Tuesday, June 30, 2020

சிரிப்பு வெடிகள் - 9

1. முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்...??? 

ஆசிரியர்: சூப்பரா படிக்கிறான் சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்.....!!! 
*****************

2. வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினைப் புடிக்கணும்.....!!! 

கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே...!!! 
*****************

3. இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்.

அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்
******************

4. நோயாளி: டாக்டர் ப்ரீயா மோஷன் போகமாட்டேங்குது.

டாக்டர்: மற்றவங்கள்ளாம் காசு கொடுத்தா போறாங்க.
*******************

5. எங்க, உங்களுக்கு சீட்டு ஆட பிடிக்குமா?

கொஞ்சம் கூட பிடிக்காது. பஸ்ல கூட ஆடாத சீட்டா பாத்துதான் உக்காருவேன்.
*********************

6. ஒருவர் : இந்த ஊருல சாப்பாடு எங்க விற்கும் (விக்கும்).

மற்றவர் : இந்த ஊருல மட்டும் இல்ல, எந்த ஊருல சாப்பிட்டாலும் சாப்பாடு தொண்டையில தான் விக்கும்?
*****************

7. ஒரு ரூபா நாணயம் ஆணா, பெண்ணா தெரியல்லையே?

பெண் தான்.

எப்படிச் சொல்றீங்க?

பூவா, தலையா தானே போடறோம்.
*************************

8. அரசர் மாறு வேடத்தில், நகர் வலம் போவதை நிறுத்தி விட்டாரா?

மக்கள் அரசரை பற்றி கேவலமாக பேசுவதை காது கொடுத்துக் கேட்க முடிய வில்லையாம்.
***************************

Sunday, June 28, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1441 TO 1455

1441. உன்னை பார்க்காத கண்ணும், வேத மந்திரங்களை கேட்காத காதும், உன்னை தொழாத கைகளும், உன்னை நமஸ்கரிக்காத உடம்பும் இருந்து என்ன பயன் இறைவா?

1442. தஞ்சம் என்று வந்துவிட்டால் வஞ்சம் இன்றி அருள் பொழியும். நெஞ்சில் உடன் நிம்மதியும் வந்திடுமே. அஞ்ச இனி தேவையில்லை நீர் இருக்கையிலே.

1443. தனது தாயைத் தேடி அலையும் சிறிய கன்று, ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

1444. மலர்களை விரும்புகிறவன் அதைக் கொய்து மாலையாக்கி மகிழ்வான், மலர்களை நேசிப்பவன் அதன் அழகை ரசித்து அம்மலர்ச் செடிக்கு நீர் ஊற்றுவான்.

1445. மரணம் மரணம் அது விதியே! சரணம் சரணம் எனது இறையே! வரணும் வரணும் எமது அகமே! தரணும் தரணும் உமது அருளே! தருணம் தருணம் இதுவே. ஸ்வாமியே.

1446. மருத்துவமனைக்கு ஒருமுறை சென்று பாருங்கள். ஆரோக்கியத்தைவிட மற்ற எதுவுமே பெரிதில்லை என்பதை மருத்துவமனை உங்களுக்குப் புரியவைக்கும்.

1447. சிறைச்சாலைக்கு சென்று பாருங்கள். சுதந்திரத்தைவிட விலை மதிப்பானது வேறு எதுவும் இல்லை என்பதை சிறைச்சாலை உங்களுக்குப் புரியவைக்கும்.

1448. ஒரு சுடுகாட்டுக்கு ஒருமுறை சென்று பாருங்கள். உயிரோடு வாழ்வதைவிடப் பெரியது எதுவுமே இல்லை என்பதை சுடுகாடு உங்களுக்குப் புரியவைக்கும்.

1449. நாம் செய்த தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும், அடையாவிட்டாலும் நம்முடைய மனதில் உள்ள அஹங்காரம் நிச்சயமாகக் குறையும்.

1450. எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவதைவிட நம் நெஞ்சில் ஈரம் வருகிறது.

1451. செயல்கள் வேறு, காரியங்கள் வேறு. நல்ல [சுப] காரணங்களுக்காக செய்வது செயல்கள். கெட்ட [அசுப] காரணங்களுக்காக செய்வது காரியங்கள்.

