Tuesday, January 26, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1576 TO 1590

1576. பொய் என்றால் என்ன என்று கேட்க வேண்டும். உண்மையே பேச வேண்டும். தைரியமும், இக்கட்டான நிலையை சமாளிக்கும் திறனும் ஒருவருக்கு வரும்.

1577. தவறு செய்வது சகஜம். மன்னிப்புக் கேட்பது கஷ்டம். சுயகௌரவம்  தடுக்கும். விடக்கூடாது. அதனால் வேற்றுமை அகலும். உறவு நீடிக்கும். வாழ்க 

1578. நாம், நம்மைவிட தாழ்ந்தவர்களையும் கஷ்டப்படுபவர்களையும் பார்த்து இரக்கம் கொண்டால், ஆண்டவன் நம் மீது இரக்கம் கொள்வார் என்பது நிச்சயம்

1579. ஒரே எண்ணம், ஒருவரையொருவர் புரிதல், பாராட்டுதல், சந்தித்தல், சந்தோஷித்தல்  அதுவே முகநூல் நட்பு. வாழ்க வளர்க.

1580. போதை, பேதை இவை இரண்டையும் தவிர்த்தவன் எந்தக் காரணம் கொண்டும் சோடை ஆக மாட்டான். முயற்சி செய்தால் நிச்சயம் ஒரு மேதையாகி விடுவான்.

1581. தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. இந்தப் பொன்மொழியில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்போ இங்கு அதிகம் இல்லை.

1582. வயிறு காலியாகி உணவு வேண்டும் என்பது பசி. வயிறு காலியாகமல் நாக்கு உணவு வேண்டும்  என்பது பசியார்வம். பசி நல்லது பசியார்வம் கெடுதல்.

1583. கூட்டுகுடும்பங்களுக்கு முக்கியத்துவம், பெற்றோர் சொல்படி நடப்பது, திறமையாக நடனம் ஆடும் கதாநாயகர்கள், தெலுங்கு சினிமாக்களின் சிறப்பு.

1584. நவராத்திரி ஒன்பது நாளும் கொலுவில்  இருக்கும் துர்கா, லக்ஷ்மி சரஸ்வதி தேவதைகளுக்கு  தினம் பூஜை செய்து அவர்கள் அருளை வேண்டுகிறோம். 

1585. மாலை வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்டிருக்கு பூ, வெற்றிலை, பாக்கு,பழம், குங்குமம், சட்டைத்துணி,சுண்டல் கொடுத்து கௌரவிக்க வேண்டும்

1586. பட்டாணி, பாசிப் பருப்பு, நிலக்கடலை, காரமாணி, கடலைப்பருப்பு, வெல்லப் புட்டு, எள்பொடி,கொண்டக் கடலை,மொச்சை சுண்டலோடு பூஜிக்கிறோம்.

1587. ஒரு பெண்ணை / படத்தை பார்க்கும் பொழுது ஏற்படும் ஆபாச எண்ணங்களை தவிர்க்க,வெறுக்க வேண்டும்.கெட்ட எண்ணங்கள் குறையும்.மனம் தூய்மையாகும்

1588. ஒரு நாள் முகநூல் நேரம்:40 வயது வரை கிடையாது. 50 வரை 30 நிமிடம், 60 வரை 1 மணி, 80 வரை 2 மணி. ஒவ்வொரு முறையும் 15 நிமிடம் செலவிடலாம்

1589. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். மாக்கள் என்றால் படிப்பு அறிவில்லாதவர்கள். மாக்களை மக்கள் ஆக்குவது படித்தவர்கள் கடமை.அது மனித தர்மம்

1590. ஸ, ஹ, ஷா, க்ஷ, போன்ற எழுத்துக்கள் நடைமுறையில் இருந்து விலக்கப் பட்ட பின் மந்திரங்கள் கற்றுக்கொள்வதும், உச்சரிப்பதும்  கடினம். 

Thursday, January 21, 2021

கருப்பு ஆடு / வெள்ளை ஆடு

டிவியில் ஒரு விவசாயியைப் பேட்டி எடுக்குறாங்க..

" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கிறீங்க..?"

" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?!

" வெள்ளைக்கு..!"

" புல்லு.."

" அப்ப கருப்புக்கு..?"

" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்.."!

" இதை எங்க கட்டி போடறீங்க.."

" எதை கருப்பையா.? வெள்ளையையா..?!!"

" வெள்ளையை.."

" வெளிய இருக்குற ரூம்ல.."

" அப்ப கருப்பு ஆட்டை..?"

" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்.."

" எப்படி குளிப்பாட்டுவீங்க..?"

" எதை கருப்பையா..? வெள்ளையையா..?"

" கருப்பு ஆட்டை..?"

" தண்ணில தான்"

" அப்ப வெள்ளையை..?"

" அதுவும் தண்ணில தான்"

பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிறார்.

" லூசாய்யா நீ, ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுற! அப்பறம் எதுக்கு திரும்ப திரும்ப கருப்பா வெள்னளயானு கேட்டுட்டே இருக்க "

" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது"

" அப்ப கருப்பு ஆடு..?"

