Wednesday, April 29, 2020

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் 136 TO 150

136. காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

137. ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

138. தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

139. பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

140. இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

141. தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

142. பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

143. வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

144. தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

145. எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

146. உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

147. தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

148. துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

149. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

150. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.


Sunday, April 26, 2020

தமிழ் சினிமா - ஒரு கண்ணோட்டம்.

தமிழ் மக்களிடம் சினிமாவை ரசிப்பதில் ஒரு தவறான அணுகுமுறை இருக்கிறது. சினிமாவில் நடிப்பைப் பற்றி  ஒரு தவறான அபிப்பிராயம் இருக்கிறது. சினிமாவை எப்படி ரசிப்பது, எப்படி நடிப்பது என்று விளக்குவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

VITORIO DE SICA வின் BICYCLE THIEVES  பிரென்ச் திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? தன்னுடைய வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான சைக்கிளைத் திருடியவனைத் தேடி அலையும் ஒருவனின் பரிதாபமான கதை. அதில் நடித்தவர் சாதாரணமான நடிகர். படம் பிரமாதமாக இருக்கும். கதை அப்படி.

அதேபோல, சமீபத்தில் "பாரம்" என்ற தமிழ்த் திரைப்படம் பார்த்தேன். அதில் நடிகர்கள் யாருமே தெரியாதவர்கள். சிறப்பாக நடித்தார்கள். படம் இயற்கையாக நன்றாக இருந்தது. யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இவர்தான் நடிக்க வேண்டும் என்று வரைமுறை கிடையாது.

கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்பது பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி. அதேபோல, மக்களை வைத்து சினிமாவா அல்லது சினிமாவை வைத்து மக்களா என்பதும். மேலும் சினிமாவில் நடிகர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்.

முதன் முதலில் திரு சிவாஜி கணேசன் மிகைப்படட நடிப்பை நாடகங்களிலும், திரைப்படத்திலும் கொண்டு வந்தார். அன்றைய சூழ்நிலையில் அது வேறு விதமாக இருந்தது. அதையே நல்ல நடிப்பு என்று நம்பினர்.

தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, சரித்திர, புராண மற்றும் குடும்பப் படங்களிலும் தனது மிகைப்படட நடிப்பைத் தொடர்ந்து நடித்தார்.. கமல், ரஜினி மற்றும் பல நடிகர்கள் அவரைப் பின்பற்றினர். மிகைப்பட்ட நடிப்பு நடிப்பே இல்லை.

ஒரு புத்தகம் படிக்கிறோம். கதை நன்றாக இருந்தால் மேலே படிக்கிறோம். இல்லாவிடில் படிக்காமல் விட்டு விடுகிறோம். அங்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். சினிமாவில் நாம் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 

ஒரு திரைப்படத்தை ரசித்தால் அந்தக் கதையை எழுதியவர் யார் என்று நாம் பார்ப்பதில்லை. அதில் நடித்த நடிகர் யார் என்று பார்க்கிறோம். இது ஒரு தவறான அணுகுமுறை. கதை ஆசிரியருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை.

நல்ல கதைகளைத் திரைப்படமாகத் தயாரிக்கும் போது அதிகமாக எழுத்தாளர்கள் உருவாகுவார்கள். இப்போது நடிகர்களுக்காக கதை எழுதுகிறார்கள். இது நல்ல அறிகுறி அல்ல. எழுத்தாளர்கள் குறைந்து விடுவார்கள்.

வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் குழந்தையாக, சிறுவனாக, வாலிபனாக, கணவனாக, தந்தையாக, தாத்தாவாக வாழ்ந்து இருக்கிறோம். சினிமாவில் நடிபபது போலவா நாம் வாழ்ந்தோம். நாம் சாதாரணமாகத்தானே இருந்தோம்.

சினிமாவில் காட்டுவது போலவா நாம் ஒவ்வொரு சமயத்திலும் வாழ்க்கையில் நடிக்கிறோம். அது இயற்கைக்கு முரணாகத் தெரியவில்லையா?. அதை எப்படி உங்களால் ரசிக்க முடிகிறது? ஒரு கதையில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

ஒரே நடிகர் திரும்பத்திரும்ப பல படங்களில் பல பாத்திரங்களில் நடிபபது உங்களுக்கு ஒருவித சோர்வைத் தரவில்லையா? அவரால் கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகிறது. படம் அதன் தரத்திற்கு ஓடாமல் நடிகருக்காக ஓடுகிறது.