1452. எல்லோரும் வாழ்க்கையில் அழுது கொண்டே தான் இருக்கிறார்கள். சிரிப்பவர்கள் மிகச் சிலரே. அவர்கள் எதையும் பிறரிடம் எதிர்பார்க்காதவர்கள்.

1453. வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை. போகும்போது எதையும் கொண்டு போகப்போவதும் இல்லை. எனவே பிறரிடம் இரக்கமும் அன்பும் காட்டுங்கள்.

1454. பாலுக்கு சர்க்கரை அவசியமா, அல்லது கஞ்சிக்கு உப்பு அவசியமா என்பது பதில் சொல்லமுடியாத பெரிய கேள்விக்குறி. அவரவர் கஷ்டம் அவரவர்க்கு.

1455. உங்களுக்குத் தெரியுமா நமது நாட்டு பாதுகாப்பு பட்ஜெட்  2018இல் ரூ 404364 கோடி. 2019இல் ரூ431011 கோடி, 2020இல் ரூ448820 கோடி என்று?


Friday, June 26, 2020

ஆவணி அவிட்டம் [உபாகர்மா]

ஒவ்வொரு வருடம் ஆடி-ஆவணி மாதங்களில் பௌர்ணமி திதியில், திருவோணம் நட்சத்திரத்தில் வருவது ஆவணி அவிட்டம். அதற்கு உபாகர்மா என்று மற்றொரு பெயர் உண்டு. அன்று புதிய உபவீதம் [பூணூல்] அணிவார்கள். மறுநாள் காயத்ரி ஜபம். 1008 முறை காயத்ரி மந்திரம் ஜபம் செய்வார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் பொதுவாக கோயிலில் எல்லோரும் கூடி ஒரு ப்ரோகிதர் முன்னிலையில் மந்திரம் ஜபித்து பூணூல் மாற்றிகொள்வார்கள். நானும் கோயிலுக்கு செல்வது உண்டு. கடைசியில், ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு ப்ரோகிதருக்கு தட்சணை கொடுப்பார்கள்.

என்னுடைய காது சரியாகக் கேட்காமல் போனபிறகு, என்னால் மந்திரங்களை சரியாகக் கூற முடியாததால், நான் என் வீட்டிலேயே புத்தகத்தைப் பார்த்து மந்திரங்கள் சொல்லிப் பூணூல் மாற்றிகொள்வேன். பிறகு கோயில் உண்டியலில் என்னால் முடிந்த அளவு பணம் போட்டு விடுவேன்.

சாதாரணமாக, எந்த மத சம்பந்தப்பட்ட விஷயத்திலும், தானே மந்திரங்களைக் கூறி தானே செய்து கொள்வது சரியில்லை. ஒரு ப்ரோகிதர் [குரு] மூலமாகத்தான் செய்யவேண்டும். அதுதான் நியாயம். ஆனால் எனக்கு வேறு வழியில்லை.

எனது மகனும், என்னுடன் இருக்கும்வரை, என்னுடன் சேர்ந்து கோயிலுக்கு வந்து பூணூல் மாற்றிக் கொள்வது வழக்கம். பிறகு வேலை நிமித்தம் ஹைதராபாத் வந்த பிறகு அவர், அவரது நண்பருடன் கோயிலுக்கு செல்வது வழக்கம்.

இப்போது மூன்று வருடங்களாக நான் என் மகனுடன் சேர்ந்த பிறகு, ஒவ்வொரு வருடமும் நான் தனியாக வீட்டில் பூணூல் மாற்றிக்கொள்கிறேன்.. அவர் நண்பருடன் கோயிலுக்கு செல்வது வழக்கம். நான் அவரை என்னுடன் சேரும்படி வற்புறுத்துவது இல்லை. ஏனெனில், ஒரு குருவிடம் உபதேசம் பெறுவது நல்லது. மற்றும் அவருக்குக் காது நன்கு கேட்கிறது.

Saturday, June 20, 2020

என்னுடைய தாயார் / MY MOTHER

என்னுடைய தாயார் திருமதி. ராஜலக்ஷ்மி அம்மாள் 1925 வருடம் பிறந்தார்.
My mother Mrs. Rajalakshmi was born in the year 1925.

