Friday, November 3, 2017

நேற்று விதைத்தது இன்று முளைத்தது.

என் தந்தையின் குடும்பம் ஒரு நடுத்தரக் குடும்பம், அம்மா, மனைவி, மாமனார், மாமியார், 9 குழந்தைகள் ஆக  மொத்தம் 14 நபர்களைக் காக்கும் கடமை அவருக்கு இருந்தது. அதனால் தீபாவளி வந்தால் மிகவும் கஷ்டம். செலவு மிக அதிகம் ஆகும். 

எல்லோருக்கும் புதிய ஆடைகள் எடுத்து விட்டு தனக்கு ஒன்றும் வாங்கிக் கொள்ள மாட்டார். உள்ளே இருக்கும் பழைய புது ஆடை ஏதாவது ஒன்றை அணிந்து கொள்வார். பட்டாசுக்குப் பணம் கொஞ்சம் தான் கொடுப்பார். நாங்கள் மிகவும் வருத்தப் பட்டு அவரை மனதில் திட்டுவோம்.

1985ல் அவர் இறந்த பொழுது எனக்கு 9 வயதில் ஒரு பெண்ணும், 5 வயதில் ஒரு பையனும் இருந்தனர். 1980ல் வீடு கட்டியதாலும், மற்ற செலவுகளால் வாழ்க்கை மிகவும் கஷ்டம். தீபாவளி வந்தால்  மிகவும் பணக் கஷ்டம். என் எண்ணங்கள் என் தந்தையை நினைத்து ஓடும். 

4 பேர்களை காப்பாற்ற மூச்சுத் திணறும் எனக்கு, 14 பேர்களை வைத்து காப்பாற்ற எப்படி அவர் கஷ்டப் பட்டு இருப்பார் என்று தோன்றும். அதனால் நானும் அவரைப் போல தீபாவளிக்கு மற்றவர்களுக்கு வாங்கி விட்டு எனக்கு ஒன்றும் வாங்கிக் கொள்ளாமல் இருக்கப் பழகி விட்டேன்.

My father belonged to a middle-class family consisting of 9 children, wife, mother and in-laws totaling 14. For Deepavali, he could not afford to spend much. I used to curse him for not getting me crackers. He used to get new dresses for all excepting himself. He died in 1985 when I had a daughter 9 and a son 5. 

Since I had constructed a house, and due to other expenses, I also could not spend much for Deepavali. At that time, I felt how much my father would have suffered with 14 people whereas I could not manage even with 4. I then decided to follow his style of spending for others sacrificing my need.

No comments :

Post a Comment