"அதுவும் என்னுதுதான்"

" டேய்ய்ய்ய்..........."

படித்து முடித்தவுடன் தனியாக சிரிக்க கூடாது.


Friday, January 15, 2021

போகிற போக்கில்.

1. ஞானம்:

மனிதனுக்கு ஒரு பொருள் மேலும் மேலும் வந்து சேரும்போது, அந்தப் பொருளின் மீது உள்ள விருப்பம் குறைகிறது என்பது பொருளாதாரத் தத்துவம். அதே பொருள் அளவுக்கு அதிகமாக வரும்போது அதன் மீது வெறுப்பு உண்டாகிறது. இவ்வாறு ஒவ்வொரு பொருளின் மீதும் வெறுப்பு ஏற்பட்டு, இனி எனக்குப் பொருளே வேண்டாம் என்ற நிலை வருவது தான் ஞானம்.

2. தியானம்:

தியானம் செய்வது என்பது, தரையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு இருப்பது அல்ல. நாற்காலியில் நன்கு சௌகரியமாக அமர்ந்து, இரண்டு கைகளையும் தனது முழங்காலில் வைத்துக்கொண்டு, உள்ளேயும், வெளியேயும் மூச்சு விடுவதை ஒரே சீராகச் செய்து அதில் முழு கவனத்தையும் செலுத்துவதே தியானம் செய்வதாகும்.

3. பேச்சும் / எழுத்தும்:

நமது மனதில் தோன்றும் எண்ணங்களை வாயினால் கூறுவது பேச்சு எனப்படும். அந்த எண்ணங்களை கையினால் எழுதுவது எழுத்து எனப்படும். பேச்சு குழந்தையாய் இருக்கும் போதே வந்து விடுகிறது. எழுத்து பள்ளிக்குச் சென்ற பிறகு வருகிறது. நாம் பேசுவதை விரும்புகிறோம். எழுதுவதை விரும்புவதில்லை.

4. வாயும் வயிறும்:

1. வயிறு உணவு கேட்டால் அது பசி. நாக்கு உணவு கேட்டால் அது ருசி. பசிக்கு சாப்பிடவேண்டும். ருசிக்கு சாப்பிடக் கூடாது. 

2. உணவு உண்டபின் தூங்கக் கூடாது. தூங்குவதற்காக உணவு உண்ணக் கூடாது. 

3. குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடவேண்டும். நினைத்த நேரத்தில் சாப்பிடக்கூடாது.

4. பிறர் விரும்புவதைப் பேசவேண்டும். நாம் விரும்புவதைப் பேசக்கூடாது.

5. இடது /  வலது:

இடது கையால் மணி அடித்துக்கொண்டே வலது கையால் தீபாராதனை காட்டுவது கஷ்டமான காரியம். அதேபோல இடது கையால் ரவையைத் தூவிக்கொண்டே வலது கையால் உப்புமா கிளருவது கஷ்டமான காரியம். ஒன்று மாற்றி ஒன்று செய்து விட்டால் ஆபத்து.

Saturday, January 9, 2021

THE SEEDLING

This morning, I woke up early at 5. My wife was fast asleep beside me. I had to wait until she got up to begin the morning chores. As usual, my mind started wandering. My thoughts went around the woman with whom I had a few messages exchanged on WhatsApp on the previous day.

I remember it happened on 30th May 1976, when my second sister got married. It was in Konar choultry, Srirangam town. Everyone was in a festive mood. The air in the wedding hall was filled with the fragrance of flowers, scent, and silk sarees and the smell of the smoke from the Homam, and the noise of the people gossiping.

The children were playing, running hither and thither. I was just observing these activities simultaneously attending to my duties. My elder brother's son who was 4 years old was playing with other children.  Among the other children, there was my first sister's daughter also who was not even two years old playing with grown-up kids.

Being the first granddaughter of the family, she was the darling of everyone. In any wedding hall, I had never seen her mother feeding her. Everyone used to feed her a little and she accepted it gleefully till she was full. She could sleep anywhere she likes. Then her parents used to take her to her bed. She was very responsible also. If anyone gave her something to be handed over to someone, she promptly delivered and informed.

There was a staircase in the center of the verandah. The boy was climbing up and down the stairs and was also jumping from two steps above the ground level. Following him, this chubby little girl, clad in a beautiful frock was trying to emulate him. She slowly climbed the stairs and stood beside the boy with a captivating smile as if she had reached Mount Everest.

When she stood beside the boy, people gathered on the spot shouted in chorus and persuaded her to jump down the steps to tease her parents standing and observing nearby. They, with a broad smile on their faces, stood unperturbed without even bothering what would happen to their little girl if she jumped from that height.

After the boy had jumped, this girl stood there on top, with a beaming look, her beautiful eyes wide open, with an enchanting smile, looked around, hesitated for a moment making everyone guessing, and finally to the surprise of everyone, slowly climbed down the steps one by one without jumping.

Her parents immediately took her in their arms. All people kissed and appreciated her for her intelligence, spontaneity, cleverness, and shrewdness. I knew then that this girl would go places when she grew up. Believe me, that little girl is now 46 working in an MNC in Silicon Valley in the US, leading a wonderful life.