பாடகர்களைத்தவிர வாழ்க்கையில் யாரும் பாட்டுப் பாடுவது இல்லை. இடத்திற்குத் தகுந்தால் போல் பின்னணியில் இசை பாடல் சேர்க்கலாம். இந்தியத் திரைப்படங்களைத் தவிர, உலகில் வேறு எந்தத் திரைப்படத்திலும் பாடல் ஆடல் காட்சிகள் கிடையாது.

வெளிநாட்டுத் திரைப்படங்களில் பாடல்கள் கிடையாது. பாடகர், இசையமைப்பாளர் சேர்ந்து தனியாக "இசை ஆல்பம்" வெளியிடுகிறார்கள். விற்பனை அதிகம். நமது நாட்டில் திரைப்படங்களில் பாடல்கள் உண்டு. ஆடியோ கேசட் கொஞ்சம் உண்டு. விற்பனை ஆகாது.

இதை மக்கள் உணரவேண்டும். நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை வரவேற்க வேண்டும். நடிகர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. அப்போது செலவு குறையும். டிக்கெட் விலையும் குறையும். பலருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

ஏதோ ஒரு ஆர்வத்தில் இதை எழுதினேன். எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது என்று எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் ஒரு ஆசை. முயற்சீி செய்து பார்ப்போமே என்று. ஆசை யாரை விட்டது. நான் ஊதுர சங்கை ஊதிவிட்டேன், விடியும் போது விடியட்டும்.

Thursday, April 23, 2020

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் 121 TO 135

121. காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.

122. கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.

123. பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

124. பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம். அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.

125. பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.

126. எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

127. கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.

128. தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.

129. வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.

130. தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.

131. தொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.

132. அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.

133. கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

134. துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

135. கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும்.


Monday, April 20, 2020

ராமா ராமா என்று சொன்னால்

விசேஷ நாள் ஒன்றில், காஞ்சி ஸ்ரீமடத்திற்கு மகானை தரிசிக்க பெரும் கூட்டம் வந்திருந்தது.

அப்போது அவர் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டிருந்ததால், வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அமைதியாக நின்றும், அமர்ந்தும் ஜயஜய சங்கர கோஷத்தை மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது பக்தர் ஒருவர் இடையே புகுந்து முண்டியடித்துக் கொண்டிருந்தார். மடத்துத் தொண்டர்கள், மகான் பூஜை செய்வதையும், அதன் பிறகு அவர் தரிசனம் தர அமரும்போது, வரிசையில்தான் செல்ல வேண்டும் என்று சொன்னார்கள்.

பூஜையை முடித்து, தீர்த்தப் பிரசாதம் தந்துவிட்டு, வழக்கமாக பக்தர்களுக்கு தரிசனம் தரும் இடத்தில் வந்து அமர்ந்தார் மகாபெரியவர். வேகமாக மகான் முன் வந்து நின்றவர், பெரியவர் எதுவும் கேட்பதற்கு முன்பாக அவராகவே பேசத் தொடங்கினார்.

"சுவாமி எனக்கு ஏகப்பட்ட...". என்று ஆரம்பித்தவரை, அதற்கு மேல் சொல்லவிடாமல், "முதல்லே கொஞ்ச நேரம் அமைதியா அதோ அங்கே போய் உட்காரு. ராம நாமத்தைச் சொல்லு. நானே கூப்பிடறேன்!" மகான் கனிவு கலந்த கட்டளையாகச் சொல்ல அப்படியே சென்று அமர்ந்தார் அவர்.

"சுவாமி எனக்கு வீட்டுல வறுமை. ஆபீஸ்ல நிம்மதி இல்லை. வெளியிடத்துல கடன். இப்படி ஏகப்பட்ட பிரச்னை வாட்டுது. ஒண்ணு முடிஞ்சதாக நினைச்சாலும் உடனே அடுத்தது தொடங்கிடுது. என்னால் இந்த சங்கடங்களைத் தாங்கவே முடியவில்லை. மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு. எனக்கு நீங்கதான் ஒரு தீர்வு சொல்லணும்!" சொன்னார் வந்தவர்.

அமைதியாக அவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த மகான். "இவ்வளவு நேரம் ஓரமா உட்கார்ந்துண்டு என்ன செய்தாயோ,அதையே தினமும் அரை மணி நேரம் பண்ணு. பிரச்னை தீர்ந்துடும்!" என்று சொன்னார்.

