Tuesday, September 18, 2018

ஆயிரம் கறிகாய்கள்

விஸ்வாமித்ரர் புகழ் பற்ற ராஜரிஷி. ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். ஆனால் தவத்தினால் பிரம்ம ரிஷியாக உயர்ந்தவர். அதுவும் “வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி” பட்டம் பெற்றவர். 

இப்படிப் பட்டம் பெறுவதற்கு முன் அவருக்கும் வசிஷ்டருக்கும் எப்போதும் மோதல்தான். காம சுகம், அஹங்காரம், கோபம் ஆகிய மூன்று எதிரிகளால் மூன்று முறை தோல்வி அடைந்து இறுதியில் மீண்டும் தவம் இயற்றி பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார்.

வசிட்ட மகரிஷியிடம் இருந்து காமதேனு பசுவைப் பறிக்க முயன்ற காலம் முதல் நடந்த பல மோதல்களில் கீழ்கண்ட மோதலும் ஒன்று. இது ஒரு சுவையான கதை.

ஒருமுறை வீட்டூக்குச் சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வசிஷ்டர் அழைத்தார். அது ஒரு திதி (திவசம்/ சிரார்த்தம்) அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சாப்பாடு. அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை கறி செய்து படைக்க வேண்டும் என்றார். 

உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களைச் சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப் போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்?

விசுவாமித்ரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச் செய்கிறார் என்பது வசிஷ்டருக்குத் தெரியும். இருந்த போதிலும் விட்டுக் கொடுக்காமல் , “ ஓ, 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன் என்றார்.

வசிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம். ஒவ்வொரு இந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கவேண்டும். வசிட்டரும் அருந்ததியும் இணபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று புரோகிதர்களும் வாழ்த்துவர். 

சிரார்த்த சாப்பாடு நாளும் வந்தது. விசுவாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய் கறி, பலாப்பழம், பிரண்டைத் துவையல்—- ஒரு வாழை இலையில் எவ்வளவு கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவுதான்—- இலையில் இருந்தன. 1008 கறிகள் இல்லை. விசுவாமித்திரர் கோபத்துடன் வசிஷ்டரை வினவினார். அவரோ நான் தான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே. அவளையே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார் வசிஷ்டர்.

இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அருந்ததி தானே முன்வந்து ஒரு பாட்டைக் கூறினாள். இதுதானே திவச கால விதி, உங்களுக்குத் தெரிந்திருக்குமே என்றாள். விசுவாமித்திரர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப் போனார். அருந்ததி கூறிய அந்தப் பாட்டு என்ன?

காரவல்லி சதம் சைவ வஜ்ரவல்லி சதத்ரயம்
பனசம் ஷட்சதம் சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே

ஒரு திதியன்று சமைக்கப்படும் சமையலில் பாகற்காய் கறி 100 கறிகளுக்குச் சமம், பிரண்டைத் துவையல் அல்லது கறி 300 கறிகளுக்குச் சமம், பலாப்பழம் 600 கறிகளுக்குச் சமம் என்று பாடல் கூறுகிறது. ஆயிரம் கறிகள் ஆயீற்று. மீதி,— இலையில் எண்ணிப் பாருங்கள், எட்டு கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008! என்றாள்

ஆகையால் தான் சிரார்த்தத்தில் இவை மூன்றையும் முக்கியமாக சேர்க்கவேண்டும்.


Thursday, September 13, 2018

WORLD CINEMA /உலக சினிமா

I like world cinema. That is, I see English, French, Russian, Korean, Chinese, Japanese, Iranian, Hindi, Malayalam, Telugu, Kannada, Tamil movies etc. 
நான் உலக சினிமாவை ரசிக்கிறேன். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இவைகளுடன் ப்ரான்ஸ், ரஷ்யா, கொரியா, சைனா, ஜப்பான், இரான், நாட்டுப் படங்களையும் பார்ப்பது உண்டு.

1. I would have seen about 3000 movies so far.

இதுவரை சுமார் 3000 திரைப் படங்களுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

2. I am able to understand a movie better than a layman. 

அதனால் ஒரு சாமானிய மனிதனை விட சினிமாவை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

3. I like only classics. 

தரமான படங்களை மட்டும் தான் எனக்குப் பிடிக்கும்.

4. I see whether it imparts any value. 

அந்த திரைப்படம் நல்ல விஷயங்களைச் சொல்கிறதா என்பது முக்கியம்.

5. I do not like formula films. 

தரம் இல்லாத [FORMULA] படங்களை நான் விரும்புவது இல்லை.

6. I believe that making of a movie is a team work and not that of an individual. 

ஒரு திரைப்படம் ஒருவரின் திறமையால் அல்ல, பலரது முயற்சியால் வெற்றி அடைவது என்ற நம்பிக்கை உள்ளவன் நான்.

7. I give importance to the director, cinematography, story and script. 

இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதை மற்றும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பபவன் நான்.

8. The story must be absorbing, script cogent and cinematography pleasing.

கதை விருவிருப்பாக்வும், திரைக்கதை தொடர்ச்சியாகவும், ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.

9. I do not attach importance to the actors excepting their performance. 

நடிப்பைத் தவிர நடிகர்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

10. I do not like songs in the movie excepting background music.

பின்னணி இசையைத் தவிர படத்தில் பாடல்கள் இருப்பதை நான் விரும்புவது இல்லை.

11. I am averse to the hero and heroin running around trees in various costumes in different countries. 

கதா நாயகனும் நாயகியும் மரத்தைச் சுற்றி ஓடியாடிப் பாடுவதும், பலவித உடைகளில், பல நாடுகளில் காதல் செய்வதும் நான் வெறுக்கும் ஒன்று.

12. I hate to see one man hitting so many people and still remains unscathed. 

ஒரு மனிதன் பல பேரை தாக்கி வெற்றி கொள்வதும், எவ்வித அடியும் படாமல் இருப்பதும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று..

13. I am fed up with the comedian, in the name of a friend to the hero, uttering nonsenses. 

நகைச்சுவை என்ற பெயரில் கதாநாயகனின் நண்பன் இரட்டை அர்த்தத்தில் உளறுவது என்னால் தாங்க முடியாத ஒன்று.

14. I am not biased. I see whether it gives me the satisfaction for the money I have spent. 

பாரபட்சமான எண்ணம் எனக்குக் கிடையாது. நான் செலவு செய்யும் பணத்திற்குப் பலன் கிடைக்க வேண்டும். திருப்தி தர வேண்டும்.

15. You may add whatever you wish to in the list.

உங்களுக்கு வேறு ஏதாவது பாய்ண்ட் தோன்றினால் அதையும் சேர்த்துக் கொள்ளவும்..

