Sunday, November 28, 2021

நவராத்திரி வழிபாடு

நவராத்திரிவழிபாடு தோன்றியதுஎப்படி? 

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். 

தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர்.

ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. 

அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

9 நாட்கள் நிறைவடைந்து 10-வது நாளான விஜயதசமி அன்று அம்பிகையானவள், ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது.

ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம். சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.

இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.

அம்பிகையை - சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். நவராத்திரி நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் அதிகாலையிலேயே நீராடி கூட்டுபிரார்த்தனை செய்யுங்கள்.

பூஜையறையைச் சுத்தம் செய்து, கொலு மேடை, பூஜையறையில் “லட்சுமித்தாயே! உன்னருளால் உலக உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து ஐந்துமுகம் விளக்கேற்றி, சாம்பிராணி, பத்தி ஏற்றி வையுங்கள். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். 

குழந்தைகளுக்கு தெய்வீக விஷயங்களைக் கற்றுக் கொடுங்கள். அபிராமி அந்தாதியில் ஒரு பாடலை மனப்பாடம் செய்யச் சொல்லுங்கள்.

கொலு பார்க்க வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மலர்ச்சரம் கொடுத்து வழியனுப்புங்கள். . இதனால் நம் இல்லம் செழிக்கும். 

பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து, மும்முறை வலம் வந்து வழிபட்டால் மூன்று தேவியை வழிபட்ட பலன்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு, முதியோர்களுக்கு உதவி செய்யுங்கள். இதனால் அம்மன் மனம் குளிர்ந்து வேண்ம் வரம் தருவாள்.

அம்மன் கோயில்களில் விளக்கேற்றுங்கள். மாலையில் விளக்குபூஜை நடத்துங்கள். கன்னிப் பெண்கள் துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம்.ஒரு நாள் கும்பிட்டா...ஒன்பது நாள் கும்பிட்ட பலன்: நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பூஜை நடத்த இயலாவிட்டால் அஷ்டமி திதிவரும் தினத்தன்று மட்டுமாவது அவசியம் பூஜிக்க வேண்டும்.

மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள 18 நாமாவளிகள்

சாரதா நவராத்திரி புண்ணியகாலத்தில் ஜகன்மாதாவான அன்னை பராசக்தியை துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாக வழிபடுவது நமது வழக்கத்தில் இருந்து வருகிறது. நவராத்திரி 9 நாட்களிலும் அன்னையை லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா அஷ்டோத்ரம், லக்ஷ்மி அஷ்டோத்ரம், சரஸ்வதி அஷ்டோத்ரம் போன்ற அம்பிகைக்கு உகந்த ஸ்தோத்திரங்களால் அர்ச்சனை செய்வதும், பாராயணம் செய்வதும் சிரேஷ்டமாகும். 

நேரம் இல்லாதவர்கள் கீழ்காணும் நாமங்களை சொல்லி, அன்னைக்கு உகந்த செம்பருத்தி,செவ்வரளி, செந்தாமரை, மல்லி போன்ற மலர்களை அம்பிகைக்கு சாற்றி, தங்களால் இயன்ற பழம், பால், பானகம், உணவு வகைகள், சுண்டல் இதில் ஏதாவது ஒன்றை அன்னைக்கு நிவேதனம் செய்து, தூபம் தீபம் காட்டி எளிமையாக பூஜையை செய்யலாம்., நாம் செய்யும் பூஜையானது எளிமையாக இருத்தாலும் ஆத்மார்த்தமாக, மனதை அலையவிடாமல், மனம் ஒன்றி தூய அன்போடு அன்னையை வழிபடுவதே முக்கியமானதாகும்.

துர்காதேவி

ஓம் துர்காயை நம:

ஓம் மகா காள்யை நம:

ஓம் மங்களாயை நம:

ஓம் அம்பிகாயை நம:

ஓம் ஈஸ்வர்யை நம:

ஓம் சிவாயை நம:

ஓம் க்ஷமாயை நம:

ஓம் கௌமார்யை நம:

ஓம் உமாயை நம:

ஓம் மகாகௌர்யை நம:

ஓம் வைஷ்ணவ்யை நம:

ஓம் தயாயை நம:

ஓம் ஸ்கந்த மாத்ரே நம:

ஓம் ஜகன் மாத்ரே நம:

ஓம் மகிஷ மர்தின்யை நம:

ஓம் சிம்ஹ வாஹின்யை நம:

ஓம் மாகேஸ்வர்யை நம:

ஓம் திரிபுவனேஸ்வர்யை நம:

லக்ஷ்மிதேவி

ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

ஓம் வரலக்ஷ்ம்யை நம:

ஓம் இந்த்ராயை நம:

ஓம் சந்த்ரவதனாயை நம:

ஓம் சுந்தர்யை நம:

ஓம் சுபாயை நம:

ஓம் ரமாயை நம:

ஓம் ப்ரபாயை நம:

ஓம் பத்மாயை நம:

ஓம் பத்மப்ரியாயை நம:

ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம:

ஓம் சர்வ மங்களாயை நம:

ஓம் பீதாம்பரதாரிண்யை நம:

ஓம் அம்ருதாயை நம:

ஓம் ஹரிண்யை நம:

ஓம் ஹேமமாலின்யை நம:

ஓம் சுபப்ரதாயை நம:

ஓம் நாராயணப் பிரியாயை நம:

சரஸ்வதிதேவி

ஓம் சரஸ்வத்யை நம:

ஓம் சாவித்ர்யை நம:

ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம:

ஓம் ஸ்வேதா நநாயை நம:

ஓம் ஸுரவந்திதாயை நம:

ஓம் வரப்ரதாயை நம:

ஓம் வாக்தேவ்யை நம:

ஓம் விமலாயை நம:

ஓம் வித்யாயை நம:

ஓம் ஹம்ஸ வாகனாயை நம:

ஓம் மகா பலாயை நம:

ஓம் புஸ்தகப்ருதே நம:

ஓம் பாஷா ரூபிண்யை நம:

ஓம் அக்ஷர ரூபிண்யை நம:

ஓம் கலாதராயை நம:

ஓம் சித்ரகந்தாயை நம:

ஓம் பாரத்யை நம:

ஓம் ஞானமுத்ராயை நம:

நவராத்திரி நாட்களில் நம் வீட்டிற்கு வருகை தரும் அனைத்து பெண்மணிகளையும், பெண் குழந்தைகளையும் அம்பிகையாக பாவித்து அவர்களுக்கு தங்களால் இயன்ற தாம்பூலம் தட்சிணை தருவது அன்னையின் அருளை பரிபூரணமாகப் பெற்று தரும்.

அனைவரும் நவராத்திரி 9 நாட்களிலும் அன்னையை போற்றி துதித்து, பூஜித்து அவளது பேரருளை பெறுவோமாக.

சர்வம் ஜகதம்பார்ப்பணம் 🙏🙏🙏🙏🙏 

Friday, November 26, 2021

HUMAN ORGANS

Human organs:

The 11 organ systems include the integumentary system, skeletal system, muscular system, lymphatic system, respiratory system, digestive system, nervous system, endocrine system, cardiovascular system, urinary system, and reproductive systems.

The main systems of the human body are:

1. Circulatory system / Cardiovascular system:

Circulates blood around the body via the heart, arteries, and veins, delivering oxygen and nutrients to organs and cells and carrying their waste products away.

Keeps the body's temperature in a safe range.

2. Digestive system and Excretory system:

System to absorb nutrients and remove waste via the gastrointestinal tract, including the mouth, esophagus, stomach, and intestines.

Eliminates waste from the body.

3. Endocrine system:

Influences the function of the body using hormones.

4. Integumentary system / Exocrine system:

Skin, hair, nails, sweat, and other exocrine glands

5. Immune system and lymphatic system:

Defends the body against pathogens that may harm the body.

The system comprises a network of lymphatic vessels that carry a clear fluid called lymph.

6. Muscular system:

Enables the body to move using muscles.

7. Nervous system:

Collects and processes information from the senses via nerves and the brain and tells the muscles to contract to cause physical actions.

8. Renal system and Urinary system

The system where the kidneys filter blood to produce urine and get rid of waste.

9. Reproductive system:

The reproductive organs are required for the production of offspring.

10. Respiratory system:

Brings air into and out of the lungs to absorb oxygen and remove carbon dioxide.

11. Skeletal System:

Bones maintain the structure of the body and its organs.

 

Wednesday, November 24, 2021

KITCHEN TIPS

1. Before making idly, if you add a cup of sesame [ginjelly] oil with the batter, the idly will be soft and will not get spoiled for two days.

