Friday, May 18, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 331 TO 345

331. இன்னொருவர் மீது கல்லை ஏறிய வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது. அவருக்கு மாலை போட வேண்டும் என்கிற எண்ணம் எப்போது வருமோ?

332. பிறருடைய வளர்ச்சியைப் பார்த்து நாமும் வளர முயற்சி செய்ய வேண்டும். அதைவிட்டு பொறாமை பட்டால் நமக்கு வீணாக குடல் வியாதி தான் வரும்.

333. புரட்டாசி மாதம் ப்ரதமை முதல் அமாவாசை வரை  மஹாளய பக்ஷம். தகப்பனார் இல்லாதவர்கள் அவரையும் மற்ற பித்ருக்களையும் தினமும் வணங்க வேண்டும்.

334. திருநெல்வேலி பக்கம் மோர்க் குழம்பு வேறு விதமாக சமைப்பார்கள். அதன் சுவை பிரமாதமாக இருக்கும். நீங்கள் அதை ருசித்து இருக்கிறீர்களா?

335. எந்த மதத்தையும் யாரும் பாதுகாக்கத் தேவையே இல்லை. அதுவே தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.மற்ற மதத்தினரை தூண்டாமல் இருந்தால் மிக நல்லது.

336. நம் நாட்டில் ஹிந்துக்கள், கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள் வாழ்வதைப் போல மற்ற நாடுகளிலும் வாழ்கிறார்கள். அங்கு மதப் பிரச்சினை இருக்கிறதா?

337. மதத் துவேஷிகள், சாதி வெறியர்கள் நூத்துக்கு இரண்டு பேர். இவர்களால் இந்த சமூகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவே முடியாது

338. பிராமண சமூகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன. ஆதலால் அவர்களை வெறுக்காமல் நல்ல உறவை வளர்க்க வேண்டும்.

339. நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் பழக்கம் வேண்டும். நமது பலம் மற்றும் பலவீனத்தை நாம் நன்கு அறிந்து வைத்து இருக்க வேண்டும்.

340. தினமும் உணவு உண்ண சாதத்தை தட்டில் இட்ட உடன் இறைவனை வணங்கி நன்றி சொல்லி பிறகு உண்ண வேண்டும். எவ்வளவு பேர் இதைப் பின்பற்றுகிறார்கள்?

341. வயதான ஒரு தம்பதி கடமைகளை முடித்த பின் இவ்வுலகில் தாங்கள் இருவர் மட்டுமே இருப்பதாக நினைத்து சந்தோஷமாக வாழ்ந்தால் அது ஒரு சொர்க்கம்.

342. தாய், தந்தை, ஆசிரியர், மாமனார், மாமியார், அண்ணா, மன்னி, பெரியோர் இவர்கள் அருளுவது ஆசீர்வாதம். மற்றவர் தருவது வாழ்த்துகள் மட்டுமே.

343. மருந்து மாத்திரைகளை தண்ணீருடன் தான் சாப்பிட வேண்டும். பால், டீ, காப்பி போன்ற பானங்களில் உள்ள ரசாயனப் பொருட்கள் மருந்தை பாதிக்கும்.

344. யாரும் நம்மை தவறாக பேசும்படி வைத்து கொள்ளக்கூடாது. அப்படி பேசி விட்டால் உடனே உயிரை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

345. கர்நாடக இசை, தமிழ் திரைப்பட இசை, ஹிந்தி திரைப்பட இசை இவைகளில் எதையுமே ரசிக்க தெரியவில்லை என்றால் வாழ்க்கை வாழ்வதின் அர்த்தம் என்ன?



Tuesday, May 15, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 316 TO 330

316. நான் சிக்கன பேர்வழி. கணக்கு எழுதும் போது.வரவுக்கும் செலவுக்கும் மீதிக்கும் ஒரு ரூபாய் வித்யாசம் வந்தாலும் மண்டையை உடைத்து கொள்வேன்.

317. நான் ஒரு சந்தேகப் பேர்வழி. அலுவலக அதிகாரியைப் போல தவறு கண்டு பிடிப்பதில் குறியாக இருப்பேன். அதனால் எனக்கு நெருங்கியவர்கள் குறைவு.

318. நான் டிசிப்ளின் பேர்வழி. வைத்த பொருள் வைத்த இடத்தில் தவறாமல் இருக்க வேண்டும். வேறு இடத்தில் இருந்தால் எனக்கு துளியும் பிடிக்காது.

319. நான் ஜாக்கிரதை பேர்வழி. எதையும் யோசித்து செய்வேன். சிலர் வாழ்க்கை அனுபவிக்க என்பார்கள். அவர்களைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது.

320. நான் கடிகார பேர்வழி. நேரம் தவறாமை மிக முக்கியம். ஒவ்வொரு வேலையும் நேரப் பிரகாரம் செய்ய வேண்டும். இல்லாவிடில் மண்டை வெடித்துவிடும்.

321. நான் பிடிவாதப் பேர்வழி. செலவு செய்வதிலும், முதலீடு செய்வதிலும் திட்டமிட்ட இலக்கை எப்படியும் அடைந்தே தீருவது என்கிற பிடிவாதம் உண்டு

322. நான் மரியாதைப் பேர்வழி. பெரியவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும். கால் மேல் கால் போடுவது, அலட்சியமாகப் பேசுவது எனக்குப் பிடிக்காது.