அவரது பெற்றோருக்கு அவர் ஒரே குழந்தை. அவர் 6வது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.
She was the only child to her parents. She studied only up to 6th standard.

அவருடைய 12 வயதில், 1938ல் அவருக்குத் திருமணம் நடந்தது.
She was married in 1938 at the age of 12.

அவருக்கு பத்து குழந்தைகள் பிறந்தன. அதில் ஒன்று தவறி விட்டது.
She had ten children of whom one died.

என் தந்தை ஒரு தமிழ்நாடு அரசு அலுவலர்.
My father was a Tamila Nadu Govt servant.

அவர் தனது ஏழு குழந்தைகளுக்குத் திருமணம் செய்து, சில முதலீடுகள் செய்துவிட்டு, 1985 ஆம் வருடம் அவரது 69 வது வயதில் காலமானார்.
He conducted the weddings of his seven children, made some investments, and died in 1985 at the age of 69.

என் தாயாருக்குப் பாதி பென்ஷன் வந்தது.
My mother got half pension.

ஒன்பது குழந்தைகளும் அவரை நன்கு கவனித்துக் கொண்டனர்.
All nine children took great care of her.

எல்லோரும் நல்ல நிலையில் இருந்ததால், அவருடைய பென்ஷன் பணத்தில் யாரும் அக்கறை காட்டியது கிடையாது. அதனால் அவருடைய பென்ஷன் பணத்தை விருப்பப்படி செலவு செய்தார்.
Since all the children are well settled, no one showed interest in her pension. Hence she spent the money as she wished.

ஒன்பது குழந்தைகளின் மூலம் அவருக்கு 18 பேரக் குழந்தைகள் பிறந்தன.
She got 18 grandchildren through her nine children.

தந்தை இறந்த பிறகு, கடைசி இரண்டு மகன்களுக்கும், 12 பேரக் குழந்தைகளுக்கும் திருமணம் நடத்தி வைத்தார்.
After the demise of my father, she conducted the marriages of her last two sons and that of 12 grandchildren.

தனது பென்ஷன் பணத்தில் இருந்து எல்லா மருமகள்களுக்கும் ஏதாவது நகைகள் பரிசாகக் கொடுப்பார்.
She used to gift jewels to her daughters-in-law.

எல்லாத் திருமணங்களுக்கும் நகைகள் பரிசாகக் கொடுப்பார்.
She used to gift jewels for all weddings.

ஒன்பது குழந்தைகளின் 25 வது திருமண நாளை விமரிசையாக நடத்தி பரிசுகள் கொடுப்பார்.
She celebrated the 25th wedding anniversary of all her children on a grand scale and also gave them gifts.

அவர் கடந்த வருடம் 2019ல் மே மாதம், 94 வயதில், இறைவனடி சேர்ந்தார்.
She died last year in May 2019 at the age of 94.

இறப்பதற்கு முன்பு தனது சொத்தை உயில் எழுதி எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்.
Before her death, she had apportioned her savings by a will.

எல்லா நகைகளையும் மூன்று பெண்களுக்கு சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார்.
She had given her jewels to the three daughters equally.

அவர் பட்டுப்புடவையைத் தவிர வேறு புடவை உடுததுவது இல்லை. நல்ல நிலையில் இருக்கும் புடவைகளை மகள்/மருமகளுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டார்.
She wore only silk sarees. She had given the sarees which are in good condition to her daughters and daughters-in-law.

35 வருட பென்ஷன் கணக்கில், செலவு போக, சேர்ந்துள்ள பணத்தை அவ்வப்போது முதலீடு செய்து, அதை ஆறு மகன்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார்.
The money accrued in her pension account was invested and it was given to the six sons equally.

ஈமக்கிரியைகள் செலவுகள் போக, ஒவ்வொருவருக்கும் ரூபாய் 30000 கிடைத்தது.
After adjusting funeral expenses, every one got about Rs. 30,000 as his share.

வாழ்ந்தால் அப்படி வாழவேண்டும்.
This is how one should live the life.