பெரியவர் சொன்னதும் கொஞ்சமும் யோசிக்காமல்,"இங்கே உட்கார்ந்து என்ன செஞ்சேன்? ராமா ராமா என்று சொன்னேன்.அதைச் சொன்னால் என் பிரச்னை தீர்ந்துவிடுமா?  என்று கேட்டார் வந்தவர்.

கொஞ்சமும் கோபம் இல்லாமல், அவரைப் பார்த்த மகான்,"உன்கிட்டே ஒரு கேள்வி. ராம நாமம் சொல்லும் இடத்துக்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாம ஓருத்தர் வந்து நிற்பாராமே. அது யார் தெரியுமா? என்று கேட்டார்.

"தெரியும்..அனுமான்" .

"அந்த அனுமான் யார் அவதாரம் தெரியுமா? சிவன் அம்சம். சிவன் அங்கே வந்து நின்றால், அம்பாள் உடனே வந்துவிடுவாள். அம்பாள் வந்தால் அவர்களின் குழந்தைகள் முருகனும், கணபதியும் ஆஜராகிவிடுவார்கள். சிவகுடும்பம் உள்ள இடத்தில் மங்களம் நிறையும். அதனால் மகாலக்ஷ்மி வருவாள். அவள் வந்தால் மகாவிஷ்ணுவும் வந்துவிடுவார்.

இப்படி அங்கே எல்லா தெய்வங்களும் வந்துவிட்டால், அங்கே சந்தோஷம் தானாக நிறைந்துவிடும் அல்லவா? அதனால்தான் உன்னை ராமநாமம் சொல்லச் சொன்னேன். புரிந்ததா?"

மகான் சொல்ல, மன நிறைவோடு அவரை வணங்கி பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டார் அந்த நபர். ராமநாமம் சொல்லு என்று கேட்கவைத்து, அதற்கு பதில் சொல்லும் விதமாக, ராமநாமத்தின் பெருமையை எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக.

Friday, April 17, 2020

RANDOM THOUGHTS 796 TO 810

796. If you sow hatred you will not reap love. If you sow love you will not reap hatred. So, you have to decide what you want to reap.

797. Let us live our lives. Let us pray to our Gods. Let us earn our food. Let us help each other. Let us not fight. let us be friends.

798. Any method to gain anything by unethical and illegal ways and immoral actions without putting in hard work will not last long.

799. One may share his pleasure with anyone but not his pain. His close people may sympathize with him but distant people may avoid him.

800. Enmity ends with death. No use of carrying hatred anymore. We should sympathize with the person and consider him as our dear one.

801. All living beings need love, care, and recognition at any age. The old people who have lost the spouse feel lonely and isolated.

802. To keep left is for the vehicles. To keep right is for pedestrians. Ladies should walk on the right side to avoid chain snatching.

803. Helpless and hapless old age, combined with illness is the miserable misery inevitable in life that everyone may have to undergo.

804. Everyone feels that he would live a different kind of life if given another chance. This realization comes at the fag end of life.

805. Sewage gets mixed with drinking water due to stagnation for which people are responsible and they pay the price on mineral water.

806. Most Hindus have not learned their religious texts thoroughly. So they are unable to defend their religion like Shri. Adhi Sankara.

807. The misunderstanding and fighting between various religious groups itself show a lack of understanding of their religious texts.

808. When all religions advocate "love ever, hurt never" from where comes misunderstanding, fights, and riots in the name of religion?

809. Our dependence on the washing machine and unwillingness to wash our own clothes forbid us from staying with friends and relatives.

810. For the success of a TV serial, one must efficiently be able to imagine interesting incidents that interlude with the main story.

Tuesday, April 14, 2020

சிரிப்பு வெடிகள் - 7

1. என்னது? கண் டாக்டருக்கே கண் தெரியாதா?

பின்னே என்னங்க? பார்க்கும் நேரம் 9 மணி முதல் 12 வரைன்னு அவரே போட்டிருக்காரே!!!!
*********************

2. ஒரு காப்பி எவ்வளவுங்க?

பத்து ரூபாய்.

எதுத்த கடையிலே ஒரு ரூபாய்னு போட்டிருக்கே.

முட்டாள், அது ஜெராக்ஸ் காப்பிடா.
*************************

3. உன் பேரு என்னப்பா?

என் பேரு அடைக்கலசாமி.

பேங்க்ல வாங்கின லோன் என்னப்பா ஆச்சு?

அடைக்கலசாமி!!!!!
******************************

4. வேலையில்லா திண்டாட்டம் எதனால்?

