

125. அதிகமாகப் பேசாதவர்களை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவர்களை உலகம் மதிக்கிறது. நன்கு செயலாற்றுபவர்களை உலகம் கைகூப்பி வரவேற்கிறது.

126. தன்னை ஒரு புத்திசாலி என்று நினைப்பவன் உண்மையில் ஒரு  முட்டாள். மற்றவரை முட்டாள் என்று நினைப்பவன் அவனை விட மோசமான முட்டாள்.

127. 18 வயதில் பெண்ணிற்கு திருமணம் செய்ய வேண்டும். வயது ஆக ஆக மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் அதிகம்.

128. கணவன் மனைவி ஒற்றுமையில் ஒரு ரகசியம் இருக்கு. மனஸ்தாபம் வரும் பொழுது மன்னிப்பு கேட்பதில் யார் முதலில் என்று போட்டி இருக்க வேண்டும்

129. மனைவி வெளியே தெரிய அழுகிறாள். கணவன் உள்ளே அழுகிறான். பிரச்சனையை வளர விடக்கூடாது. அன்றையப் பிரச்சனையை அன்றே தீர்த்து விட வேண்டும்.

130. கணவன் மனைவி இடையே சண்டைக்குப் பின் வரும் சமாதானம் சிறந்தது. அதைவிட இருவர் இடையே எந்த ஒரு சண்டையும் இல்லாத சமாதானம் மிகச் சிறந்தது.

131. லஞ்சம் சமூகத்தில் ஊடுருவிய ஒரு புற்று நோய். வாங்குபவனும், கொடுப்பவனும் மறுத்தால் அன்றி சமூகத்தில் இருந்து அதை ஒழிக்கமுடியாது

132. உங்கள் மனதைக் கேளுங்கள்.காமம், கோபம், ஆசை, பற்று, கர்வம், பொறாமை இவை எல்லாம் உள்ளே இல்லை என்றால் உங்களுக்கு மோட்சம் மிக அருகில்.

133. நமது பார்வை நன்றாயிருந்தால் உலகம் அழகாகத் தெரியும். வாக்கு நன்றாயிருந்தால் உலகம்  நேசிக்கும். இதயம் நன்றாயிருந்தால் உலகை வெல்லலாம்

134. காரணம் தெரியவில்லை. மனைவியுடன் மனஸ்தாபம். இரவு சளி பிடித்தது, தைலம் தடவினாள், மன்னிப்புக் கேட்டேன். வைரஸ் ஆக வந்தது யார் தெரியுமா?

135. நான் நினைக்கிறேன், நல்லவர்களை காக்கவும், கெட்டவர்களை அழிக்கவும் இறைவன் கலியில் , வைரஸ் / பாக்டிரியா வாக அவதரித்துள்ளான்.



Thursday, October 12, 2017

மனதில் தோன்றிய எண்ணங்கள் 106 TO 120

106. எல்லா மனிதர்களுக்கும் மரபு அணு 99.99% ஒரே மாதிரியாக இருக்கிறது. மீதி 0.01% தான் எல்லா வித்யாசங்களுக்கும், கோளாறுகளுக்கும் காரணம்.

107. இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம் அறிவு. அதை நல்ல வழியில் உபயோகிக்க வேண்டும். பெரியவர்களுடன் பழகியே ஒருவனால் அறிவாளி ஆக முடியும்.

108. விவேகானந்தர்: மரணத்தைப் பற்றி கவலைப் படாதே.நீ இருக்கும் வரை அது வரப் போவதில்லை. அது வந்த பின் நீ இருக்கப் போவதில்லை.பின் ஏன் கவலை?

109. ராமாயணம், மஹாபாரதம் இரண்டும் சகோதர ஒற்றுமையை வலியுறுத்திக் கூறுவது. அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக வாழவேண்டும். பலன் பிறகு தெரியும்.

110. தாயார் ஒரு தெய்வம். பூஜிக்கவேண்டும். மனைவி நமது வாழ்க்கைத் துணைவி. சந்தோஷப் படுத்த வேண்டும். கடைசி வரை நம்முடன் இருப்பது மனைவிதான்

111. சும்மா பகல் கனவுகள் கண்டு கொண்டிருப்பது வாழ்க்கை இல்லை. முயற்சி செய்தால் தான் வெற்றி கிடைக்கும். சாதனைகள் படைக்க அதுவே சிறந்த வழி.

112. அரசியல், மதம், ஜாதி, சினிமா இவை எல்லாம் ஒரு ஆழ்கடல். அதில் மூழ்கி முத்தெடுக்க முனையும்  முடிவில்லாத முயற்சியில் மூச்சு முட்டும்.

113. தேர்ந்தெடுத்த அரசை எதிர்த்து ஆயிரம் கேள்விகள் கேட்கிறோம். ஆனால் தனது கட்சியின் தலைமையை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்க முடிவதில்லை.

114. நாம் தவறு செய்து விடுவோமோ என்று பயந்து பயந்து எவ்வித முயற்சியும் செய்யாமல் சும்மா இருப்பது வாழ்க்கையில் வெற்றிக்கு அறிகுறி இல்லை.

115.நம் நாட்டில் படிக்காத பாமர மக்களைக் கட்சி அரசியலில் இருந்து வெளிக் கொண்டு வருவது  மிகக் கஷ்டம். அதில் தான் நாட்டின் வெற்றி உள்ளது.