16. i write this only with the intention that people should develop good taste, and movies of good standard should be produced.

மக்களிடையே ரசிப்புத் தன்மை வளர வேண்டும், தரமான திரைப்படங்கள் தயாரிக்கப் பட  வேண்டும் என்ற ஆசையில் இதை எழுதுகிறேன்.

Wednesday, September 12, 2018

A FRENCH MOVIE / ஒரு ப்ரான்ஸ் திரைப்படம்

Sometime back, I saw a French movie and I wish to share with my friends.

A handsome young man meets a beautiful girl on a train and both of them fall in love with each other at first sight. They meet often and their love develops into a live-in relationship. After some time, when they suspect pregnancy, they go to the hospital for testing and it is found out that the girl is infected with HIV.


The man is heartbroken and decides to cut off his relationship with the girl. On his friend"s advice, he goes to consult his father who is a surgeon. The father tells the son about his love for his wife and how he missed her when he left her for six months to go to the US for higher studies and how he is now living alone in her memory. 


He advises his son if he truly loves the girl, he should not worry about her ailment and he should go ahead to marry her as he can always opt for adopting a child. The son understands what real love is and returns to the girl to seek her hand in marriage. The script, acting, cinematography, and direction are noteworthy to lift the value of the movie.


சில நாட்களுக்கு முன்னால் ஒரு ப்ரான்ஸ் திரைப்படம் பார்த்தேன். அதை உங்களுடன் பகிறுவதில் ஒரு அற்ப ஆசை.


ஒரு அழகான இளைஞன் ரயிலில் ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறான். பார்த்தவுடன் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். அடிக்கடி சந்தித்து இருவரும் சேர்ந்து வாழும் நிலைக்கு வருகின்றனர். 


சில நாட்கள் சென்ற பின்பு, அந்தப் பெண் கர்பமாக இருக்கிறாளா என்று தெரிந்து கொள்ள மருத்துவ மனைக்குச் செல்கின்றனர். பரிசோதனையில் அந்தப் பெண்ணிற்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிகிறது.


அதை அறிந்தவுடன் அவனுக்கு இதயம் வெடித்து விடுகிறது. அவர்களுடைய உறவுக்கு முடிவு கட்ட விரும்புகிறான். நண்பனின் அறிவுரையால் தன்னுடைய தந்தையை ஆலோசனை கேட்கச் செல்கிறான். அவன் தந்தை ஒரு டாக்டரும் கூட. 


அவனுடைய தந்தை தான் எப்படி தனது மனைவியை நேசித்தேன் என்றும், அவளைப் பிரிந்து ஆறு மாதம் மேற்படிப்புக்காக அமெரிக்க சென்ற போது தான் பட்ட கஷ்டத்தையும், அவளுக்குப் பிறகு மறு மணம் செய்து கொள்ளாமல் அவள் நினைவாக வாழ்வதைப் பற்றியும் கூறுகிறார்.


நீ உண்மையாக அந்தப் பெண்ணை விரும்பினால் அவளுடைய நோய் பற்றி கவலைப் படாமல் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எப்போது வேண்டும் என்றாலும் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். 


அவருடைய அறிவுரைக்குப் பிறகு மனம் தெளிந்த அவன் உண்மையான அன்பைப் பற்றி அறிந்து அந்தப் பெண்ணிடம் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறான். சிறந்த திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் இந்தப் படத்திற்கு உயிர் கொடுக்கிறது.

Tuesday, September 11, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 721 TO 735

721. ஆரம்பம் லைப்பாய். பிறகு ஹமாம், மார்கோ, மெடிமிக்ஸ், மைசூர் சாண்டல், அப்புறம் பியெர்ஸ், கடைசியில் டவ். எனது வாழ்க்கையில் முன்னேற்றம்

722. இந்தத் தலைமுறைப் பெண்களில் பலர் வேலைக்கு செல்லும் காரணத்தினால் தங்கள் தாயார்,மாமியாரிடம் வீட்டு வேலைகளில் உதவி எதிர்பார்ப்பது சரியா?

723. மதத்தையும், ஜாதியையும் இந்த நாட்டை விட்டு ஒழிக்கவே முடியாது. பிறகு எதற்கு  அதைப்பற்றி பதிவுகள் போட்டு துவேஷத்தை வளர்க்க வேண்டும்?

724. சாதாரண சாக்லேட் உடலுக்கு நல்லதல்ல. ஆனால் டார்க் சாக்லேட் உடலுக்கு நல்லது. சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டம். மிகவும் கசப்பாக இருக்கும்.

725. எந்த ஒரு கருத்தையும் அழகாக, சுவையாக, கோர்வையாக, ஆணித்தரமாக, புரியும்படி,சுலபமான வார்த்தைகளில் எழுதினால் எல்லோரும் விரும்புவார்கள்.

726. ஸெல் போனில் அலாரம் வைப்பது போல, ஆட்டோ கால் முறையை கண்டு பிடித்தால், நம்மை நேரில் அறுப்பவர்களிடம் இருந்து தப்பிக்க வழி கிடைக்குமே.

727. ஒன்றிரண்டு துணிகளை மட்டும் துவைக்கும் படி வாஷிங் மஷிணை ஏன் இன்னமும் கண்டு பிடிக்கவில்லை.தினம் துவைக்கலாம்.செலவும், இடமும் குறையும்

728. ஹையா, வாஷிங் மெஷின் வந்து விட்டது. இனிக் கவலை இல்லை. தினம் துணிகளைத் துவைத்து அணிவதற்கு பதிலாக, வாரம் ஒருமுறை துவைத்தால் போதும்.

729. நான் என்னுடைய கடமைகளைச் செய்கிறேன். மனைவி, குழந்தைகளுக்காக உருகுவது, ஏங்குவது, தவிப்பது, வெறுப்பது இல்லை. இறைவனை நினைப்பது நல்லது.

730. சமூகத்தில் 90% நல்லவர்கள்.அவர்கள் 10% நபர்களை நல்லவர்களாக மாற்றுவதற்கு பதில்,10% பேர் மற்றவர்களை கெட்டவர்களாக மாற்றிவிடுகிறார்கள்.

731. தன்னுடைய குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் அன்பு, பாசம், காதல், மரியாதை, பயம், கண்டிப்பு எல்லாம் சம அளவில் காட்ட வேண்டும். முடியுமா?

732. எனக்கு பிடித்த பழம் வாழைப்பழம். அது எளிமையானது, இனிமையானது, மலிவானது, ஆரோக்கியமானது. உங்களுக்கு எந்த பழம் மிகவும் பிடிக்கும்?

733. சாதாரணமாக பெண் குழந்தை அம்மா ஜாடையிலும், ஆண் குழந்தை அப்பா ஜாடையிலும் இருக்கும் என்பார்கள். மாறி இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள்.

