Saturday, December 9, 2017

LOGGERHEADS [Disagreement] / கருத்து வேற்றுமை

LOGGERHEADS [Disagreement] 

Some parents give full freedom to their children after marriage. Some interfere in all their activities. This is only for parents who are always at loggerheads with their children. Others can also read. 


1. Your child will treat you in the same way as you treated your parents.

2. The love of the parent should be more than that of the children.
3. They love their children as you loved your children. Is it wrong?
4. As you were the boss of your home, they are the boss of their home.
5. You lived your life as per your wish. They live as per their wish.
6. They are not your equals. You are far superior to them.
7. What are you going to achieve by winning over your own children?
8. Ultimately you are going to give your assets only to your children.
9. The parent should know who is at greater risk in case of separation.
10. Who will take care of you if both of you are bedridden?
11. What is the guarantee that you will be happy in an old age home?
12. Suppose you come back for a compromise what will you do?
13. It is always better to adjust and accept as it is beneficial for both.
14. After all, they are your children only and why do you fight?
15. So talk less, talk lovingly, talk consciously, talk relevantly.

கருத்து வேற்றுமை 


இது, எப்பொழுதும் தன்னுடைய குழந்தைகளுடன் கருத்து வேற்றுமை உள்ள பெற்றோர்களுக்கு மட்டும். மற்றவர்களும் படிக்கலாம்.


1. நீங்கள் உங்கள் பெற்றோர்களை எப்படி நடத்தினீர்களோ, அப்படித்தான் உங்கள் குழந்தைகள் உங்களை நடத்துவார்கள்.

2. பெற்றோர்களின் அன்பு, குழந்தைகளை விட அதிகமாக இருக்க வேண்டும்.
3. நீங்கள் உங்கள் குழந்தைகளை விரும்பியது போல், அவர்கள் அவர்களுடைய குழந்தைகளை விரும்புகிறார்கள். என்ன தவறு?
4. நீங்கள் உங்கள் குடும்பத்தின் அதிகாரியாக இருந்தது போல், அவர்கள், அவர்களுடைய குடும்பத்தில் இருக்கிறார்கள்.
5. நீங்கள் உங்கள் விருப்பப் படி வாழ்ந்தது போல், அவர்கள் விருப்பப் படி வாழ்கிறார்கள்.
6. அவர்கள் உங்களுக்குச் சமம் இல்லை. நீங்கள் அவர்களை விட எவ்வளவோ உயர்ந்தவர்கள்.
7. அவர்களுடன் கருத்து வேற்றுமை கொண்டு நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
8. கடைசியில் உங்கள் சொத்துக்களை அவர்களுக்கு தானே கொடுக்கப் போகிறீர்கள்.
9. கருத்து வேற்றுமையால் யாருக்கு ஆபத்து அதிகம் என்று பெற்றோர்களுக்குத் தெரிய வேண்டும்.
10.நீங்கள் இருவரும் நோய்வாய்ப் பட்டால், யார் உங்களைக் கவனிப்பார்கள் ?
11.முதியோர் இல்லத்தில் இதைவிட அதிக சந்தோஷம் கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்?
12.ஒருவேளை திரும்பி வர நேரிட்டால் எப்படி சமாதானம் செய்வீர்கள்?
13.ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துப் போவதே, இருவருக்கும் நல்லது என்று உணருங்கள்.
14.என்ன இருந்தாலும் அவர்கள் உங்களுடைய குழந்தைகள் தானே ! அப்புறம் ஏன் மனஸ்தாபம்?
15. அதனால் குறைவாகப் பேசுங்கள், அன்புடன் பேசுங்கள், உணர்ந்து பேசுங்கள், தேவையானதைப் பேசுங்கள்.




Thursday, December 7, 2017

IS IT DEVELOPMENT? / இதுதான் முன்னேற்றமா?

IS IT DEVELOPMENT?
Someone gave a fair review of a Tamil film in which an upcoming hero had acted well. To spend the Sunday afternoon, I thought of seeing the movie with my son. Due to my hearing problems, it was long since I saw a movie. However, I decided to manage using Bluetooth, which my son had got for me. Even then, it was not quite audible. 

The film started on a good note. A small house in a village situated between mountains was the opening scene. In the beginning, on an open terrace, the hero woke up late from bed in the morning and a little girl served him tea. In the next scene, he was shown talking with a comedian in a liquor shop both drinking liquor. 


The statutory warning was shown at the bottom of the movie. I switched off the TV and went to attend other work. When I was young, the hero in a movie used to drink alcohol only for any great loss. Now people start the day with alcohol. I don't know whether the hen came first or the egg. No doubt India is developing fast.


இதுதான் முன்னேற்றமா? 

முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் அந்த இளைய தலைமுறை நடிகர் நடித்த அந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமரிசனங்கள் நன்றாக இருந்தன. நான் இருக்கும் இடத்தில் அது திரையிடப் படவில்லை. 

ஒரு மாலைப் பொழுது போக்க, நான் அந்தத் திரைப்படத்தைப் பார்க்க நினைத்தேன். நான் தமிழ் படம் பார்த்து நிறைய நாட்கள் ஆகிறது.  எனக்கு காது கேட்காததால் காதில் சொருகிக் கொள்ளும் ப்ளக் உபயோகித்தேன்.. 


அப்பொழுதும் சரியாக கேட்கவில்லை. திரைப் படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்தது. ஒரு மலைப் பிரதேசத்தில், பசுமையான வயல்கள் நடுவே, ஒரு சிறிய கிராமம். 


ஆரம்பக் காட்சியில் கதா நாயகன் ஒரு வீட்டு மொட்டை மாடியில், காலையில் தாமதமாக எழுந்து, டீ குடித்துவிட்டு, ஒரு சிறுமியோடு சிறிது விளையாடி விட்டு வெளியே செல்கிறான். 


அடுத்த காட்சியில் ஒரு நகைச்சுவை நடிகர் உடன் ஒரு சாராயக் கடையில் இருவரும் அமர்ந்து மது அருந்துகிறார்கள். சட்ட எச்சரிக்கை, திரையின் அடிப் பகுதியில் காட்டப் பட்டது. 