116. நேற்று நடந்தது திரும்பி வராது. நாளை நடக்க போவது என்ன வென்று தெரியாது.இன்றைக்கு நடக்கப் போவதே நம் முயற்சியின் வெற்றிக்கு அஸ்திவாரம்

117. ரகசியத்தை வெளிப்படுத்துவது தவறு. துக்கத்தை வெளிப் படுத்தாதது மற்றொரு தவறு. இரண்டு செய்கையிலும் மன நிம்மதி இருக்காது. தவிக்கும்.

118. வாழ்வில் வெற்றி பெற அதிகாலையில் எழும் பழக்கம் வேண்டும். நாம், பூமி, இயற்கை  உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும் நேரம் பிரம்ம முஹூர்த்தம்.

119. முகநூலில் விருப்பு வெறுப்பு இல்லாமல், வீட்டுக்கு, நாட்டுக்கு, மக்களுக்கு நல்லவற்றை இனிய வார்த்தைகளில் சொல்வதே எழுதுபவரின் சிறப்பு.

120. நமக்கு மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாதிருந்தால் ,நமது வாழ்க்கை ஒரு சுமக்க முடியாத பெரும் சுமையாக, நரகமாக இருந்திருக்கும்.





Monday, October 9, 2017

மனதில் தோன்றிய எண்ணங்கள் 91 TO 105

91. என்னங்க, நல்லவர்களைக் காக்கவும், கெட்டவர்களை அழிக்கவும்,  இறைவன் அவ்வப்பொழுது இந்த பூமியில்  அவதரிப்பராமே. ஏன் இன்னும் காணோம்?

92. தோப்புக்கரணம் ஆண்களின் பிறப்புரிமை. பலர் மனைவிக்கு மறைவாக தினம் போடுவது. எண்ணிக்கைதான் 3,12,108 என்று மாறுபடும். நான் 12, நீங்கள்?

93. சிக்கனமாக இருப்பது என்பது ஒருவர் எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறார் என்பது அல்ல. எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறார் என்பதைப் பொறுத்தது

94. இறைவன் கொடுத்த தண்ணீரை வீண் ஆக்கினால், பணம் சேராது என்பது முதுமொழி. தண்ணீரை வீணாக்காதீர்கள். அது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு.

95. தாய் தந்தையை சந்தோஷப் படுத்தும் நேரம், கடமையில் வழுவாத நேரம், அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம் பிரம்மமுகூர்த்தம்.

96. பக்தியும், உண்மையும், சத்தியத்தின் நேர்மையும், குறையாத இறை நம்பிக்கையும், இரக்க குணமும் உள்ள ஒருவனை இறைசக்தி ஒரு போதும் கைவிடாது.

97. ஒருவனுக்கு எது தகுதியோ அது முயற்சியால் அவனை வந்து சேரும். அவன் எதை ஆசைப் படுகிறானோ, என்ன முயற்சி செய்தாலும் அது அவனை வந்து சேராது.

98. யூதிஷ்டிரன்:தினம் பலர் முதுமையாலும் இறப்பாலும் படும் கஷ்டத்தை பார்த்தும், தான் மட்டும் மாறாமல் இருப்போம் என்று நினைப்பது ஆச்சரியம்

99. அரசியல், மதம், ஜாதி, சினிமா பற்றி எழுதுவது, பேசுவது எல்லாம் பலன் இல்லாத செயல் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

100. குத்தக் குத்தக் குனிவார்கள், குனியக் குனியக் குத்துவார்கள் என்பது முதுமொழி. நான் குனிவதும் இல்லை, குத்துவதும் இல்லை. இது தனி வழி.

101. யூதிஷ்டிரன் கூறியது : பிறப்பினாலோ படிப்பினலோ ஒருவன் பிராமணன் ஆக மாட்டான். நல்ல குணம், நல்ல நடத்தையாலேயே  ஒருவன் பிராமணன் ஆகிறான்.

102. நாம் வெறும் கையோடு வந்தோம். வெறும்  கையோடு போகப் போகிறோம். ஒருவரை ஏமாற்றி மற்றோருவர் நிம்மதியாய் வாழ்ந்து சிறந்தது என்பது கிடையாது

103. பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்த பின் தேர்வு வைக்கப்படுகிறது. ஆனால் வாழ்க்கையில் தேர்வு வைத்தபின் பாடம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

104. கஷ்டத்தில் சந்தர்ப்பத்தைப் பார்க்கிறவன் வெற்றி அடைகிறான். சந்தர்ப்பத்தில் கஷ்டத்தைப் பார்க்கிறவன் தோல்வி அடைகிறான்.  அது மனோபாவம்.

105. எல்லோரிடத்தும், எப்பொழுதும் மகிழ்ச்சி தரும் இனிமையான சொற்களைப் பேசுபவர்களைத் தேடி எல்லோரும் வருவார்கள்.வாழ்க்கை இனிமையாக இருக்கும்

















மனதில் தோன்றிய எண்ணங்கள் 76 TO 90

76. ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் உண்டு.  எனக்கு சண்டை போடுதல், விவாதம் செய்தல்,  தரக் குறைவாகப் பேசுதல் இவை எல்லாம்  பிடிக்காது.

77. காலம் கறுப்பை வெள்ளை ஆக்கும். கரியை வைரம் ஆக்கும். பராரியைக் கோடிஸ்வரன் ஆக்கும். துக்கத்தை மறக்க வைக்கும். காலத்தை மதிக்க வேண்டும்.

78. விட்டுக் கொடுத்தவன் கெட்டுப்போனது கிடையாது கெட்டுபோனவன் விட்டுக் கொடுத்தில்லை. கெட்டதை மறப்பதும், சமாதானம் காப்பதும் நல்லது.

