Tuesday, March 27, 2018

MY DEAR FRIENDS, I MISS YOU

In 1953, when I was 8, my father was transferred to the Vaigai dam. I went to Andipatti, a nearby town, in the project van for my studies. The school was Board High School. I studied there for 3 to 4 years. The school prayer song was " Sangam muzhangum Thiru Madurai"

I met my best friends Srinivasan, Daniel Surendran, Vasudevan, Thangavelu, and Bose there. Gowri, the engineer's daughter, was my best girlfriend. We used to sit together in the van and on her request, I wrote her name on all her books/notebooks since my handwriting was good. 


The standard of Tamil was very good in Madurai district. I had visited Theni, Kambam, Bodi, Periakulam and other wonderful places. During holidays we used to go to KARADU where we inscribed our names on the rocks. We swam in the big KENI for hours. 


We ate KODUKKAPULI and walked back to Vaigai Dam as there was no bus on that route. I still remember the OTHTHAI ADI PULIA MARAM on the way where strong winds collected fine sand on the road. I remember making my first solo journey from there to my village.  


Srinivasan was a good singer. He used to sing the school prayer song. By birth, his left ankle was slightly twisted and he was limping. Thangavelu belonged to the backward community and was very friendly. We all used to sit together for our lunch and shared it. 


I always took curd/sambar rice with vegetables, Vasu always brought Rava upma and Thangavelu brought Kambu Kali or koozhu, a broth-like dish. Seenu was a local boy and he went home for lunch. We had varieties every day and we enjoyed our meal to our heart's content. 


There was a Recreation club at Vaigai Dam and I used to play all games. I was an expert in Carrom. My friend Daniel was short, bulky, wheatish in complexion and jovial. We were always seen together. We used to pluck seat cushion from the school van and made a football out of it. 


We ran a hand-written magazine in Tamil called "KALANJIYAM" and circulated to everyone. His parents were getting milk powder from the US, and whenever I visited their house his mother used to give me a large tumbler of milk. Such a wonderful and affectionate lady. 


Daniel was such a great friend and even now I am searching for him. Can anyone locate him? When I went to his house, his mother used to clean the fish for cooking by rubbing it on the stone to remove the fills. I would sit near her to observe it. She used to chide me for I was a vegetarian. 


My father used to take us to Periakulam to see movies and also to Kodaikanal. Whenever I was at home, I took coffee in a flask to my father's office at 3 PM . At that time, he used to translate to me the story of "TARZAN" that was published daily in the last page of The Indian Express.

Sunday, March 25, 2018

UNIQUE CHARACTERS

Ramayana and Mahabharat are our epics. It is about Lord Vishnu's incarnation to destroy the evil and to protect humanity. Ramayana is about greed for a woman. Lord Rama is the avatar. Mahabharat is about greed for the property. Lord Krishna is the avatar. Apart from Rama and Krishna, I like the following characters for their unique quality. They are Bharatha, Anjaneya, Vibhishana, Bhishma, Yudishtra, Karna and Vidhura. 

1. BHARATHA was a true brother. He had devoted love. Though he had the opportunity to rule the country, he did not accept it and ruled it on behalf of Sri Rama until his return.


2. ANJANEYA was a true disciple. He carried Sri Rama in his heart. He was loved by Sri Sita. He is the epitome of humility.


3. VIBISHANA also became a true disciple of the Lord, though he belonged to the enemy side. He advised his brother all the good things but he did not listen.


4. BHISHMA not only relinquished his right to the throne but also wowed to remain unmarried throughout his life simply for the happiness of his father. This was an impossible act.


5. YUDISHTRA for his righteousness, truthfulness, wisdom and his balanced mind in adversities. He was loved and respected by his younger brothers who always stood by his side. 


6. KARNA, though he belonged to the Kourava camp, was loved even by his adversaries for his charity. He was sincere to Duryodhana, the bad man, for the support extended to him. 


7. VIDHURA, the younger brother of Drutharashtra the blind ling. Vidura was intelligent and advised his brother whenever he supported his son for his wrongdoings due to love... Lord Krishna stayed only with Vidhura whenever he visited Hasthinapur. This speaks volumes about his quality. MAY GOD BLESS YOU.