கனணியை அணைத்து விட்டு வேறு வேலை பார்க்கச் சென்று விட்டேன். நான் இளைஞனாக இருந்த போது திரைப் படங்களில் கதா நாயகன் காதல் தோல்வியோ அல்லது பெரிய நஷ்டமோ வந்தால் தான் குடிப்பது போல் காட்டுவார்கள். 


இப்பொழுது தினசரி வாழ்க்கையை ஆரம்பிப்பதே குடியில் தான். முட்டை முதலிலா அல்லது கோழி முதலிலா?. இந்தியா நிச்சயம் முன்னேறுகிறது.




Wednesday, December 6, 2017

HOW IS IT FAIR?. / இது என்ன நியாயம்?

HOW IS IT FAIR?.
I always advocated that one should do his duty before claiming his rights. The entire human race in the country will make a hue and cry even for the slightest lapse on the part of the Govt. Everyone knows pretty well that our Govt is for the people by the people. 

The accounting year is 1st April to 31st March of next year. The dues to the Govt is to be paid in April and September. It also earns interest on the money collected. Then only, the Govt can take up developmental activities. If taxes are not paid in time only the poor will suffer.


We do not pay our dues on time. We should have voluntarily paid our house tax and water tax by April. People will say that they can pay anytime during the year. It is not so. No one will raise this issue on social media. People avoid their duty but claim their right. How is it fair?


இது  என்ன நியாயம்? 

உரிமையைக் கேட்பதற்கு முன், தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்று நான் கூறுவது உண்டு. அரசாங்கம் ஒரு சிறிய தவறு செய்தால் கூட அனைத்து மக்களும் பலவித எதிர்ப்புகள் தெரிவித்து தினசரி வாழ்க்கையை பாதிக்குமாறு செய்து விடுவார்கள். இது மக்களுக்காக, மக்களால் ஏற்படுத்தப் பட்ட அரசு என்று எல்லோருக்கும் தெரியும்.

அரசாங்கத்திர்க்கும், பொது மக்களுக்கும் வருடக் கணக்கு ஏப்ரல் 1 இல் இருந்து அடுத்த வருடம் மார்ச் 31 வரை. அரசுக்கு செலுத்தும் வரிகள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரலில் மாதத்தில் கட்டப் பட வேண்டும். அதை வைத்து தான் அரசு முன்னேற்ற வேலைகளை செய்ய முடியும். கட்டிய பணத்திற்கு வட்டியும் கிடைக்கும். இல்லாவிடில் அது அரசுக்கு நஷ்டம். வரிகள் செலுத்த வில்லை என்றால் ஏழைகள் தான் பாதிக்கப் படுவார்கள்.


நாம் வரிகளை சரியான நேரத்தில் கட்டுவதில்லை. வீட்டு வரியையும், குடி நீர் வரியையும் கேட்காமலேயே நாம் முன் வந்து கட்ட வேண்டும்.  எப்பொழுது வேண்டுமானாலும் கட்டலாம் என்று சிலர் கூறுவார்கள். அது தவறு. இதைப் பற்றி யாரும் பத்திரிகையில் எழுத மாட்டார்கள். கடமையைச் செய்யாமல் உரிமையைக் கேட்கலாமா? இது  என்ன நியாயம்?




NEITHER A SAINT NOR A SATAN. / ஸந்யாஸியும் இல்லை சாத்தானும் இல்லை.

NEITHER A SAINT NOR A SATAN.
I find most of the people attribute my writing to my personal life. It should not be the case. A writer writes only for the benefit of society. He may have to add some fiction to his writing to make it interesting and absorbing. Even while writing a biography, some fiction may also be added. 

The workings of a writer need not represent his real character. He may be a Satan or Saint. Only his writing should be valued and not his personality. Most of the people think that a great writer is a great man. It is not so. A great man may not know how to write. The worst man may be a good writer.


I write because I love writing. I have a passion for writing. I have a dream to develop into a good writer. Only if I write, I can learn and improve. The beauty of writing is good narration using the proper word, at the correct place, with the apt meaning. This will help the reader to develop on his own in case he is interested.


I do not write to educate others. It is not my business. I just scribble something that comes to my mind. I write in simple language to make it easy for the reader to understand and practice if he is interested. I do not use bombastic words to show off my proficiency. I am a simple person both in writing and in living.


ஸந்யாஸியும் இல்லை சாத்தானும் இல்லை.

பலர் என் எழுத்துகளுடன் என் வாழ்க்கையை சம்பந்தப் படுத்துகிறார்கள். அது சரியில்லை. ஒரு எழுத்தாளர் ஒரு சமூகத்தின் நன்மைக்காக எழுதுகிறார். அது விறுவிறுப்பாக இருக்க பல கதைகளைச் சேர்ப்பார். அவை உண்மை இல்லை. 

சுயசரிதையில் கூட பல விஷயங்கள்  விறுவிறுப்பை முன்னிட்டு இருக்கும். ஒரு எழுத்தாளரின் எழுத்துக்கள் அவருடைய குணத்தைக் காட்ட வேண்டியதில்லை. அவர் ஒரு ஸந்யாஸியாக அல்லது சாத்தான் ஆக இருக்கலாம். அவருடைய எழுத்துக்களைத்தான் பார்க்க வேண்டும் அவரை அல்ல. 


ஒரு சிறந்த எழுத்தாளர் ஒரு சிறந்த மனிதனாக இருப்பார் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. ஒரு சிறந்த மனிதனுக்கு எழுதத் தெரியாமல் இருக்கலாம். ஒரு மோசமான மனிதனிடம் சிறந்த எழுத்துத் திறமை இருக்கலாம்.


எழுத்து மேல் உள்ள ஆசையால் நான் எழுதுகிறேன். எனக்கு எழுதுவதில் ஆர்வம் உண்டு. எழுதினால் தான், நான் மேலும் நன்றாக எழுத முடியும். கற்றுக் கொள்ளவும், நல்ல தரமாக  இருக்கவும் நான் எழுதுகிறேன். சரியான வார்த்தையை, சரியான இடத்தில், சரியான அர்த்தத்தில் உபயோகிப்பதே எழுதுவதன் திறமை. 


படிப்பவருக்கு அதே மாதிரி எழுத வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்க வேண்டும். பிறருக்குக் கற்றுத் தர நான் எழுதவில்லை. அது என் வேலை இல்லை. என் மனதில் தோன்றியதை நான் கிறுக்கு கிரேன். 