79. குஷ்ட நோய் உள்ள ஒரு நோயாளியை ஒருவன் பூரண அன்புடன் தயக்கமின்றி தொட்டுப் பழக முடிந்தால், இறைவன் அவன் உள்ளத்தில் இருக்கிறார்.

80. தன்னை விட வயதான அனுபவப் பட்ட பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு இருந்தால் அவர்களுடன் மறுத்துப்  பேசாமல் மௌனமாக இருத்தல் நல்ல குணம்.

81. ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி சார்பில்லாத, எல்லா விதத்திலும் சிறந்த ஒருவரை மக்களே தேர்தலில் வெற்றி பெறச் செய்து அரசாள அனுப்பவேண்டும்.

82. எவ்வளவோ படித்த, பண்புள்ள, கட்சி சார்பில்லாத, நல்ல மனிதர்கள், மக்களுக்காக உழைக்க விரும்புகிறார்கள். அவர்கள் நம் கண்ணில் படுவதில்லை.

83. பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு குடியரசு, தொழிலாளர், ஜனநாயகம் என்ற மூன்று கட்சிகள் மட்டும் இந்த நாட்டில் இருக்க வேண்டும்

84. கற்றது கை அளவு, கல்லாதது  உலகஅளவு. கடைசி மூச்சு உள்ள வரை நாம் கற்றுக்  கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

85. ஒருவர் எவ்விதம் யோசிக்கிறார் என்று நாம் சரியாக யோசிக்கத் தவறுவதால் தான் இருவர் இடையே கருத்து வேற்றுமையும் மனஸ்தாபமும் வருகின்றது.

86. நன்கு படித்த,நேர்மையான, பண்புள்ள, அனுபவப்பட்ட புத்திசாலிகள் அதிகாரத்தில் இருந்தால் தான் நாடும் மக்களும் நல்வழியில் செல்வார்கள்.

87. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக செயல் படும் ஒரு அமைப்பு. அதில் நடக்கும் நல்லது கெடுதலுக்கு அவர்களே பொறுப்பு. நன்கு யோசிக்கணும்

88. இளைஞர்களுக்கு ஒரு சவால்: உங்கள் பெற்றோர்  சொல்வதைத் தட்டாமல், மறுக்காமல், ஒரே ஒரு நாள் மட்டும்  உங்களால் கேட்டு நடக்க முடியுமா?

89. உங்கள் முழுக்கட்டுப்பாட்டில் உங்களுக்கு உள்ளேயோ, வெளியேயோ ஏதாவது ஒன்று இருக்கு,  என்று கூறுங்கள் நான் உங்களுக்கு அடிமை ஆகிறேன்.

90. 27 வயதில் இருந்த எண்ணங்கள், விருப்பங்கள், கொள்கைகள், கற்பனைகள், நட்புகள், 72 வயதில் தலை கீழாக மாறி விடுகின்றன.எப்படி இந்த மாற்றம்?






Saturday, October 7, 2017

மனதில் தோன்றிய எண்ணங்கள் 61 TO 75

61. ஒரே எண்ணம், ஒருவரையொருவர் புரிதல், பாராட்டுதல், சந்தித்தல், சந்தோஷித்தல்  அதுவே முகநூல் நட்பு. வாழ்க வளர்க.

62. போதை, பேதை இவை இரண்டையும் தவிர்த்தவன் எந்தக் காரணம் கொண்டும் சோடை ஆக மாட்டான். முயற்சி செய்தால் நிச்சயம் ஒரு மேதையாகி விடுவான்.

63. தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. இந்தப் பொன்மொழியில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்போ இங்கு அதிகம் இல்லை.

64. வயிறு காலியாகி உணவு வேண்டும் என்பது பசி. வயிறு காலியாகமல் நாக்கு உணவு வேண்டும்  என்பது பசியார்வம். பசி நல்லது பசியார்வம் கெடுதல்.

65. கூட்டுகுடும்பங்களுக்கு முக்கியத்துவம், பெற்றோர் சொல்படி நடப்பது, திறமையாக நடனம் ஆடும் கதாநாயகர்கள், தெலுங்கு சினிமாக்களின் சிறப்பு.

66. மாலை வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்டிருக்கு பூ, வெற்றிலை, பாக்கு,பழம், குங்குமம், சட்டைத்துணி,சுண்டல் கொடுத்து கௌரவிக்க வேண்டும்

67. பட்டாணி, பாசிப் பருப்பு, நிலக்கடலை, காரமாணி, கடலைப்பருப்பு, வெல்லப் புட்டு, எள்பொடி,கொண்டக் கடலை,மொச்சை சுண்டலோடு பூஜிக்கிறோம்.

68. நவராத்திரி ஒன்பது நாளும் கொலுவில்  இருக்கும் துர்கா, லக்ஷ்மி சரஸ்வதி தேவதைகளுக்கு  தினம் பூஜை செய்து அவர்கள் அருளை வேண்டுகிறோம். 

69. ஒரு பெண்ணை / படத்தை பார்க்கும் பொழுது ஏற்படும் ஆபாச எண்ணங்களை தவிர்க்க,வெறுக்க வேண்டும்.கெட்ட எண்ணங்கள் குறையும்.மனம் தூய்மையாகும்

70. ஒரு நாள் முகநூல் நேரம்:40 வயது வரை கிடையாது. 50 வரை 30 நிமிடம், 60 வரை 1 மணி, 80 வரை 2 மணி. ஒவ்வொரு முறையும் 15 நிமிடம் செலவிடலாம்

71. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். மாக்கள் என்றால் படிப்பு அறிவில்லாதவர்கள். மாக்களை மக்கள் ஆக்குவது படித்தவர்கள் கடமை.அது மனித தர்மம்

72. பொய் என்றால் என்ன என்று கேட்க வேண்டும். உண்மையே பேச வேண்டும். தைரியமும், இக்கட்டான நிலையை சமாளிக்கும் திறனும் ஒருவருக்கு வரும்.