734. அமெரிக்காவில் நாய்களுக்கு தேவையான பொருட்களுக்கு தனி கடை உண்டு. ஏராளமான பொருட்கள். உ-ம் ரெயின் கோட்டு,சாக்ஸ்,ஷாம்பூ. வயிற்றெரிச்சல்

735. அமெரிக்காவில் ஜனாதிபதியையே கிண்டல் செய்து எழுதுகிறார்கள். யாரும் எதுவும் கண்டு கொள்வதில்லை. அவரவர் வேலையை அவரவர் பார்க்கிறார்கள்.





மனதில் தோன்றிய எண்ணங்கள் 706 TO 720

706. எனக்குத்தான் காது கேட்கவில்லை. இறைவா, உனக்கு கூட நான் கதறுவது கேட்க வில்லையா?எப்போது எனக்கு இவ்வுலகத்தில் இருந்து விடுதலை தருவாய்?

707. கடலின் பரிசு மேகம்.மேகத்தின் பரிசு மழை.மழையின் பரிசு தண்ணீர்.தண்ணீரின் பரிசு பூமியின் வளம்.பூமியின் பரிசு விளைச்சல்,நமது சந்தோஷம்.


708. வேற்று மதத்தினரைத் தாக்கி பதிவுகள் போட்டுவிட்டு மதத் துவேஷம் பற்றி கதறி ஒப்பாரி வைக்கிறோம். அதில் என்ன சந்தோஷம் என்று தெரியவில்லை.


709. டிவி விளம்பரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பொருட்கள் தான் அதிகம் இருக்கும். ஆண்கள் பொருட்கள் அதிகம் இருக்காது. ஏன் தெரியுமா?


710.வியாழக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தான் துக்கம் கேட்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனோ எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை.


711. இனி ஆண்டவன் தான் பெண்களையும் அவளுடைய பெற்றோர்களையும் காப்பாற்ற வேண்டும். என்ன கதறினாலும் யாரும் கேட்கப் போவதில்லை என்பது நிச்சயம்.

712. பெண்ணீயம், பெண் சுதந்திரம், பெண் முன்னேற்றம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. அதில் ஏமாந்து பெண்கள் விட்டில் பூச்சிகளாக விழுகிறார்கள்.


713. ஆண்களின் தனித் தன்மை படிப்பு, உடல் வலிமை. இப்போது பெண்கள் படிப்பில் முன்னேறி இருக்கிறார்கள்.உடல் வலுவில் அவர்கள் முன்னேற வேண்டும்.


714. விருந்தில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பாடு: விருந்து அளிப்பவர் கடைசியில் உண்ண வேண்டும். விருந்தாளி உண்ண அழைத்த பின்பு உண்ண வேண்டும்.


715. உணவு உண்ணும்போது உதடுகளை மூடிக் கொண்டு உண்ண வேண்டும்.வாயைத் திறந்து கொண்டு உண்ணக் கூடாது. நாக்கை வெளியே நீட்டி உணவைப் போடக் கூடாது


716. ஒரு பதார்த்தம் மிகவும் பிடிக்கும் என்பதாலோ, அதிக ருசியுடன் இருப்பதாலோ அதை அதிகம் உண்ணக் கூடாது. எல்லா உணவையும் சமமாக உண்ண வேண்டும்.


717.தேவைக்கு மேல் உணவை போட்டுக் கொண்டு வீண் செய்யக்கூடாது. உணவு கிடைக்காத எவ்வளவோ ஏழைகளை அப்போது நினைக்க வேண்டும். உணவு இறைவனின் பரிசு


718. ஒரு பதார்த்தத்தை உண்பதில் உள்ள ஆசையை விலக்க வேண்டும். நாவில் இருக்கும் வரை தான் ருசி. தொண்டைக்கு கீழே இறங்கிவிட்டால் அதோ கதி தான்.


719. ஒரு தந்தை குழந்தைகளுக்கு உணவு, உடை, இடம், ஆரோக்கியம், கல்வி கொடுக்கிறார். பின்பு அவர்கள் சம்பாதிக்கும் பணம் அவரை சேர்ந்தது அல்லவா?


720. பெற்றவர்களுக்கு கேட்காமல் உதவி செய்தால் அது அன்பு.கேட்டு உதவி செய்தால் அனுதாபம்.கேட்டும் உதவி செய்யவில்லை என்றால் பூர்வ ஜன்ம பலன்.


Monday, September 10, 2018

வெளுத்தது எல்லாம்

தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பலர் ரசித்துப் பார்ப்பதைப் பார்த்திருக்கிறேன். அதைப் பற்றி என் தாழ்மையான அபிப்பிராயத்தைக் கூற விரும்புகிறேன்.

1. பாடும் பாடல்கள் எல்லாமே சினிமாப் பாடல்கள். அதில் ஒருவரின் திறமையைக் காண முடியாது.எனக்குப் பாடத் தெரியாது. ஆனால் ஓரிரண்டு சினிமாப் பாடல்களை நன்றாகப் பாடுவேன்.


2. சினிமாப் பாடல்களை யாராலும் ஒரிஜிநல் மாதிரிப் பாட முடியாது. சிறிது வித்யாசம் இருக்கவே செய்யும்.


3. பழைய காலத்துப் பாடலுக்கு தற்கால இசைக் கருவிகளை பயன் படுத்துவது பொருத்தம் இல்லாமலும் வேதனையாகவும் இருக்கிறது


4. ஒரே ஒரு பாடலை மட்டும் தயார் செய்து கொண்டு வந்து பாடினால் திறமை தெரியாது. முன் அறிவிப்பு இல்லாமல் நீதிபதிகள் சொல்லும் பாடலைப் பாடிக் காட்ட வேண்டும்.


5. நீதிபதிகள் எல்லோரும் பழைய பாடகர்களாக இருந்தாலும் அவர்கள் பாராட்டும் முறையும் மார்க் போடும் முறையும் செட்அப் போலத் தெரிகிறது.


6. தேவையில்லாத இசைக் கருவிகளும், காட்சி அமைப்பும், ஒளிப் பதிவும் பாடலின் தரத்தையும் நமது கவனத்தையும்  குறைக்கின்றன.


7. ஓரிரு சினிமாப் பாடல்களைப் பாடியவருக்கு லக்ஷக் கணக்கில் பரிசுகள் வழங்குவதில் உள்ள உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.


8. நீதிபதிகளைத் தவிர கைபேசியில் எஸ்எம்எஸ் மூலம் ஓட்டுப் போடச் சொல்வதன் அர்த்தம் என்ன என்று யோசிக்க வேண்டும்.


