Monday, August 30, 2021

ஶ்ரீ மஹா பெரியவா உபவாசம்.[ FASTING BY SRI PARAMACHARYA]

ஏகாதசி விரதம் இருக்கிற சமயத்துல பால்.மோர் இப்படி உப்புப் போடாத நீர் ஆகாரத்தை ரொம்ப கொஞ்சமா எடுத்துக்கலாம் அப்படிங்கறது விரத விதியிலேயே இருக்கு. அதனால, விரதம் இருக்கிற அன்னிக்கு கொஞ்சமா பால் மட்டும் ஒரே ஒருதரம் எடுத்துப்பார் பரமாசார்யா.

While fasting on Ekadasi day, there is an exception to the rule, that milk without sugar or buttermilk without salt is permitted to be taken in a little quantity. Paramacharya used to take a little quantity of milk without sugar.

ஒரு சமயம் அவர் முகாமிட்டிருந்த இடத்துல மின்சாரம் பழுது பார்த்திண்டிருந்தார் மகாராஷ்ட்ரா ஆசாமி ஒருத்தர். அன்னிக்கும் ஏகாதசிதான். கார்த்தால வேலையை ஆரம்பிச்சவர் உச்சிப்பொழுது நெருங்கியும் அப்படி இப்படி நகரவே இல்லை.

In a place where he was camping, he found an electrician working without going for lunch. It was also an Ekadasi day.

எல்லாத்தையும் கவனிச்சுண்டு இருந்த பெரியவா, " அந்த ஆசாமி பாவம்.எதுவுமே சாப்டாம வேலை பார்த்துண்டு இருக்கான். சாப்டு வந்து வேலை செய்யச் சொல்லு" அப்படின்னு பக்கத்தில இருந்த சீடன்கிட்டே சொன்னார்.

Paramacharya directed his assistant to tell the person to continue the job after taking his lunch.

அதைக் கேட்டுண்டு இருந்த அந்த ஆசாமி, "சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன். அதனால நான் சாப்பிடலையேன்னு நீங்க வருத்தப்படாதீங்க!" அப்படின்னு சொன்னான்.

The electrician replied, that being an Ekadasi day, he will not touch even water. So please do not worry about my taking lunch.

அதைக் கேட்டாரோ இல்லையோ,உடனே பதறிட்டார் பரமாசார்யா. "ஒரு சாமான்யன் நிர்ஜலமா உபவாசம் இருக்கான் . சன்யாசி நான் பால் குடிச்சுண்டு இருக்கேனே. இது தப்பில்லையோ..!" 

Paramacharya was surprised that a layman is observing Ekadasi in a strict manner whereas he, a Sanyasi, is drinking milk. Is it not wrong? 

அப்படின்னு சொல்லிட்டு அன்னிலேர்ந்து ஏகாதசி அன்னிக்கு கொஞ்சம் பால் குடிச்சுண்டு இருந்தாரே, அதையும் நிறுத்திட்டு நிர்ஜல உபவாசத்தை அனுஷ்டிக்க ஆரம்பிச்சுட்டார் பெரியவா.

Saying this, he started observing fasting without even drinking water on Ekadasi from that day onwards.

அதுவும் எப்படித் தெரியுமா? ஏகாதசி அன்னிக்கு நிர்ஜல உபவாசம். மறுநாள் பாரணை பண்ணணும் இல்லையா? சாஸ்திரப்படி துவாதசி அன்னிக்கு ஸ்ரவண நட்சத்திரம் அமைஞ்சுட்டா அன்னிக்கும் துளி ஜலம் கூடக் குடிக்கக் கூடாது.

Do you know how he followed? On Ekadasi full fasting. On the next day, he can eat. But if Shravana star falls on Dwadasi, he has to fast without water.

அதனால அன்னிக்கும் உபவாசத்தைத் தொடர்வார் மகாபெரியவா. மறுநாள் பிரதோஷம். அன்னிக்கு பகல்ல சாப்டக்கூடாது. சாயந்திரம் சிவபூஜை ஆனப்புறம்தான் சாப்டலாம்.

The next day is monthly Pradosham. He cannot eat during the daytime. He can eat only after Siva Puja in the evening and sunset.

அதேசம்யம் பிரதோஷம் ஞாயித்துக்கிழமைல அமைஞ்சுட்டா, சூரியன் அஸ்தமிச்சப்புறம் சாப்டக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசம்தான். நாலாவது நாள் மாச சிவராத்ரி. அதனால அன்னிக்கும் உபவாசம்.