படிப்பவருக்கு சுலபமாகப் புரியவும், எழுதிப் பார்க்கவும் நான் சாதாரணமாக் எழுதுகிறேன். பெரிய பெரிய வார்த்தைகளை உபுயோகித்து என் திறமையைக் காட்டிக் கொள்ள நான் எழுதுவதில்லை. நான் ஒரு சாதாரண மனிதன், எழுத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி.







IDLY UPMA / இட்லி உப்புமா

IDLY UPMA 
Alfred Lord Tennyson said, " men may come, men may go, but I go on forever". So many new tiffins like poori, chapati, kurma, Barotta, naan, roti, raita etc, have come and gone but Idly is simple, delicious, healthy, cheap and everlasting. It is the poor man's delight and the rich man's favourite, and the patient's medicine. 

Idly is a food item known to Indians for over 700 years. Its original name was Intarika. The first mention of Idly in the Indian literature was in Kannada by Sri Sivakoti Achariyar in the epic "Vadaradane" The method of preparing Idly mentioned in literature was different from the present method. The present method is mentioned only in literature after 1250 AD. It is the method mentioned by the kings who ruled Indonesia says Food specialist Sri Akshaya in his work.


People prepare Idly Upma from the Idly cooked on the previous day. No other item will give you as much taste and satisfaction as that of Idly Upma made on the next day. I remember a scene in the movie "Surya Vamsam" where the rich father who visits his suffering daughter relishes the Idly Upma served by her and takes home some quantity for his wife also.

It is a pity that Indians who are so much associated with Idly when they are in India, totally forget our Idly and eat burritos, kesa Riya, enchiladas, tacos, carnitas, mole poblano, tamales, carne asada, chile Relleno, tilapia Veracruz, bacon, eggs scrambled, french toast, cinnamon rolls, etc., when they go overseas, which are not as healthy as Idly.


Courtesy: Tamil traditional foods.

இட்லி உப்புமா 

"மனிதர்கள் வருவார்கள். மனிதர்கள் போவார்கள். ஆனால் நான் இருந்து கொண்டே இருப்பேன்" என்று ஆல்ஃப்ரெட் லார்ட் டென்னிசன் [ Alfred Lord Tennyson] கூறினார். நமது தினசரி வாழ்க்கையில் இட்லி, தோசை, வடை, சப்பாத்தி, பூரி, பரோட்டா, நான், ரைத்தா என்று பலவிதமான பணியாரங்கள் வந்து போகின்றன. 

சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் இட்லி ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேஸியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுணர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இட்லி எப்போதும் இருக்கிறது. அது எளிமையானது, சுவையானது, ஆரோக்கியமானது, நிரந்தரமானது. ஏழைகளின் நண்பன். பணக்காரர்களின் விருப்பம். நோயாளிகளின் அருமருந்து. முதல் நாள் செய்த இட்லியை மறுநாள் உப்புமாவாகச் செய்வார்கள். அதன் சுவையோ திருப்தியோ வேறு எந்தப் பணியாரத்திலும் இருக்காது. 

"சூரிய வம்சம்" என்ற திரைப் படத்தில் ஒரு பணக்காரத் தந்தை, ஏழையை மணந்த தன்னுடைய பெண் வீட்டிற்க்கு வரும் பொழுது அவள் கொடுக்கும் இட்லி உப்புமாவை மிகவும் ரசித்துச் சாப்பிடுவார். தன்னுடைய மனைவிக்கு  கொஞ்சம் எடுத்துச் செல்வார். இரவில் அந்த தாயார் யாருக்கும் தெரியாமல் அதை சாப்பிட்டு மகிழ்வார்.

இந்த அளவு இட்லியுடன் பழகிய நமது இந்தியர்கள், வெளிநாட்டுக்குச்  சென்ற பின், மிகவும் மாறி விடுகிறார்கள். அங்கு பலவிதமான புதுப் புது பணியாரங்களில் விருப்பம் கொண்டு ஆரோக்கியமான நமது இட்லியை மறந்து விடுகிறார்கள் என்பது வருத்தப் பட வேண்டிய விஷயம்.

Thanks: Tamil Traditional Foods





Tuesday, December 5, 2017

WHO IS RESPONSIBLE FOR OUR SUFFERINGS? / நம் கஷ்டங்களுக்கு யார் காரணம்?

WHO IS RESPONSIBLE FOR OUR SUFFERINGS?
1. Our parents had many children believing more children more support.
2. They led a simple and contended life leading to savings and thrift.
3. They suffered to educate them and to provide them with everything.
4. Hence we reduced the number of our children to one or two.
5. We developed more attachment towards our children.
6. We preferred an independent life to bring up our children to our liking.
7. Though educated, our children also had a different approach to life like us.
8. Soon liberalization flooded the market with foreign goods.
9. Desire and creed developed for such products affecting the lifestyle.
10. Thrift and savings are ignored, comforts and luxuries are given importance.
11. More the need, more price, more expenditure, and more money needed.
12. Expenses increased sky high, resulting in loans, debts, and EMI.
13. Unethical ways of making more money led to corruption and bribe.
14  This led to inflation forcing the women to go for jobs to compensate.
15. Women claimed independence, empowerment, and liberation.
16  When both are educated and employed, stress developed leading to problems.
17. The senior citizens could not give them a helping hand, hence neglected.
18. They are crying, cursing and lamenting for reducing the number of children.
19. Now a simple and contented life with savings and thrift is just a dream.
20. Now tell me who is responsible for our sufferings?

நம் கஷ்டங்களுக்கு யார் காரணம்? 