Wednesday, June 17, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1426 TO 1440

1426. பகவான் கிருஷ்ணன்: த்வேஷமும், க்ரூரமும் கொண்ட அதமர்களைத் திரும்பத் திரும்ப அஸுரப் பிறப்பெடுக்குமாறு நானே தள்ளுகிறேன் (கீதை16.19)

1427. ஆயிரத்தில் ஒருவன்தான் ஸித்திக்கு முயற்சியே பண்ணுவான். அதிலும் அபூர்வமாக எவனோதான் முயற்சியில் ஜயித்து என்னை வந்தடைகிறான்’(கீதை7.3)

1428. சுவாமி விவேகானந்தர்: என்ன மாற்றங்கள் கொண்டு வந்தாலும், மனிதனின் குணம் மாறும் வரையில் அவனது துன்பம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

1429. நான் என்னும் சொல்லைக் கையாளுவதால் ஒருவனுக்கு அஹங்காரம் வந்துவிடாது. நான் என்னும் சொல்லைத் தவிர்த்துவிடுவதால் அஹங்காரம் போய்விடாது.

1430. மலை சார்ந்த இடம் குறிஞ்சி. காடு சார்ந்த இடம் முல்லை. வயல் சார்ந்த இடம் மருதம்.கடல் சார்ந்த இடம் நெய்தல்.வெறும் மணல் பிரதேசம் பாலை.

1431. ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கைதான் அவனுடைய உண்மையான தகுதியைக் காட்டும். அவன் எழுதிய, பேசிய ஆடம்பரமான வார்த்தைகளில் மயங்குதல் கூடாது.

1432. மௌனமும், புன்னகையும் நமக்கு வெற்றி மந்திரங்கள்! தற்காப்பு ஆயுதங்கள். பிரச்சினையைத் தீர்க்க மௌனம்! பிரச்சினையைத் தவிர்க்க புன்னகை.

1433. அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, க்ரஹணம், மாளையம், ஆகிய முக்கியமான பித்ரு நாட்களில் கணவனும் மனைவியும் விலகி இருப்பது மிகவும் நல்லது.

1434. "நான்" என்கிற மகுடத்தைக் கழற்றிக் கீழே வைத்து விட்டு, மனித நேயத்தை நாம் கடைப் பிடித்தால் வெற்றி நம் காலடியில். இது சர்வ நிச்சயம்.

1435. கோபம் மிகவும் கொடியது. கோபத்துக்கான காரணங்களை விட, கோபத்தால் உண்டாகும் பின் விளைவுகளே அதிக வேதனையானவை. ஆகவே சினம் தவிர்ப்போம்.!

1436. வெற்றி அடைய, நாம் நமது சிந்தனைகளுக்கு எஜமானராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், நமது உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருக்கக் கூடாது.

1437. எல்லோருக்கும் மனசாட்சி, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், நோக்கு, எண்ணங்கள், கற்பனை மற்றும் நம்பிக்கை இருக்கிறது. அறிவுரை தேவையா?

1438. பேசுவதைக் குறையுங்கள். அப்படியே பேசினாலும், மெதுவாகப் பேசுங்கள், அன்புடன் பேசுங்கள், உணர்ந்து பேசுங்கள், தேவையானதைப் பேசுங்கள்.

1439. நடை, உடை, பாவனை, மொழி, கலாசாரம், உணவு ஆகிய எல்லாவற்றிலும் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களும் வேறுபட்டால் கட்டிக் காப்பது எவ்வாறு?

1440. சிறு சிறு தவறுகளுக்காக மனிதர்களைத் தவிர்த்தோமானால், இறுதியில் நமக்குத் தனிமைதான் மிஞ்சும். தவறு செய்யாதவர் யாரும் உலகில் கிடையாது.


Sunday, June 14, 2020

தானம் / தர்மம்

தானத்துக்கும், தர்மத்துக்கும் வித்தியாசம் தெரியுமா?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். "சூரியனே, என்ன தடுமாற்றம், உன் மனதில்" கேட்டது ஈசன்.

பரம்பொருளே, பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது. சூரியனே, நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்த பின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

ஆனால்,  தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர  தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா?

கேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன். புரிந்தது இறைவா! தானமும், தர்மமும், பாவமும், புண்ணியமும் எல்லாமும் நீயே, என்பதும் புரிந்தது என்றார்.