If Pradosham falls on a Sunday, he cannot eat after sunset. So he has to fast on that day also. The next day is the monthly Sivarathri. He will fast on that day also.

ஆக, தொடர்ந்து நாலுநாள் ஒரு சொட்டு ஜலம்கூட அருந்தாம விரதம் அனுஷ்டிப்பார் பரமாசார்யா.

So he used to fast for four days continuously without even drinking a drop of water.

ஜய ஜய சங்கர! Jaya Jaya Sankara.

ஹர ஹர சங்கர! Hara Hara Sankara

 

Saturday, August 28, 2021

அய்யாவா? ஐயாவா?

சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் "அய்யா" என்று எழுதுகின்றனர். எப்படியும் எழுதலாம் என்பது ஒருமுறை, இலக்கணம் இப்படித்தான் கூறுகிறது, எனவே, அப்படித்தான் எழுத வேண்டும் என்பது ஒருமுறை,

எதுசரி?

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி" தமிழ்க்குடியாகும். உயிர் உடல் ஆயுதம் இவற்றோடு தோன்றிய தமிழர், தாம் பேசும் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்களையும். மெய்யெழுத்துக்களையும் ஆயுத எழுத்துக்களையும் உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை வளர்த்துள்ளனர்,

ஒரு இயந்திரத்தைத் தயாரித்தவர், அதற்கான Operation Manual கொடுப்பது போன்று, சங்கத்தமிழர் தமிழுக்கு இலக்கணம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்,

தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். 

எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன. உதாரணமாக "மகன்" என்று சொல்லுக்கும் "மகான்" என்ற சொல்லுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. பகவனுக்கும் பகவானுக்கும் வேறுபாடு உண்டு. இவ்வாறாகப் பல உதாரணங்களைக் கூறலாம். 

எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும். சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் "அய்யா" என்று எழுதுகின்றனர். 

ஐயா என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத் தாகும். இரண்டு மாத்திரை அளவு உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ள தாகும். "ய்"என்பது மெய் யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.

ஐ நெடில் = 2 அளவு

அ குறில் = 1 அளவு

ய் ஒற்று = ½ அளவு

அய் = 1+½ = 1 ½ அளவு

"ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயா" என்றால் "தலைவா" என்று மரியாதை நிமித்தமாக அழைப்பது என்று பொருள். "அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை. "அய்யா" என்றாலும் பொருள் ஏதும் இல்லை!

எனவே மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தும் ஒரு சொல்லைக் குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும். நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும்.

எனவே "ஐயா" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். "அய்யா" என்ற பொருளற்ற சொல்லைத் தவிர்க்கலாம், 

 

Monday, August 23, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1711 TO 1725

1711. சங்கு சக்கரத்தோடு மகாவிஷ்ணு வந்து உபதேசம் செய்ய மாட்டார். நம் நல விரும்பிகள் மூலம் சொல்லுவார்.அதைக் கேட்பதும் விடுவதும் நம் இஷ்டம். 

1712. பலர் வெற்றி தன்னைத் தேடி  வரவில்லையே என்று வருத்தப் படுகிறார்கள். அது தவறு. அவர்கள் தான் வெற்றியைத் தேடிப் போக வேண்டும்.

1713. கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. பிச்சை எடுத்தாவது கல்வியை கற்க வேண்டும். பிறகு  எல்லா விதமான  சந்தேகங்களும் அகன்று விடும்.

1714. சமூக அந்தஸ்த்தில் உள்ள சிலர், கற்றறியாமல் கூறும் சில அபத்தங்களை, உண்மை என்று பாமரர்கள் நம்புவது, மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

1715. அதிகமாகப் பேசாதவர்களை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவர்களை உலகம் மதிக்கிறது. நன்கு செயலாற்றுபவர்களை உலகம் கைகூப்பி வரவேற்கிறது.

1716. தன்னை ஒரு புத்திசாலி என்று நினைப்பவன் உண்மையில் ஒரு  முட்டாள். மற்றவரை முட்டாள் என்று நினைப்பவன் அவனை விட மோசமான முட்டாள்.

1717. 18 வயதில் பெண்ணிற்கு திருமணம் செய்ய வேண்டும். வயது ஆக ஆக மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் அதிகம்.

