Wednesday, January 30, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1051 TO 1065

1051. இளைய தலைமுறையினர் இன்றய பாடல்களை விரும்புகிறார்கள்.பழைய பாடல்களை விரும்புவதில்லை. முந்திய தலைமுறையினர் அதற்கு நேர் எதிர்மாறு. ஏன்?

1052. பிறர் தவறை மன்னிப்பது என்பது ஒரு அருமையான குணம். தனது மனைவியையே கடத்திய பகைவனை, மன்னித்த ஸ்ரீராமபிரான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

1053. பயணம் செய்யும் போது,சில வறியவர்கள் தங்கள் கைகளால், ,அவர்கள் வயிற்றிலேயே தாளம் போட்டுக்கொண்டு, அருமையாகப் பாடுவதை கவனித்தது உண்டா?

1054. சும்மா இருத்தலே சுகம் என்று மௌனியாய் சும்மா இருக்க அருளாய். சுத்த நிர்குணமான பரதெய்வமே, பரஞ்சோதியே, சுகவாரியே. [தாயுமானவர்] 

1055. தவத்திரு தாயுமான அடிகள் இயற்றிய "பராபரக்கண்ணி" பாடல்கள் மொத்தம் 389. ஒவ்வொரு பாடலும் "பராபரமே" என்று இறைவனை துதித்து முடிவு பெறும்

1056. ரெடிமேட் ஆடைகள் அநியாய விலையில் விற்கப் படுகிறது.அதன் விலை நியாயமா என்று சிறிது யோசித்து பார்த்து பிறகு வாங்குவது மிகவும் சிறந்தது

1057. அநியாய விலை கொடுத்து ரெடிமேட் ஆடைகள் வாங்குவதற்கு பதிலாக, துணி வாங்கி தைத்துக் கொண்டால், செலவும் குறைவு, அளவும் சரியாக இருக்கும்.

1058. எல்லோருக்கும் அவரவர் தாய்மொழி சிறந்தது.ஆனால் சிலர் எப்போதும் அவரது மொழியை பாராட்டிப் பேசுவார் அல்லது பிறர் மொழியைக் கேலி செய்வார்.

1059. சிலர் வெற்றி அடைவதற்காக சிறந்த முறையில் எழுதுவார்கள். வெற்றி அடைந்த பிறகு, உளற ஆரம்பித்து விடுவார்கள். வெற்றியால் வந்த விளைவு இது.

1060. அது அழகானது, வெண்மையானது, ஆரோக்கியமானது, சுவையானது, எளிதில் ஜீரணமாவது, மலிவானது, சிறந்தது, எல்லோரும் விரும்புவது. அது இட்லி ஒன்றே.

1061. ரெடிமேட் துணுக்குகளை நான் உபயோகிப்பது இல்லை.சொந்தமாக யோசித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துணுக்குகள்,கட்டுரைகள் எழுதுகிறேன். நன்றி

1062. ஒரு கதை, நாட்டில் நடப்பவைகளை வைத்து எழுதப்படுகிறது. ஒரு கதையை வைத்து நாட்டில் காரியங்கள் நடக்கவில்லை. அதேபோலத் தான் சினிமாவும்.

1063. சினிமாவை நான் ரசிப்பது என் சொந்த விருப்பு வெறுப்புகளை பொருத்தது.அது சமுதாயத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியாது

1064. சினிமாவில் தொடர்ந்து கற்பழிப்பு, வன்முறை, மது அருந்துதல், ஆபாச நடனங்கள் போன்றவை காட்டப்பட்டால், அது சமுதாய சீர்கேடைக் காட்டுகிறது.

1065. சினிமா ஒரு வியாபார நோக்கம் கொண்டது. அது காலத்திற்கு, சமுதாயத்திற்க்கு தகுந்தால் போல மாறுகிறது. யாரும் நஷ்டம் அடைய விரும்புவதில்லை.






Wednesday, January 23, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1036 TO 1050

1036. பறவைகள் மிருகங்களுக்கு தீங்கு செய்யப்படவில்லை என்று திரைப்படங்களில் போடுகிறார்கள். ஆனால் பார்ப்பவர்களுக்குத் தீங்கு செய்கிறார்களே?

1037. 
ஆண்டவன் நமக்குள்ளே ஆத்மான்னு ஒரு காமெரா வச்சி ரெக்கார்ட் பண்றான். நாம பண்ற அக்கிரமத்துக்கு வட்டியும் முதலுமா ஒருநாள் வாங்கிடுவான்.

1038. 
ஒரு பாட்டின் ஜீவனே அந்தப் பாட்டின் கருத்தும் ராகமும் தான். இது இரண்டும் இல்லாத பாட்டு ஒரு பாடலே இல்லை. எப்படி அதை ரசிக்கிறார்கள்?

1039. மக்கள் செலுத்தும் வரி நாட்டு முன்னேற்றத்திற்கு செலவு செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் கட்சி பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும்


1040. இறைவனே பத்து அவதாரங்கள் தான் எடுத்தார், ஒரு நடிகர் ஏன் கணக்கற்ற திரைப்படங்களில் நடிக்க வேண்டும்? பார்த்துப் பார்த்து அலுக்கவில்லை?


1041. 
வெள்ளிக்கிழமையன்று, பெண்கள் ஒன்பது கஜம் புடவை அணிந்து ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால், குடும்பத்திற்கும் மனதிற்கும் நல்லது.

1042. அறுபது வயதுக்கு மேல் ஆகும் பெண்களின் நிலை பரிதாபம்.அப்போது மாமியார் சொல் கேட்டு நடந்தனர்.இப்போது மருமகள் சொல் கேட்டு நடக்கின்றனர்.


