Saturday, January 6, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 166 TO 180

166. குடிநீர் நம் உயிர் நாடி. சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் ஆகியும் குடிநீர் பிரச்னை தீரவில்லை . அதற்கு உங்கள் ஆலோசனை என்ன ?

167. இன்னமும் பையனைப் பெற்றவர்கள் பெண்ணைப் பெற்றவர்களை  தரம் குறைந்து  நடத்துகிறார்களா இல்லை மாறி விட்டார்களா?

168. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நம்முடன் சேர்ந்து வாழ்வோரை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் நம்மை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

169. கற்றாரை கற்றாரே காமுறுவர். படிக்காதவர்கள் விரும்ப மாட்டார்கள். பொறாமை காரணம் அல்ல. தாழ்வு மனப்பான்மை தான் காரணம்

170. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். துன்பத்தினால் துவளக்கூடாது. அதனால் ஏற்படும் காயங்கள் காலத்தால் குணமாகும். 

171. இழந்ததைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படுங்கள். மேலும் முயற்சி செய்தால் இழந்தது திரும்ப வரும்.

172. திருமணத்திற்கு சிவப்பானவர்களையே பலரும் விரும்புகிறார்கள்.நிறம் குறைந்து இருந்தாலும் அழகு,குணம் நிறைந்த பலர் இங்கு இருக்கிறார்கள்.

173. மரத்தின் வேர் மரத்தின் உயிரைக் காக்க தகப்பனைப் போல் வேலை செய்கிறது. பூக்கள், இலைகள், காய்கள், கனிகள் குழந்தைகளாக அனுபவிக்கின்றன.

174. நட்பு புனிதமானது, ஆழமானது, அழகானது, துயர் துடைப்பது, சிந்திக்க, சிரிக்க,நேசிக்க,விட்டுக் கொடுக்க வைப்பது, நம்மிடம் நிறைந்து உள்ளது

175. நமது மனது, அகங்காரம், பாசம், ஆசைகள், கோபம், வெறுப்பு, கவர்ச்சி போன்ற எண்ணங்களில்  மூழ்கும் நேரம் நமக்கு கெட்ட நேரம்.

176. நேர்மை, வாய்மை, தேவையான பணம், அளவான உணவு, உடற்பயிற்சி, தியானம் இவைகள் போதும் நோயின்றி, கவலையின்றி ஆரோக்கியமாக வாழ.

177. ஒருவருக்கு எதையும் எதிர்க்க உரிமை இருப்பது போல, மற்றவர்க்கு  அதை ஆதரிக்க உரிமை இருக்கிறது என்ற உண்மை ஏன் பலருக்குப் புரிவதில்லை ?

178. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். ஒரு விஷயத்தை தீர விசாரித்து அதைப் பற்றி நன்கு தெரிந்த பின் பேசுவது, எழுதுவது நல்லது.

179. தீதும் நன்றும் பிறர் தர வாரா.  நமது சந்தோஷம், கஷ்டங்களுக்குக் காரணம் நாம்தான். வேறு யாரும் இல்லை. இதை நன்கு உணர்ந்தவன் ஒரு ஞாநி.

180. இன்றய இளைஞர்கள் எதிலும் புதுமை புதுமை என்கிறார்கள். பழமையைப் பற்றி ஒன்றும் தெரியாமல் அவர்கள் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.



Thursday, January 4, 2018

NOBLE PROFESSION THEN AND NOW

Recently, I fell sick and I had to call on a doctor. After making many calls and punched a few options, I could get his PA online. After an inquiry about my illness, she said the appointment was available only after a week. On my request that it was an emergency, she told me to come at 3 PM and she would try to squeeze me in if there was any cancellation by another patient.

The doctor was far away and he was well known in the field. Ailing from sickness, I took a cab costing Rs.500, to and fro, and reached the place well in advance by 2 PM. There was a fleet of cars in the parking lot and on the nearby streets and my cab driver dropped me far away from the doctor's place making a sick man walk the distance.