73. தவறு செய்வது சகஜம். மன்னிப்புக் கேட்பது கஷ்டம். சுயகௌரவம்  தடுக்கும். விடக்கூடாது. அதனால் வேற்றுமை அகலும். உறவு நீடிக்கும். வாழ்க 

74. நாம், நம்மைவிட தாழ்ந்தவர்களையும் கஷ்டப்படுபவர்களையும் பார்த்து இரக்கம் கொண்டால், ஆண்டவன் நம் மீது இரக்கம் கொள்வார் என்பது நிச்சயம்

75. ஸ, ஹ, ஷா, க்ஷ, போன்ற எழுத்துக்கள் நடைமுறையில் இருந்து விலக்கப் பட்ட பின் மந்திரங்கள் கற்றுக்கொள்வதும், உச்சரிப்பதும்  கடினம் .



RESOLUTIONS / தீர்மானங்கள்

RESOLUTIONS

It is important to have firm resolutions to lead a happy, healthy and peaceful life. Without resolutions, life is a waste. As a senior citizen, I just give you 12 points to follow in life. It is only a suggestion and not a condition. It is up to you to follow or to ignore it. I am neither going to gain nor lose.


1. Never fail to do your duty to yourself, to your family and to your nation.

2. Make your parents happy by talking, caring and sharing with them.
3. Help the poor in some way. Do some philanthropic activity for them.
4. Believe in God. Never fail to pray both in the morning and evening.
5. Do not get into bad habits like smoking, drinking or women even for fun.
6. Our culture is unique. Develop a belief in our culture and try to follow it.
7. Your family is most important to you. Live and die for them.
8. Understand politics. Do not indulge, discuss, or propagate it.
9. Your religion is yours. Do not indulge, discuss or propagate it.
10. Lead a simple life. Don't show off. Do not make the poor envy you.
11. See movies and enjoy. Do not hero-worship the actors.
12. Read books. Reading makes a man. It gives knowledge.

 தீர்மானங்கள் 


வாழ்க்கையில் சந்தோஷமாக, ஆரோக்கியமாக, நிம்மதியாக வாழத் தீர்மானங்கள் மிகவும் முக்கியம். தீர்மானங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஒரு முதியவர் என்கிற நிலையில் நான் ஒரு 12 தீர்மானங்கள் கூறுகிறேன். அதைக் கடைப்பிடிப்பதும் விடுவதும் உங்கள் இஷ்டம். இது ஒரு ஆலோசனை தான், கண்டிப்பு எதுவும் இல்லை. அதனால் எனக்கு ஒரு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை..


1. உனக்கு, உன் குடும்பத்துக்கு, உன் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறாதே.

2. உன் பெற்றோர்களுடன் பேசி, கவனித்து, பகிர்ந்து அவர்களை சந்தோஷப்படுத்து.
3. ஏழைகளுக்கு உதவி செய். ஏதானும் தான தர்மம், நல்ல காரியங்கள் செய்.
4. இறைவன் மேல் நம்பிக்கை வை. காலையும் மாலையும் தொழத் தவறாதே.
5. புகை பிடித்தல், மது அருந்துதல், பெண்கள் சகவாசம் ஆகிய கெட்ட பழக்கங்களைத் தவிர்.
6. நமது கலாசாரம் சிறந்தது. அதில் நம்பிக்கை வைத்து அதைப் பின் பற்று.
7. உனது குடும்பம் உனக்கு முக்கியம். வாழ்வதும் சாவதும் அதற்காக.
8. அரசியல் தெரிந்து கொள். ஆனால் அதைப் பற்றி பேசவோ, விவாதிக்கவோ, பிரச்சாரம் பண்னவோ வேண்டாம்.
9.உனது மதம் உனக்கு முக்கியம். அதைப் பற்றி பேசவோ, விவாதிக்கவோ, பிரச்சாரம் பண்னவோ வேண்டாம்.
10. சாதாரண வாழ்க்கை வாழ். படாடோபம் வேண்டாம். ஏழையைப்  பொறாமை பட வைக்காதே.
11. சினிமாவைப் பார்த்து அனுபவி. நடிகர்களிடம் பைத்தியம் ஆகாதே.
12. புத்தகம் படி. அது மனிதனை உருவாக்குவது. அறிவைக் கொடுப்பது.


Friday, October 6, 2017

NUDE CULTURE / நிர்வாண கலாசாரம்

NUDE  CULTURE
Yesterday, in a newspaper, there was a nude photo of a girl shown as a model for ladies inner garments. A few days back, there was a nude photo of a man shown as an advertisement for gents inner garments. I don't understand the logic behind in showing nude photos. Young people get sexually aroused on seeing these photos. 

There is competition among the papers to print it in smooth paper to enhance its appeal. In earlier days there was a lot of opposition even for photos with mild exposure. Cinemas and magazines have gone to the worst level. If questioned, they say that the younger generation likes it. These are the main reasons for the increase in rape culture in our country. 


When the old generation advises the younger generation about our culture, ethics, morals, traditional belief, and about their personal safety, they mock at them. Why the younger generation should not raise their voice against these crimes instead of mocking at the old? MAY GOD BLESS YOU.