323. நான் திட்டமிடும் பேர்வழி. தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர மேலும் வாழ்க்கை திட்டங்கள் போட்டு சரி பார்ப்பது எனது நம்பிக்கை.

324. நான் ஒரு எளிமை பேர்வழி. படாடோபமான உடை, வாய்ச் சவடால் பேச்சு, கெட்ட வார்த்தைகளை உரக்க பேசுவது போன்ற நற்குணங்கள் என்னிடம் கிடையாது.

325. நான் ஒரு சமாதானப் பேர்வழி. சண்டை போடுவது எனக்குப் பிடிக்காது. என்மீது தவறு இருந்தால் ஒரு மணி நேரத்தில் சமாதானம் செய்து விடுவேன்.

326. நான் ஒரு சாந்தப் பேர்வழி. கோபமே வராது எனக்கு. சத்தம் போட்டு கத்துவது இல்லை. அவர்களுக்கு அறிவில்லை என்று நினைத்து விட்டு விடுவேன்.

327. நான் ஒரு கூண்டுப் பேர்வழி. எவ்வளவு நாட்கள் ஆனாலும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டின் உள்ளேயே அடைந்து கிடக்க என்னால் முடியும்

328. நான் அதிசய பேர்வழி. ஐபோன், டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட், ஏசி கார், ரயில், விமான பயணம் விரும்பாத, செலவு செய்யாத ஜீவராசி நான் தான்.

329. நான் ஒரு உல்லாசப் பேர்வழி. எனது சக்திக்குள், வரவுக்குள் எவ்வளவு சந்தோஷமாக வாழ முடியுமோ அந்த அளவு சந்தோஷமாக இருக்க முயற்சிப்பேன்.

330. நான் சங்கீதப் பேர்வழி. காலையில் ஒரு பாட்டு மனதில் தோன்றி விட்டால் நாள் முழுக்க அதே பாடலை எனது வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.


3

Sunday, May 13, 2018

DEVELOPMENT / முன்னேற்றம்

DEVELOPMENT 
I wish to say a few reasons which I consider the present situation in our country. Anyone who can solve these problems will be doing a great service to the country.

1. The main reason being that India is always facing problems from neighbouring countries leading to exorbitant defense expenses. 


2. There was no partition at all as literally more Muslims stayed back in India and there is always an internal conflict between Hindus and Muslims.  


3. In our country, there are 23 recognized languages and there is no common language to unite the people. In China 120 out of 138 crores, people talk the Chinese language.


4. Each state has a different language, culture, and different attitude, making it difficult for the central Govt to take decisions on development. 


5. Many people are not interested in education. here is no respect for the educated. The political parties see to it that the people remain uneducated. 


6. In spite of these setbacks, the development in India is reasonably good. 


முன்னேற்றம்  

நமது நாட்டின் தற்போதய நிலைமைக்கு என்ன காரணம் என்று எனக்குக் தெரிந்ததை சொல்ல விரும்புகிறேன். யாராவது இந்த பிரச்சனைகளை தீர்க்க முடிந்தால் நாட்டிற்கு செய்த பெரிய சேவையாகும்.

1. முக்கியமான முதல் காரணம், நமது நாடு அண்டை நாடுகளுடன் நல்ல உறவு இல்லாததால் மிக அதிகமாக நாட்டின் பாதுகாப்புக்கு, ராணுவத்திற்கு செலவு செய்ய வேண்டி உள்ளது.


2. உண்மையில் பாகிஸ்தானுடன் பிரிவினை இல்லை. அதிகமான முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கி உள்ளனர்.. ஹிந்து முஸ்லிம் வேற்றுமை தினசரி பிரச்சனையாக உள்ளது.


3. நமது நாட்டில் அங்கீகரீக்கப்பட்ட மொழிகள் 23. நாட்டு ஒற்றுமைக்கு ஒரு பொதுவான மொழி கிடையாது. சைனாவில் 138 கோடி மக்களில் 120 கோடி பேர்கள் சைனீஸ் மொழி பேசுகின்றனர்.


4. ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் தனிப்பட்ட மொழி, கலாசாரம், மனப்பான்மை இருப்பதால் மத்திய அரசு முன்னேற்ற பாதையில் செல்ல திட்டங்கள் வகுக்க முடியவில்லை.


5. கல்வி கற்பதில் அநேக மக்களுக்கு அதிக நாட்டம் இல்லை. கற்றவர்க்கு மதிப்பும் இல்லை. அரசியல் வாதிகள் மக்கள் கல்வி கற்காத வண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள்.



6. இருந்தும் நமது நாடு முன்னேற்றம் காண்பதை பாராட்ட வேண்டும்.










Saturday, May 12, 2018

PHILANTHROPY / மனித நேயம்

PHILANTHROPY

Philanthropy means the desire to promote the welfare of others, expressed especially by the generous donation of money to good causes.