The receptionist was young and beautiful and the area was well furnished with AC, modern furniture, a 60" colour TV telecasting some movie songs, a fridge with cool mineral water, etc. I paid Rs.500, sat in a chair, and waited for my turn. The hall was full of patients waiting for their turn with wads of cash in their pockets. Many outsiders were freely walking in and out of the doctor's room.


Till 5 PM, I did not get my call and I was half dead. My frequent requests made the receptionist annoyed and she even admonished me without realizing that I was a sick person and I had come there for treatment. Finally, I go my call at 6 PM after 4 hours of ordeal by sitting in the hall.


I went inside the doctor's room furnished with cozy furniture and decorated with a good number of certificates and photographs with prominent people hanging all over the wall. He himself looked like a patient and from his lips and eyes, I could guess that he must be a heavy smoker and drinker of alcohol. He smiled wryly at me and offered a seat near him.


I was seated by his side and he inquired about my ailment. Whilst, I did not even finish explaining my problems, he took his writing pad, prescribed few medicines, and asked me to get a few tests done in a particular Lab and come back after few days by fixing an appointment. I was shocked when I was told that I had to pay Rs.500 for the second visit also.


While I was returning home in the cab, as you get in the movies, I also got concentric circles circling before my eyes and I went back in my memory, 60 years back when I was just twelve and I was living with my grannies in a small town. One day my grandfather fell sick and he asked me to go and inform the doctor to visit him as he was unable to go over there.


I went to the doctor's residence where I had gone many times as his son was my friend. When I told him about my grandfather, he immediately came with me as there was no other patient. He checked on my grandfather and pacified him not to worry and that he would be alright in two days. He then asked me to collect the medicine from his dispensary.


There used to be one doctor, qualified in Allopathy, in every small town and many in nearby towns and many more in the cities. The doctor in the town had his consultation on the lawn of his own house within two rooms, one for consultation and the other for giving medicines. A compounder assisted him in all matters like dressing, storing and preparing medicines, etc.


The consultation was done anytime during the day. The patient would lie down on a raised bench. The doctor would first test his eyes, nostrils, tongue, throat, neck, abdomen for any pain. Then with the stethoscope, he would observe the heartbeat and then his pulses. Simultaneously, he would listen to the complaint of the patient and then patiently explain the problem to him 


He would write some codes on a piece of paper and ask the patient to collect the medicine from the compounder. The patient would then put any money to his capacity in a box. For the poor, the doctor gave money to buy idly or bread. The patient collected the medicine in a light green bottle with details written clearly. Powdered medicine is folded in pockets of different colours.


The doctor then visited his other patients in their homes since they could not come in person. He used to sit by the side of the patient and talked to him in general and about his ailment. He gave him encouraging words and asked him to collect the medicine. He was offered snacks or coffee which he gladly accepted. A notebook was maintained for every patient.


They were people of dignity with devotion to their profession. They stored all the medicines for the benefit of the patients without asking them to go to town to get them. Some were even London qualified, owned Buick, Austin, Morris Minor, Chevrolet cars. They did not mind referring the patient to a more qualified doctor in the city in case they had any doubt about the disease. 


While there is no doubt that the development in research and technology and knowledge in the medical field has far-reaching progress in the treatment and longevity of mankind, the love, personal care, and devotion of old-timers are missing due to the high cost of medical education, greed for money and mushrooming of specialists for every finger of the hand.

A HERO IN THE MAKING

You have bad children but not bad parents. Every parent dreams for good children. In some families all children are good and in some a few are bad. Whether it is a large family or a nuclear family this phenomenon exists. It is believed whether a child is good or bad depends on its karma in the previous birth.

The previous generation had many children but less money. They believed in "more the children, more the security"They had to be strict in everything. The last generation had fewer children but more money. They believed in giving freedom to the children. In both the cases, good children found opportunity in difficulty but the bad children found difficulty in opportunity.


While the good children went along with their parents, the bad opposed. The parents especially the father had to control such rebellious children. There was always confrontation, fighting, and beating. The boy was waiting for an opportunity to take revenge upon his own father. When he grew old and gathered sufficient muscle power, he started opposing his father physically too.