நிர்வாண கலாசாரம் 

நேற்றைய செய்தித் தாளில் பெண்களின் உள் ஆடைகள் பற்றிய விளம்பரத்தில் ஒரு சிறு வயதுப் பெண்ணின் நிர்வாணப் புகைப் படம் போடப் பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன் அதே பத்திரிகையில் ஆண்களுக்கான உள் ஆடை பற்றிய விளம்பரத்தில் ஒரு வாலிபனுடைய நிர்வாணப் புகைப் படம் போடப் பட்டிருந்தது. 

இந்த மாதிரி நிர்வாணப் படங்களை போடுவதன்  தத்துவம் என்ன வென்று எனக்கு புரியவில்லை. அந்தப் படங்களைப் பார்ப்பவர்கள் மனது கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உண்டு. நல்ல வழுவழுப்பான தாளில் அந்தப் படங்களை கவர்ச்சியாகப் போடுவதற்கு பத்திரிகைகளுக்குள் பலத்த போட்டி உண்டு. 


அந்த நாட்களில் சாதாரண படங்களைப்  போடுவதற்கே பலத்த எதிர்ப்பு உண்டு. சினிமாவும் பத்திரிகைகளும் தரத்தில் மிகவும் குறைந்து விட்டது. இந்தப் படங்களை போட்டு வியாபாரத்தை அதிக மாக்க முயற்சி செய்கிறார்கள். கேட்டால் இளைய தலைமுறை இதை விரும்புகிறார்கள் என்று சொல்கிறார்கள். நாம் நாட்டில் கற்பழிப்பு அதிகம் ஆவதற்கு இந்த மாதிரி படங்களும் ஒரு காரணம்.


பெரியவர்கள், இளைய தலைமுறைக்கு தர்மம், நியாயம், பாரம்பரியம், கலாசாரம் பற்றி போதனை செய்தால் அவர்களைக் கிண்டலும் கேலியும் பண்ணுகிறார்கள். இந்த சீர்அழிவை எதிர்த்து, பெரியவர்களைக் கிண்டல் செய்யாமல், இளைய தலைமுறை என் ஒரு புரட்சி செய்யக்கூடாது?



TWO WHEELER / மோட்டார் சைக்கிள்

TWO WHEELER
A two-wheeler is designed and licensed only for two people to travel. If they have a small child they can take it. I find four people travel in one vehicle. Minor children drive motorcycles.

It is quite dangerous. They do not think about the consequences. They want to save a few rupees on autos. There will be loss of life of a dear one or they may have to incur lakhs medically.


Why invite trouble? The worst thing is, grown-up children sit on the petrol tank and if their knees arrest the handlebar the entire family can see Lord Vishnu immediately and without any difficulty. 


The Lord will not come in person with SANGU / CHAKRA to tell individually. He will advise only through well-wishers. It is up to you to take it or leave it. 


When you see people travel like that please advise them as a social service. 


மோட்டார் சைக்கிள் 

இரண்டு பேர் பிரயாணம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது ஒரு மோட்டார் சைக்கிள். ஒரு சின்னக் குழந்தை இருந்தால் அதையும் தூக்கி செல்லலாம். ஆனால் நான் தினமும் 4 அல்லது 5 பேர் ஒரு வண்டியில் செல்வதைப் பார்க்கிறேன். வயதுக்கு வராத சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஒட்டுகிறார்கள்.

அது அவர்கள் இஷ்டம் என்று என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அந்த மாதிரி பிரயாணம் செய்வது மிகவும் ஆபத்தானது. பாவம் அவர்கள். அதன் விளைவுகள் தெரியாமல் செல்கிறார்கள். கொஞ்சம் பணம் செலவு செய்து ஆட்டோவில் செல்வது நல்லது. 

ஆபத்து எந்த வழியில் வரும் என்று முன் கூட்டி சொல்ல முடியாது. விபத்து ஏற்பட்டால் மருத்துவ செலவுக்கு பல லக்ஷ ரூபாய் செலவு ஆகும். குடும்பம் கஷ்டப்படும். அடி பட்டவர்க்கு வாழ்க்கை வீணாகும். 

ஏன் கஷ்டத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும்? இதில் இன்னும் மோசம் என்ன வென்றால், வயது வந்த பெரிய குழந்தைகள் பெட்ரோல் டாங்கில் அமர்ந்து செல்வது. அவர்கள் கால்கள் ஹான்டில்  பாரை தடுத்து விட்டால் அதோ கதி தான். 

குடும்பம் முழுவதும் கூண்டோடு எந்த கஷ்டமும் இல்லாமல் மஹா விஷ்ணுவை பார்க்கப் போகலாம். சங்கு சக்ரத்தோடு மகாவிஷ்ணு வந்து உபதேசம் செய்ய மாட்டார். நம் நல விரும்பிகள் மூலம் சொல்லுவார்.அதைக் கேட்பதும் விடுவதும் நம் இஷ்டம்.

இந்த மாதிரி பிரயாணம் செய்பவர்களை பார்த்தால் தயவு செய்து அவர்களுக்குப் புரியும்படி எடுத்து சொல்ல வேண்டியது நமது கடமை. இல்லையா?

Thursday, October 5, 2017

UNWRITTEN RULES / எழுதாத சட்டங்கள்.

UNWRITTEN RULES

In earlier days, there was a joint family system. There is both plus and minus in this system. The advantages outweigh the disadvantages if there is some adjustment among the members. Now it is a distant dream and it can never be implemented in the present scenario. However, there are occasions when people stay together for a short period for certain purposes. These are the unwritten rules to be followed on such occasions.