தானம்:

தானம் என்பது ஒருவர் கேட்டபின் அல்லது அவருக்கு தேவையானது இது என மற்றவர் சொல் கேட்டு அவரின் தேவையை பூர்த்தி செய்வது தான் தானம். பசியால் வாடும் ஒருவர் தன் பசியை கூறி கேட்டால் அது தானம், இது புண்ணிய கணக்கில் சேராது. உயர்ந்தவர்களுக்குக் கொடுப்பது தானம். தானம் என்பது பலனை எதிர்பார்த்துச் செய்வது.

வேதம் படித்தவருக்கு பூமி, வஸ்திரம் அல்லது பசு இவற்றைக் கொடுக்கும்போது சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். இதை நான் கொடுக்கிறேன், இதனால் எனக்கு இன்ன பலன் கிடைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். அது தானம் என்பது.

எந்த சௌக்கியங்களை நாம் அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த சௌக்கியங்களைக் கொடுக்கக் கூடிய பொருட்களைக் கொடுப்பது தானம்.

பொதுவாக உதவி புரியும் எண்ணத்துடன் செய்யும் எந்த செயலுக்கும் இரவு, பகல் கிடையாது. தானத்தை பகலில் தான் செய்யவேண்டும். ஏனென்றால், அதற்கு சூரியதேவன்சாட்சியாக இருப்பார் என்பது ஐதீகம்.

சந்திர கிரகணம், திருமணச் சடங்கு, மாதப்பிறப்பு, வெளியூர் கிளம்பும் நேரம், ஆபத்து காலம்,குழந்தை பிறப்பு, ராமாயணம், மகாபாரத சொற்பொழிவு போன்றவற்றின் போது இரவு நேரத்திலும் தானம் செய்யலாம்.

தர்மம்

ஆனால் தர்மம் என்பது யாரும் கேட்காமல், அவருக்கே தெரியாமல் அவருக்கு செய்யக் கூடிய நன்மையாகும். அதுவே அவன் பசி அறிந்து அவன் கேட்காமலே அவனுக்கு உணவு அல்லது உதவி செய்வது தர்மமாகும். இது தான் புண்ணிய கணக்கில் சேரும். எளியவர்களுக்கு கொடுப்பது தர்மம். தர்மம் என்பது அந்தப் பலனை மனதில் நினைக்காமல் செய்வது.

தர்மம் என்பது, ஒருவரை சாலையில் பார்க்கிறோம். அம்மா, தாயே பசிக்குது, பிச்சை போடுங்கள் என்று கேட்கிறார். அவரிடம் எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கிறோம். அது தர்மம்.

ஸ்வதர்மம் என்றால் சுபாவம் என்று பொருள். உதவி செய்யக்கூடிய மனிதனின் ஸ்வபாவம் "தானேன் போகி பவதி" என்பது.  தானம் பலனை எதிர்பார்த்துச் செய்வது. தர்மம் ஸ்வபாவமாக பகவத் ப்ரீதியாகச் செய்வது.

Thursday, June 11, 2020

RANDOM THOUGHTS 826 TO 840

826. Every beginning has to end. Every sunrise ends in the sunset. Every river ends in the ocean. Every birth ends in death. No stopping.

827. I do not hesitate to tell my children the mistakes I committed in life. I believe it may help them not to commit similar mistakes.

828. A river cuts the rock not because of its power, but because of its consistency. Never lose hope. Keep walking towards your vision.

829. A miracle can happen in any form - as a doctor, as a lawyer, as a teacher, as police, as a friend, as a stranger and many others.

830. Losing a mother at a young age is the greatest misfortune. Whilst some people long for mother's love, some do not care for them.

831. I do not get influenced by any Whatsapp messages. I just ignore them. Because I don't believe them nor read them nor spread them.

832. I an not a Gnani. I am a pebble on the shore, a bubble on the whirlpool. I scribble my experience. Just ignore, if you dislike it.

833. Indians lack Patriotism. Unity in diversity is a myth. The feeling of INDIAN is missing. Regionalism and separatism are predominant.

834. In the entire world, India is the only country where a guy feels shy, hesitant or fear to say "I love you" to the girl he likes.