Thursday, March 22, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 226 TO 240

226. பிரச்சனைகள் சிறிய கற்கள் போன்றது. கண் அருகில் வைத்துப் பார்த்தால் மலையாகத் தெரியும். தள்ளி வைத்துப் பார்த்தால் சிறிதாகத் தெரியும்.

227. உலகில் எவ்வளவோ ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது இறைவன் நம் மீது எவ்வளவு கருணை வைத்துள்ளார் என்பது தெரியும்.

228. நல்ல விஷயங்களை யோசித்து, யோசித்து என் மனதில் இப்பொழுது நல்ல எண்ணங்கள் அதிகம்  தோன்றுகிறது. படித்தபின் உங்கள் அனுபவம் என்ன?

229. பெற்றோர்கள் குழந்தைகளை 25 வருடங்கள் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறார்கள். குழந்தைகள் 25 வருடம் அவர்களை கவனித்துக்கொண்டால் போதுமே.

230. சிணுங்கினாலோ, முறைத்தாலோ, கோபப் பட்டாலோ பெண்கள் ஏன் மிக அதிக அழகாகத் தெரிகிறார்கள்?  உங்களுக்குத் தெரிந்த காரணத்தைச் சொல்லுங்களேன்.

231. பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் என்று சொல்வார்கள். எல்லாம் அந்த சமயத்துடன் சரி. மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் எறிவிடும்.

232. சில பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள். அடிப்பது தவறு. நாளை அதற்கு உடல் வலு வந்தவுடன் உங்களை அடிக்கக் காத்திருக்கும் ஜாக்கிரதை.

233. சிலர் நல்ல விதமாக வளர்க்க குழந்தைகளை  குறைக்கிறார்கள்.சிலர் எதிர்கால பாதுகாப்பிற்கு அதிக குழந்தைகளை பெற்று கொள்கிறார்கள். எது சரி?

234. சிலர் சிறிய அளவிலும், பலர் பெரிய அளவிலும் வரி எய்ப்பு செய்கிறார்கள். அங்கு தான் கருப்பு பணம் உற்பத்தி ஆகிறது. யாரை நொந்து என்ன பலன்?

235. வருமான வரி உட்பட எனது எல்லா வரிகளையும் நான் குறித்த காலத்தில் நேர்மையாக  செலுத்திவிட்டேன் என்று உங்களால் உறுதியிட்டு கூறமுடியுமா?

236. எங்கே உங்கள் நெஞ்சில் கை வைத்து உறுதியாகக் கூறுங்கள். நான் என் வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும் நேர்மையாக இருந்திருக்கிறேன் என்று.

237. அலுவலகத்தில் வேலை பார்க்கும் எத்தனை பேர் அவர்களுக்கு கொடுக்கப்படும் பயணப் படி போன்ற சலுகைகளைப் பெறுவதில் நியாயமாக இருக்கிறார்கள்?

238. பிறக்கும் வரை நாம் எந்த மதம் என்ன சாதி என்று தெரியாது. அதன்பிறகு தான் மதம், சாதி, அழகு, நிறம், அறிவு, தகுதி எல்லாம் நம்மை வந்து அடைகின்றன

239. எனது நண்பர்களை வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இன்னொருவருடைய மனம் புண்படும்படி எந்தக் காரணம் கொண்டும் அவதூராக எழத வேண்டாம்.

240. நாம் இன்னொருவருடைய மத நம்பிக்கையில் தலையிடும் போது, அவர்கள் நம் மத நம்பிக்கையில் தலையிடுகிறார்கள். ஒருவருக்கொருவர் சண்டை வருகிறது.


Saturday, March 17, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 211 TO 225

211. ஒருவர் வாயை மூடிக்கொண்டு காதுகளை திறந்து வைத்திருந்தால் முன்னேறலாம். காதுகளை மூடிக்கொண்டு வாயை திறந்து வைத்திருந்தால் பின்னேறலாம்.

212. ஒருவர் தன்னுடைய கடமையை செய்யாமல் உரிமையை கேட்பது தவறான செயல். அது வேலையை செய்யாமல் கூலியை கேட்பதற்கு சமமாகும். கடமைக்கு பிறகு உரிமை.