He turned into a black sheep in the family without studying, missing the school, roaming on the streets with bad elements, chasing school and college going girls and teasing them by singing movie songs. He got into bad habits like smoking, drinking alcohol etc and for the money, he cheated his own parents by taking a commission on domestic purchases or forced them to spare.


Unable to tolerate the atrocities of such a boy, and fearing that his other children would also get spoiled, the father had to throw him out of the house with a broken heart. Stealing some money without the knowledge of the parents, and with some dresses, he left the house. He reached the abode for such boys, the city of Chennai.


On landing in the city, the first need was food, accommodation, and job. The only place where one could get all the three was the hotel. He managed to get a job in a hotel, washing utensils, cleaning the table, serving food and doing other menial jobs. He was provided with food and also allowed to sleep in the hotel during the night.


His only aim was to become a movie actor. He thought it was so easy to get into the cinema field. He visited all the movie studios, begged popular directors, actors and producers for a chance but no one listened to him. Now, he realized what a fool he was and to miss wonderful parents and a happy family. He cried uncontrollably.


He realized there were thousands of boys run away from home like him waiting to be an actor without any success. One day, Lady luck smiled at him and a director gave him a small role in his movie. He felt so elated as if he was the hero and went on telling everyone. After years of suffering, he managed to do a few roles and got some recognition.


A popular director offered him a good role in a movie with a good story which succeeded at the box office and made him a star overnight. Now he was able to make some money and as usual, bad elements joined him and the success went into his head. He acted in many movies and became a hero and was welcomed by everyone in society.


He might join a political party or start on his own and contest the elections. He would be elected for his movie image. He would then give lectures on social reforms as if a Howard graduate. He would then become an MLA, a minister and might be a chief minister. A hero in the making. Some are born great, some achieve greatness, for some greatness is thrust upon them.

Wednesday, January 3, 2018

OPEN HEART / மனம் திறந்து

OPEN HEART 
I have been reading most of the posts on FaceBook. Though I am not interested in politics, religion, caste and cinema gossips, to my dismay, I find many people write their views without even substantiating their stand which makes the reader believe whatever they write is true. 

Religious hatred is found everywhere. Without trying to unite the religions, hatred is sown. Caste animosity is the main agenda. Even for the ordinary post, communal colour is given with personal attack and derogatory remarks. Bad and indecent words are used. 


I am really concerned about this. When are we going to realize our responsibility to our family and nation? When are we going to strive for unity, friendship, and communal harmony? When are we going to be good citizens of a great nation respected for its cultural values?


Where our cherished principles like duty, dignity, discipline, peace, patience, equality, friendship, brotherhood, forget and forgive, and Godliness have gone? Please pardon me if I am wrong. Thank you. Goodbye.


மனம் திறந்து 

எனக்கு அரசியல், மதம், ஜாதி, சினிமா ஆகிய பதிவுகளில் விருப்பம் இல்லை என்றாலும் முகநூலில் எல்லாப் பதிவுகளையும் நான் படிக்கிறேன். யார் வேண்டுமானாலும், அரசியலில் எதைப் பற்றி வேண்டுமானாலும் எந்தவித சாட்சியமும் இல்லாமல் எழுதுகிறார்கள். அதை மற்றவர்களும் நம்புகிறார்கள். இது மிகவும் மனவேதனை அளிக்கிறது.

எல்லா இடங்களிலும் மதத் துவேஷம் காணப் படுகிறது. எம்மதமும் சம்மதம் என்று இல்லாமல் வெறுப்பு விதைக்கப் படுகிறது. ஜாதி வேறுபாடு முக்கியமான விஷயமாக இருக்கிறது. சாதாரண பதிவுக்குக் கூட ஜாதி வர்ணம் கொடுக்கப் பட்டு தனிப்பட்ட, மரியாதை இல்லாத விமர்சனம் தரப் படுகிறது. சினிமாவைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்கள் எழுதப் படுகின்றன.