835. The problem with the present generation and their children are "going to bed late in the night and getting up late in the morning"

836. Among pressure cookers, mixie, wet grinder, TV, fridge, washing machine, AC, Owen, name ONE item which is the most indispensable.

837. In the movies, the wedding takes place after the problems get solved. But in real life, the problems start only after the wedding.

838. A relationship is like an elastic. Too much stretching will result in breakage. Too much interference will break the relationship.

839. Earlier the production cost of a movie was less and also the ticket. Now the cost is high and also the ticket. Why should we bear?

840. Put an ant in the water. It won't get drowned. It will swim to safety. When an ant can do it why can't a human solve his problems?

Monday, June 8, 2020

பக்திக்கு கட்டுப்படுவான் கண்ணன்

ஒரு பெரியவர் தினமும் வீதி வழியாக கிருஷ்ண பஜகோவிந்தம் 11வது பாவத்தை பாடியபடியே வீடு வீடாகச் சென்று அன்ன யாசகம் பெற்று உண்பவர்.

ஒரு நாள் 10 வயது சிறுமி ஒருத்தி “சுவாமி, நான் தினமும் உங்களது கிருஷ்ண பஜனைப் பாடல்களை ரசித்துக் கேட்பேன் எனக்கு தாங்கள் பாடிய முழு பாடலும் மனப்பாடம் ஆயிற்று ,,அதனால் உங்களை குருவாக நினைத்து என் இல்லத்திற்கு அழைக்கிறேன் வாருங்கள் சுவாமி” என்றாள் பணிவன்புடன்.

அந்தச் சிறுமியின் இல்லத்திற்கு சென்றார் பெரியவர். சிறுமியின் இல்லத்தில் நுழைந்ததும் அவரது பாதங்களுக்கு நீர் வார்த்து கழுவி பூக்களால் பூஜை செய்து பின் தான் சாப்பிட வைத்திருந்த பழமும்,,பாலும் உண்ணக் கொடுத்தாள் அந்தச் சிறுமி ,

பின் அவளது நெசவு இயந்திரத்தின் அருகே சிக்கலான நூல்கள் அறுந்து கிடப்பதை பார்த்து ”அம்மா, எதற்கு இந்தச் சிக்கலான நூல்களை எல்லாம் குப்பை போல் வைத்து உள்ளீர்கள்” என்று கேட்க,

சிறுமி –“சாமி அது எல்லாம் கண்ணன் தன பிஞ்சுக் கைகளால் அறுத்து அறுத்து எறிந்த நூல்கள்” .

பெரியவர் திகைப்புடன் “என்னம்மா சொல்கிறாய் கண்ணன் அறுத்த நூல்களா”?

சிறுமி —“ஆமாம் சுவாமி நான் தினமும் நீங்கள் பாடிய கிருஷ்ண கீர்த்தனையை பாடி கொண்டே ராட்டினம் சுற்றுவேன் அப்பொழுது கண்ணன் சிறு குழந்தையாக இங்கு வருவான் நான் சொல்லச் சொல்ல கேட்காமல் என் பாட்டை ரசித்த படியே இந்த நூலை அறுத்து அறுத்து எறிவான். பின் மறைந்து விடுவான்” 

பெரியவர் அந்தச் சிறுமியைப் பார்த்து “அம்மா இப்பொழுது நீ பாடிக் கொண்டே ராட்டினம் சுற்று, கண்ணன் வருகிறானா என்று பார்கிறேன்” என்றார்.

சிறுமியும் பாடிக் கொண்டே ராட்டினம் சுற்றினாள்,,,,சிறிது நொடியில் ,,,,சந்தோஷமாக கத்தினாள் “சுவாமி, கண்ணன் வந்து விட்டான்” என்று.

பெரியவர் —-“எங்கே என் கண்ணுக்கு யாரும் தெரியவில்லையே” என்றார்.

சிறுமி உடனே கண்ணனிடம் “கண்ணா என் குரு நாதருக்கு ஏன் நீ தெரியல” என்றாள்.

கண்ணன் -“உன் குருநாதர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே எனது கீர்த்தனைகளைப் பாடுகிறார் ,,,,அதில் ,,பக்தி, பாவம், உள்ளன்பு எதுவுமே கிடையாது ,,,,அதனால் அவர் கண்ணுக்கு தெரியவே மாட்டேன் “ என்றான் கண்ணன்.