213. தினம் கடும் வெய்யிலில் கால் கடுக்க சேற்றில் உழைப்பதற்கு மனத்திடம் வேண்டும். மனது வைத்தால் அவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை

214. அதிகமாக உணர்ச்சி வசப்படுவது ஒருவருடைய ஆரோக்கியத்திற்குக் கேடு. உறவையும் பாதிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

215. பிறர் ஒழுக்கமாக இருக்கிறாரா என்று பார்ப்பது நமது வேலை இல்லை. நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் நமது ஆரோக்கியம் பாதிக்கும்.

216. பெற்றவர்கள் வயதாகி கீழே விழும்போது தாங்குவதற்கு இரண்டில் ஒன்று தேறுமா அல்லது அதுவும் தேறாதா என்பது தான் இன்றய தலயாய கேள்விக் குறி.

217. மனிதன் ஒரு வயிறுடன் மட்டும் பிறக்கவில்லை. இரண்டு கைகளுடன் பிறக்கிறான். ஒரு வயிற்றிற்குத் தேவையான உணவை இரண்டு கைகள் உழைத்துப் பெறும்

218. 2011 ஜனத்தொகை கணக்கின் படி இந்தியாவில் சொந்த வீடு வைத்து இருப்பவர் சதவீதம் 86.6%. பீஹார் 98.6%. தமிழ்நாடு 74.4%. நம்பமுடியவில்லை. அல்லவா?

219. அரசியல், மதம், சாதி, சினிமா சம்பந்தமாக எனக்கென்று சில நம்பிக்கைகள் உண்டு. அவைகளை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.. அதுதான் பிரச்சனையே.

220. தமிழ்ப் பதிவுகளுக்கு உள்ள வரவேற்பு ஆங்கிலப் பதிவுகளுக்கு இல்லை என்கிற நிதர்சன உண்மை  எனக்கு சிறிது வருத்தத்தை அளிக்கிறது. வேறு என்ன செய்ய?

221. புலிக்கு எலியைப் பிடிப்பதில்லை. கொடி கட்டிப் பறக்கும் சில எழுத்தாளர்கள் சிறு எழுத்தாளர்களின் பதிவுகளை லைக் பண்ணுவதில்லை. 

222. 72 வருடங்கள் வாழ்ந்தாகி விட்டது. ஆசை எதுவும் இல்லை. இனி எனக்கு ஒன்றும் வேண்டாம். நிம்மதியான, நிரந்தர நித்திரையைத் தவிர.

223. என் விருப்பத்தை அறியாமல், என் மனைவி ,  தான் சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று தினமும் இறைவனை வேண்டுகிறாள்.

224. மக்களுக்காக உழப்பவர் தான் பொது வாழ்வில் இருப்பவர். மற்ற பெரும் புள்ளிகள் தனிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்களைப் பற்றி நமக்கு என்ன கவலை?

225. எங்கள் வீட்டில் சமையலுக்கு "கனோலா" எண்ணை உபயோகப் படுத்துகிறோம். அது மிகச் சிறந்த எண்ணை. விரும்பினால் நீங்களும் உபயோகப் படுத்தலாம்.


மனதில் தோன்றிய எண்ணங்கள் 196 TO 210

196. விவாதிப்பது எனக்குப் பிடிக்கும். அது ஆரோக்கியமானது. ஆனால் எதிர்த்துப் பேசுவது பிடிக்காது. அது அநாவசியமாக மனஸ்தாபத்தை உண்டு பண்ணும்

197. தாவரங்கள், விலங்குகள் இவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஆறறிவு படைத்த மனிதனால் எந்த வித பலன்களும் கிடையாது. இதில் அஹங்காரம் வேறு.

198. என்னால் எதையும் பொறுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இந்த அஹங்காரம் என்ற ஒரு குணத்தை மட்டும் கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை

199. நமது நாட்டில் ஓரளவு ஒழுங்காக ஓடிக்கொண்டு இருப்பது நீதிமன்றங்கள் தான்.அதையும் கெடுத்துத் தொலைத்து விடுவார்கள் போல் பயம் தோன்றுகிறது

200. பண்டிகை நாட்களில் பலவித பணியாரங்கள் செய்வதைத் தவிர்த்து, "உபவாசம்" தான் சிறந்தது என்று கூறினால் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா?

201. நகைச்சுவை உணர்வு மிகவும் முக்கியம். அதற்காக நகைச்சுவை என்ற பெயரில் உளறக் கூடாது. அது மற்றவருடைய நகைச்சுவை உணர்வைக் கெடுத்துவிடும்.