2. While frying red chillies, to avoid the penchant odour, you may add a little salt.

3. When the mixie blade got stuck up, pour hot water till the blade is submerged. After some time pour the water out and remove the blade.

4. If the curry leaves have become dry, put them in the water of the idly pot that will make the idly smell nice.

5. Before kneading the flour to make a dough, apply some salt to your palm, to avoid the dough getting glued to your hands.

6. To keep the asafoetida soft during summer put a green chilli with the stalk inside the box.

7. To cook the tubers completely, soak them in saltwater for 10 minutes.

8. While making Dosa, if little sugar is sprinkled on the batter, the dosa will be crispy.

9. While keeping biscuits in a box, if you keep tissue paper also, the biscuits will remain crispy.

10. Just warm the coconut oil and take an oil bath twice a week. It keeps your skin healthy and the shopkeeper is happy.

11. When you cook the greens [keerai], add some oil to keep the colour and enhance the taste.

12. If you put fried fenugreek in the sambar, it will smell good and also be tasty. 

Monday, November 22, 2021

OBSERVING SILENCE

The ancient texts tell us that by observing silence, quarrels do not occur. In everyday life, we observe squabbles among people are fanned by repartees and rebuttals. Hence some times, the squabbles continue endlessly to the detriment of both parties. 

These quarrels or petty squabbles create unpleasantness, with their uncontrollable outbursts, blurting, sometimes or many times hurting the ego of other person and provoking him to retaliate. 

To put it simply, there is that unfortunate occasion which everyone should strive to avoid at all costs, that is, retaliation. You are separated; you are fragmented from the alliance. It is the most unfortunate, undesirable, and unpleasant moment indeed. 

There is a display of uncontrolled emotions, but its impact lies deep, raw, and irrational. It is a moment of weakness indeed but its impact lies deep and lasting by any expression, with a raised tone betraying our emotion, our dislikes, and our passion. 

Let our talk be contained by silence and let them not be stretched causing a conflagration or a spreading contagion. And how to stop these squabbles? One answer is " Be silent " " Be Cool " (Mouna). 

Thursday, November 18, 2021

FOR YOUR KIND INFORMATION

1. There are so many health benefits of music. It's heart-healthy. Research has shown that blood flows more easily when music is played, elevates mood, reduces stress, relieves symptoms of depression, stimulates memories, eases pain, helps people eat less, helps people in works endurance, makes the baby sleep, and so on.

2. We should realise that death is another birth. There is no end to life until the soul merges with the Lord. There should be no mourning on death. The soul that has left the body might have reached its destination according to its Karma. Whoever may be the person, I do not mourn or feel sad about the death. If I know the person, I wonder what would have happened to his soul. If I do not know the person, I just pray ”Om, Shanthi” for the soul to rest in peace. When death happens, my heart goes out only for people who are deprived of him and who are affected by him.

3. Coconut Oil

In recent years, coconut oil has been marketed as a jack-of-all-trades kind of oil. It has been suggested that it is good for the skin, hair, cooking, and oral and brain health. The oil is extracted from the kernel of the coconut and is made up of fatty acids.

The research surrounding coconut oil for dry skin typically centers around skin conditions such as atopic dermatitis, and it is an effective form of treatment for skin conditions that cause dry skin. It can help improve moisture retention and skin barrier function.

4. The digestive track commences at the mouth and ends at the anus. Throughout the route, the food is absorbed in various points. Food, vegetables, and fruits contain various nutrients viz., vitamins, and minerals that are necessary for the body. Every item does not contain all the nutrients but it contains only one item. 

Hence we have to have a balanced diet to get all the nutrients required by our body. Eating unhealthy foods at uneven times affects the digestive system. When a particular part of the digestive system is affected due to nutrition deficiency, ailments develop. We have to go to the doctor to find out the cause and take medication. Self-medication is dangerous.

5. The Tamil movie ”Haridas” was released one year before I was born in 1945. I saw that movie in 1952, in Periakulam Jaya theatre when I was seven years old along with my brother who is three years younger than me. There were four classes in the theatre, viz., sofas, chairs, benches, and floors. The chair class ticket was 4 annas then.

Our mother gave us 8 annas to see the movie. Unfortunately, my brother, who was keeping the change, lost it on the way. Then we had to return home disappointed. Our mother gave us another 8 annas and we happily went to the movie.