1718. கணவன் மனைவி ஒற்றுமையில் ஒரு ரகசியம் இருக்கு. மனஸ்தாபம் வரும் பொழுது மன்னிப்பு கேட்பதில் யார் முதலில் என்று போட்டி இருக்க வேண்டும்.

1719. மனைவி வெளியே தெரிய அழுகிறாள். கணவன் உள்ளே அழுகிறான். பிரச்சனையை வளர விடக்கூடாது. அன்றையப் பிரச்சனையை அன்றே தீர்த்து விட வேண்டும்.

1720. கணவன் மனைவி இடையே சண்டைக்குப் பின் வரும் சமாதானம் சிறந்தது. அதைவிட இருவர் இடையே எந்த ஒரு சண்டையும் இல்லாத சமாதானம் மிகச் சிறந்தது.

1721. லஞ்சம் சமூகத்தில் ஊடுருவிய ஒரு புற்று நோய். வாங்குபவனும், கொடுப்பவனும் மறுத்தால் அன்றி சமூகத்தில் இருந்து அதை ஒழிக்கமுடியாது.

1722. உங்கள் மனதைக் கேளுங்கள்.காமம், கோபம், ஆசை, பற்று, கர்வம், பொறாமை இவை எல்லாம் உள்ளே இல்லை என்றால் உங்களுக்கு மோட்சம் மிக அருகில்.

1723. நமது பார்வை நன்றாயிருந்தால் உலகம் அழகாகத் தெரியும். வாக்கு நன்றாயிருந்தால் உலகம்  நேசிக்கும். இதயம் நன்றாயிருந்தால் உலகை வெல்லலாம்.

1724. காரணம் தெரியவில்லை. மனைவியுடன் மனஸ்தாபம். இரவு சளி பிடித்தது, தைலம் தடவினாள், மன்னிப்புக் கேட்டேன். வைரஸ் ஆக வந்தது யார் தெரியுமா?

1725. நான் நினைக்கிறேன், நல்லவர்களை காக்கவும், கெட்டவர்களை அழிக்கவும் இறைவன் கலியில் , வைரஸ் / பாக்டிரியா வாக அவதரித்துள்ளான்.

 

Friday, August 20, 2021

MOUNAM KALAHAM NASTHI

 Mounam kalaham naasti ! ( No quarrel if we are silent )

Long ago, a merchant was travelling to the city. He was riding on a horse. On the way, he wanted to take a rest for a while, hence he tied his horse to a nearby tree.

At the same time, a soldier had come on the way. Even he was riding on a horse. He was about to tie his horse to the same tree where the merchant had tied his horse. On seeing that, the merchant raised his objection saying that his horse is wild and it will not mingle with other horses. If it finds other animals nearby, it will surely harm it.

The soldier heard this. But he laughed at his words and tied his horse to the same tree. The merchant did not say anything. Both of them left the place for a while. At that time, a fight took place between the two horses. As the merchant's horse was stronger, it had broken the leg of the soldier's horse.

The soldier's horse is now injured and it was bleeding. After some time, both of them returned and the soldier saw the condition of his horse and he was very angry. The Soldier went to a judge nearby with a complaint against the merchant. The judge heard the complaint and asked the merchant whether the allegations of the soldier are true?

The Merchant did not reply. He kept silent. Judge asked the same question again and again. But the merchant was silent all the time. The judge thought that the merchant must be dumb and hence he was not answering. The judge told the soldier "Since your rival party is not saying anything, I am dismissing the case. I can not give any judgment".

By hearing that, the soldier was very upset and said to the judge " Sir, the merchant is doing a drama. He can talk. He, himself had told me that his horse is harsh and it may harm my horse if I tie my horse with his. But I did not listen to him. Now he is acting like a dumb ."

By listening to this, the judge smiled and said " Now you have told the truth. There is no fault on the merchant. He had cautioned you against your action. But you did not listen to him". And the Judge dismissed the case.

MORAL: Being silent, we can avoid any harmful situations.


Sunday, August 15, 2021

சிரிப்பு வெடிகள் -- 14

1. தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...? 

தெரியலையே.... என்னது? 

தலையிலே முடி இருக்கிறது தான்...!

---------------------------

2. செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.

செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது

---------------------------

3. ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!

கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!

---------------------------

4. டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க..!

பேஷண்ட்: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

---------------------------

5. ராத்திரியில சூரியன் எங்கே போகுது?...