.
1. All women, whether it is mother, wife, sister, sister-in-law, daughter, daughter-in-law or friend, if they stay together and unless they are physically disabled, should coordinate, cooperate and contribute with the lady of the family, in all the domestic chores irrespective of their likes and dislikes. Otherwise, it is advisable, not to stay together for more than a day

2. All men, whether it is father, husband, brother, brother-in-law, son, son-in-law or friend, if they stay together, on any account they should not interfere, suggest, or advise on any of the affairs of the Kartha [bread winner] of the family even if it is asked for. Otherwise, it is advisable, not to stay together for more than a day.


3. If this rule is strictly followed, there will be peace and friendship.


எழுதாத சட்டங்கள்.


ஒரு காலத்தில் கூட்டுக் குடும்ப முறை இருந்தது. அதில் நல்லது, கெட்டது உண்டு. அனுசரித்துப் போனால் தீமைகளை விட நன்மைகள் அதிகம். ஆனால் இப்போது அதை கனவிலும் நினைக்க முடியாது. இருந்தாலும், சில காரணங்களுக்காக சில நாட்கள் சேர்ந்து வாழ வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. அப்போது இந்த எழுதாத சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.


1. எல்லா பெண்களும், அம்மா, சகோதரி, மனைவி, பெண், மருமகள் அல்லது நண்பர்கள்  யாராயிருந்தாலும் ஒரு இடத்தில் சேர்ந்து தங்கும் பொழுது, உடல் பாதிப்பு இருந்தால் ஒழிய, ஒருவருக்கு ஒருவர் துணையாக, அன்பாக, ஆரோக்கியமாக உதவி செய்தல் வேண்டும். இல்லாவிடில் ஒரு நாளைக்கு மேல் சேர்ந்து தங்காமல் இருப்பது நல்லது.


2.எல்லா ஆண்களும், அப்பா, சகோதரன், கணவன், மகன், மருமகன், அல்லது நண்பர்கள் யாராயிருந்தாலும் ஒரே இடத்தில் சேர்ந்து தங்கும் பொழுது எந்த காரணம் கொண்டும்  அந்த வீட்டுக்காரருக்கு [கர்த்தா] அவரே கேட்டாலும் உபதேசமோ, அறிவுரையோ, குறுக்கிடுதலோ  செய்வது கூடாது. இல்லாவிடில் ஒரு நாளைக்கு மேல் சேர்ந்து தங்காமல் இருப்பது நல்லது.


3. இந்த எழுதாத சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்றினால் எங்கும் அன்பும், அமைதியும்,சந்தோஷமும் நிலைக்கும்.



Tuesday, October 3, 2017

WHO IS SMARTER ? / யார் திறமைசாலி?

WHO IS SMARTER ?
A Tamil proverb goes like this. "Give the work to the hard-working and the pay to the idler" It is believed that the smart will get all the accolades and go up in the ladder. But in reality, people will load him with more work without giving any incentive and make him repent. There are two types of people.

The workaholic, does bull work in his office, quietly returns home,, removes the shoes and socks, keeps it in its place, takes a towel, goes to the restroom, washes his face and limbs, comes to the dining, takes the coffee kept ready for him, sits on the sofa and talks passionately with his wife about the day. He then starts helping his wife in the domestic chores

.
The other one does no work in his office, always gossiping and visiting canteen, returns home. At the street corner, loosens his tie disturbs his hairstyle, unbutton and rolls up one of his shirt sleeves, enters home posing tired, throws the shoes and socks and lies on the sofa stretched. His wife brings coffee, applies Wicks on his forehead and he retires to his bed until dinner is ready.

Now tell me, who is smarter of the two?


யார் திறமைசாலி?

பழமொழி என்ன சொல்கிறது? வேலை செய்பவனுக்கு வேலையைக் கொடு, வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தைக் கொடு. வேலையை நன்கு செய்பவன் பல வெற்றிகள்  பெறுவான் வாழ்க்கையில் முன்னேறுவான் என்று நாம் நினைக்கிறோம். உண்மை அதுவல்ல. வேலை செய்பவனுக்கு அதிக வேலை தான் கிடைக்கும். புகழோ பாராட்டோ இல்லை. நீங்கள் இரண்டு விதமான நபர்களை பார்க்கலாம்.

நன்கு வேலை செய்பவன், வேலை முடிந்த பிறகு வீடு திரும்புகிறான். அமைதியாக வீட்டின் உள்ளே நுழைந்து, மிதியடியை  கழற்றி, அதன் இடத்தில் வைத்து விட்டு, குளியல் அறை சென்று, முகம் கை கால் கழுவி, சாப்பாட்டு மேஜையில் மனைவி அன்புடன் வைத்திருக்கும் காப்பியைப்  பருகி விட்டு, சோபாவில் அமர்ந்து, அன்று நடந்தது பற்றி மனைவியிடம் அன்புடன் பேசுகிறான். பிறகு மனைவிக்கு வீட்டு வேலையில் உதவிகள் செய்கிறான்.


அலுவலகத்தில் வேலையே செய்யாத இன்னொருவன், எப்பொழுதும் வம்பு பேசிக்கொண்டு, சிற்றுண்டி சாலையில் பொழுதை ஒட்டி விட்டு, வீடு திரும்புகிறான். தெரு முனையில், டையை தளர்த்தி விட்டு, சட்டையில் மேல் பித்தானை கழற்றி விட்டு, சட்டை கையை மடித்து விட்டு கொண்டு, தலை முடியை சிறிது கலைத்து விட்டுக் கொண்டு, மிகவும் களைத்தது போல் வீட்டிற்குள் நுழைவான். 