202. ரெடிமேட் உபதேசங்களைத் தேடிப் போகாதீர்கள். அவை நடைமுறைக்கு சிறிதும் ஒத்து வராது. உங்கள் வாழ்க்கை அனுபவங்களைக் கூறுங்கள்.அது போதும்.

203. ஒருவர் எப்போதும் தனது தகுதி அறிந்து பேசவேண்டும். தனது அறிவுக்கு எட்டாத விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது. பைத்தியம் என்று சொல்வார்கள்.

204. காற்று இசையாகும் வாசித்தால். வார்த்தை கவிதையாகும் யோசித்தால். இவ்வுலகம் நட்பாகும் நேசித்தால், இறைவனின் அருள் கிட்டும் யாசித்தால்.

205. "மெலடோனின்" மனித மூளையில் இரவில் உற்பத்தி ஆகிறது. உறக்கம் வருவதற்கு இதுவே முக்கிய காரணம். இது இல்லாவிடில் உறக்கம் பாதிக்கப்படும்.

206. வெளுத்தது எல்லாம் பால் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது

207. பெண்கள் வீரத்தை விரும்பியது அந்தக் காலம். விவேகத்தை விரும்பியது கடந்த காலம். சமத்துவத்தை விரும்புவது நிகழ் காலம். எதிர் காலத்தில்?

208. யாரைப் பற்றியும்,எதைப் பற்றியும், எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு,எழுதுவதற்கு தரப்பட்டுள்ள உரிமைக்கு மறு பெயர் கருத்து சுதந்திரம்

209. உச்ச நீதி மன்ற தீர்ப்பை விமரிசனம் செய்யும் அளவுக்கு நமது நாட்டில் அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.

210. அரசியல்,மதம்,ஜாதி, சினிமா இவை நான்கும் தனி மனித அபிப்பிராயம்.யாரும் எந்த முடிவுக்கும் வர முடியாது. வீண் வாக்குவாதம் தான் மிஞ்சும்.



மனதில் தோன்றிய எண்ணங்கள் 181 TO 195

181. சல்லடையில் தண்ணீர் தங்காது. ஆனால் அழுக்கான சல்லடை சுத்தமாகும். நல்ல விஷயங்கள் நமது மனதில் தங்காது. ஆனால் அழுக்கான மனது சுத்தமாகும்.

182. ஒருமுறை, இருமுறை அல்ல, பலமுறை அனுபவித்த பிறகும் நான் சிறிதும் திருந்த மாட்டேன் என்று கூறினால் விதி வலியது என்று தானே கூற வேண்டும்?

183. உலகம் ஒரு நாடக மேடை. எல்லோரும் நடிகர்கள். இறைவன் சூத்திரதாரி. நான் கொடுத்த வேஷத்தில் நடிக்கிறேன். ஆனால் நாடகம் இன்னம் முடியவில்லை.

184. பாமரன் படித்தவனாக வேடம் போடுவது மிகக் கஷ்டம். அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் படித்தவன் பாமரன் போல வேடம் போடுவது மிகவும் தவறான செயல்

185. 200 ரூபாய்க்கு புத்தகம் வாங்கிப் படிக்க மனது வராது. பலர் படிக்கலாம். ஆனால் சினிமாவுக்கு 200 ரூபாய் கொடுக்க முடியும். விந்தையான உலகம்

186. நமது உடலில் நோய் வந்தால் பையில் இருக்கும் பணத்தைத் தூக்கிக் கொடுத்து விடுவோம். ஆரோக்கியம் இருந்தால் தான் பணத்தை அனுபவிக்க முடியும்

187. இந்தத் தீபாவளித் திருநாளில் நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக, நிம்மதியாக வாழ நான் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

188. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். புத்தகம் படிக்கும் பழக்கம் சிறந்த ருசி, அருமையான பசி. சுவைக்கப் பழகி விட்டால் அலுக்காது.

189. முயற்சி திருவினை ஆக்கும். வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்ய ஆசை வேண்டும். ஆசை இல்லாத முயற்சியால் பலன் ஒன்றும் இல்லை.

190. வாழ்க்கையில் வாய்மையும் நேர்மையும் முக்கியம். அப்படி வாழ்ந்தால் எதிர்பாராத எதிர்ப்புகளை வரவேற்க, ஜீரணிக்க முடியும்.