எனக்கு மிகக் கவலையாக இருக்கிறது. வீட்டுக்கும், நாட்டுக்கும் நமக்கு உள்ள பொறுப்பை நாம் எப்பொழுது உணரப் போகிறோம்? நாம் எப்பொழுது எல்லோருடைய ஒற்றுமைக்காகவும், நட்புக்காகவும், ஜாதி, மதத் துவேஷம் இல்லாமல், கலாசாரத்தில் மிகச் சிறந்த இந்த நாட்டின் தவப் புதல்வர்களாய் மாறுவோம்? 


நமது உயரிய கொள்கைகலான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அமைதி, பொறுமை, சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், மறப்போம், மன்னிப்போம், இறை உணர்வு எல்லாம் எங்கே போயின? தவறு இருந்தால் மன்னிக்கவும். நன்றி வணக்கம்.


Tuesday, January 2, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 151 TO 165

151. சட்டப்படி பெண் 18, ஆண் 21 வயதுக்கு முன் திருமணம் செய்யக்கூடாது என்பது 18% மக்களுக்குத் தெரியவில்லை, விருப்பமில்லை, நம்பிக்கையில்லை

152. நகைச்சுவை உணர்வு மிக முக்கியம். சிலர் புன்முறுவல் செய்யவே மிகவும் யோசிப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில், மிகவும் கஷ்டப் படுவார்கள்.

153. ஒருவனை ஏமாற்றுதல் என்பது பெரிய குற்றம். அதிலும் படிப்பறிவு இல்லாதவனையும் ஏழையையும் ஏமாற்றுதல் என்பது மன்னிக்க முடியாத ஒரு குற்றம்.

154. நாம் சிறைப் பறவைகள். வீட்டிற்கு வெளியே வந்தால் தான் ஊர் தெரியும். ஊருக்கு வெளியே நாடு தெரியும். நாட்டுக்கு வெளியே உலகம் தெரியும்.

155. வளரும் வயது, பறக்கும் காலம், நிற்காத நேரம், துடிக்கும் இளமை, ஒதுங்கும் உறவுகள், மனதில் லக்ஷியம், இவை தினசரி வாழ்க்கைப் போராட்டம்.

156. நமக்குள் ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும். எல்லோரையும் நம்புவது முட்டாள் தனம். ஒருவரையும் நம்பாமல் இருப்பது அதை விட பெரிய முட்டாள் தனம்

157. நமது வாழ்க்கையை சுலபமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பதை நினைத்து சந்தோஷப் படுவோம். இல்லாததை நினைத்து வருத்தப் படாமல் இருப்போம்.

158. சிலர் எப்பொழுதும் பிறரைத் திருத்த முயற்சி செய்கிறார்கள்.தன்னை விட்டு விட்டு பிறரை திருத்த முயலுவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது

159. நமது நாட்டில் ஏழ்மையைக் குறைக்க எனக்குத் தோன்றிய ஒரு வழி. பணக்காரர்கள் ஏழைகளைத் திருமணம் செய்து கொண்டால் ஏழ்மை குறைந்து விடும்.

160. நாம் குடும்பம் என்ற கூண்டில் அடைபட்டுத் தவிக்கிறோம். உள்ளே இருக்கவும் இஷ்டம் இல்லை. வெளியே போகவும் இஷ்டம் இல்லை.மூச்சு முட்டுகிறது

161. வாழ்க்கை ஒரு ரிலே ரேஸ். சரியான சமயத்தில், சரியான விதத்தில் நம் பொறுப்புக்களை அடுத்த தலைமுறைக்குக்  கொடுப்பது தான் புத்திசாலித்தனம்

162. குதிரையை தண்ணீர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லத்தான் முடியும். தண்ணீர் குடிப்பது அதன் இஷ்டம்.நம்மால் ஒன்றும் செய்ய முடியாது

163. காலம் பொன் போன்றது. வாழ்க்கையில் சந்தோஷம் மிக முக்கியம். மகிழ்ச்சியாய் ஒருவர் வாழ்ந்த  தருணங்கள் எல்லாம் வீணாக செலவழிக்க வில்லை.