Life is a mixture of happiness and sorrow. We think about the Lord and pray to Him only when we suffer. We do not think about Him and thank Him when we are happy. We should always think about Him especially on birthdays, wedding days and ceremony days. 


We should do some philanthropic act on such days. Feeding the poor, donating to old age homes, helping social welfare organization or visiting the nearby temple and offering money within our capacity in the Hundi are some of the noble acts. It can be anything. 


Some people may be averse to offering money into the Hundi, for the reason that it may be misused and it may not serve the purpose. We can only give the money to the Lord. It is for HIM to decide about it. HE knows when and how to make use of it. No one can cheat HIM. 


They will have to pay a heavy price. Putting money into the Hundi is an act of renunciation. We should forget about the money. Searching where it goes and how it is used shows our attachment towards the money. There is a purpose for everything that takes place in this world. Nothing can move an inch in this world without HIS order.


மனித நேயம் 

வாழ்க்கை சந்தோஷமும் துக்கமும் நிறைந்தது. நமக்கு துக்கம் வரும்போது இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்கிறோம். சந்தோஷமாக இருக்கும் போது இறைவனை நினைத்து நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். நாம் எப்போதும் இறைவனை நினைக்க வேண்டும் குறிப்பாக பிறந்த நாள். திருமண நாள், திதி நாள் ஆகிய நாட்களில்.

அந்த நாட்களில் நாம் நல்ல காரியங்கள் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு உணவு அளித்தல், முதியோர் இல்லத்திற்கு நன்கொடை கொடுத்தல், சமூக நலங்களில் ஈடு படும் நிறுவனங்களுக்கு உதவி செய்தல், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று உண்டியலில் நம்மால் முடிந்த அளவு பணம் செலுத்துதல் முதலியன சில நல்ல சேவைகள்.


சிலருக்கு கோயில் உண்டியலில் பணம் போடுவதற்கு விருப்பம் இருக்காது. அந்தப் பணம் நல்ல விதத்தில் உபயோகிக்கப் பட மாட்டாது என்பது அவர்கள் எண்ணம். நாம் இறைவனுக்கு கொடுக்கிறோம். அதை உபயோகப் படுத்துவது அவன் எண்ணம். நாம் ஒன்றும் செய்ய முடியாது. யாரும் இறைவனை ஏமாற்ற முடியாது. அந்தப் பணத்தை எங்கு எப்படி உபயோகப் படுத்த வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். 


இறைவனை ஏமாற்றுபவர்கள் அதிக விலை கொடுக்கும் படி இருக்கும். உண்டியலில் பணம் போடுவது நமது பற்றற்ற மனதைக் காட்டுகிறது. அந்தப் பணத்தை உடனே மறந்து விட வேண்டும். அதைப் பற்றி நினைப்பது, அதன் மேல் உள்ள ஆசையைக் காட்டுகிறது. உலகில் நடப்பது எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். அவனல்லால் இப்புவி மீதே ஓர் அணுவும் அசையாதே.


Friday, May 11, 2018

INDIAN PREMIER LEAGUE CRICKET

The beauty of cricket lies in its uniform cream coloured dress, the stylish batting display, the knacky bowling techniques, and the clever field placements. I have played at the college level and I have a fair knowledge of the game. I was a fan of England then the West Indies and then India. 

Colin Cowdrey, Fred Truman, Ian Botham, Gary Sobers, Viv Richards, Michael Holding, Brian Lara, Richie Benaud, Dennis Lillee, Glen Mcgrath, Stephen Fleming, Richard Hadlee, Imran Khan, Waqar Younis, Wasim Akram, Sunil Gavaskar, Kapil Dev, Sachin Tendulkar Virendra Sehwag, and Rahul Dravid are some of the greats I liked.


I loved the five-day test cricket where each team is given two chances to show their strength both in batting and bowling.  The great Don Bradman had written in his book CRICKET how the game should be played. Then came the limited over game into prominence. 


The thrill you get, when you have 5 slips, a gully, a point, a short leg, a fine leg or a third man is missing in limited over games. I liked the one day game only to some extent as it saved the time and the result was obtained in one day. 


Then 20 x 20 came into being which I do not like at all as it spoiled the display of elegant batting, tactful bowling, and clever field placing. To add insult to injury, the Indian Premier League became a money-spinner removing even the competitive spirit between two countries. 


Actually, no other game world over, say tennis, football, hockey etc, has changed its pattern to make money. IPL is spoiling young cricketers in India in not playing the game in copybook style. Only a few foreign players take part in IPL. Other foreign players are busy in their county matches to play test cricket.


Exorbitant money is paid to lure the cricketers world over to play for IPL. How can you expect a Darren Bravo bowl a sincere over to Chris Gayle? How a rookie Indian bowler bowl genuinely to captain Kohli? It is not suitable for a developing country like India.


The cricket crazy people of India have no other alternative but to spend their hard-earned money to witness a match of short duration without any competitive spirit, sacrificing the beauty of the game. O'God, please save this great game, our country, and its people.

Thursday, May 10, 2018

MEDICAL TREATMENT / மருத்துவம்

MEDICAL TREATMENT:

Anyone who is practicing medicine will vouch that his system is the best. Anyone who is cured of a serious ailment will swear that the system he is treated is the best.