கண்ணன் சொன்னதை அப்படியே சிறுமி தன் குருநாதரிடம் சொன்னாள். அதற்கு பெரியவர் “நான் உன் குரு தானே, எப்படியாவது எனக்குக் கண்ணனைக் காணச் செய்யேன்” என்றார் கெஞ்சலாக சிறுமியிடம்.

குரு சொன்னதை கேட்ட மாய கண்ணன் ,,,,,சிறுமியிடம் “தோழியே நீ பாடு, உன் பாடலில் நான் ஆடிக்கொண்டே நூல்களை அறுத்து எறிவேன். நூல்கள் அறுவது மட்டும் அவர் கண்களுக்கு தெரியும் படி செய்கிறேன். அதை பார்த்து அவரை மகிழ சொல். இதுவும் நீ அன்பாகக் கேட்டதால் தான் செய்கிறேன். ம்ம்.. நீ பாடு” என்றான் கண்ணன்.

சிறுமியும் கண்ணன் சொன்னதை குருவிடம் சொன்னாள். அவரும் “சரி நீ பாடம்மா, இந்த பாவி அதையாவது பார்த்து, புண்ணியம் தேடிக் கொள்கிறேன்” என்றார்.

சிறுமி பாட ஆரம்பித்தவுடன், நூல்கள் தானாக அறுந்து விழுவதை பார்த்தார் பெரியவர். அப்படியே பரவசமாகி தான் செய்த தவறுக்குக் கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு, சிறுமியை வாழ்த்தி ,வீதியில் இறங்கி பாடி கொண்டே சென்றார்

இப்பொழுது அவரது கைகள் யாசகம் கேட்கவில்லை

பக்திக்கு மட்டுமே கட்டுப்படுவான் கண்ணன்.
ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்.
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா.

ஹரே கிருஷ்ணா..ஹரே ஸ்ரீ கிருஷ்ணா.

Friday, June 5, 2020

திருநெல்வேலி மோர்க் குழம்பு

திருநெல்வேலி பக்கம் மோர்க் குழம்பு வேறு விதமாக சமைப்பார்கள். அதன் சுவை பிரமாதமாக இருக்கும். நீங்கள் அதை ருசித்து இருக்கிறீர்களா? அதன் செய்முறையை விளக்குகிறேன்.

தேவையான பொருட்கள்:

தனியா- 3 தேக்கரண்டி.

கடலைப்பபருப்பு- 2 தேக்கரண்டி.

ஜீரகம்- 1 தேக்கரண்டி.

செய்முறை:

தனியா, கடலைப்பபருப்பு, ஜீரகம், இஞ்சி இவற்றைக் கால் மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், வத்தல் மிளகாய் 2, பச்சை மிளகாய் 2, கொ. மல்லி, கறிவேப்பிலை கலந்து, மிக்ஸியில் நீர் விட்டு நைசாக அறைக்கவும்.

பிறகு, சுமாராகப் புளித்த தயிரை நன்கு கடைந்து, அதில் அரைத்த விழுதை கலக்கவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். மேலாக நுரைத்து வரும்போது இறக்கி விடவும். பிறகு வாணலியில் வெந்தயத்தை எண்ணை விடாமல் வறுத்து குழம்பில் கலக்கவும். பிறகு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணையில் கடுகு தாளிக்கவும்.

கத்தரி, வெண்டை, பூசணி முதலிய காய்களில் ஏதாவது ஒன்றை தனியாக வேகவைத்து குழம்புடன் சேர்க்கவும்.

சுவையான மோர்குழம்பு இப்போது ரெடி. சாதத்துடன் கலந்து சாப்பிடும் போது என்னை நினைத்துக் கொள்ளவும்.



Tuesday, June 2, 2020

லுங்கியும் நானும் / THE LUNGI AND ME

லுங்கியும் நானும்.

இந்த வாஷிங் மெஷின் வந்தாலும் வந்தது, என் பாடு மிகவும் திண்டாட்டமாகப் போய்விட்டது. நான் எப்போதும் வெள்ளை உடை தான் அணிவது வழக்கம். மற்ற எல்லோரும் கலர் உடை தான்.