1. நமது பெற்றோர்கள் பாதுகாப்பு கருதி அதிக குழந்தைகள் பெற்றார்கள்.
2. அவர்கள் சிக்கத்தை கடைப்பிடித்து திருப்தியாக வாழ்ந்தார்கள்.
3. குழந்தைகளை வளர்க்க, படிக்க வைக்க அதிகக் கஷ்டப் பட்டார்கள்.
4. அதனால் நாம் குழந்தைகளை ஒன்று அல்லது இரண்டாக குறைத்தோம்.
5. குழந்தைகள் மீது நம்முடைய பாசம் அதிகமானது.
6. நம் குழந்தைகளை இஷ்டப்படி வளர்க்க நாம் தனிக்குடித்தனத்தை விரும்பினோம்.
7. நன்கு படித்தாலும், நம் குழந்தைகள் நம்மைப் போல வேறு விதமாக வாழ விரும்பினார்கள்.
8. தாராள மய மாக்குதல் மூலம் வெளிநாட்டு பொருட்கள் அதிகம் சந்தைக்கு வந்தன.
9. அந்தப் பொருட்களின் மேல் உள்ள ஆசை வாழ்க்கை முறையை பாதித்தது.
10. சிக்கனமான வாழ்க்கையை விடுத்து, சொகுசு வாழ்க்கையை மனம் விரும்பியது.
11. அதிக தேவை, அதிக விலை, அதிக செலவு, அதிக பணத் தேவை ஆனது.
12. செலவு வானத்தை தொட்டதால், கடன், வட்டி என்று பாதை மாறியது.
13. நியாயமில்லாத வழியில் பணம் சேர்க்க லஞ்சம் கொடுப்பது, வாங்குவது வந்தது.
14. அதனால் விலை வாசி ஏற்றம் வந்து பெண்கள் வேலைக்கு அனுப்பப்பட்டனர்.
15. பெண்கள் சுதந்திரம், முக்கியத்துவம், விடுதலை எல்லாம் தலை எடுத்தன.
16. இருவரும் படித்து வேலை பார்ப்பதால், மன அழுத்தம் அதிகமாகி பிரச்சனைகள் வளர்ந்தது.
17. முதியவர்களால் அவர்களுக்கு உதவ முடியாததால், அவர்கள் ஒதுக்கப் பட்டார்கள்.
18. அவர்கள் இப்பொழுது குழந்தைகளைக் குறைத்ததை நினைத்து வருந்தி கஷ்டப் படுகிறார்கள்.
19. இப்பொழுது சாதாரண, திருப்தியான, சேமிப்பு உள்ள வாழ்க்கை ஒரு கனவு ஆகி விட்டது.
20. நமது கஷ்டங்களுக்கு யார் காரணம்?

TRUE HAPPINESS / உண்மையான சந்தோஷம்

TRUE  HAPPINESS  
When we were living in Chennai, we resided in T.Nagar for many years and then shifted to Anna Nagar after constructing our house. However, my wife and I used to go to Pondy Bazaar in T.Nagar for shopping since we were acquainted with many shops there. 

After our shopping, we always visited Balaji Bhavan for tiffin. We used to share the items so that we had variety and also the cost was less. Sometime back, after we finished our meal, I was given a bill for Rs.80/.  I gave an Rs.100/ note at the counter. To my surprise, he returned Rs.420/, assuming that I had given him an Rs.500 note. 


Jovially, I asked him whether he was paid a good salary. He was also surprised. When I told him that he had given me Rs.400/ in excess, he was so happy and said that his salary would be deducted for the shortage. I was also happy. But I didn't know whether his happiness was more or mine.


உண்மையான சந்தோஷம் 

நாங்கள் சென்னையில் வாழும் பொழுது, பல வருடங்கள் தியாக ராய நகரில் வசித்தோம். பிறகு சொந்த வீடு கட்டிய பின் அண்ணா நகருக்கு வீடு மாற்றினோம். இருந்தாலும், அங்கு பல கடைகளைத் தெரியும் என்பதால், பொருட்கள் வாங்குவதற்கு தியாக ராய நகருக்குச் செல்வது வழக்கம். 

நாங்கள் எப்பொழுது அங்கு சென்றாலும், பாண்டி பஜாரில் உள்ள பாலாஜி பவன் ஹோட்டலுக்கு டிபன் சாப்பிடப் போவோம். சமீபத்தில் ஒரு நாள் 3 மணி வாக்கில் அங்கு சென்றோம். நாங்கள் டிபன் சாப்பிட்ட பிறகு, சர்வர் ரூ 80 க்கு பில் கொடுத்தார். பணம் செலுத்த நான் கல்லாவுக்குச் சென்றேன். அவரிடம் 100 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தேன்.


கல்லாவில் இருந்தவர் எனக்கு மீதி ரூ 420 கொடுத்தார். நான் ரூ 500 நோட்டு கொடுத்ததாக நினைத்துக்க் கொண்டிருப்பார் போல. தமாஷாக நான் அவரிடம் உங்களுக்கு ஹோட்டலில் நிறைய சம்பளம் கொடுக்கிறார்களா என்று கேட்டேன். அவர் ஒன்றும் புரியாமல் திகைத்தார். 


பிறகு அவர் எனக்கு ரூ 400 அதிகம் கொடுத்திருப்பது பற்றிக் கூறினேன். அவருக்கு மிகவும் சந்தோஷம். நன்றிகள் பல கூறி பணம் குறைந்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள் என்று கூறினார். எனக்கும் சந்தோஷம் தான். ஆனால் யாருடைய சந்தோஷம் அதிகம் என்று தான் புரியவில்லை.




MY FAVOURIT DRESS../ எனக்குப் பிடித்த உடை.

MY FAVOURIT DRESS.
I was wearing a white pant and white shirt from the age of 16 in 1961 until the age of 39 in 1984. This dress had become an identity mark for me and people used to call me as "white and white" Kannan. I got the inspiration to wear this dress from our cricketers in those days.

After many fervent requests made by my best half, in 1984, I switched over to safari suits in a light colour. Then, I was nicknamed "safari" Kannan by my friends. I continued to wear this dress until 2000. However, my longing for white and white remained at the core of my heart.


In 2001, when I suffered a near bankruptcy, I went back to my original colour of white and white. But this time, it was just 2-metre white dhoti and white half slack instead of pant and shirt. I have been wearing this dress in all places including the US and I receive great respect.


Now I am thinking of switching over to saffron colour dhoti and half slack which my wife is ardently objecting to. I am trying to convince her and I am confident that one day she will accede to my request sympathetically. May be my friends then call me as "saffron" Kannan. 


எனக்குப் பிடித்த உடை. 

1961ல் 16 வயதில் இருந்து, 1984ல் 39 வயது ஆகும் வரை நான் வெள்ளை நிறத்தில் முழுக் கால் நிஜாரும், சட்டையும் தான் அணிவது வழக்கம். இந்த உடை எனக்கு ஓர் அடையாளக் குறியாக மாறி என் நண்பர்கள் என்னை "வெள்ளை" கண்ணன் என்று கூப்பிடுவார்கள். அந்தக் காலத்தில் கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து எனக்கு இந்த உடை மீது விருப்பம் வந்தது.