It is found that 99.99% of the DNA of all people is the same. Only 0.01% makes the difference. There in that difference, God plays his trick.


I have read articles about treatment methods of geniuses, I have interacted with specialists in various fields and I have my own personal experience for 76 years.


There are mainly three reasons for getting sick. The first reason is genes-related, which is hereditary. The second reason is the food habits. The third reason is bad habits. Another reason may be Karma.


The constitution of the body varies from person to person. Therefore, what is medicine for one may be a poison for the other. For Eg. Ginger which is considered to be good for digestion may not be suitable for a person suffering from ulcer. Similarly, garlic may not be suitable for a person suffering from IBS. Hence it is not advisable to suggest medicines to others.


Whatever be the reason, it is wrong to self-medicate. It is dangerous. One should go to a good doctor. To avoid the expenses, many people self-medicate without going to the doctor.


There are three types of sickness. 1. Life-threatening. 2. Not life-threatening. 3. Common sickness. The same treatment cannot be given for all sicknesses. It varies from case to case.


Allopathy medicines are prepared from chemicals. Siddha medicines are prepared from metals. Ayurveda and homeopathy medicines are prepared from herbs. Each one has its own plus and minus.


In the preparation of Ayurveda, homeopathy, and Siddha medicines old systems are followed. There is no invention. In Allopathy, there are developments in surgery, investigation, and treatment.


If the sickness is life-threatening, Allopathy treatment can be preferred. If it is not life-threatening, Siddha, Ayurveda, or homeopathy treatments are good. Metals in Siddha medicines and chemicals in allopathy medicines have side effects.


Our ancestors had told us that starving is the best cure. To starve on certain days or occasions is good for health. It gives rest to the digestive system and improves health. Yoga, meditation, and regular exercise also help to a great extent.


Last but not least. In India everyone is a doctor, engineer, lawyer, judge, administrator, philosopher, etc., Everyone has his own belief. They will follow only according to their belief. They will change only after some experience. It is God's will.


Unlike the US, medical insurance is not popular in India. People think that insurance is a bad omen. Such superstitious views should be removed. Everyone should cover insurance.

மருத்துவம் 
நோய் வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதல் காரணம் மரபு அணு சம்பந்தப் பட்டது. இது பரம்பரையாக வருவது. இரண்டாவது காரணம் உண்ணும் உணவு முறை. மூன்றாவது காரணம் கெட்ட பழக்கங்கள். 

எதுவாக இருந்தாலும் தனக்குத் தானே மருந்துகள் சாப்பிடுவது தவறு. அது ஆபத்தானது. நல்ல மருத்துவரிடம் போக வேண்டும். பலர் செலவுக்கு பயந்து மருத்துவரிடம் போகாமல் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.


நோய்களில்  மூன்று விதம் உண்டு. 1. உயிருக்கு ஆபத்தானது. 2. உயிருக்கு ஆபத்து இல்லாதது. 3. சாதாரண வியாதிகள். எல்லாவற்றிற்கும் ஒரே விதமாக சிகிச்சை செய்ய முடியாது. சிகிச்சை முறை மாறு படும்.


ஆங்கில மருந்துகளில் இரசாயனப் பொருட்கள் உள்ளன. சித்தா மருந்துகளில் உலோகங்கள் உள்ளன. ஆயுர்வேத மருந்துகள் தாவரங்களில் இருந்து தயாரிப்பது. ஒவ்வொன்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது.


ஆயுர்வேத, சித்தா மருத்துவ முறைகளில் பழைய முறையையே பின் பற்றப் படுகிறது. விக்ஞான முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. ஆங்கில மருத்துவம் அறுவை சிகிச்சையிலும், மற்ற சிகிச்சையிலும், பரிசோதனை முறையிலும்  பெரும் அளவு முன்னேறியுள்ளது.


ஆங்கில மருத்துவர்கள் நோய் தீவிரமாக இருந்தால் தான் ஊசி மூலம் மருந்தைச் செலுத்து வார்கள். மற்றபடி மாத்திரை மூலம் தான் குணப் படுத்துவார்கள். ஆனால் கிராம மக்கள் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தினால் தான் அவர் சிறந்த டாக்டர் என்று நினைப்பதால் கிராம மருத்துவர்கள் ஊசி மூலம் மருந்தை செலுத்துவது உண்டு.


உயிருக்கு ஆபத்து என்றால் ஆங்கில மருத்துவம் சிறந்தது. உயிருக்கு ஆபத்து இல்லை ஆனால் சீக்கிரம் குணம் காண வேண்டும் என்றால் சித்தா முறை நல்லது. ஆனால் அதில் உலோகங்களின் பின் விளைவுகள் உண்டு. சாதாரண வியாதிகளுக்கு ஆயுர்வேத முறை நல்லது. பின் விளைவுகள் இல்லாதது.


கை வைத்தியம் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ளாது. ஒருவருக்கு மருந்தானது மற்றவருக்கு விஷமாகும். உதாரணமாக, இஞ்சி ஜீரணம் செய்ய நல்லது. அதுவே இரைப்பை நோய் உள்ளவருக்கு கெடுதல். வேண்டும் என்றால் முதல் சிகிச்சையாக செய்து பார்க்கலாம்.