164. குழந்தைகளுக்குத் திருமணம் செய்த பின் கடமை முடிந்தது. பொறுப்புகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு கிருஷ்ணா, ராமா என்று சுற்றுலா போகலாமே.

165. 50 வயது வரை கடமைகளை செய்ய வேண்டும்.60 வயது வரை ஞானத்தை வளர்க்க வேண்டும்.அதன்பின் ஆசைகளை துறந்து கடவுள் மீது பக்தி செலுத்த வேண்டும்.




EDUCATION AND TASTE / கல்வியும் ருசியும்

EDUCATION AND TASTE 
This story was told by my grandmother when I was a boy.

Nowadays, children are admitted to school at the age of three. A few years back, they were admitted when they are five. In olden days, the boy was left with a Guru at the age of five.


Similarly, a boy was entrusted to a saint at the age of five in Gurukula for his studies. The Guru had told his wife to serve the boy castor oil in his food.


The boy without saying anything was eating his food. Years passed by and he became 14 years old. One day when food was served, he said "castor oil smell is coming out of the food"


The Guru immediately told him "your education is over, you will not learn anything hereafter and you may go home" He sent him to his parents. What was the reason? Education will not come if other tastes develop.



நான் சிறுவனாக இருந்த பொழுது என் பாட்டி இந்தக் கதையைக் கூறினார்கள்.

இப்பொழுது மூன்று வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கிறார்கள். சிறிது காலத்திற்கு முன் ஐந்து வயதில் சேர்த்தார்கள். பண்டைய காலத்தில் ஐந்து வயதில் குருகுலத்தில் விட்டு விடுவார்கள். குருவுடன் தங்கிப் படிக்கவேண்டும்.

அதே போல் ஒரு மாணவனை, ஒரு முனிவரிடம்  ஐந்து வயதில் சேர்த்தார்கள். குரு தன்னுடய மனைவியிடம், அந்தச் சிறுவனுக்கு சாப்பாட்டில் தினமும் ஆமணக்கு  எண்ணை போடு மாறு கூறி இருந்தார். 

சிறுவனும் ஒன்றும் கூறாமல் சாப்பிட்டுக் கொண்டு வந்தான். வருடங்கள் பல கழிந்தன. அவனுக்குப் பதினான்கு வயதாயிற்று. ஒரு நாள் சாப்பிடும் பொழுது அவன் "சாப்பாட்டில் ஆமணக்கு  எண்ணை வாசனை வருகிறதே" என்று கூறினான். 

உடனே குரு அவனிடம் "உன் கல்வி காலம் முடிந்து விட்டது. இனி உனக்குப் படிப்பு வராது. நீ ஊருக்குப் போகலாம்" என்று கூறி அவனைப் பெற்றோர்களிடம்  அனுப்பி வைத்தார். என்ன காரணம்? ருசி தெரிய ஆரம்பித்தால் படிப்பு வராது. நாக்கு வேலை செய்தால் மூளை வேலை செய்யாது.


Monday, January 1, 2018

ARE YOU RETIRED ? / நீங்கள் ஓய்வு பெற்றவரா?

ARE YOU RETIRED ? 
Just out of curiosity, I inquired with two old age homes for senior citizens situated in Coimbatore and Chennai which are of good standard. The details of accommodation charges including food are as follows. Other charges like electricity, laundry etc are extra.

Coimbatore:

Single person.Interest-free refundable deposit 5 lakhs. Loss of Interest comes to 3750 pm.
Accommodation charges including food 9000/ pm 
Total : 12750/ pm

Chennai:

Single person. Interest-free refundable deposit 11 lakhs. Loss of interest comes to 8250 pm
Accommodation charges including food 10000/ pm 
Total: 18250/ pm.

After reading this, if you are above 60 and retired what do you think? Don't you think it is better to adjust and accept whatever that is provided by our children and to stay with them? That is the correct and wise decision.


நீங்கள்  ஓய்வு பெற்றவரா? 