1984ல் என் அன்பு மனைவியின் விருப்பத்தின் பேரில், நான் மெதுவான கலரில் "சபாரி" ஸூட் அணிய ஆரம்பித்தேன். அதனால் என்னை "சபாரி" கண்ணன் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். 2000 வரை ஆறு வருடங்கள் இந்த உடையை நான் அணிந்தேன். இருந்தாலும் வெள்ளை உடையில் இருந்த என்னுடைய விருப்பம் அடி மனத்திலேயே இருந்தது.


ஒரு சந்தர்ப்பம் வரக் காத்திருந்த நான், 2001ல் எனக்கு மிகப் பணத் தட்டுப்பாடு வந்த பொழுது, மறுபடியும் வெள்ளை உடைக்கு மாறி விட்டேன். ஆனால் இந்த முறை வெள்ளை நிறத்தில் 4 முழ வேட்டியும், அரை கை சட்டையும் அணிய ஆரம்பித்தேன். எங்கு போனாலும், அமெரிக்கா உட்பட, இந்த உடையைத் தான் அணிந்தேன். அதற்குத் தனி மதிப்பு இருந்தது.


இப்பொழுது நான் காவி நிறத்தில் 4 முழ வேட்டியும் அரை கை சட்டையும் அணியலாமா என்று யோசிக்கிறேன். ஆனால் என் மனைவி இதற்கு எதிர்ப்புத்  தெரிவிக்கிறாள். அவளை சமாதானப்  படுத்த முயல்கிறேன். முடியவில்லை. ஒரு நாள் என் விருப்பத்தை இரக்கத்துடன் ஏற்றுக் கொள்வாள் என்று நம்புகிறேன். அப்பொழுது என் நண்பர்கள் என்னைக் காவிக் கண்ணன் என்று அழைப்பார்கள் என நினைக்கிறேன்.



Monday, December 4, 2017

WANT TO BE A DOCTOR ? / டாக்டர் ஆக விருப்பமா?

WANT TO BE A DOCTOR? 
A successful student always aims high to go up in life. The first profession one prefers nowadays, is to become a Doctor. At the tender age of 17, a student who aims to become a Doctor may not be aware of the responsibilities, risks, ethics, attitude, difficulties of normal life, etc. of a doctor. 

He/she simply aspires to become a doctor and enters college. I met a woman student who was about to take up a branch in medicine. She said she was interested in a particular discipline. I suggested taking up Gynecology and Obstetrics which is more suitable for women. 


Considering the population of our country, there is wide scope for this discipline. It is also remunerative. It does not require any infrastructure or capital investment. There is the personal satisfaction of having brought a baby into this world. There is scope to learn more and help the mothers to be free from any complications during pregnancy.


She was firm in her decision. I even told her that there would be a shortage of women gynecologists if all women prefer not to take up gynecology. I also told her about the hardships and embarrassment a pregnant woman would face, to go to a male doctor for a checkup, 


The tradition and culture in India are different from western countries. A woman must be considerate to another woman. Whilst, I agree that it is their right to choose their career, I request them to look into the reality of the situation when selecting the field they wish to study.


டாக்டர் ஆக விருப்பமா? 

நன்றாகப் படிக்கும் ஒரு மாணவன்/மாணவி  வாழ்க்கையில் மேலே போக விருப்பப்படுவது இயற்கை. முதலில் அவர்கள் விரும்புவது ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்பதே. அந்தச் சிறிய 17 வயதில் ஓர் மருத்துவரின் பொறுப்புகள், கஷ்டங்கள், எண்ணங்கள், தர்மங்கள், வாழ்க்கை முறைகள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவர் மருத்துவக் கல்லூரியில் சேருகிறார். அந்த மாதிரி கல்லூரியில் சேர்ந்த ஓர் மாணவி யை நான் சந்திக்க நேர்ந்தது. மருத்துவத்தில்  என்ன பிரிவு எடுக்க விருப்பம் என்று நான் கேட்டதற்கு அந்தப் பெண் ஏதோ ஒரு பிரிவைக் கூறினார். நான் பெண்களுக்கு மிகவும் பொருத்தமான மகப்பேறு மருத்துவம் படிக்க அபிப்பிராயம் தெரிவித்தேன்.


நமது நாட்டின் ஜனத்தொகையை பார்க்கும்போது இதற்கு நல்ல வாய்ப்பு உண்டு. நிறைய வருவாய் ஈட்டவும் வாய்ப்புண்டு. இதற்கு முதலீடு எதுவும் தேவையில்லை. ஒரு குழந்தையை இவ்வுலகில் கொண்டுவந்த திருப்தி உண்டு. ஆராய்ச்சி செய்து கர்பிணிகளின் பிரச்சனைகளை தீர்க்க வழி உண்டு.


அவருக்கு அதில் விருப்பம் இல்லை. தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. பெண்கள் மகப் பேறு மருத்துவம் எடுக்கவில்லை என்றால் அந்தத் துறையில் மருத்துவர்கள்  குறைந்து விடுவார்கள் என்று கூறினேன். ஆண்கள் மகப் பேறு பார்த்தால் பெண்களின் கஷ்டத்தையும் தர்ம சங்கடத்தையும் எடுத்துக் கூறினேன்.


இந்தியக் கலாசாரமும் பண்பாடும் மேலை நாடுகளில் இருந்து மாறுபட்டது. ஒரு பெண் மற்ற பெண்களில் நலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்.  எந்தத் துறையை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பது அவர்கள் உரிமை. இருந்தாலும் மற்ற பெண்களில் கஷ்டங்களையும் நலத்தையும் கருதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.





THE ECONOMICS I KNOW / எனக்குத் தெரிந்த பொருளாதாரம்

THE ECONOMICS I KNOW 
1. The price level is directly proportional to the money in circulation. That is, more the money, more the price. Lesser the money, lesser the price.
2. The price level is directly proportional to the demand for a product. That is, more the demand more the price. Lesser the demand, lesser the price.
3. The price level is inversely proportional to the production. That is more the products, lesser the price. Lesser the products, more the price.
4. The Reserve bank controls the money, the Govt controls the price and agriculture and industry control the production.
5. If the production is more, lesser the demand and lesser the price.
6. So the economy is in the hands of hard-working people.