லங்கணம் பரம ஔஷதம்" என்று கூறுவார்கள். குறிப்பிட்ட நாட்களில் உண்ணாமல் பட்டினி இருப்பது உடலுக்கு நல்லது என்று முன்னோர்கள் சொல்வார்கள். அது ஜீரணம் செய்யும் அவயவங்களுக்கு ஓய்வும், உணவை ஜீரணம் செய்யவும் உதவுகிறது என்பார்கள். இது எவ்வளவு தூரம் சரியானது என்பது ஒவ்வொருவர் அனுபவத்தைப் பொருத்தது.


கடைசியாக, ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதன்படி தான் அவர்கள் செல்வார்கள். நம்பிக்கையை மாற்ற முடியாது. அனுபவித்த பிறகு தான் அது மாறும். அது இறைவன் கையில்.

அமெரிக்காவைப் போல இந்தியாவில் மருத்துவக் காப்பீடு பிரபலமாக இல்லை. மக்கள் அதை ஒரு கெட்ட சகுனமாக நினைக்கிறார்கள். அந்த எண்ணம் தவறு. எல்லோரும் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.






Wednesday, May 9, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 301 TO 315

301. தண்ணீரை எத்தனை முறை கலக்கினாலும் மறுபடியும் தெளிவு நிலை அடையும். எத்தனை சோதனைகள் வந்தாலும் நேர்மையான மனது தெளிந்த நிலையில் நிற்கும்.

302. வரவிலிருந்து செலவைக் கழித்தபின் மீதி சேமிப்பு என்பது நியதி. ஆனால் வரவிலிருந்து சேமிப்பைக் கழித்தபின் மீதி செலவு என்பது என் கோட்பாடு.

303. இறைவனை தினம் ஒருமுறை நினைத்தால் செய்த பாவங்கள் அழியும். இருமுறை நினைத்தால் தனம் வந்து சேரும். மூன்றுமுறை நினைத்தால் விரோதிகள் இல்லை.

304. சினிமாவில் காட்சிகள் நம் கண்களுக்குத் தெரிகின்றன. பின்னால் இருக்கும் திரை இல்லாமல் காட்சிகள் இல்லை. இறைவன் இல்லாமல் இயக்கம் இல்லை.

305. பிறரை மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. ஏனென்றால் ஒவ்வொருவரும் அவரவர் அறிவின் படி செயல் படுகிறார்கள் என்பது நன்கு புரிய வேண்டும்.

306. வயதாக வயதாக உணவு மற்றும் உறவுகளுடன் ஒட்டுதலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து "அவசியத்திற்கு மட்டும்" வைத்துக்கொண்டால் மனம் அமைதி பெரும்.

307. இன்றைய இளைஞர்கள் நிலை மிகவும் கஷ்டம். வீடு, குழந்தைகள் கல்வி, பெற்றோர்கள் மருத்துவம், பிற்கால சேமிப்பு என்று குருவி தலையில் பனங்காய்.

308. வெள்ளைத் துணியில் உள்ள கரும் புள்ளி தான் நம் கண்களுக்கு தெளிவாகத் தெரியும். பிறரிடம் உள்ள நல்ல குணங்கள் நம் எண்ணத்தில் நிலைக்காது.

309. ஒரு காலத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்று இருந்தனர். இப்பொழுது இரண்டுமே தெரியவில்லை. சொன்னால் கோபம் மட்டும் வருகிறது.

310. உங்கள் வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், திதி நாட்களில் உங்களால் முடிந்த அளவு பணத்தை அருகில் உள்ள கோயில் உண்டியலில் செலுத்தவும்.

311. திருமணத்திற்குப் பின் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரின் ஆக்ரமிப்பு அதிகம் காணப்படுகிறது. அனுசரிப்பு மிகக் குறைவாக இருக்கிறது.

312. ஒரு பெண் தன்னை மணக்கப் போகும் ஆணிடம் எதிர்பார்க்க வேண்டிய முதல் தகுதி "கெட்ட பழக்கம் / முன்கோபம்" எதுவும் அவரிடம் இல்லை என்பதுதான்.

313. கடமையில் தவறக் கூடாது. ஏப்ரல் மாதத்தில் அந்த ஆண்டுக்கான வீட்டு வரி, குடிநீர் வரி, சாலை வரி போன்ற வரிகளை தவறாமல் செலுத்த வேண்டும்

314. இனிமையான, காலத்தால் அழியாத தத்துவப் பாடல்களைத் தமிழ் சினிமாவில் ரசித்திருப்பீர்கள். உங்களுக்குப் பிடித்த சிறந்த தத்துவப் பாடல் எது?

315. தமிழ் சினிமா, சீரியல் எல்லாவற்றிலும் மது அருந்தும் காட்சிகள் அதிகம் வருவது மிகுந்த கவலையை அளிக்கிறது. எதிர் காலம் பாதிக்கப்படும்.


Tuesday, May 8, 2018

WHO IS TO LEAVE FIRST?