ஒரு ஆர்வத்தினால், கோவையிலும், சென்னையிலும் உள்ள இரண்டு தரமான முதியோர் இல்லங்களில் விசாரித்தேன். விடுதியில் தங்குவதற்கும், உணவுக்கும் கட்ட வேண்டிய பணம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. மின்சாரம், துணி சலவை, மற்ற செலவுகள் தனி.

கோவை:

தனி நபர். வட்டி இல்லாத முன் பணம் 5 லட்சம். இதனால் மாதத்திற்கு வட்டி இழப்பு 3750/ 
தங்குவதற்க்குக் கட்டணம் உணவையும் சேர்த்து மாதத்திற்கு 9000/
மொத்தம் : மாதத்திற்கு 12750/

சென்னை:

தனி நபர் ஒருவருக்கு வட்டி இல்லாத முன் பணம்11 லட்சம். அதனால் வட்டி இழப்பு மாதத்திற்கு  8250/
தங்கும் மற்றும் உணவுக் கட்டணம் மாதத்திற்கு 10000/
மொத்தம் : 18250/

இதைப் படித்தவுடன் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது ? உங்களுக்கு வயது 60 ஆகி, ஓய்வு பெற்றவரா? உங்கள் குழந்தைகளை அனுசரித்துக் கொண்டு, பேசாமல் அவர்களுடன் இருப்பதே மேல் என்று தோன்றுகிறதா? அது தான் சரியான, புத்திசாலித்தனமான முடிவு.



ACCOUNTANCY / கணக்கு இயல்

ACCOUNTANCY
There are many educational courses in our country. Engineering, Medicine, Science, Economics, Accountancy are a few of them. The toughest educational courses in India are the C.A and I.C.W.A conducted by the Chartered Accountants Council of India, Calcutta. The beauty of the course is, there is no entrance examination, mark criteria, and no reservation. 

It is open to all and you can simply enroll and study the course if you are a graduate with accountancy. You may even do the preliminary during graduation. It is the only course without any external interference or political pressure. The strength of the course is in the curriculum and the high standard maintained. 


It is not easy to pass the exams. One may be successful in the preliminary exam. but it is very difficult to pass the final exam. If you are successful, you can easily get a good job or start your own practice. It is said entry into engineering is tough but exit is easy. In the case of CA and ICWA, the entry is easy but the exit is tough. Why can't other courses be streamlined like this?


கணக்கு இயல் 

நமது நாட்டில் பலவித பாடத் திட்டங்கள் இருக்கின்றன. பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், கணக்கு இயல் என்று பல வகைகள். 

அவற்றில் மிகக் கடினமானது  கல்கத்தாவில் உள்ள  CHARTERED ACCOUNTANTS COUNCIL நடத்தும் C.A மற்றும் I.C.W.A படிப்புத்தான். இதில் வீஷேஷம் என்ன வென்றால் மற்ற படிப்புக்கு நுழைவுத் தேர்வு உண்டு. இதற்குக் கிடையாது. ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது.


கணக்கு இயலில் பட்டப் படிப்பு உள்ள எவரும் அதில் சேர்ந்து படிக்கலாம். பட்டப் படிப்பு படிக்கும் பொழுதே ஆரம்ப வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். அரசு மற்ற எந்தவித வெளித் தொடர்பு இல்லாத ஒரே படிப்பு இதுதான். மிக உயர்ந்த தரத்தை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படிப்பு.


இந்தப் பரிட்சையில் வெற்றி பெறுவது சுலபமில்லை. ஆரம்பப் பரிட்சையில் சுலபமாக வெற்றி பெறலாம். ஆனால் கடைசித் தேர்வில் வெற்றி பெறுவது மிகக் கடினம். 


வெற்றி அடைந்தால் சுலபமாக வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்யலாம். எல்லோரும் சொல்வார்கள் " பொறிஇயல் படிப்பில் நுழைவது கடினம், வெற்றி பெறுவது சுலபம். ஆனால் கணக்கு இயலில் நுழைவது சுலபம், வெற்றி பெறுவது கடினம்.