For the development of the country, people should follow the points given below.


1. People should lead an honest life.

2. Taxes due to the Govt should be paid on time.
3. They should not support bribery and corruption.
4. People should respect and obey the law.
5. They should lead an economical life.
6. People should boycott foreign goods.
7. They should shun violence.
8. Women must be respected and taken care of.
9. Parents should be taken care of.

எனக்குத் தெரிந்த பொருளாதாரம் 

1. விலை வாசி நாட்டில் உள்ள பணப் புழக்கத்திற்கு நேரிடையானது. அதாவது, அதிகப் பணம் புழங்கினால், அதிக விலை, குறைந்த பணம் புழங்கினால் குறைந்த விலை இருக்கும்.
2. விலை வாசி நாட்டில் உள்ள பொருளின் தேவைக்கு நேரிடையானது. அதாவது, அதிகத் தேவை, அதிக விலை. குறைந்த தேவை குறைந்த விலை.
3. விலை வாசி நாட்டில் உள்ள பொருளின் தயாரிப்புக்கு நேர் எதிரிடையானது. அதாவது, அதிகத்  தயாரிப்பு, குறைந்த விலை. குறைந்த தயாரிப்பு அதிக  விலை.
4. நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தை ரிஸர்வ் வங்கி கட்டுப் படுத்துகிறது. அரசாங்கம், விலை வாசியைக் கட்டுப்படுத்துகிறது. விவசாயம் / தொழில் துறை, பொருட்கள் உற்பத்ியைக் கட்டுப் படுத்துகிறது.
5. பொருட்கள் உற்பத்தி அதிகம் ஆனால், தேவைகள் குறையும், விலை வாசி குறையும்.
6. அதனால், விலை வாசி, உற்பத்தி செய்யும் விவசாயம் / தொழில் துறை மக்கள் கையில் இருக்கிறது.

நாடு முன்னேற, மக்கள் பின் வரும் வழி முறைகளைப் பின் பற்ற வேண்டும்


1. மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.

2. வரிகளை சரியாக கட்ட வேண்டும்.
3. லஞ்சம், ஊழலுக்கு  ஆதரவு தரக்கூடாது.
4. சட்டத்தை மதிக்க வேண்டும்.
5. சிக்கனமாக வாழ வேண்டும்.
6. வெளி நாட்டுப் பொருள்களை விலக்க வேண்டும்.
7. வன்முறையை தவிர்க்க வேண்டும்.
8. பெண்களை மதித்து வாழ வேண்டும்.
9. பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும்.



Sunday, December 3, 2017

நான் ஒரு விற்பனையாளன்

1967 இல் நான் முதல் முதல் சென்னையில் காலடி எடுத்து வைத்த பொழுது, முதலில் கிடைத்த வேலை ஒரு துணி கடையில். காலை 9 முதல் 1 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வேலை. உயிர் போய் உயிர் வரும். எப்பொழுது வேலை முடியும் என்று இருக்கும்.

உட்காரவே முடியாது. துணிகள், உடைகள் எடுத்துப் போடுவதிலும் பிறகு வாடிக்கையாளர் பார்த்து விட்டுப் போன பின் அதை திரும்பவும் மடித்து அதன் இடத்தில் வைக்கவும் நேரம் சரியாக இருக்கும். துணிகளைப்  பார்த்து விட்டு வாங்காத வாடிக்கையாளர் மீது கோபம் கோபமாக வரும்.


ஓய்வாக இருக்கும் பொழுது, மேஜையின் மேல் சிறிது சாய்ந்து கொள்ளலாம். கால்கள் இரண்டும் கடுக்கும். வேலையை விட்டு விட்டு ஓடிப் போய் விடலாமா என்று தோன்றும். போனால் சோற்றுக்கு என்ன வழி? பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்  விதி அப்படி.


பல வருடங்கள் கழித்து வாழ்க்கையில் வெற்றி அடைந்து, முன்னேறி குடும்பத்துடன் துணி  கடைக்கு போகும் பொழுது மலரும் நினைவுகள் மாதிரி பழைய ஞாபகங்கள் வரும். துணிகள் விற்கும் இடத்தில் நான் நிற்பது போல் தோன்றும். 


அங்கு நிற்கும் சிறுவனையோ சிறுமியையோ பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கும். என் மனைவி குழந்தைகளுக்கும் அவர்கள் கஷ்டத்தை விளக்கிக் கூறி இருக்கிறேன். அதனால் எப்பொழுது துணிகள் வாங்க கடைக்குச் சென்றாலும் சில தீர்மானங்களுடன் தான் போவோம். 


1.எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப் போகிறோம்? 2.யாருக்கு வாங்கப் போகிறோம்? 3. என்ன விலையில் வாங்கப் போகிறோம்? 4. என்ன கலரில் வாங்கப் போகிறோம்? 5. ஒன்று அல்லது இரண்டு கடைக்கு மேல் போகக் கூடாது. 6. பழைய உடை நல்ல நிலையில் இருந்தால் யாருக்குத் தானம் கொடுப்பது ?


இவைகளைத் தீர்மானம் பண்ணிவிட்டு கடைக்கு சென்று குறைந்த அளவு துணிகளைப் பார்த்து அதில் எது பிடிக்கறதோ அதை வாங்கிக் கொண்டு வருவோம். சிலரைப் போல கடையையே  புரட்டிப் போட்டு ஒன்றும் வாங்காமல் அடுத்த கடைக்கு போகும் பழக்கம் 
கிடையவே கிடையாது.

I MISS YOU / உன்னைத் தேடுகிறேன்

I MISS YOU
He is my FaceBook friend for a long time. He was liking and commenting on my posts regularly. I was very happy with him since he never made any negative or derogatory comments. 

Suddenly, one day he was missing. He was not seen in my posts. He may have many reasons which I did not know nor I was interested in.

After a long time, a few days back, he commented again on my post. I was so happy to get him back. I replied to his comment saying "Oh, friend, how are you? I missed you for a long time".

For this, he replied, "I am not missing. I am very well in facebook wishing my friends everyday"

"I miss you" is an expression to show care, love, affection, losing contact for long, etc. Many people think it should be used only between spouses and lovers. 