Many married women pray to God to bless them to leave the world prior to their husband [as Sumangali with the sacred thread]. Is it fair on their part to make such a request? It is a debatable question and I wish to say my views on this issue. 

Man is respected until he earns and the woman until she works. In our society, the social stigma attached to a woman after losing her husband makes it difficult for her to lead a decent life when compared to the life of a man after losing his wife. 


Secondly, both of them lose their independence once they are at the mercy of somebody. If the woman is healthy she can manage for some time but the man cannot unless he is accustomed to the domestic chores.


Thirdly different couples express their love in different ways. Some by smiling, some by kissing, some by embracing and some by chiding. It depends on their understanding. Old people normally express their love by controlling the other.


How it will look if the wife says she expects her husband to leave first? It will look awkward. Only to show her love for the husband, she wants to leave first. She wants her husband to live long and enjoy life with children and grandchildren.  


The taste of the pudding is in the flour. The quality of life is in living. If one leads a perfect life, loving and caring, all people will definitely reciprocate. There is nothing to worry whether the person is single or couple.

Monday, May 7, 2018

WHOSE MISTAKE? / யார் தவறு?

WHOSE MISTAKE?
You and your brother have love, mutual respect, and good understanding.  You are living in a different place. When your tenant vacated your house, on your behalf, he got the keys and also paid Rs. one lakh towards refund of the advance. 

You requested him to give his bank account number so that you could credit his account. He did not give as he valued the relationship. So you sent him a cheque through the post. After a few days, your account was debited. 


After a month, you came to know that someone had encashed the cheque. Now tell me whose mistake it was?


1. Your brother, in not giving his account number. OR

2. Your sending him a cheque.

யார் தவறு? 

நீங்களும் உங்கள் சகோதரரும் ஒருவருக்கு ஒருவர் அன்பு, மரியாதை, ஒற்றுமை உள்ளவர்கள். நீங்கள் வேறு ஊரில் வசிக்கிறீர்கள். உங்கள் வீட்டில் குடி இருந்தவர் காலி செய்த போது உங்களால் போக முடியவில்லை. 

உங்களுக்காக உங்கள் சகோதரர் வீட்டு சாவியைப் பெற்றுக் கொண்டு அவருக்கு கொடுக்க வேண்டிய முன் பணம் ரூபாய் ஒரு லட்சம் கொடுக்கிறார். 


அவருக்கு பணம் அனுப்ப நீங்கள் உங்கள் சகோதரரை அவருடைய வங்கி கணக்கு எண்ணை கொடுக்கும்படி கேட்டும் அவர் கொடுக்கவில்லை. அவருக்கு உறவு முக்கியமாகப் பட்டது. 


அதனால் நீங்கள் அவர் முகவரிக்கு தபால் மூலம் ஒரு காசோலை அனுப்புகிறீர்கள். சில நாட்கள் கழித்து உங்கள் கணக்கில் அந்தப் பணம் டெபிட் ஆகி விட்டது. 


ஒரு மாதம் கழித்து வேறு யாரோ உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுத்து விட்டது தெரிகிறது. உங்கள் சகோதரருக்கு பணம் போகவில்லை. இது யார் தவறு?


1. உங்கள் சகோதரர் அவருடைய கணக்கு எண்ணை கொடுக்காததா?

2. நீங்கள் தபால் மூலம் காசோலை அனுப்பியதா?


ALLIANCE PROPOSAL / திருமணப்பேச்சுவார்த்தை

ALLIANCE PROPOSAL
You have a daughter for marriage. She is 23, beautiful, well educated and employed. A handsome boy,28, well educated and employed from a good family came to see your daughter. 

After some time, when you contacted them, the mother said they saw 4 girls of whom she had selected a girl and they were proceeding on that alliance. 


You closed the matter and forgot about it. After two months, the mother of the boy telephoned to you and said that due to some hiccup they could not proceed on that alliance and that she wanted to discuss with you to reconsider your daughter for alliance.  What you will do?


1. Will you reject her invitation on the belief that once rejected is rejected forever?

2. Will you accept the invitation and go for discussions with them? 

திருமணப்பேச்சுவார்த்தை 

கல்யாணத்திற்கு உங்களுக்கு ஓர் மகள் இருக்கிறார். வயது 23, அழகு, படிப்பு, வேலை, சம்பளம் எல்லாம் திருப்திகரம். ஒரு அழகான பையன் வயது 28, நல்ல படிப்பு, வேலை, சம்பளம், நல்ல குடும்பத்தில் இருந்து உங்கள் மகளைப் பெண் பார்க்க வருகிறார். 

பிறகு அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. நீங்கள் கேட்டதற்கு, பையனின் தாயார், அவர்கள் 4 பெண்களைப் பார்த்ததாகவும் அதில் ஒரு பெண்ணை தான் தேர்ந்து எடுத்து விட்டதாகவும் கூறினார்.


அதன் பிறகு நீங்கள் அந்த விஷயத்தை மறந்து விட்டீர்கள். இரண்டு மாதங்கள் கழித்து, அந்தப் பையனின் தாயார், உங்களுக்கு தொலைபேசியில், அந்த சம்பந்தம் சில காரணங்களால் நிறுத்தப் பட்டது என்றும், உங்கள் பெண்ணை சம்பந்தம் பேச உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் கூறுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?