வெள்ளையும் கலரையும் சேர்ந்து மெஷினில் போட முடியாது. போட்டால் வெள்ளை, நிறம் குறைந்து விடும்.. வெள்ளயை தனியாகப் போட வேண்டிய அளவு துணி என்னிடம் கிடையாது. மொத்தம் மூன்று உருப்படி தான். தினம் துவைக்க முடியாது.

அதனால் இதுவரை நானே என் துணிகளைத் துவைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது வயதாகி விட்டதால் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமாக இருந்தது. நைட் பாண்ட் அணிவதில் அவ்வளவு விருப்பம் இல்லை. சரி, காவி நிறத்தில் வேஷ்டி வாங்கலாம் என்றால், மனைவிக்குப் பிடிக்கவில்லை.

சரி, லுங்கி கட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. வேறு வழி? மற்றவர்களுடன் ஒத்துப் போகவேண்டுமே. கடைக்குச் சென்று சங்கு மார்க் லுங்கிகள் நாலு, ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்தேன். ஓரங்கள் தைப்பதற்கு ரூபாய் நூறு கூலி.

இருந்தாலும், லுங்கி கட்டிகொள்வதில் மனதில் ஒரு சிறிய தயக்கம். தைத்த பிறகு ஒரு லுங்கியைக் கட்டிக்கொண்டு கடைவீதி வரை நடந்து பார்த்தேன். நடக்க முடியாமல் அடிக்கடி தடுத்தது. பழகப் பழக சரியாகி விடும் என்று நினைத்து சில கடைகளுக்குச் சென்றேன்.

என்னைப் பார்த்ததும் கை கூப்பி வணக்கம் சொல்லுவார்கள். இப்போது கவனிக்கவே இல்லை.. ஏன் இந்த மாற்றம். அடையாளம் தெரியவில்லையா? மனதில் ஒரு நெருடல். வேகமாக வீடு திரும்பினேன். என்ன இருந்தாலும் வெள்ளை வேட்டி சட்டைக்கு உள்ள மதிப்பே தனி. அதை நான் இழக்க விரும்பவில்லை. 

கலர் துணி அணிவதை விட நிறம் குறைந்த வெள்ளைத் துணி அணிவது எவ்வளவோ மேல் என்ற தீர்மானத்துடன், நாலு லுங்கியையும் எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்து விட்டு, என் வெள்ளை வேட்டியை வாஷிங் மெஷினில் துவைத்துக் கட்ட ஆரம்பித்தேன்.

THE LUNGI  AND ME


When the washing machine was first introduced there were no takers. No one believed in it. When it became a household necessity, people forgot how to handwash their clothes. I was the worst affected. I always wore white clothes while others in my family wore only coloured clothes.

The coloured dress and white clothes could not be put together in a washing machine. For, the white dress would absorb the colour dye and slowly lose its whiteness. So white clothes should be washed separately. I had only three sets and the load was not sufficient for the machine as I wished to wash daily.

So I had been handwashing my clothes daily. Since I had become old, I was unable to wash them daily. I was not interested in wearing night pants etc. If I wish to go in for safron cloloured dhoti, my wife did not like it. I was clueless as to how to solve this problem. I was deeply thinking about it keeping my fingers crossed.

Then I decided to go in for the lungi. There was no other go. I had to cooperate with others. Is it not? I went to a popular shop and bought four lungies costing Rs. 1000/ in conch brand. To stitch the sides it cost another Rs.100/.

After doing all these things, I was still reluctant to wear the cloured dress. I put on one lungi and went to the bazaar to get the feel of it. I could not walk properly as it got caught between the legs a few times. I thought it would be okay once I got used to it.

I went to a few shops with whom I had acquainted with. Normally, everyone used to greet me keeping their palms together as a matter of respect. Now, they did not even recognize me. Why this sudden change in their attitude? Was it due to my new outfit? I returned home dejected.

Whatever it is, there is nothing equal to a white dress. Then I decided it was far better to wear a white dress a shade less instead of wearing a lungi. Then I gave all the four lungies to our maid as a gift. Now I am washing my white dress in the washing machine along with coloured dress.