No. It is not so. Anyone can use it to show his affection to the other person when they are not able to meet in person or talk over phone and lose contact.

உன்னைத் தேடுகிறேன் 
அவர் நீண்ட நாட்களாக என் முகநூல் நண்பர். என்னுடைய பதிவுகளை தவறாமல் படித்து லைக் அல்லது கமண்ட் பண்ணுவார். ஒரு முறை கூட எதிர்மறையாக அல்லது மரியாதை இல்லாமல்  பதிவு செய்ய மாட்டார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

திடீர் என்று ஒருநாள் அவரைக் காணவில்லை. என்னுடைய பதிவுகளில் அவர் வருவதில்லை. அவருக்கு பல காரணங்கள் இருக்கலாம். எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது, விரும்பவும் இல்லை.

பல நாட்கள் கழித்து, சில நாட்கள் முன்பு எனது பதிவில் கமண்ட் செய்தார். எனக்கு அதைப் பார்த்து மிக சந்தோஷமாக இருந்தது. அவருக்கு பதில் அனுப்பினேன்."ஓ, நண்பரே. நலமாக இருக்கிறீர்களா? உங்களைக் காணாமல் பல நாட்கள் தேடுகிறேன்" என்று எழுதினேன்.

அதற்கு அவர் பதில் அனுப்பினார். "நான் ஒன்றும் காணாமல் போகவில்லை. முகநூலில் தான் தினமும் நண்பர்களுடன் இருக்கிறேன்" என்றார்.

"உன்னைத் தேடுகிறேன்" என்பது அன்பு, அக்கறை, பாசம், தொடர்பு விட்டுப் போதல் போன்ற காரணங்களுக்கு உபயோகிக்கப் படும் ஒரு சொற்றொடர். பலர் அது கணவன், மனைவி, காதலர்கள் இடையே தான் உபயோகிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.


அப்படி அல்ல. யார் வேண்டுமானாலும் தங்களிடையே உள்ள நட்பைக் காட்ட உபயோகிக்கலாம். ஒருவருக்கு ஒருவர் சந்திக்க, தொலை பேசியில் பேச முடியாமல் தொடபு விட்டுப் போகும் பொழுது அந்த வார்த்தைகளை உபயோகப் படுத்தலாம்.






Saturday, December 2, 2017

MY GRANDDAUGHTER ./ என்னுடைய பேத்தி.

MY GRANDDAUGHTER .
There is no denying fact that the grandchildren are more loved than our own children because we were chasing after the money. We did not have the time to spend with our children. I have two grandsons and one granddaughter. They are 19, 14 and 9 respectively.

Recently we celebrated the 10th birthday of our granddaughter on 8th Nov 2018. She is now 9 years old. Since I am living with my son, I am able to observe her from close quarters. I love my granddaughter because of the following special traits.


1. At a tender age of 9, she is able to sympathize with my hearing inability to tell me anything close to my ears or by signs.

2. Even if she is late, she never failed to come to my room to say "bye" before leaving for school.
3. She never missed to give me a share, whenever she got any snacks or sweets.
4. She always carried a storybook with her to read during a journey or any spare time.
5. She is in 4th std. She is so kind-hearted to teach lessons to the neighbour's son studying in 2nd std.
6. She has wonderful dress sense and she selects her own dress while buying or for going out.
7. She has a melodious voice and sings beautifully.

என்னுடைய பேத்தி. 

சொந்தக் குழந்தைகளை விட பேரக் குழந்தைகள் மிகவும் பிரியமானவை என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால், நமக்கு குழந்தைகள் பிறக்கும் பொழுது நாம் பணத்தைத் தேடிக்கொண்டு இருந்தோம். அவர்களை கவனிக்க, அன்பு காட்ட நமக்கு நேரம் இல்லை. 

எனக்கு இரண்டு பேரன்களும், ஒரு பேத்தியும் இருக்கிறார்கள். அவர்களுக்கு 18, 13, 8 வயது ஆகிறது. சமீபத்தில், 2017, நவம்பர் மாதம் 8 ஆம் தேதி என்னுடைய பேத்தியின் பிறந்த நாளை மிக விமரிசையாகக் கொண்டாடினோம். 


அவளுக்கு இப்பொழுது 8 வயது ஆகிறது. நான் என்  மகனுடன் தங்கி இருப்பதால், அவளை பக்கத்தில் இருந்து கவனிக்க முடிகிறது. அவளுடைய கீழ்க்கண்ட குணங்களுக்காக நான் அவளை மிகவும் விரும்புகிறேன்.


1. எனக்கு காது கேட்காது. நான் படும் கஷ்டத்தை நன்றாக உணர்ந்து, இந்தச் சிறிய வயதிலும், எதை என்னிடம் சொல்வது என்றாலும் என் காதுக்கு அருகில் வந்து சொல்வாள்.

2. கால தாமதம் ஆனாலும், பள்ளி செல்லும் பொழுது என் அறைக்கு வந்து என்னிடம் பை [BYE] சொல்லாமல் போக மாட்டாள்.
3. தித்திப்போ, காரமோ யார் எது கொடுத்தாலும் எனக்கு கொஞ்சம் கொடுக்காமல் சாப்பிட மாட்டாள்.
4. அவளுடைய ஓய்வு நேரத்திலும், பிரயாணம் செய்யும் போதும் படிக்க கையில் ஒரு புத்தகம் இல்லாமல் போக மாட்டாள்.
5. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவள், முதல் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டுப் பையனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு அன்புள்ளம் கொண்டவள்.
6. தன்னுடைய உடையில் அதிக கவனம் உள்ளவள். வெளியே செல்லும் பொழுதும், கடையில் ஆடை வாங்கும் பொழுதும் தன்னுடைய உடையைத் தானே தேர்ந்து எடுப்பாள்.
7. மிக இனிமையான குரலுடன் நன்றாகப் பாடல் பாடும் திறமை கொண்டவள்.



YOU CAN ALSO WRITE / நீங்களும் எழுதலாம்.

YOU CAN ALSO WRITE

Good communication through writing is the essence of life. Whether it is one para or one page, either English or Tamil, never be satisfied with what you have drafted. In case you have any doubt, refer to Google for grammar, usage, meaning, spelling, synonyms [words with similar meaning], etc. The more you use Google, the more the knowledge you gain. 