1. முடிந்தது முடிந்ததுதான் என்று அவர்களுடைய அழைப்பை மறுத்து விடுவீர்கள்?

2.அவர்களுடைய அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்குப் போவீர்களா?

PROPERTY DIVISION / சொத்து பிரித்தல்

PROPERTY DIVISION
You are 60 plus and retired from service. In your family, you have a wife, a son and a daughter. Apart from cash and jewelry, you have a house property in a city. You are writing your Will. 

After your wife, you wish to apportion the house to your children. Both the children are like your two eyes. How will you do it?


1. Give it to the son.OR

2. Give it to the daughter.OR
3. Give it to both of them.OR
4. You give it to the son on the condition that when it is sold the proceeds should be equally shared.

சொத்து பிரித்தல் 

உங்களுக்கு 60 க்கு மேல் வயதாகி ஓய்வு பெற்று விட்டீர்கள். உங்கள் குடும்பத்தில், மனைவி, மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். பணம், நகைகள் தவிர உங்களுக்கு நகரத்தில் ஒரு வீடு இருக்கிறது. 

நீங்கள் உயில் எழுத விரும்புகிறீர்கள். உங்கள் மனைவிக்குப் பிறகு, உங்கள் சொத்தை உங்கள் குழந்தைகளுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு இரு கண்கள் போல. ஒரு வீட்டை எப்படிப் பிரிப்பீர்கள்?


1. மகனுக்கு கொடுப்பீர்களா?

2. மகளுக்கு கொடுப்பீர்களா?
3. இருவருக்கும் கொடுப்பீர்களா?
4. மகனுக்கு கொடுத்து விட்டு, பின்பு அவர் அதை விற்றால், பணத்தை இருவரும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று எழுதுவீர்களா?

Saturday, May 5, 2018

WHAT WILL YOU DO? / நீங்கள் என்ன செய்வீர்கள்?

WHAT WILL YOU DO?
You are an executive in a public limited company. When you go on an official tour, you are eligible for Rs 500/ as daily allowance and first-class train fare. Once, you could not get a first-class on the train. But the second class was available. 

Since it was urgent, you traveled by second class. After return, you claimed only actual fare through the first-class fare was known to you. The accounts manager who passed your bill advised you to claim the first-class fare without creating a precedent. What will you do?


1. Accept the manager's advice and claim first-class fare.OR 

2. Stick to your point and claim actual fare.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

நீங்கள் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரி. நீங்கள் வேலை சம்பந்தமாக வெளியூர் சென்றால், உங்களுக்கு தினம் ரூபாய் 500, ரயிலில் முதல் வகுப்பு பயணமும் செய்யலாம். 

ஒரு தடவை உங்களுக்கு முதல் வகுப்பு கிடைக்கவில்லை. எனவே அவசரம் காரணமாக, இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தீர்கள். பின்னர் உங்களுக்கு முதல் வகுப்பு கட்டணம் தெரிந்தும், நேர்மையாக இரண்டாம் வகுப்பு கட்டணத்தை கேட்டு மனுப் போட்டு இருந்தீர்கள். 


உங்கள் பில்லை பாஸ் செய்யும் கணக்கியல் அதிகாரி, முதல் வகுப்பு கேட்டு மனு செய்யும் படி அறிவுரை கூறுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?


1. கணக்கியல் அதிகாரியின் அறிவுரையைக் கேட்டு நடப்பீர்களா?

2. உங்கள் எண்ணம் போல இரண்டாம் வகுப்பு கேட்டு மனு செய்வீர்களா?

Friday, May 4, 2018

தமிழ் நமது தாய் மொழி

1. சைனாவின் ஜனத்தொகை 138 கோடி. சைனீஸ் மொழி பேசுவோர் 120 கோடி. இந்தியாவின் ஜனத்தொகை 131 கோடி. ஹிந்தி மொழி பேசுவோர் 55 கோடி. 

2. உலகில் சைனீஸ்,ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்து ஆங்கிலம் அதிக மக்களால் பேசப்படுகிறது.அது எல்லா நாடுகளையும் இணைக்கும் மொழியாக இருக்கிறது


3. இந்தியாவில் ஹிந்தி 55 கோடி, ஆங்கிலம் 13 கோடி, பெங்காலி 9 கோடி, தெலுங்கு 8 கோடி, மராத்தி 8 கோடி, தமிழ் 6 கோடி மக்கள் பேசுகிறார்கள் 


4. ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் தனியாக ஒரு மொழி உண்டு. ஆனால் அந்த மாநிலத்தைச் சேராதவர்கள் பேசும் பொது மொழி ஹிந்தி. தமிழ் நாடு ஒன்றைத் தவிர  


5. வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் தமிழ் கற்று கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் பலருக்கு சரியாக தமிழில் பேச, எழுத தெரியாது. 


6. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். உண்மை. ஆனால் அந்தப் பாட்டையே எவ்வளவு நாளைக்குப் பாடிக் கொண்டிருப்பது? 