அதிக ஜனத்தொகையால்.

அதிக ஜனத்தொகை எதனால்?

வேலையில்லா திண்டாட்டத்தினால்.
****************************

5. கச்சேரிலே, "எந்தரோ" கேட்டீங்களா?

கேட்டேன், "பி" ரோன்னு சொன்னாங்க.
****************************

6. கடலை எண்ணெய் என்ன விலைங்க?

நூத்தி இருபது ரூவா.

எப்போ குறையும்?

அளந்து ஊத்தும்போதுதான்! 
*************************

7. கச்சேரிலே, ரமணி ஃப்ளுட் கேட்டீங்களா?

கேட்டேனே, தர மாட்டேன்னுட்டாரு.
******************************

8. நபர் 1: சார் எங்கே கிளம்பிடீங்க?

நபர் 2: பசங்களுக்கு மொட்டை போடத்தான்...

நபர் 1: எங்கே?

நபர் 2: வேறெங்கே, தலையிலதான்.
*******************

Saturday, April 11, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1381 TO 1395

1381. எனது வாழ்வில் சோதனையான நேரங்களில் எல்லாம் எனது விழிகளில் சுரக்கும் நீரைத் துடைப்பது நீரே. இறைவனே, உனது திருவடிகளே சரணம், சரணம்.

1382. வாழ்க்கை என்கிற நாடக மேடையில் நீங்கள் எந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் எப்போது முடியும் என்று சொல்ல முடியாது.

1383. பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கடிகாரமும், மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும், ஒரே நேரம்தான் காட்டும்.

1384. சில விஷயங்கள் அனுபவித்த பிறகு புரியும். செலவழிக்க வழி இல்லாதபோது பர்சில் நூறு ரூபாய் இருந்தாலும். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான்.

1385. தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி வீட்டில் வசிப்பதும் ஒன்றுதான். ஆகவே அனைவரிடமும் அன்புடன் பழகுங்கள்.

1386. புண்ணியம் என்பது டெபிட் கார்டு மாதிரி. பணம் கட்டி கார்டு வாங்கி பயன் படுத்துவதைப் போல. நற்செயல்களை செய்து அதற்கான பலன்களை ஏற்பது.

1387. நமது முதுமைப் பருவத்தில் நாம் செய்த பாவங்கள் வரிசை கட்டி வந்து கேள்வி கேட்கும். நாம் செய்த புண்ணியங்கள் அதற்கு தகுந்த பதில் கூறும்.

1388. யாருக்கும் தீங்கு செய்து பாவமூட்டையைக் கட்டி விடக்கூடாது. அப்படி செய்திருந்தால் புண்ணிய காரியங்கள் செய்து சமன் செய்து விட வேண்டும்.

1389. நமது வெற்றியும், தோல்வியும் நமது கைகளில் தான் இருக்கிறது. வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

1390. இன்னொருவர் வேதனை அவர்களுக்கு வேடிக்கை. இரக்கமற்ற மனிதர்களுக்கு இது வாடிக்கை. வேதனையை தருவோர் தவறுக்காக தண்டிக்கப்படுவதில் தவறில்லை.

1391. எல்லோருக்கும் தங்கள் கருத்துகளை பிறரை பாதிக்காத வண்ணம் கூற உரிமை உள்ளது. அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவரவர் அறிவைப் பொருத்தது.

1392. பூக்களின் நிறம் எதுவாக இருந்தாலும், பூவையின் தரம் எதுவாக அமைந்தாலும் அந்த மலர்ச்சியின் வெளிப்பாடு தருவது ஒருவித மயக்கத்தைத் தான்.

1393. சின்னஞ்சிறு கவிதை தான், ஆனாலும் அதன் வாசம் என் நாசி வரை. வாசிக்கும் போதே அதில் தமிழை சுவாசிக்கிறேன். இன்னும் வாசிக்க யாசிக்கிறேன்.

1394. சட்டத்திற்க்கும், தர்மத்திற்க்கும் புறம்பாக யார் எதைச் செய்தாலும் அது கண்டிக்கக்கூடியது, தண்டிக்கக்கூடியது. இல்லாவிடில் சும்மா இருப்பது சுகம்.

1395. கற்பனைக்கும் அளவு உண்டு. அதற்கு மீறி காட்டப்படும் காட்சிகள், எழுதப்படும் எழுத்துகள் ரசிக்கக் கூடியது அல்ல. கண்டனத்துக்கு உரியது.