9. மேலை நாடுகளில் ஆங்கில இசையில் சிறந்த பாடகர்கள் மேடைகளில் தோன்றி லைவ் நிகழ்ச்சி நடத்துவதின் தாக்கம் இது. 


10. கர்நாடக இசையில் தான் ஒருவருடைய திறமையைக் காண முடியும். இதனால் கர்நாடக இசையை வளர்க்க முடியும்.


11. பல வருடங்களுக்கு முன் ஒரு மலையாள தொலைக்காட்சியில் கர்நாடக இசையை வைத்து  இந்த மாதிரி நிகழ்ச்சி நடந்தது.


12. கர்நாடக இசையில் தேர்ந்த பாடகர்கள், போட்டியில் பங்கு பெற்ற ஒவ்வொருவரையும் நுணுக்கமான கேள்விகள் கேட்டு அவர்களைப் பரிட்சை செய்தனர்.


13. ஆலாபனை, ராகம், தானம் , பல்லவி என்று பலவிதமான கேள்விகள் கேட்டு பரிட்சை செய்தது சிறப்பாக இருந்தது.


14. டி ஆர் பி க்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தி நம்மை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று நமக்கு நன்கு புரிய வேண்டும். அந்த மாதிரியான நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும். வெளுத்தது எல்லாம் பால் அல்ல.

உங்களுக்குத் தெரியுமா?

1. ஒன்று முதல் பத்து வரை 

ஒரு உலகப் பொது மறை : திருக்குறள், 

இரு இதிகாசங்கள் : இராமாயணம், மஹா பாரதம், 

மூன்று தமிழ் : இயல் இசை நாடகம், 

மூன்று பாக்கள் : அறத்துப்பால், பொருட்ப்பால், காமத்துப்பால்.
மூன்று யோகங்கள் : கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம்.
மூன்று தொழில்கள் : படைத்தல், காத்தல், அழித்தல். 

நான்கு வேதங்கள் : ருக், யஜுர், ஸாம, அதர்வண. 


பஞ்ச பாண்டவர்கள் : யுதிஷ்ட்ரன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சஹதேவன்,

ஐம்பெரும் காப்பியங்கள் : சிலப்பதிகாரம். மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
பஞ்ச பூதங்கள் : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.
பஞ்ச உணர்வுகள் : கண், மூக்கு, செவி, வாய், தோல்.

அறுசுவைகள் : இனிப்பு, கசப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு.

ஏழு ஸ்வரங்கள் : ச, ரி, க, ம, ப, த, நி, ச 
எட்டு திசைகள் : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு
நவ கிரகங்கள் :  சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், புதன், சுக்ரன், சனி, ராகு, கேது
தசாவதாரங்கள்:மத்ஸ,கூர்ம,வராக,நரசிம்ம,வாமன,பரசுராம,ராம,பலராம,கிருஷ்ண,கல்கி

2. உறவுகள்  / RELATIONSHIP


உறவுகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். சிறந்தவை வரிசையில்.

Relationships differ. Each one is unique. The best in that order.
1. தாயும் மகளும். [ Mother and daughter ]  100%
2. தமக்கையும் தங்கையும். [ Two sisters } 90%
3. தமக்கையும் தம்பியும்.  [ Elder sister and brother ]   80%
4. அண்ணனும் தங்கையும்.  [ Elder brother and sister ] 70%
5. தந்தையும் மகளும்.      [ Father and daughter ]   60%
6. அண்ணனும் தம்பியும்.   [ Two brothers }50%
7. தந்தையும் மகனும்.        [ Father and son }  20%

3. ஒரு கூட்டல் கணக்கு 


இடையாத்துமங்கலம் இராமசாமி அய்யர் ஹை ஸ்கூல், திருச்சி  [E.R.HIGH SCHOOL ] ஹெட் மாஸ்டர் ஸ்ரீ நடராஜ அய்யர் கணக்கு ஜியோமெட்ரி வகுப்பில் A ஐயும் B ஐயும் கூட்ட முடியாது என்பதை ஒரு உதாரணத்துடன் விளக்குவார்.


ஒரு கூடையில் 10 கத்தரிக்காயும் 10 வெண்டைக்காயும் இருந்தன. மொத்தம் எவ்வளவு சொல்லு என்று மாணவர்களைக் கேட்பார். சிலர் 20 சார் என்று சொல்வார்கள். சிலர் திரு திரு என்று தெரியாமல் முழிப்பார்கள். 


உடனே அவர் இதுகூடவா தெரியவில்லை? 20 கத்தரி வெண்டையா, இல்லை 20 வெண்டை கத்தரியா? எது சரி சொல்லு? என்பார். பிறகு விளக்கம் சொல்வார். இரண்டு வேறு வேறு காய்கறிகளை கூட்ட முடியாது, அது போல A ஐயும் B ஐயும் கூட்ட முடியாது.


Sunday, September 9, 2018

RANDOM THOUGHTS 106 TO 120

106. Growing age, changing seasons, moving time, impulsive youth, demanding relations, goals to achieve are our daily obstacles in life.

107. We are parrots in a cage. Come out of the house, you will know the town. Out of the town the city, and out of the city the world.

108. To cheat another person is both immoral and illegal. It is still the worst to cheat especially the uneducated and poor people.

109. Sense of humour is God-given and is very important in life. Some people do not know how to smile. They will suffer a lot in life

110. As per law, the marriageable age for the woman is 18 and the man is 21. This is not known to 18% of the people in our country.

111. The youth today advocates modern views in every aspect of life. Without knowing the benefits of old systems they cannot succeed.

112. We are responsible for all the good and bad we earn. We are responsible for our happiness and suffering. No one can give it to us.

113. What we see, may not be the real. What we hear, may not be the truth. You inquire thoroughly before speaking or writing about it

114. If you have the right to oppose something, another person has the right to support it. Many people do not understand this right.

115. Straightforwardness, truthfulness, minimum money/food, exercise, and meditation will give health, peace of mind and happiness.

116. Our mind should be devoid of pride, anger, hatred, attachment, desire, and lust to lead a successful, healthy, happy and peaceful life

117. Friendship is beautiful, everlasting, sacred, and removes worries. It makes you love, laugh, think, forget and forgive, and to live.

118. The roots of a grown-up tree protect it like a father of a family. The branches, flowers, leaves, and fruits enjoy life-like kids.

119. Mostly people prefer fair-skinned people as spouses. There are more beautiful people with a good character with wheatish complexion.

120. Do not worry about what you have lost. Be happy with what you have. You will get back, what you have lost, by sincere efforts.


Saturday, September 8, 2018

வாழ்க்கை எனும் ஓடம்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று  எனக்கு தமிழ் பற்று மிகுந்து இருந்த காலம் ஒரு காலம். கல்கியில் துவங்கி பல எழுத்தாளர்களின் படைப்புகளை ரசித்துப் படித்தது ஒரு காலம். தமிழ் சினிமாவைப் பார்த்து, ரசித்து, நேசித்து, மகிழ்ந்தது ஒரு காலம்.