7. 1965இல் "ஹிந்தி எதிர்ப்பு" என்பதற்கு பதிலாக "தமிழ் ஆதரவு" என்று போராட்டம் செய்திருந்தால், பலர் இரண்டு மொழிகளையும் கற்றிருப்பார்கள்


8. தமிழ் ஒரு சிறந்த மொழிதான். ஆனால் கடந்த ஐம்பது வருடங்களாக அரசியல்வாதிகள் பாமர மக்களை வேறு மொழிகளை கற்க விடாமல் செய்து விட்டார்கள். 


9. சந்தேகம் இல்லை. தமிழ் மொழி  நம்முடைய தாய் மொழி தான். ஆனால் தமிழர்களைத் தவிர வேறு யாரும் தங்கள் மொழியைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதில்லை. 


10. தமிழ் தெரிந்தால், தமிழ் நாட்டில் மட்டும் வாழ முடியும். ஹிந்தி தெரிந்தால், இந்தியாவில் வாழலாம். ஆங்கிலம் தெரிந்தால், உலகில் வாழலாம்  


11. சில வகுப்பினர் மட்டும் எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப் படாமல், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளைக் கற்று முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


12. தமிழ் மக்களின் மேலும், தமிழ் நாட்டின் மேலும் உள்ள அக்கறையால் இதை எழுதினேன். பலருக்கு இது பிடிக்காது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு ஆசை. அதற்காக என்னை ஆள் வைத்து அடிக்க வேண்டாம். நான் வயதானாவன். என்னால் தாங்க முடியாது.

Thursday, May 3, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 286 TO 300

286. பிறருக்கு புரிந்தது போல் பேசுபவர் அஞ்ஞானி. புரிந்தும் புரியாதது போல் பேசுபவர் விஞ்ஞானி. ஒன்றுமே புரியாதது போல் பேசுபவர் தான் ஞாநி.

287. பாவங்களைச் செய்யும் பொழுது அனுபவிக்கும் சந்தோஷங்களை விட, அந்த பாவங்களைச் செய்வதால் ஒருவர் அடையும்  தண்டனைகளின் வேதனை அதிகமானது.

288. எப்பொழுதும் பொய் சொல்லக் கூடாது. உண்மையே சொல்ல வேண்டும். பிறருக்கு தீங்கு விளைவிக்கும் என்றால் உண்மையைப் பேசாமல் இருப்பது நல்லது.

289. தாய், சகோதரி, மனைவி மூவரும் ஒருவருக்கு முக்கியமானவர்கள். யார் உயர்வு, தாழ்வு என்று பார்க்கும் போது தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

290. மனைவியின் தெய்வ பக்தி கணவனின் நலன் காக்கும் பாதி கவசமாகும். கணவனும் தெய்வ பக்தியுடன் இருந்தால் இருவருக்கும் முழுக் கவசம் ஆகும்.

291. ஒருவருடன் நான் பேசும் போது, இதற்கு மேல் பேசினால் விவாதம் வரும் என்று எனக்கு தெரியும். அப்போது மேலே பேசாமல் உடனே நிறுத்தி விடுவேன்.

292. நாற்பது வயதிற்குள் ஒருவர் சொந்தமாக வீடு கட்டி இருக்க வேண்டும். அதுதான் திட்டமிட்ட வாழ்க்கைக்கு அடையாளம். அதன் பலன் பிறகு தெரியும்.

293. நடப்பது எல்லாம் ஒரு காரணத்தை முன்னிட்டு நடக்கின்றன. நடப்பது நமக்குத் தெரிகிறது. காரணம் தான் புரியவில்லை. அது இறைவனின் திட்டம் போலும்.

294. சாதாரணமாக, ஆண் குழந்தைகள் அம்மாவிடமும், பெண் குழந்தைகள் அப்பாவிடமும் பிரியமாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். உங்கள் அனுபவம் என்ன?

295. அன்பு, கடமை, பணம் இவை மூன்றையும் சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் கையாளுவது ஒரு கைவந்த கலை. அதில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்.

296. பிறர் வயிற்றுப் பசிக்கு உணவு அளிப்பது பெண்களின் சிறப்பு. அவர்கள் படும் கஷ்டத்தை உணரவேண்டும். குறை சொல்வது தவறு. பாராட்ட வேண்டும்.

297. தோல்வி வாழ்க்கையின் முடிவு அல்ல. நன்றாக யோசித்து ஒருவர் தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொண்டால் வெற்றியை நிச்சயம் அடைய முடியும்.

298. எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பவர்களிடம் வைரஸ் கிருமி நெருங்காது என்று நான்  நினைக்கிறேன். ஏனென்றால் சிரிப்பே ஒரு வைரஸ் தானே.

299. எழுதுவது என்பது ஒரு தனிக் கலை. அது கற்பனையின் சிறந்த வடிவம். எவ்வளவு படித்தாலும் எழுதுவது கடினம். எழுத்தாளர்கள் தனிப்பட்டவர்கள்.

300. எனக்கு ஒன்று பிடிக்காது என்று கூறினால், உங்களுக்கு அது பிடிக்கும் என்று கூறலாம். ஆனால் எனக்கு வாழத் தெரியவில்லை என்று கூறுவது தவறு.