191. சிலர் எப்பொழுதும் எதிர் மறையாகவே எழுதுவார், பேசுவார்,அபிப்பிராயம் சொல்வார். தான் அறிவாளி என்று நாலு பேர் கவனிக்கணும் என்பதற்காக!!!

192. நல்ல வெளி அழகு நண்பர்களைக்  கொடுக்கும். ஆனால் அது நிலையானது இல்லை. கெட்ட அக அழகு பகைவர்களை உண்டாக்கும். நல்ல உள் அழகு மேல்.

193. படிப்பு , அழகு, பணம், குணம், மனப் பொருத்தம் இதில் எது ஆண், பெண் திருமணத்திற்கு மிக  முக்கியம் ? ஏதாவது இரண்டை கூறவும் .

194. பெண்கள் நம் நாட்டின், வீட்டின் கண்கள். அந்தக் கண்களைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அதில் உங்களின் ஆலோசனைகள்  என்ன ?

195. வெளியே செல்ல ஒரு நல்ல வேஷ்டியை தேடினால் காணவில்லை. கொலுப் படியில் இருக்கிறது. ஏன் பட்டுப் புடவையை கொலுப் படியில் விரிக்கக் கூடாது?



Tuesday, March 6, 2018

MAN PROPOSES GOD DISPOSES / நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

MAN PROPOSES GOD DISPOSES 

1. In our house, we always have tiffin at 4 PM daily. Though I do not feel hungry, I eat something to sustain hunger until night dinner. If it is idly, my daughter in law always served 4  with sambar, chutney, and podi. 


I always returned one idly and took only 3. Today it is idly. As I am hungry, I decided to have all the 4. But she served only 3. I never ask for more. As usual, I quietly ate without asking for one more. Man proposes God disposes of.


2. There was a bus for every hour to go to my office. I take the bus at 8 AM to reach the office at 9-15 AM. If I missed that bus, I had to take half a day leave. I always reached the bus station 5 minutes late. The bus driver was friendly and he used to wait for me.


One day, I finished my morning rituals in time and reached the bus station before the scheduled departure of the bus. Alas, the bus had gone before time. The timekeeper said the driver was new and he had taken the bus 5 minutes early. Man proposes God disposes of.


நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் 

1. எங்கள் வீட்டில் மாலை 4 மணிக்கு எப்பொழுதும் டிபன் உண்டு. பசி இல்லாவிட்டாலும், இரவு வரை தாங்குவதற்கு நான் கொஞ்சம் சாப்பிடுவது உண்டு. இட்லியாக இருந்தால், என் மருமகள் ஒரு தட்டில் 4 இட்லி, சட்னி, சாம்பார், பொடி எல்லாம் வைத்து தருவது உண்டு. 

அதில் ஒரு இட்லியை திருப்பிக் கொடுத்து விடுவேன். இன்று டிபன் இட்லி, நல்ல பசியும் கூட. 4 இட்லீயையும் சாப்பிட முடிவு செய்தேன். ஆனால் மருமகள் 3 தான் வைத்தார்கள். எப்பொதும்போல, பேசாமல் சாப்பிட்டு விட்டு கை கழுவினேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.


2. என் அலுவலகத்திற்குப் போக ஒரு மணிக்கு ஒரு பேருந்து உண்டு. எட்டு மணிக்குப் புறப்படும் பேருந்து 9-15 கு என் அலுவலகத்திற்குப் போக சரியாக இருக்கும். அந்த பேருந்தை விட்டால் நான் அரை நாள் லீவு எடுக்க வேண்டும். நான் எப்பொழுதும் 5 நிமிடம் தாமதமகத்தான் பேருந்தை அடைவேன். பேருந்து ஓட்டுனர் எனக்காக காத்திருப்பது வழக்கம்.


ஒரு நாள் என் காலை வேலைகளை முடித்து விட்டு பேருந்து புறப்பட 5 நிமிடம் முன்னால்  பேருந்து நிலையத்தை அடைந்தேன். ஆனால் நான் போகுமுன் பேருந்து சென்று விட்டது. விசாரித்ததில் ஓட்டுனர் புதியவர் என்றும் 5 நிமிடம் முன்னதாக சென்று விட்டார் என்றும் டைம் கீப்பர் கூறினார். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.