தாயாருக்குக் கூட செந்தமிழில் மடல் வரைந்த காலம் ஒரு காலம். "அன்பும், அறிவும், ஆற்றலும் ஒருங்கே அமையப் பெற்ற அன்னைக்கு" என்று எழுதியது ஒரு காலம். நண்பன் டானியலுடன் நான் எழுதிய "களஞ்சியம்" என்ற தமிழ்க் கையெழுத்துப் பத்திரிக்கை ஒரு காலம்


கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருக்குறள் போன்ற தமிழ் நூல்களில் வரும் பாடல்களைப் படித்தது ஞாபகம் வருகிறது. பொதுத் தமிழ், சிறப்புத் தமிழ் ஆகிய இரண்டு பாடங்களிலும் வகுப்பில் முதல் மார்க் வாங்கியது ஞாபகம் வருகிறது.


அடுத்த தமிழ் வகுப்பு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தது ஞாபகம் வருகிறது. தமிழ் ஆசிரியர் கேட்கப் போகும் கேள்விகளுக்கு சரியான பதில்களை மனப்பாடம் செய்து படித்தது ஞாபகம் வருகிறது. தமிழ் ஆசிரியரிடம் அடிக்கடி சந்தேகம் கேட்டது ஞாபகம் வருகிறது


பஞ்ச கச்சமும், ஜிப்பாவும் அணிந்து, குடுமியாகக் கட்டிய நீண்ட கூந்தலோடு வகுப்பீற்குள் நுழையும்  தமிழ் ஆசிரியர் புலவர் திரு ராதா கிருஷ்ணன் அவர்கள் ஞாபகம் வருகிறது. .கரகரத்த குரலில், செந்தமிழில் அவர் கம்பீரமாகப் பேசுவது காதில் விழுகிறது.


கூந்தல் அவிழ்ந்து தோளில் விழுந்தது தெரியாமல், வகுப்பின் குறுக்கேயும் நெடுக்கேயும் நடந்து "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" என்ற ஒரு வரியை ஒரு மணி நேரம் விவரித்த ஆசிரியர்  அவர்களைக் கண் கொட்டாமல் பார்த்தது ஞாபகம் வருகிறது.


இதெல்லாம் 1970ஆம் ஆண்டுக்கு முன்பு தான்.. அதன் பிறகு வாழ்க்கைச் சுழலில், ஆங்கிலத்தின் முக்கியத்தை உணர்ந்து, அதில் கவனம் செலுத்தி, அதைக் கற்று, பயிற்சி பெற்று மேலும் மேலும் வாழ்க்கையில் முன்னேற தமிழைத் தொலைத்தது ஒரு காலம். 


இப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும்  கற்றது எல்லாம் மறந்து விட்டன. தமிழிலும் புலமை இல்லை, ஆங்கிலத்திலும் புலமை  இல்லை. வயதாகி கண் பார்வை குறைந்து, காதும் கேட்காமல் போன பிறகு எதிலும் ஆர்வம் இல்லாமல் போய் விட்டது. 


வாழ்க்கை எனும் ஓடம், வழங்குகின்ற பாடம், மானிடரின் மனதினிலே, மறக்கவொண்ணா  வேதம்" என்று படித்திருக்கிறேன். முகநூலில் நுழைந்த பிறகு "தங்கிலீஷில்" தான் புலமை இப்போது அதிகம் இருப்பது போல் தெரிகிறது. வேறு வழி இல்லை.

Friday, September 7, 2018

RANDOM THOUGHTS 91 TO 105

91. Life is a mixture of both happiness and sorrow. We should not get dejected by sorrows. Time will change and you will be happy.

92. The educated is loved only by the educated and not by the uneducated. It is not due to hatred but it is due to their ignorance.

93. When we live together, we have a thousand benefits. We must love fellow humans. Before that, we must first understand ourselves

94. Are the boy's parents ill-treat the girl's parents even in the modern age? It is bad. They should be given equal status and respect

95. Drinking water is our lifeline. Even after 70 years of independence, we do not have enough drinking water. What is your solution? [161]

96. To get from the rich and help the poor is the principle of the Govt. You may question if it does anything detrimental to the poor [160]

97. If anyone ignores you please do not mistake him. He may be in such a situation. It is known only to him. Please sympathize with him

98. No one is called an orphan in this world if he does not have any money. Only those who do not have any relations are truly orphans

99. It is surprising to see a poor does not hesitate to help a suffering soul. Whereas a rich think thrice before opening his wallet.

100. Our country is blessed with numerous artistic temples and other holy places of worship. When are we going to visit them in life?

101. Please do not be a workaholic. Plan to go for a picnic or visit a relative once in four months for your body to rewind and relax.

102. Whether good or bad news, if you happen to receive any message, check the veracity of the message before passing it on to another.

103. God has given us only one stomach. But he has also given two hands to work and earn to feed the stomach. Then why bother in life?

104. What we liked when we are one year old, we do not like when we are ten. Growth is like a journey. If it stops, then there is a problem.

105. I am an old soul. I had only conservative views. Over the years, by moving with my children, I have understood the modern views.

Thursday, September 6, 2018

TABLE MANNERS / உண்பதில் பண்பாடு

TABLE MANNERS
1. One must follow good manners while attending dinner. If you are the host, you must eat at the end. If you are a guest, you must eat after being invited to eat.

2. Before commencing to eat, you must pray to the Lord and thank him.


3. You must keep your lips closed while chewing. You should not make incorrigible noises while chewing. You must put the food inside the mouth and not on the protruded tongue.


4. Some people have a tendency to talk aloud while eating and disturb others. This is very bad.


5. Just because you like a particular item or because an item is tasty, you should not eat only that item. You must eat all the items fairly.


6. When food is served,  you should accept only what you can eat. You should not waste food. Remember many poor people are deprived of food.


7. Even if it is your own house, you must eat only after being offered. You should not eat on your own.


8. Some are crazy to eat. The taste remains only until it is on the tongue. Once it goes inside the mouth, it becomes different.


உண்பதில் பண்பாடு 

1. விருந்தில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பாடு: விருந்து அளிப்பவர் கடைசியில் உண்ண வேண்டும். விருந்தாளி உண்ண அழைத்த பின்பு உண்ண வேண்டும்.

2. உணவு உண்பதற்கு முன்னால் இறைவனைத் தொழ வேண்டும்.