உள்ளே நுழைந்தவுடன், மிதியடியை  தூக்கி எறிந்து, சோபாவில் காலை நீட்டிப் படுத்து விடுவான். மனைவி தரும் காப்பியை குடித்து விட்டு, அவள் தலைவலித் தைலம் நெற்றியில் தடவ  படுக்கை அறையில் போய் படுக்கையில் விழுந்து இரவு சாப்பிடும் வரை வெளியே வரமாட்டான்.


இருவரில் யார் திறமைசாலி?


BERMUDA TRIANGLE / பெர்முடா முக்கோணம்

BERMUDA TRIANGLE

Bermuda triangle is an imaginary place on the Atlantic ocean near America where it is believed that all the ships and planes passing through this area get lost.

The first woman a man comes to know in his life is his mother. He loves her to the core. The next woman whom he gets into his life is his sister. Their love is sublime. Then the third woman who shares the rest of his life is his wife. Their love is unique. All three are important to him as he gets different types of love from them. 


The moment he is married, the mother and the sister should come forward to leave their hold on him and allow him to lead his life with his wife. Then only his life will be happy. Otherwise, he will be caught in the Bermuda triangle with each one of them on its vertex and him in the middle making his life miserable. 


At no time, he should not take up the cause of one with the other. If he deals with them individually he will succeed and be happy. If he deals with them collectively, his life will be doomed.


பெர்முடா முக்கோணம் 


அமெரிக்காவுக்கு அருகில் அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் பெர்முடா முக்கோணம் என்ற இடத்தில் செல்லும் கப்பல்கள், விமானங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன என்பது ஒரு நம்பிக்கை.

நமது வாழ்க்கையில் நாம் அறியும் முதல் பெண் தாயார். நாம் அவர்களை மனப்பூர்வமாக நேசிக்கிறோம். அவர்களுக்கு அடுத்து நமக்கு தெரியும் மற்றொருபெண் சதோதரி. அவர்கள் அன்பு புனிதமானது. 

அடுத்து நாம் அறியும் மூன்றாவது பெண் மனைவி. அவள் காட்டும் அன்பு அதிசயமானது, அபூர்வமானது. இந்த மூவரும் நமக்கு வாழ்வில் முக்கியம். திருமணம் செய்த உடன் தாயும் சதோதரியும் தங்கள் இடத்தை மனைவிக்கு விட்டுக் கொடுத்தல் நல்லது.


அவர்கள் அந்த மாதிரி செய்தால் மூவர் வாழ்க்கையும் மிக சந்தோஷமாக இருக்கும். இல்லாவிடில் புயலில் சிக்கிய கப்பல் போல தத்தளிக்க வேண்டும். ஒரு முக்கோணத்தின் மூன்று மூலைகளில் ஒவ்வொருவர் இருந்து நடுவில் அவன் இருந்தால் வாழ்க்கை நரகமாகிவிடும். 


ஒருவருக்காக இன்னொருவரிடம் வக்காலத்து வாங்குவது தவறு. ஒவ்வொருவருடன் தனித்தனியாக பழக வேண்டும். எல்லோரையும் ஒருமிக்க திருப்தி செய்வது முடியாத காரியம். அவன் வாழ்க்கை வீணாகி விடும்.



IGNORE THE LAPSES / குறை என்றும் இல்லை

IGNORE THE LAPSES
A mother or wife or daughter [in-law] are not cooks. They cook only to satiate our hunger. It is a noble act. They should be worshiped for this gesture. But some people have the tendency of commenting adversely on their cooking affecting their morale. 

Every day, they cook as usual and sometimes the quality gets varied. They do not do it with purpose but it happens accidentally. They do the work with all love, affection, and sincerity. Sometimes the taste is not up to the mark. We should always respect the person and the efforts taken by her. 


When we eat for hunger, we will not worry about the taste. Only when we are not hungry but eat for the taste, we have the tendency to make drastic comments. We must understand to what extent our comments will affect them mentally. 


We must love them. We must understand their difficulties. If there is any shortcoming in the cooking, we can rectify it instead of making a big issue over it. When the cooking is tasty appreciate them and make them happy. If it is not tasty please ignore it.


குறை என்றும் இல்லை 

ஒரு அம்மா, மனைவி, பெண், மருமகள் இவர்கள் எல்லாம் சமையல் வேலை செய்யப் பிறந்தவர்கள் இல்லை. நம் பசியைப் போக்குவதற்காக அவர்கள் சமையல் செய்கிறார்கள். அது ஒரு புனிதமான எண்ணம். அதற்காக அவர்களை நாம் கும்பிட வேண்டும்.

ஆனால் சிலர் சமையலில் கோளாறு சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். இது எவ்வளவு தூரம் அவர்கள் மனதை பாதிக்கிறது என்று எண்ண வேண்டும். தினம் அவர்கள் ஒரே மாதிரி தான் சமைக்கிறார்கள். சில சமயம் அதன் தரம் மாறுபடுகிறது. 


அவர்கள் அதை வேண்டும் என்றே செய்வதில்லை. ஏதோ தவறுதலாக நடந்து விடுகிறது. அவர்கள் அன்புடன், ப்ரியமாக உண்மையாகத் தான் செய்கிறார்கள். சில சமயம் ருசி சிறிது குறைந்து விடுகிறது, அதற்காக அவர்களை குற்றம் சொல்வதில் பலன் இல்லை. 