The movie was a very successful one that ran continuously for two years. MKT, the actor cum singer, the superstar of those days, was the hero. The music was scored by the great G. Ramanathan, the guru of MSV. I love most of the songs in this movie.

6. Fifty years back, in the late sixties, when I was in my twenties, as a bachelor, I used to sleep on the balcony of our house at Srirangam. During the Tamil month of Marghazhi, early in the morning, the temple used to broadcast Thiruppavai songs, sung by the great MLV, in the public address system that can be heard throughout the town. The melodious music used to reach me in waves through the air. MARGAZHI THINGAL was one of the songs which I loved the most. 

Friday, November 12, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1756 TO 1770

1756. நமது மனது, அகங்காரம், பாசம், ஆசைகள், கோபம், வெறுப்பு, கவர்ச்சி போன்ற எண்ணங்களில்  மூழ்கும் நேரம் நமக்கு கெட்ட நேரம்.

1757. இழந்ததைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படுங்கள். மேலும் முயற்சி செய்தால் இழந்தது திரும்ப வரும்.

1758. தீதும் நன்றும் பிறர் தர வாரா.  நமது சந்தோஷம், கஷ்டங்களுக்குக் காரணம் நாம்தான். வேறு யாரும் இல்லை. இதை நன்கு உணர்ந்தவன் ஒரு ஞாநி.

1759. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். துன்பத்தினால் துவளக்கூடாது. அதனால் ஏற்படும் காயங்கள் காலத்தால் குணமாகும். 

1760. நேர்மை, வாய்மை, தேவையான பணம், அளவான உணவு, உடற்பயிற்சி, தியானம் இவைகள் போதும் நோயின்றி, கவலையின்றி ஆரோக்கியமாக வாழ.

1761. மரத்தின் வேர் மரத்தின் உயிரைக் காக்க தகப்பனைப் போல் வேலை செய்கிறது. பூக்கள், இலைகள், காய்கள், கனிகள் குழந்தைகளாக அனுபவிக்கின்றன.

1762. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நம்முடன் சேர்ந்து வாழ்வோரை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் நம்மை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

1763. ஒருவருக்கு எதையும் எதிர்க்க உரிமை இருப்பது போல, மற்றவர்க்கு  அதை ஆதரிக்க உரிமை இருக்கிறது என்ற உண்மை ஏன் பலருக்குப் புரிவதில்லை?

1764. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். ஒரு விஷயத்தை தீர விசாரித்து அதைப் பற்றி நன்கு தெரிந்த பின் பேசுவது, எழுதுவது நல்லது.

1765. குடிநீர் நம் உயிர் நாடி. சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் ஆகியும் குடிநீர் பிரச்னை தீரவில்லை. அதற்கு உங்கள் ஆலோசனை என்ன?

1766. இன்னமும் பையனைப் பெற்றவர்கள் பெண்ணைப் பெற்றவர்களை  தரம் குறைந்து  நடத்துகிறார்களா, இல்லை மாறி விட்டார்களா?

1767. கற்றாரை கற்றாரே காமுறுவர். படிக்காதவர்கள் விரும்ப மாட்டார்கள். பொறாமை காரணம் அல்ல. தாழ்வு மனப்பான்மை தான் காரணம்.

1768. திருமணத்திற்கு சிவப்பானவர்களையே பலரும் விரும்புகிறார்கள். நிறம் குறைந்து இருந்தாலும் அழகு, குணம் நிறைந்த பலர் இங்கு இருக்கிறார்கள்.

1769. நட்பு புனிதமானது, ஆழமானது, அழகானது, துயர் துடைப்பது, சிந்திக்க, சிரிக்க, நேசிக்க, விட்டுக் கொடுக்க வைப்பது, நம்மிடம் நிறைந்து உள்ளது.

1770. இன்றய இளைஞர்கள் எதிலும் புதுமை புதுமை என்கிறார்கள். பழமையைப் பற்றி ஒன்றும் தெரியாமல் அவர்கள் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. 

Tuesday, November 9, 2021

WHAT DID YOU LEARN IN LIFE ?

1. Do not lower your standards just because of your loneliness.

2. Have you failed? Then try once again.

3. You can mute people in real life too, it is called boundaries.

4. Listen sympathetically, when she is on her period.

5. Your life is not yours if you always care what others think.

6. Do not say to her “I love you” until your heart says it.

7. Never feel bad to apologize to the ones who care about you.

8. Learn to pause. When stressed, angry, worn down, or nervous, just close your eyes, take a deep breath and count till 10.