Wednesday, April 8, 2020

அர்த்தமுள்ள தமிழ்ப் பழமொழிகள்

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

3. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

4. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

5. கரந்தப் பால் காம்பில் ஏறாது.

6. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

7. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

8. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.

9. இறுகினால் களி. இளகினால் கூழ்.

10. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.

11. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.

12. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

13. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.

14. காற்றில்லாமல் தூசி பறக்காது.

15. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.

16. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

17. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.

18. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.

19. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

20. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

21. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

22. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

23. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.

Sunday, April 5, 2020

வாழ்க்கை என்பது

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில், அதை காலில் தான் அணிய முடியும். குங்குமத்தின் விலை மிகக்குறைவு, அதை நெற்றியில் தான் அலங்கரித்துக் கொள்வார்கள். இங்கு விலை முக்கியமில்லை, அதன் பெருமை தான் முக்கியம்.

உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவன் உண்மையான நண்பன். சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை புகழ்பவன் நண்பன் அல்ல. புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில் உள்ளதாக வரலாறு இல்லை.

இங்குகோயில்கள், மசூதிகள், திருத்தலங்கள் வேடிக்கையானவை, பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான். ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான், ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.

காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள். கண்கண்ட ஏழைக்கு பழைய சோறும், கிழிந்த துணியும் கொடுப்பார்கள். மனிதப் பிறவி சரியாக உணரப்படவில்லை,

ஏனெனில் பிறக்கும்போதும் அழுகை, சாகும்போதும் அழுகை, இடையில் எல்லாம் நாடகம். தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,

அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார். பால்காரர் பாலில் தண்ணீர் ஊற்றுகிறார் என்று சண்டையிடுவார்கள், தண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களைக் கொண்டாடுவார்கள்.

மாலை போட்ட மனிதன் வந்தால் அவர் முன்னால் ஊரேகூடி கொண்டாடும். மாலை போட்ட மனிதனின் பிணம் வந்தால் எல்லோரும் பிணத்திற்கு பின்னால் வருவார்கள்.

மனிதனின் பிணத்தை தொட்டால் அல்லது பார்த்தால் தீட்டு எனக்குளிக்கும் மனிதன், வாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா எடுப்பார்கள்.

இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை. இதுக்கெதற்கு கோபம், விரோதம், வீண்பழி, கொலை, கொள்ளை, காழ்ப்புணர்ச்சி? எது நமதோ அது வந்தே தீரும். யாராலும் தடுக்க முடியாது.

நமதில்லாதது...நமக்கில்லாதது...எது செய்தாலும் வராது. யாராலும் தரவும் முடியாது. வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல. மற்றவர்கள் மனதில் வாழும் வரை....வாழ்ந்து காட்டுவோம்.... மற்றவர்களின் இதயத்தில்....

Thursday, April 2, 2020

RANDOM THOUGHTS 781 TO 795

781. Life is just a game. Why be discouraged, when there is still a chance? Why be discouraged, as the final whistle is not yet blown?

782. We believe in Almighty. Belief is different from Trust. For the trust, one should surrender to God which we lack. Do we trust Him?

783. "The last straw on the camel's back" means, the maximum load or stress or problem one can bear and that he can bear nothing more.

784. A fish vendor may not like the fragrance of the jasmine flower. A flower seller may not like the smell of fish. Lifestyle differs.

785. Spitting in the open is rampant in India. We are proud to call our country as our Motherland. It is a shame to spit on our mother.

786. If one wears his socks standing, he is young and healthy. If he wears sitting, he is middleaged. If he wears lying he is old&sick.

787. Once we understand that the other person will not listen to our words, it is always better to keep quiet instead of talking to him.

788. When a dear one falls sick, some spouse or children ignore, some say soothing words, some use strong words. Who shows more love?

789. It is said behind every successful man, there stands a woman. If one wants to achieve more accolades he has to increase the number.

790. People talk about retirement. There is no age limit for retirement. Only the nature of work changes. No stopping of doing karma.

791. At a wedding, many people throw saffron rice and flowers at the couple. Only elders should bless them by placing it on their head.

792. Our country will stand better among other countries if intellectual development is improved instead of infrastructure development.

793. As long as I confine myself within my house, I am going to be under house arrest. It makes no difference between India or the US.

794. When you are single, you like to see happily married couples. But when you are married, you like to see happy unmarried singles.

795. To fall in love with one person and marrying another is happening everywhere every day. Sanctity has lost its true value nowadays.