Wednesday, November 1, 2017

மனதில் தோன்றிய எண்ணங்கள் 136 TO 150

136. நான்  வயதானவன் . பழமையான எண்ணங்களைக் கொண்டவன். என்னுடைய குழந்தைகளுடன் பழகிப் பழகி தற்கால எண்ணங்களை மிக நன்றாகப் புரிந்து கொண்டவன்.

137. ஒரு வயதில் விரும்பியதை பத்து வயதில் விரும்புவதில்லை. அறிவு வளர்ச்சி ஒரு பயணம். நடுவில் நின்று விட்டால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

138. நமக்கு இருப்பதோ ஒரு வயிறு. ஆனால் அந்த ஒரு வயிறுக்கு உணவு அளிக்க, உழைப்பதற்கு இறைவன் கொடுத்திருப்பதோ இரண்டு கைகள். பிறகு என்ன கவலை?

139. நல்லதோ கெட்டதோ, ஒரு விஷயத்தை அறிந்த பிறகு அது எவ்வளவு தூரம் உண்மை என்று நன்கு விசாரித்த பிறகே வேறு ஒருவரிடம் சொல்ல வேண்டும்.

140. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நன்கு திட்டம் போட்டு ஒரு பத்து நாள்,சுற்றுலா இடமோ, உறவினர் வீடோ சென்றால் சந்தோஷம், மன அமைதி உண்டாகும்

141. நம் நாட்டில் கலைச் செறிவு மிகுந்த கோவில்களும் அழகான இடங்களும் லக்ஷக் கணக்கில் இருக்கின்றன.ஆனால் நாம் எப்பொழுது பார்க்கப் போகிறோம்?

142. ஏழை தன்னிடம் உள்ள கொஞ்சம் பணத்தை பிறருக்கு உதவக் கொடுக்கும் பொழுது சிறிதும் யோசிப்பதில்லை. ஆனால் பணக்காரன் அதிகம் யோசிக்கிறான்.

143. பணமில்லாத ஒருவனை யாரும் அனாதை என்று சொல்வதில்லை. ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அவன் ஒரு அனாதை தான்.

144. உங்களை யாரும் புறக்கணித்தால் தயவுசெய்து அவரைத் தவறாக நினைக்காதீர்கள். ஏதோ ஒரு சூழ்நிலை. அது அவருக்கு மட்டும் தான் தெரியும்.

145. நமது அரசாங்கம் இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறது. "ஏழைகளுக்குப்" பாதகமாக எதுவும் செய்தால் தட்டிக் கேட்கலாம்.

146. படித்தவன் படிக்காதவனைப் பார்த்து இரக்கம் கொள்ள வேண்டும். அவனுக்கு தகுந்த அறிவுரை செய்தால் நாடும், வீடும் மக்களும் முன்னேறு வார்கள்

147. எதுவும் நமக்கு சொந்தமில்லை. நாம் இறந்த பின் எந்த பொருளையும் எடுத்து செல்ல முடியாது.ஒரு பொருளை தவிர. அதுதான் நாம் செய்த தான தர்மம்.

148. வாழ்க்கையில் நம்பிக்கை மிகவும் முக்கியம். தன்னம்பிக்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

149. சிலர் எதிர்மறையாகப் பேசி தன்னை அறிவாளியாகக் காட்டுகிறார்கள். சிலர் நேர்மையாகப் பேசி அடக்கமாக இருக்கிறார்கள். இறைவனின் சிருஷ்டிகள்.

150. பகவான் கிருஷ்ணன்: குளிர்ச்சி நீரின் இயல்பு. வெப்பம் நெருப்பின் இயல்பு. உலகில் எல்லா உயிர்கள் மீது அதிக கருணை காட்டுவது என் இயல்பு.

No comments :

Post a Comment