9. Let your kid do whatever they want to do.

10. Learn how to meditate. You’ll be glad you did.

11. When someone else cooks for you, offer to help clean up the kitchen.

12. Just because you took longer than others that does not mean you are not up to the mark.

13. Good decisions come from experience. Experience comes from bad decisions.

14. Try to be human, not perfect. 

Sunday, November 7, 2021

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் 196 to 210

196. *மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

197. *இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

198. *உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

199. *வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

200. *சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

201. *உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். 

202. *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.

203. *காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

204. *முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

205. *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

206. *இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்.

207. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.

208. *கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

209. *உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.

210. *சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

Thursday, November 4, 2021

அந்தக் கால சைக்கிள் சவாரி.

அப்போதெல்லாம் வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது. அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால், அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள். 

இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அப்போது சைக்கிள் ஓட்டத் தெரியாமல், அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள். ’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ. அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும்.

சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது..?அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன. இப்போதும் உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன. 

ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம்  50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும். அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு. கேரியர் வைத்த சைக்கிள், கேரியர்இல்லாத சைக்கிள் டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள். 

‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ..’ என்று விசிறிக்கொண்டே, தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள். 

உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும் 10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள். அந்த ஒரு பத்து நிமிஷம், இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது..!

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள் நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள். ’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா..’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.

இன்னும் சில காமெடிகளும் நடக்கும். சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள். பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு. பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.

‘செகண்ட் ஹேண்ட் சைக்கிள் வாங்கிவிட்டாலே பசங்களுக்கு தலைகால் புரியாது. அந்த வண்டியைத் துடைப்பது என்ன, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன, உப்புத்தாள் கொண்டு, வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன. என எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பார்கள்.

எண்பதுகளில் ராலே சைக்கிள்தான் கதாநாயகன். ராலே சைக்கிள் கமல் என்றால் ஹெர்குலிஸ், ‘ராபின்ஹூட்’ என்றெல்லாம் சைக்கிள்கள் இருந்தன. அந்த ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள தூரம், கம்பீரம் காட்டும். 

பத்துமுறை பெடல் செய்தால், ஒரு கி.மீ. தூரத்தை சுலபமாகத் தொடலாம் என்று அந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவார்கள். ஆனால் அந்த சைக்கிள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்குமாம். என சொல்லிச் சொல்லி அலட்டிக்கொள்வார்கள்.

டைனமோ இல்லையெனில் போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்டவேண்டும். அதேபோல் சைக்கிள் செயின் அடிக்கடி கழன்றுகொள்ளும் போது, அதை மாட்டுவதற்கு முயற்சிக்கும் போது கையெல்லாம் மையாகியிருக்கும். ‘இந்த சைக்கிளுக்கு ஒரு விமோசனம் வரமாட்டேங்கிது என்று அலுப்பும் சலிப்புமாக அந்த சைக்கிளுடனே பயணிப்பார்கள்.

‘ஓவராயிலிங்..’ சைக்கிள் மருத்துவத்துக்கு இதுதான் பெயர். அக்குவேறு ஆணிவேறு என கழற்றி ஆயிலில் ஊறப்போட்டு அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி ஹேண்டில் பார் கைப்பிடி, சீட்டுக்கு முன்னே இருக்கும் பார் பகுதிக்கு ஒரு கவர், சீட்டுக்கு குஷன் கவர், இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என சைக்கிளுக்கு அழகுப்படுத்துவது ஒரு கலை. 

இன்னும் சிலர், சின்னச்சின்ன மணிகளை வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்துவிடுவார்கள். டைனமோவுக்கு மஞ்சள் துண்டு அல்லது மொத்தமாக மெத்மெத்தென்று ஒரு கவர் என்று மாட்டுவார்கள்.

இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம். கறிவேப்பிலை வாங்கவே, டூவீலரை எடுத்துக்கொண்டுதான் செல்கிறோம். அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து எட்டெல்லாம் போட்டு, கெத்துக் காட்டுவோம். சைக்கிளின் ரெண்டுபக்கமும் 

பெல் வைத்து, வித்தியாச ஒலி எழுப்புவார்கள்.மாற்றங்கள் வேகங்கள் சைக்கிளின் மதிப்பும் மரியாதையும் டூவீலர்களால் குறைந்துவிட்டன. ‘என்னடா இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே. இப்ப ஒரு சைக்கிள் நாலாயிரம் ரூபா. இதுக்கு செகண்ட் ஹேண்ட்ல எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்’ என்றார்கள்.