You read the passage again and again for any correction, improvement, modification, comprehension, etc. Do not hesitate or feel shy to clear your doubts from a learned person. Only when you are fully satisfied with the passage, you decide to publish it. 

To learn swimming, you must plunge into the water. You cannot learn on the floor. There is nothing impossible in this world. I wish you all success in good writing.

1. Express in simple words what you have in your mind.

2. Say a few words about the book you have recently read.

3. Post articles of value by our gurus like Paramacharya.

4. Write about a good movie you have recently seen.

5. Comedy tracks/songs from movies.

6. Post about the good music you have enjoyed.

7. Post poems by great authors like Thiruvalluvar etc.

8. Narrate an incident that happened to you today

9. Write about your past memories which are not secret/hurting

10. Write something you think useful for the younger generation.

11. Recent developments in engineering, medicine, etc

12. Any other item of your choice.

நீங்களும் எழுதலாம்.

நல்ல கருத்துக்களுக்கு வரி வடிவம் கொடுப்பது வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. ஒரு பாராவோ, பக்கமோ, ஆங்கிலம் அல்லது தமிழோ நீங்கள் எழுதியதில் சீக்கிரம் திருப்தி அடையக்கூடாது. இலக்கணம், அர்த்தம், போன்ற எந்த விதமான சந்தேகங்களுக்கும் கூகில் வலைத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம். கூகில் வலைத் தளத்தை அதிகம் உபயோகப் படுத்தினால்  அதிக அறிவு உண்டாகும். 

எழுதியதை பலமுறை படித்து, திருத்தங்கள், மாற்றங்கள், சுருக்குதல் எல்லாம் செய்ய வேண்டும். எந்த விதமான சந்தேகங்களுக்கும் அறிவில் சிறந்த பெரியவர்களை கேட்க வேண்டும். நீங்கள் எழுதியதில் முழுத் திருப்தி அடைந்த பிறகு அதைப் பதிவு செய்ய வேண்டும். 

நீச்சல் கற்றுக்கொள்ள தண்ணீரில் இறங்கினால் தான் கற்க முடியும். வெறும் தரையில் கற்க முடியாது. இந்த உலகத்தில் முடியாதது என்பது எதுவும் இல்லை. நீங்கள் நன்றாக எழுத என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

1. உங்கள் மனதில் தோன்றும் நல்ல விஷயத்தை சிறிய வார்த்தைகளில் எழுதுங்கள்.

2. நீங்கள் படித்த நல்ல புத்தகத்தைப் பற்றி எழுதுங்கள்.

3. பரமாச்சாரியா போன்ற ஞானிகள் கூறிய விஷயங்களை எழுதுங்கள்.

4. நீங்கள் கண்டு ரசித்த திரை படத்தைப் பற்றி எழுதுங்கள்

5. நல்ல திரைப்படப் பாடல்கள், நகைச்சுவை நிகழ்ச்சி பற்றி எழுதுங்கள்.

6. நீங்கள் விரும்பிக் கேட்ட கர்நாடக சங்கீதத்தைப் பற்றி எழுதுங்கள்.

7. திருவள்ளுவர் போன்ற சிறந்த கவிகள் எழுதிய பாடல்களைப் பற்றி எழுதுங்கள்.

8. அன்று நடந்த ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியைப் பற்றி எழுதுங்கள்.

9. உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சியைப் பற்றி எழுதுங்கள்.

10. இளைய தலைமுறைக்கு உபயோகமான நல்ல விஷயங்களைப் பற்றி எழுதுங்கள்.

11. மருத்துவம், பொறியியல் துறையில் உள்ள முன்னேற்றததை பற்றி எழுதுங்கள்.

12. உங்களுக்கு தோன்றும் வேறு நல்ல விஷயங்களைப் பற்றி எழுதுங்கள்.

Friday, December 1, 2017

DRESSES / ஆடைகள்

The dress is one of the three necessities of life viz food, shelter and clothing. It is just to protect us from the weather. We give a lot of importance to the dress. There are two different attitudes in dressing. 1. To dress for self-satisfaction. 2. To dress for other's appreciation. Most people dress for other's appreciation.

The irony is, no one observes what the other person is wearing. Everyone is busy on his own. You tell me honestly how many times you have observed other's dresses. No, you would not have done. Unless it is unbearable to look at or something very super and special, no one bothers.


I am unable to understand why people give so much importance to dresses. In the case of a new dress, you have an interest-only on the first time you wear it. Next time you don't give any importance to it. My suggestion is to wear a dress that is suitable for your age, profession, status, occasion and personal liking.



உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை மூன்றும் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. உயிர் வாழ இவை அவசியம். இவற்றில் நாம் உடைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

உடை அணிவதில் இரண்டு வகை உண்டு. 1. தனது திருப்திக்காக அணிவது. 2. பிறர் பாராட்டுவதற்காக அணிவது. எல்லோரும் பிறர் பாராட்டுவதற்கே உடை அணிகிறார்கள். ஏன் என்றே தெரியவில்லை.

இதில் அதிசயம் என்னவென்றால், யாரும் பிறர் என்ன ஆடை அணிந்து இருக்கிறார்கள் என்று கவனிப்பதே இல்லை [பெண்களைத்தவிர]. அவரவர் வேலையை பார்க்கவே நேரம் சரியாக உள்ளது. 

எங்கே நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் எத்தனை தடவை பிறர் ஆடையை ரசித்துப் பார்த்து இருக்கிறீர்கள்? முடியாது. நீங்கள் பார்த்தே இருக்க மாட்டீர்கள். அது பார்க்க சகிக்காமல் அல்லது புது விதமாகவோ இருந்தால் தான்.

உடைக்கு என் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு புது ஆடை வாங்கி அதை ஒரு முறை அணிந்தவுடன், அது பழசு ஆகிவிடுகிறது. அதில் உள்ள ஆர்வம் போய் விடுகிறது. அதை அப்புறம் கவனிப்பதே இல்லை. 

நமது வயது, உத்யோகம், தகுதி, சந்தர்ப்பம், சுய விருப்பம் இவைகளுக்கு தகுந்தால் போல் ஆடை அணிவது சிறந்தது. என்ன நான் சொல்வது சரிதானே?