3. உணவு உண்ணும்போது உதடுகளை மூடிக் கொண்டு உண்ண வேண்டும்.வாயைத் திறந்து கொண்டு உண்ணக் கூடாது. நாக்கை வெளியே நீட்டி உணவைப் போடக் கூடாது


4. சிலர் உணவு உண்ணும்போது சப்தமாகப் பேசி மற்றவர்களைக் கஷ்டப் படுத்துவர். இது மிகவும் தவறு.


5. ஒரு பதார்த்தம் மிகவும் பிடிக்கும் என்பதாலோ, அதிக ருசியுடன் இருப்பதாலோ அதை அதிகம் உண்ணக் கூடாது. எல்லா உணவையும் சமமாக உண்ண வேண்டும்.


6.தேவைக்கு மேல் உணவை போட்டுக் கொண்டு வீண் செய்யக்கூடாது. உணவு கிடைக்காத எவ்வளவோ ஏழைகளை அப்போது நினைக்க வேண்டும். உணவு இறைவனின் பரிசு


7. தன்னுடைய வீட்டிலேயே உணவைத் தானே எடுத்துச் சாப்பிடுவது சிலர் வழக்கம். அது தவறு. கொடுத்து உண்ண வேண்டும் அல்லது கேட்டு உண்ண வேண்டும்.


8. ஒரு பதார்த்தத்தை உண்பதில் உள்ள ஆசையை விலக்க வேண்டும். நாவில் இருக்கும் வரை தான் ருசி. தொண்டைக்கு கீழே இறங்கிவிட்டால் அதோ கதி தான்.

Wednesday, September 5, 2018

RANDOM THOUGHTS 76 TO 90

76. Do your duty until you are sixty. Then read spiritual books of knowledge to know about God. Then renounce and concentrate on God.

77. After you get your children educated and married, your responsibility is over. Leave them and enjoy your life by visiting temples.

78. Time is like gold. To live happily is very important. You have not wasted even a single second if you have lived your life happily.

79. We can only take the horse to the water. It is upto the horse to drink or not to drink the water. We cannot drink for the horse.

80. Life is similar to a relay race. Its success depends on when and how we handover our responsibilities to the next generation.

81. We are almost caged within the family. We neither wish to leave nor to remain inside. We are breathless. That is the beauty of life

82. Poverty must be eradicated from society. My suggestion is if the rich marry the poor it can eradicated. You agree with me

83. We always find fault with others and try to correct them. We must first look at our drawbacks before pointing out others' mistakes.

84. We must take life easily. We should feel happy with what we have. We should not spend our life by crying for what we don't have

85. We should have mutual belief on others. It is foolish to believe everyone. It is still the worst if we do not believe anyone.

86. The learned should sympathize with the uneducated. If he advises him all aspects of life, the country and its people will flourish.

87. After our death, we cannot take anything with us except one thing. Only the benefits of all the charities we have done in our life 

88. Confidence is very important to lead a near-perfect life. When the confidence level goes down, many will resort to unethical means.

89.  Some people talk negatively to show intelligence. Some people talk politely to hide intelligence. Both are God's creation.

90. Baghvan Lord Krishna said: Chillness is the nature of water. Heat is the nature of fire. To love all living beings is my nature. 

RANDOM THOUGHTS 61 TO 75

61. Most people feel that success does not come to them. It is not the right attitude. Instead, they should try to go towards success.

62. The learned is respected everywhere. If one improves his knowledge through proper education, he will be respected wherever he goes.

63.  It is a pity, when some people with some clout in society, say something meaningless, the illiterate masses believe it to be true.

64.  The Lord will not appear in person to advise everyone. He tells through our well-wishers. It is up to us to take it or leave it.

65.  People like a person who talks less. They respect the person who talks only when needed. They adore a person who acts prudently.

66.  The one who thinks that he is clever is really a fool. The one who thinks that others are fools is much worse than other fools.

67. The law stipulates 18 as the marriageable age for the women. If delayed, there are possibilities to get mentally retarded children

68. Here is a lovely idea to solve misunderstandings between husband and wife. Who surrenders first should get a gift from the other.

69. The women cry outside. The men cry inside. They must be tactful to solve the day's problem without carrying it on for the next day.

70. The rapprochement between two people after a misunderstanding feels great. Is it not better if there is no misunderstanding at all?

71. Corruption is the cancer of our society. Unless both the giver and receiver solemnly pledge to refrain, it can never be abolished.

72.. One must inquire within himself. If he does not find Lust, anger, greed, attachment, pride, and hatred he will surely reach heaven.

73. If the outlook is good, the world is beautiful. If one talks the truth, the world loves him. If his heart is pure, he conquers all

74.. I was angry with my wife. I caught a cold in the night. She applied ointment with love. I said, sorry dear. Who came as the virus?

75. I think the Lord has taken the avatar of the viruses and bacteria, in this Kali Yuga, to protect the good and to destroy the evil.


Tuesday, September 4, 2018

HOW I MOVE WITH OTHERS. / நான் பிறருடன் பழகும் முறை

HOW I MOVE WITH OTHERS.

1. I am friendly to everyone. I do not develop misunderstanding, nor I argue, nor I fight with others.


2. When I am talking to someone, at one stage, my instinct tells me that there will be an argument if we proceed further. At that stage, I stop talking further.


3. If I find the information given by another person is not correct, I won't tell him that he is wrong.


4. If anyone says that my information is not correct, I will agree with him and I will not try to prove I am correct.


5. When another person is talking to me, I am attentive to him. To look elsewhere or to attend to any other work is like insulting him.


6. When I talk to anyone, I always observe whether he is attentive. If not I stop talking and attend to any other work.


7. If I do not agree with what another person says, I will consider him ignorant and look at him sympathetically.


8. When I am talking to someone, if someone intervenes, I shall stop talking and leave the place to attend to other work.


9. In case I have a misunderstanding with another person inadvertently, I think about it seriously.


10. Within an hour, I will know if I am wrong. Immediately I will seek his apology.


11. If I am not wrong, I will wait for 24 hours within which he should seek my apology.


12. If not, I will not fight with him. I will disassociate and I will have no further contacts with him.


நான் பிறருடன் பழகும் முறை  


1. நான் யாரிடமும் மனஸ்தாபம் கொள்வதில்லை, வாக்குவாதம் செய்வதில்லை, சண்டை போடுவதில்லை. எல்லோரிடமும் நட்புடன் பழகுவேன். 


2. ஒருவருடன் நான் பேசும் போது, இதற்கு மேல் பேசினால் விவாதம் வரும் என்று எனக்கு தெரியும். அப்போது மேலே பேசாமல் உடனே நிறுத்தி விடுவேன்.


3. ஒருவர் கூறும் தகவல் சரியில்லை என்று எனக்கு நன்கு தெரிகிறது. இருந்தாலும்,அவரிடம் "நீங்கள் கூறுவது சரியில்லை" என்று நான் சொல்ல மாட்டேன்.