அப்பா ஓட்டிய சைக்கிள், முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம் மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.

இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன. அப்பாவுக்கு பைக், மனைவிக்கு ஆக்டீவா,  மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன. குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள் கூட பரிதாபமாகக் காட்சி தருகின்றன. 

வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை. ’ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்குக் கையைக் கடிக்காது என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.

காலச் சுழற்சியில் தொப்பையைக் குறைக்கவும் சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். ஸ்டாண்ட் போட்டு, சைக்கிளிங் பண்ணுவதற்கு காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள். சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம் பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது. எத்தனை ஆடிக்கார்களும்

ஆவணிக்கார்களும் வந்தாலும் வாங்கினாலும்   ஏரோப்ளேனில் ஏறினாலும் நம்நினைவுகளில் இனிமையாக உள்ள சைக்கிளுக்கு இணையாகுமா!  

Monday, November 1, 2021

UNDERSTANDING BLOOD PRESSURE

Understanding blood pressure reading and charts

1. How to measure blood pressure?

Blood pressure is measured in millimeters of mercury, mmHg. It consists of two numbers, such as 130/80, which we say as “130 over 80”. The first number is your systolic blood pressure, the maximum pressure your blood attains as your heart beats and pushes it around your body. The second number is your diastolic pressure, the minimum level it reaches between beats.

2. What’s the definition of high blood pressure?

High blood pressure, also known as hypertension, puts a strain on your heart and blood vessels and makes you more susceptible to heart attacks and strokes.

Normal blood pressure is regarded as being between 120-129 (systolic) and 80-84 (diastolic).

The definition of high blood pressure, according to 2018 ESC/ESH Guidelines, is anything above 140/90 mmHg. If you measure it in the comfort of your home, where you’re likely to be more relaxed, the limit is slightly lower at 135/85.

If your blood pressure is between 120/80 and 140/90, you may be at risk of developing hypertension at some stage in the future unless you take action to bring it under control. This is called prehypertension.

A blood pressure reading of over 180/120 is dangerously high. Doctors call this a hypertensive crisis, and it requires immediate treatment.

3. Systolic blood pressure, the top number, is more important than diastolic blood pressure in people over 40. That’s because it’s a better predictor of stroke and heart attack. And only one of the two numbers has to be higher than what it should be to count as high blood pressure.

4. Blood pressure measurements fall into several categories:

Normal blood pressure. Your blood pressure is normal if it's below 120/80 mm Hg.

Elevated blood pressure. Elevated blood pressure is a systolic pressure ranging from 120 to 129 mm Hg and a diastolic pressure below (not above) 80 mm Hg. Elevated blood pressure tends to get worse over time unless steps are taken to control blood pressure. Elevated blood pressure may also be called prehypertension.

Stage 1 hypertension. Stage 1 hypertension is a systolic pressure ranging from 130 to 139 mm Hg or a diastolic pressure ranging from 80 to 89 mm Hg.

Stage 2 hypertension. More severe hypertension, stage 2 hypertension is a systolic pressure of 140 mm Hg or higher or a diastolic pressure of 90 mm Hg or higher.

Hypertensive crisis. A blood pressure measurement higher than 180/120 mm Hg is an emergency situation that requires urgent medical care. If you get this result when you take your blood pressure at home, wait five minutes and retest. If your blood pressure is still this high, contact your doctor immediately. If you also have chest pain, vision problems, numbness or weakness, breathing difficulty, or any other signs and symptoms of a stroke or heart attack, call the ambulance or the hospital.

5. Both numbers in a blood pressure reading are important. But after age 50, the systolic reading is even more important. Isolated systolic hypertension is a condition in which the diastolic pressure is normal (less than 80 mm Hg) but systolic pressure is high (greater than or equal to 130 mm Hg). This is a common type of high blood pressure among people older than 65.

6. Because blood pressure normally varies during the day and may increase during a doctor visit (white coat hypertension), your doctor will likely take several blood pressure readings at three or more separate appointments before diagnosing you with high blood pressure.

SOURCE: INTERNET