அவர்கள் படும் கஷ்டத்தை மதிக்க வேண்டும். குறையைப்  பெரிது படுத்தக் கூடாது. பசிக்காக சாப்பிடும் பொழுது ருசி தெரியக் கூடாது. பசி இல்லாத போது தான் ருஸிக்கு  சாப்பிடுகிறோம். அப்பொழுது குறை சொல்லும் எண்ணம் ஏற்படுகிறது. 


நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்கள் மனதை எவ்வளவு பாதிக்கும்  என்று நாம் உணர வேண்டும். அவர்கள் தவறுகளை பெரிது படுத்தாமல் அவர்கள் மீது அதிக அன்பு செலுத்த வேண்டும். 


சமையலில் உள்ள குறையை சரி செய்து விடலாம். மனதில் ஏற்பட்ட காயத்தை போக்க முடியாது. நன்கு சமைக்கும் பொழுது பாராட்டுங்கள். குறையைப் பெரிது படுத்தாதீர்கள்.


WHY DO YOU ADVICE? / அறிவுரை தேவையா?

WHY DO YOU ADVICE?

We tell the time to another person only when it is asked for. If anyone goes on telling the time to everyone walking on the street, what people will think about him? Will they think that he is doing social service or will they think that he is mad? 


Similarly, everyone has his own belief, knowledge, intelligence, understanding, views, ideas, imagination, confidence and conscience. No one will seek advice from others especially on topics like politics, medicine, religion, spiritualism, etc. 


Many people do not understand this. Even our own children, who are better educated than us, do not agree with our views and question us. In such a situation, it is always advisable to keep quiet unless the other person seeks our advice.


As you tell the time only when it is asked for, you should also extend your advice only when it is sought for. This rule is applicable even to our own children in developing mutual love, respect, and understanding. This is the golden rule of good human relations.


அறிவுரை தேவையா?

யாரும் கேட்காமல் நாம் நேரம் சொல்ல மாட்டோம். தெருவில் போகும் எல்லோரிடமும் ஒருவன் மணி சொல்லிக்கொண்டிருந்தால் அவனைப் பைத்தியம் என்று தான் சொல்வார்கள். அவனை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? 

சமூக சேவை செய்வதாக நினைப்பார்களா அல்லது பைத்தியம் என்று நினைப்பார்களா? அதே போல் ஒவ்வொருவருக்கும் மனசாட்சி, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், நோக்கு, எண்ணங்கள், கற்பனை மற்றும் நம்பிக்கை இருக்கிறது. 


மற்றவர்களின் அறிவுரையை எதிர்பார்க்க யாரும் முட்டாள் அல்ல. முக்கியமாக மருத்துவம், மதம், கடவுள் நம்பிக்கை முதலியவற்றில். நம்மை விட அதிகம் படித்த நம் குழந்தைகள் கூட நம்முடன் ஒத்துப் போகாமல் நம்மைக் கேள்வி கேட்கிறார்கள். பலர் இதை புரிந்து கொள்வதில்லை. 


இந்த நிலையில், நம்மை பற்றி கொஞ்சமும் அறியாதவர்கள் நம்முடைய அறிவுரையை விரும்புவதில்லை. கேட்காமல் மணி சொல்லாதது போல, கேட்காமல் அறிவுரை கொடுக்கக் கூடாது. இது நம் குழந்தைகளுக்கும் பொருந்தும். இது மனித நேயத்தில், உறவில் ஒரு முக்கிய நியதி.



THE POLITICS THAT I WISH / நான் விரும்பும் அரசியல்

THE  POLITICS THAT I WISH

1. Democracy is an institution on the principle of "for the people by the people". So whatever good or bad that takes place, only the people are responsible.

2. There are so many educated people, with good character and without any party affiliation who are willing to serve for the country. We do not identify them. 

3. Many people now talk so much about Dr. Abdul Kalaam. No one knew him before he became the President.

4. Thousands of people like him are available in our country. We must identify them and persuade them to take up the responsibility.

5. Based on the economics of the country, there should be only three parties under the captions, DEMOCRATS, REPUBLICAN AND LABOUR in the country.

6. People should identify the best person in each and every constituency and propose them for the election and send him to represent them in the Govt.

நான் விரும்பும் அரசியல் 

1. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக செயல் படும் ஒரு அமைப்பு. அதில் நடக்கும் நல்லது கெடுதலுக்கு அவர்களே பொறுப்பு. நன்கு யோசிக்கணும். 

2. எவ்வளவோ படித்த,பண்புள்ள,கட்சி சார்பில்லாத நல்ல மனிதர்கள் மக்களுக்காக உழைக்க விரும்புகிறார்கள். அவர்கள் நம் கண்ணில் படுவதில்லை..  

3. இப்பொழுது எல்லோரும் டாக்டர் அப்துல் கலாம் பற்றி பேசுகிறார்கள். குடியரசு தலைவர் ஆவதற்கு முன் அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. 

4. அவரைப் போல ஆயிரக் கணக்காணோர்  நாம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை கண்டு பிடித்து அவர்கள் கையில் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

5. பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாக கொண்டு குடியரசு, தொழிலாளர், ஜனநாயகம் என்ற 3 கட்சிகள் மட்டும் நாட்டில் இருக்க வேண்டும்.  

6. ஒவ்வொரு தொகுதியிலும்  அந்தக் கட்சியைச் சார்ந்த , எல்லா விதத்திலும் சிறந்த ஒருவரை மக்களே தேர்தலில் வெற்றி பெறச் செய்து அரசாள அனுப்பவேண்டும்.