4. நான் கூறும் ஒரு தகவல் சரியில்லை என்று மற்றவர் மறுத்தால், "நீங்கள் சொல்வது சரி" என்று கூறி விடுவேன். அவரிடம் நிரூபிக்க முயற்சி செய்ய மாட்டேன்.


5. நாம் ஒருவரிடம் பேசும்போது அவர் நாம் பேசுவதை கவனிக்கிறாரா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் பேசாமல் வேறு வேலையை பார்க்க வேண்டும்.


6. ஒருவர் நம்மிடம் பேசும்போது அவர் பேசுவதைக் கவனிக்க வேண்டும். அதைவிட்டு பராக்கு பார்ப்பது, வேறு வேலை செய்வது அவமானப்படுத்துவது ஆகும்


7. ஒருவர் கூறுவது எனக்குப்  பிடிக்கவில்லை என்றால், "இவ்வளவு  அறிவில்லாமல்  இருக்கிறாரே" என்று மனதில் நினைத்து அவரை இரக்கத்துடன் பார்ப்பேன்.


8. நான் ஒருவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது வேறொருவர் குறுக்கிட்டுப் பேசினால், உடனே பேச்சை நிறுத்திவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுவேன்.


9. நானும் மனிதன் தான். என்னை அறியாமல் சில சமயம் சிலருடன் மனஸ்தாபம் ஏற்படுவது  உண்டு. அப்படி மனஸ்தாபம் ஏற்பட்டால் அதைப்பற்றி தீவரமாக யோசனை செய்வேன். 


10. தவறு என் மீது என்றால் ஒரு மணி நேரத்தில் எனக்குத் தெரிந்து விடும். உடனே கொஞ்சமும் தயங்காமல் அவரிடம் மன்னிப்பு கேட்டு விடுவது என் வழக்கம்.


11. என் மீது தவறு இல்லை என்று நான் எண்ணினால் 24 மணி நேரம் காத்திருப்பேன். அதற்குள் அவர் தன்னுடைய தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். 


12. இல்லை என்றால் அவருடன் சண்டை போட மாட்டேன். அத்துடன் அவருடைய உறவுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவேன். பிறகு அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன்.

Sunday, September 2, 2018

குண்டுச் சட்டியில் குதிரை

ஆங்கிலத் திரைப்படங்கள் உலகச் சந்தையில் விலை போகிறது. ஹிந்திப் படங்கள் அகில இந்தியச் சந்தையில் வியாபாரம் ஆகிறது. தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் விலை போகிறது. 

இந்தியாவில் ஆங்கிலம் பேசுவோர் 13 கோடி, ஹிந்தி பேசுவோர் 55 கோடி, தமிழ் பேசுவோர் 6 கோடி. ஆங்கிலம் வேற்று மொழி. ஹிந்தி இந்திய மொழி. தமிழனுக்கு இரண்டும் தெரியாது. கற்க இஷ்டமில்லை.


ஆங்கிலம் தெரியாமலேயே ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்க்கும் தமிழர்கள் ஏன் ஹிந்தித் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை என்று புரியவில்லை. அந்த மொழியின் மீது ஒரு இனம் தெரியாத வெறுப்பு.


அதுதான் போகிறது. ஹிந்தி வேண்டாம். தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளாவது  தெரியுமா என்றால் அதுவும் தெரியாது. எல்லோருடனும் சண்டை.


தமிழ் நாட்டில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோர்  இருக்கிறார்கள். ஆனால் அந்த மொழிப் படங்களைத் திரையிடுவது இல்லை. அதனால் மற்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பு குறைகிறது.


எம்ஜியார், சிவாஜி, ஜெமினி காலம் முடிந்து விட்டது. கமல் ரஜினிக்கு வயதாகி விட்டது. விஜய், அஜித், சூரியாவுக்கு  நடிக்கத் தெரியவில்லை. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் சிறு குழந்தைகள்.


தமிழ் இலக்கணம் தெரியாதவர்கள் இலக்கியம் பேசுகிறார்கள். தமிழ் தெரியாதவர்கள் பாடல், கதை, வசனம் எழுதுகிறார்கள். நடிகர்களின் விருப்த்திற்குக் கதையை மாற்றி தரத்தை கோட்டை விடுகிறார்கள்.


வியாபாரம் அதிகரிக்க தரம் முக்கியம். தரம் நன்றாக இருக்க புத்தகங்களைப் படிக்க வேண்டும். பிற மொழிப் படங்களைப் பார்க்க வேண்டும். மலையாளப் படங்கள் தரமாக இருப்பது இதனால்தான்.


மலையாளிகள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடமே உலகில் இல்லை. அதனால் மலையாளப் படங்கள் நன்கு வியாபாரம் ஆகிறது. தரமும் கூடுகிறது.


மலையாளப் படங்களின் தயாரிப்பு செலவு மிகவும் குறைவு. நடிகர்கள் அதிகம் பணம் வாங்குவது இல்லை. தரமான கதைகள் எழுதுகிறார்கள். வரவேற்பு அதிகம் இருக்கிறது.


தமிழ்நாடு அளவு கூட இல்லாத கொரியா, ஜப்பான், பிரான்ஸ், போன்ற சிறு சிறு நாடுகள் உலகத் தரம் வாய்ந்த நல்ல திரைப்படங்களைத் தயாரிகின்றன. நாம் ஏன் தரமான படங்களைத் தயாரிக்க முடியாது?


எப்போது  நாம் உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கப்  போகிறோம்  என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன். நடிகர்களின் ஆட்சி எப்போது முடியும் என்ற எண்ணத்தில் இதை எழுதிறேன். 


தரமான இயக்குநர்களுக்கு எப்போது முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று கனவு காணுகிறேன். இருக்கும் நிலமையைப் பார்த்தால் அது நிறைவேறும் போல் தெரியவில்லை. 


நாம் குண்டுச் சட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டு இருக்கிறோம்.

Saturday, September 1, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 691 TO 705

691. பிறருக்கு சாபம் கொடுப்பது பாபம். சில சமயம் அது பலித்துவிடும். அதனால் ஏற்படும் விளைவு நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் பாதிக்கும்

692. நாம் நல்ல காரியங்கள் செய்யும் போது நமக்குப் புண்ணியம் சேருகிறது. கெட்ட காரியங்கள் செய்யும் போது புண்ணியம் குறைந்து கொண்டே போகிறது.


693. பண்டைய ரிஷிகளும், முனிவர்களும் தவத்தின் மஹிமையால் வரம் அளிப்பதும், சாபம் கொடுப்பதும் உண்டு. அதனால் தவத்தின் மஹிமை குறைந்துவிடும்.