1043. இன்றய நிலையில் "லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பேன்" என்று உறுதி கூறும் தலைவர் தான் நமக்கு வேண்டும். எந்தத் தலைவர் உறுதி கூறுகிறார்?


1044. வெளிநாட்டில் ஒரு நாவல் வெளியாகும் போதே, அதன் நகல் இந்தியாவில் அச்சிட படுகிறது என்ற உண்மை பலருக்கு தெரியாது.விலை பத்து பங்கு குறைவு


1045. பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு விடுமா என்ன? அதற்கு அறிவு கிடையாது. அப்படித் தான் நினைக்கும். நம்ம வேலையைப் பார்ப்போம்.


1046. வயது ஆக ஆக நாக்கில் சுவை அரும்புகள் தேய்ந்து அடிக்கடி ஏதாவது சாப்பிடத் தோன்றும். அந்த ஆசையை அடக்குவதே நமது ஆரோக்கியத்தின் ரகசியம்.


1047.ஹிந்து, கிருஸ்தவர், முஸ்லிம் மூன்று மதத்தினரும் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். ஆனால் மதங்களை,புனித நூல்களை,ஆலயங்களை வெறுக்கவில்லை.


1048. உடல்நலக் குறைவு வந்து, மருத்துவரிடம் சென்ற பிறகு, அவரிடம் தனது இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற விவரங்களைக் கூறிவிட வேண்டும்.


1049. இளமையில் நன்றாகப் படிக்காமலும், பிறகு கடினமாக உழைக்காமலும், அப்போது சேமிக்காமலும் இருந்தால், முதுமையில் மிகவும் கஷ்டப்பட வேண்டும்.


1050. பல்லி நம் மீது விழுந்தால் உடனே பஞ்சாங்கத்தை எடுத்து பலன் பார்க்க கூடாது. ஏதோ பிடி தவறி கீழே விழுந்து விட்டது என்று விட்டு விடணும்.




Monday, January 14, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1021 TO 1035

1021. ஒரு மனிதனைக் கொன்று தோலை உரித்தால் எவ்வளவு வேதனைப் படுவீர்கள், அதேபோல ஒரு பிராணியைக் கொன்று தோலை உரித்தால் அதுவும் வேதனைப் படும்.

1022. புது வருட ஆரம்பத்தில் முதலில் தாய் தந்தையை வணங்குங்கள். பிறகு இறைவனை வணங்குங்கள். பிறகு விரோதம் பாராட்டாமல் அனைவரையும் வாழ்த்துங்கள்.


1023. ஸமஸ்க்ரித ஸ்லோகங்களின் அர்த்தம் தெரிந்தால் நல்லது. தெரியாவிட்டால் இறைவனுக்கு அதன் அர்த்தம் தெரியும். நாம் சரியாகச் சொன்னால் போதும்.


1024. ஐந்தறிவு நாய் ஆறறிவு மனிதனை நேசிக்கிறது. ஆனால் நாயுடன் சண்டை போடுகிறது. மனிதன் நாயை நேசிக்கிறான். ஆனால் மனிதனுடன் சண்டை போடுகிறான்.


1025. இசை இறைவனின் படைப்பு.இசையில் ராகமும் வரிகளும் முக்கியம்.வரிகள் தெரியாமல் ராகத்தை ரசிக்கலாம்.ராகம் இல்லாமல் வரிகளை ரசிக்க முடியாது.


1026. பாஷை முக்கியமில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எதையும் ரசிக்கலாம். நமது ரசிப்புத் தன்மை இன்னும் அதிகரிக்கும்.


1027. "பரியேறும் பெருமாள்" போன்ற திரைப்படங்கள் வந்தால் தான் பெரிய பெரிய ஹீரோக்களின் கொட்டமும் அடங்கும். தமிழ்த் திரை உலகமும் பிழைக்கும்.


1028. மொகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நமது விரோதிகள். கொள்ளை அடித்தார்கள். நமது அரசியல்வாதிகள் உடன்பிறப்புகள். நம்மையே கொள்ளை அடிக்கலாமா?


1029. "வெற்றி நடை போடுகிறது" என்று விளம்பரம் செய்கிறார்கள். வெற்றி நடை போடும் போது எதற்கு வீண் விளம்பர செலவு? எனக்கு ஒண்ணுமே புரியவில்லை.


1030. ஆணும் பெண்ணும் ஒரே பள்ளி, கல்லூரியில் படிப்பது அல்லது தனித்தனி பள்ளி கல்லூரியில் படிப்பது, இரண்டில் எதை நீங்கள் வரவேற்கிறீர்கள்?


1031. "பெண்கள் தற்போது நாகரீகமாக உடை உடுத்துவது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம்" என்ற கருத்தினை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?


1032. கல்வியை விட சிறந்த மூலதனம் எதுவும் இல்லை. அதனால் வரும் வருமானம், நிம்மதி, சந்தோஷம் நிலையானது. இதை நன்றாக அறிந்தவர்கள் பிராமணர்கள்.


1033. பிராமணர்களுக்கு படிப்பை தவிர வேறு தொழில் தெரியாது.அது அவர்கள் உயிர்.அதனால் இட ஒதுக்கீடை பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படுவது இல்லை.


1034. இட ஒதுக்கீடு என்பது ஒருவரது இயலாமைக்கு அளிக்கப் படும் பிச்சை என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். அதனால் அதை அறவே மறுக்க வேண்டும்.


1035. ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் தரப்படும் கடன் ரத்து, சலுகைகள், இனாம்கள், வெற்றிக்கு பின் கட்சி செலவா? அரசாங்க செலவா?