எங்கேயும் போகல...., இருட்டா இருக்கிறதால

நம்மால அதை பார்க்க முடியலை!.

---------------------------

6. கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!

டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!

---------------------------

7. சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா போட்டுருக்காங்க?

ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும்!

---------------------------

8. உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?

ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது.

****************************** 

Thursday, August 12, 2021

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் 166 TO 180

166. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

167. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

168. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.

169. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

170. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.

171. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.

172. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால்அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

173. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.

174. அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.

175. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையைசிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

176. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.

177. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.

178. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

179. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

180. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான். 

Sunday, August 8, 2021

அவ்ளோதாங்க வாழ்க்கை!!!

1. முதல் மூன்று  தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமானு கேட்குறாங்க! அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமானு கேக்குறாங்க!! ஏன்?

2. மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட, நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான் ஆண்களுக்கு தேவை!!!

3. சுடுகாடு சுடுகாடு னு கேவலமா பேசதீங்க அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்!!!

4. ரேஷன் கார்டு படம் 15 வருஷத்துக்கு முன்ன நாம  எப்படி இருந்தோம்னு காட்டுது! ஆதார் 15 வருஷத்துக்கு அப்புறம் எப்படியிருப்போம்னு காட்டுது!

5. வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு வெளுத்தாலும், வெளியில் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல, எங்களை அடிச்சிக்க முடியாது!!!

6. உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான் ஆகணும் -பழமொழி. கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்-புது மொழி.

7. பட்டுச்சேலை கட்டுனா எல்லா பொண்ணுக்கும் எடுப்பா தான் இருக்கும்! ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான் கடுப்பா இருக்கும்!!

8. மாசத்துக்கு ஒரு நாள் தான் சம்பளம் தராங்க! ஆனா வேலை மட்டும் தினமும் தராங்க!!

9. கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் "திதியும்" இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது..!!

10. வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்! வசதி  இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்!!

11. யாரோ பெத்த புள்ளயை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க சோறு போடும் அந்த உயர்ந்த உள்ளம் தான் ஆண்.

12. கல்யாணம் ஆன பின் ஒன்னு அடி விழும்!  இல்ல, முடி விழும்!! அவ்ளோதாங்க வாழ்க்கை!!!

13. எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும்னு சொல்றாங்க எதையும் சாப்பிடலைன்னா அல்சர் வரும்னு சொல்றாங்க. 

Wednesday, August 4, 2021

THE GENERATION GAP

"Amma, we are going to the mall for shopping, then for a movie, and then to a restaurant for dinner. Please get ready in an hour.", said the son to his mother.

"No Son,  You go ahead.  I have pain in my legs. I am not interested in coming." replied his mother.

" Grandma, if you don't come, I am not going," said his 10-year-old granddaughter vehemently.

" Dear, grandma's legs are paining. She cannot climb the steps in the Mall.  She does not know how to use the escalator. She is interested only in visiting temples."* said the daughter-in-law.

The granddaughter did not agree and she was adamant.  She refused to come if Grandma was not coming.  Grandma had to agree reluctantly to go with them.

The granddaughter was happy. Both got ready before her parents. Then the kid applied some pain relieving cream on grandma's legs and took her grandma to the lawn. 

She drew two parallel lines, a foot apart on the floor.  She told her grandmother to keep one leg on one line and raise the other leg and place it on the other line.  

"What is this my dear?"  asked Grandma...

"This is called Crane game, Grandma.  I will show you how to play."Both of them played a few times and before the parents are ready, grandma was adept in the game.

In the car, the kid sat with her granny. They went to the mall first. At the escalator, the parents were wondering how the old lady was able to manage to go on the escalator effortlessly.   

As done in the Crane game,  grandma raised her right foot and placed it on the moving steps and simultaneously raised the other leg and placed it on the next up-coming step.

That way she used the escalator easily to reach the top, much to the surprise of her son and daughter-in-law.  Then both of them moved up and down several times and had fun.  

Then they went to the theatre.  As it was cold due to the AC, the granddaughter took out a shawl from her bag and covered the old lady, with a smile.  She came prepared for this!  

After the movie, they went to the restaurant.  When the son asked his mother what she wanted, the granddaughter took the menu card and gave it to grandma.     

"Granny, you know how to read English; go through the menu and order whatever you want".  Grandma read the menu and suggested the dishes she wanted. 