694. மதச் சுதந்திரம் உள்ள நமது நாட்டில் யாரும் எந்த அபிப்பிராயமும் கொள்ளலாம். ஆனால் மற்றவர் மனதைப் புண் படுத்தும் படி பேச,எழுதக் கூடாது.


695. அமெரிக்காவில் வாசக சாலை அனுபவம் ஒரு அற்புதம்.வெளியே வரவே மனது வராது.புத்தகங்கள் அழகாக, ஒழுங்காக, சுத்தமாக வைக்கப் பட்டு இருக்கும்.


696. சில ஆண்களுக்கு பெண் குணம், சில பெண்களுக்கு ஆண் குணம் இருக்கும். மனைவிக்கு ஆண் குணம் இருந்தால் கணவனுக்கு பெண் குணம் இருப்பது நல்லது


697. மருத்துவக் காப்பீடு முக்கியம்.ஒருவருக்கு ரூ.25000/ ஆகும்.டிக்கெட் போக,வர ஒருவருக்கு ரூ. 60000/ ஆகும்.யாராவது செலவு செய்தால் நல்லது


698. எல்லா ஏர் இந்தியா விமானமும் இந்தியாவின் பல இடங்களில் இருந்து புறப்பட்டு, மும்பை அல்லது டெல்லியில் மாறி, நடுவில் நிற்காமல் செல்லும்


699. வயதானவர்களுக்கு, பாஷை தெரியாதவர்களுக்கு, தனியாகப் போகிறவர்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்வது சௌகரியம். விலை கொஞ்சம் அதிகம். 


700. கட்டார் [DOHA], எமிரேட்ஸ் [DUBAI], எடிஹாட் [ABUDHABI] வழியாகச் செல்லும். அந்த விமான நிலையங்களில் வேறு விமானத்திற்கு மாற வேண்டும். 


701. தர வரிசையில் சிறந்த விமான நிறுவனங்கள்: கட்டார், எமிரேட்ஸ், எடிஹாட் முதலியன.ஏர் இந்தியா விமானத்தில் மட்டும் இந்திய உணவு கிடைக்கும்.


702. இந்தியாவிலிருந்து அமெரிக்கா 16000 கி.மீ. 40000 அடி உயரத்தில்,மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் _50c வெப்பத்தில் 16 மணி நேரத்தில் சேரும்


703. விமான நிறுவனங்கள் நவம்பர்/டிசம்பர் மாதத்தில், சலுகை விலையில், அடுத்த வருட பயணத்திற்கு [போவதற்கு,வருவதற்கு ] முன்பதிவு செய்வார்கள்.


704. PASSPORT, VISA இரண்டும் காலவதி ஆகாமல் இருக்க வேண்டும். IMMIGRATION போது PASSPORT இல் நுழைவு, புறப்பாடு பற்றி முத்திரை  இடப் படும்.


705. இந்தியாவில் இருந்து வரும் எவரும் அமெரிக்காவில் எந்த விமான தளத்திலும் IMMIGRATION பரிசோதனைக்கு உட்பட்ட பிறகு அனுமதி வழங்கப்படும்.

மனதில் தோன்றிய எண்ணங்கள் 676 TO 690

676. சுய மரியாதை என்பது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமே உள்ள உணர்ச்சி. பணக்காரர்களுக்கு துளியும் கிடையாது என்பது உண்மை.

677. விஷ்ணு சகஸ்ரநாமம் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களைக் கூறு
கிறது. அதை ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் பாராயணம் செய்வது நமக்கு நல்லது.

678. “பூதப்ருதே நம:” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆறாவது திருநாமத்தை ஜபிக்கும் அடியார்களுக்கெல்லாம் அரங்கனே நல்ல உணவளித்து விடுவான்.


679. விடுமுறையில், மருமகளை பெற்றோரிடம் அவள் கேட்காமல் அனுப்பினால் அன்பு.கேட்டு அனுப்பினால் அனுதாபம்.கேட்டும் அனுப்பாவிட்டால் அஹங்காரம்.

680. அமெரிக்காவில் ஒருவர் சுற்றுலாப் பயணியாக ஆறு மாதங்கள் வரை தான் தங்க முடியும். மேலும் ஒரு நாள் அதிகம் தங்கினாலும் சிறை தண்டனை தான்.


681. இந்தியாவில் இருந்து அமெரிக்கா போக விரும்பும் நண்பர்கள் மே 15 லிருந்து நவம்பர் 10 வரை தங்குவதற்கு திட்டம் போட்டால் சரியாக இருக்கும்


682. அமெரிக்காவில் ஜூன் 21 / செப் 21 கோடைகாலம். செப் / டிசம்பர் இலையுதிர்காலம், டிசம்பர் / மார்ச் குளிர்காலம்,மார்ச் / ஜூன் வசந்தகாலம்.


683. இப்போது பெண்கள் எல்லோரும் வேலைக்கு போகிறார்கள். மாமியார் / தாயாருடைய உதவியை எதிர்பார்க்கிறார்கள். சரி, அவர்களுக்கு ஓய்வு வேண்டாமா?


684. ஜூன் 21 முதல் செப்டெம்பர் 21 வரை அமெரிக்காவில் கோடை காலம். பள்ளிகளுக்கு இன்றுமுதல் செப் 3 வரை கோடை விடுமுறை. பலர் இந்தியா செல்வர்.


685. குழந்தைகளுக்கு திருமணம் ஆனபிறகு தாய் தந்தையரில்,தாய் மகள் வீட்டுக்கும்,தந்தை மகன் வீட்டுக்கும்,சென்று தங்குவதையே விரும்புகிறார்கள்


686. அநேக குடும்பங்களில் தாய் தந்தையரில் பாதி பேருக்கு மேலும், எல்லாப் பேரக் குழந்தைகளுக்கும் "தமிழ்" என்றால் என்னவென்றே தெரியவில்லை.


687. கவிதைக்கும் உரைநடைக்கும் தனித்தனியாக இலக்கணங்கள் இருக்கின்றன. கவிதையை உரைநடையாகவோ, உரைநடையைக் கவிதையாகவோ, எழுதுவது தவறு.


688. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் தவறு இல்லாமல், அரசியல், மதம், ஜாதி, சினிமா பற்றி இல்லாமல் நல்ல கருத்தை ஒரு பக்கம் எழுதிப் பாருங்களேன்.


689. தனது வயதுக்கு மீறிய விஷயங்களைப் பற்றி ஒருவர் எழுதும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.அது கத்தி மேல் நடப்பதற்கு சமம் ஆகும்


690. எழுதுவதில் தொடர்ச்சியாக விவரிப்பது [Narration] முக்கியம். அதற்குப் பலமுறை எழுதிப் பழக  வேண்டும். பிறர் எழுதியதைப் படிக்க வேண்டும்.