Friday, November 3, 2017

அது ஒரு கேள்விக்குறிதான்

உலக அளவில் நம் நாட்டில் தான் சினிமா மீது அதிக அளவு ஈடுபாடு காட்டுகிறார்கள். சினிமா நடிகர்களை விளம்பரங்களுக்கு உபயோகப் படுத்துவது, பால் அபிஷேகம் செய்வது, கோவில் கட்டுவது போன்ற வேலைகள் நாம் நாட்டில் தான். ஒரு ஆணை இன்னொரு ஆண் விரும்புவது இயற்கைக்குப் புறம்பானது.

தனி நபர் வழிபாடு நமது பிறப்பு உரிமை, நமது ரத்தத்தில் ஊறியது. யாரும் அதை மாற்ற முடியாது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒருவருக்கும் சினிமா பற்றித் தெரியாது. நடிப்பு என்றால் என்னவென்று தெரியாது.

அருவருப்பான ஆடைகளில் அசிங்கமான பாட்டுக்கள் பாடுவது, ஒரு ஆள், சட்டை கசங்காமல், சொட்டு ரத்தம் வராமல், பத்து பேரை பந்து ஆடுவது, இதையெல்லாம் நடிப்பு என்று எண்ணி கண் கொட்டாமல் பார்ப்பது, இது தான் நாம் அறிந்த சினிமா.

நம் நாட்டில் ஓரளவு நன்றாக நடிக்கத் தெரிந்தவர்கள் திரு. சிவாஜி கணேசன், திரு. அநுபம் கெர், திரு. பிரகாஷ் ராஜ் இவர்கள்தான். திரு. சிவாஜி கணேசன் பல படங்களில் அதிகப் படி நடிப்பு காட்டுவார். எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுத் தர லண்டனில் இதற்கென்று தனியாகப் படிப்பு இருக்கிறது. 

மற்ற துறைகளிலும் படிப்பு இருக்கிறது. அதன் தரம் மிகவும் உயர்ந்தது. செலவும் அதிகம். உலக நடிகர்கள் அங்கு சேர்ந்து படித்து, பின் திரைப் படங்களில் நடிக்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் அதெல்லாம் தேவையில்லை.

ஒரு நல்ல திரைப் படம், பார்ப்பவர்களின் முழு கவனத்தையும் கவர வேண்டும். கதை ஒரு அறுவை சிகிச்சைக்கு முன் காத்திருப்பவரின் மனம் போல் இருக்க வேண்டும். ரயில் நிலையத்திற்கு  தாமதமாகச் செல்லும் ஒருவரின் மன நிலை போல இருக்க வேண்டும். கதை, வசனம், நடிப்பு, ஒளிப்பதிவு எல்லாம் மிகத் திறமையாகக் கையாளப்பட வேண்டும் 

நடிப்பு என்பது வெறும் வசனம் பேசுவது மட்டும் இல்லை.  ஒருவர் நடிக்கும் போது, முகம், கை கால்கள் எந்த நிலையில் இருக்கிறது, அவர் முகம் என்ன உணர்ச்சியைக் காட்டுகிறது, எதிரில் இருப்பவர் என்ன உணர்ச்சியை பதிலுக்கு காட்டுகிறார்.

அதை எப்படி எந்தக் கோணத்தில் படம் ஆக்கினால் நன்றாக இருக்கும் என்ற தரங்களை வைத்து ஒரு நல்ல படம் தீர்மானிக்கப் பட வேண்டும். நமது நாடு அந்த அளவு எப்பொழுது முன்னேறப் போகிறது? அது ஒரு கேள்விக்குறிதான்.

50 வருடங்களுக்கு முன், 1967 ஆம் ஆண்டு வெளிவந்த "GUESS, WHO IS COMING TO DINNER"  என்ற திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சியைப் பாருங்கள்.







No comments :

Post a Comment