After the meal, Grandma went to the restroom.  Using that occasion, the father asked his daughter how she knew the needs of her grandmother.

The kid replied, "Dad, when a child is taken out, you take milk bottle, diapers, wipes, etc.!?. Granny would have done that to you when you were young. The same consideration is to be given to her now.

"Why do you presume that she is interested only in temples? She also has normal wishes like going out with family and having fun. She may not openly tell you, but we have to understand and make her enjoy life"

The father was speechless.  However, he was happy and wondered how his ten-year-old daughter was able to read the mind of his seventy-year-old mother. Is it the generation gap?

 

Sunday, August 1, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1696 TO 1710

1696. இறைவன், பேச ஒரு வாயும், கேட்க இரண்டு காதுகளும், படைத்ததன் நோக்கமே, குறைவாக பேசவும், அதிகமாக கேட்கவும் வேண்டும் என்பதற்காகவே..!

1697. அறிவுரை கூறுவதை விட அக்கறை கொள்வது சிறந்தது. புகழ்வதை விட ஊக்கப் படுத்துதல் சிறந்தது. வாழச் சொல்வதை விட வாழ வைப்பது சிறந்தது.

1698. வாழ்க்கையில் சந்தோஷங்கள் வரும்போது அவற்றை அனுபவிப்பது போல, கஷ்டங்கள் வரும்போதும் அவற்றை அனுபவிக்க மனது வேண்டும்.அதுவே மனமுதிர்ச்சி.

1699. இருளாக  இருக்கும் வானத்தைப் பார்க்கக் கூடாது. அதில் அழகாக ஒளிரும் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்க்க வேண்டும். அதுதான் மகிழ்ச்சி.

1700. ஆற்றில் வெள்ளம் வரும்போது, இடுப்பில் கயிரைக் கட்டிக் கொண்டு கடக்கலாம். முடியவில்லை என்றால் அதே கயிரைப் பிடித்துக்கொண்டு திரும்பலாம்.

1701. யுதிஷ்டிரன் கூறுகிறார்: நேர்மையான மனிதனை இயற்கை காக்கிறது. பணமோ, படிப்போ, பதவியோ, உறவோ அல்ல. நேர்மை இல்லாதவனை அந்த இயற்கையே கொல்கிறது.

1702. பெண்கள் வெளியே வேலை செய்து, சம்பாதித்து, குடும்பத்திற்கு உதவுவது சந்தோஷமா அல்லது வீட்டில் இருந்து குடும்பத்தை பராமரிப்பது சந்தோஷமா?

1703. நான் காதி [KHADHI] தயாரிக்கும் தேன்[HONEY] கலந்த ஓட்மீல் [OATMEAL] சோப் உபயோகிக்கிறேன்.நீங்களும் உபயோகித்து பலன் அடையுங்கள்.

1704. இரவு ஒரு மணிக்கு மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் ஹோட்டலில் சூடாக இட்லி நெய் சாம்பார் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறதா உங்களுக்கு?

1705. ஆண்களுக்கு சமம், அவர்களுக்கு மேல் என்ற பெண்களின் முழக்கமெல்லாம் அவர்களது படுக்கை அறையில் ஒரு கரப்பான் பூச்சியை பார்க்கும் வரை தான்.

1706. டிஎம்எஸ் கணீர் குரல், ஏஎம் ராஜா இனிமையான குரல், ஜேசுதாஸ் இரண்டும் சேர்ந்தது, பிபி ஸ்ரீனிவாஸ் மூன்றும் சேர்ந்தது, எஸ் பி பி நான்கும் சேர்ந்தது.

1707. நான் உன்னை நேசிக்கிறேன் "I love you" என்று உங்கள் வாழ்க்கைத் துணையிடம் தினம் ஒருமுறையாவது  கூறுங்கள். அதன் பலன் கைமேல் தெரியும்.

1708. தினம் காலையில், வெறும் வயிற்றில், ஒரு தேக்கரண்டி உருக்கிய நெய் அருந்தி பிறகு காபி அல்லது தேனீர் குடித்தால் ஆரோக்கியம் என்கிறது ஆயுர்வேதம்.

1709. ஒருமுறை காய்ச்சி உபயோகித்த எண்ணையை மறுமுறை காய்ச்சக் கூடாது. அதனால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புண்டு தெரியுமா?

1710. தேவையில்லாமல், டாக்டர் பரிந்துரை இல்லாமல், வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவது உடல்  ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. தெரியுமா?