Saturday, October 13, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 826 TO 840

826. ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்குக் கஷ்டப்பட்ட நாட்கள் எனக்கு உண்டு.பசி அறிந்தால் தான் கஷ்டம் தெரியும்,அறிவு வரும்,ஞானம் வளரும்

827. விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன? உயிர் விட்டு விட்டால், உடல் சுட்டு விட்டால் அதில் அடுத்த கதை என்ன? சிறந்த வரிகள.

828. ஒருவர் எந்த அளவுக்கு பெரிய ஆளாய் இருக்கிறாரோ,அந்த அளவுக்கு அடி பலமாய் இருக்கும்,அவர் தனது நிலையில் இருந்து சிறிது தவறி விழுந்தால்.

829. எங்கு சென்றாலும் தேவை அறிந்து, நேரம் அறிந்து, பசி அறிந்து, ருசி அறிந்து என் மனைவி எனக்கு உணவு கொடுத்து விடுவாள். எனக்கென்ன கவலை?

830. சம வயதில் உள்ள இருவரை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது. அது எதிர்மறையான விளைவுகளைத் தான் நிச்சயம் உண்டாக்கும்.

831. எவ்வளவோ முயற்சி செய்து விட்டேன். உனக்கும் பேபே, உங்க அப்பனுக்கும் பேபே என்கிறது. வழியே தெரியவில்லை எனக்கு. வளரும் தொப்பையை குறைக்க

832. எந்த இடத்திலேயும் நானாக எதையும் எடுத்து/கேட்டு சாப்பிடும் பழக்கம் கிடையாது. அவர்களாக கொடுக்கும் பழக்கமும் இல்லை. திண்டாட்டம் தான்.

833. பார்ப்பது, கேட்பது, ருசிப்பது, பேசுவது, உணர்வது எல்லாம் மிக குறைந்து விட்டன. மீதம் இருப்பது நினைப்பது மட்டும்.அது எவ்வளவு நாட்களோ?

834. தேவை அறிந்து, நேரம் அறிந்து, பசி அறிந்து, ருசி அறிந்து தாய் தந்தையர்க்கு உணவு அளிப்பது குழந்தைகளின் கடமை. இறந்தபின் கதறி பயனில்லை.

835. மீதமுள்ள வாழ்நாள் எப்போது முடியும் எனத் தெரியாமல் கதறும் எத்தனையோ வயதானவர்களில் இந்தக் கிழவனும் ஒருவன். இறைவா காதில் விழவில்லையா?

836. ஒரு போதும் யாரையும் குறை கூறி எழுத/பேசக் கூடாது. எப்போதும் நல்லதை நினைக்க வேண்டும், நல்லதை சொல்ல வேண்டும், நல்லதை செய்ய வேண்டும்.

837. நகைச்சுவை உணர்வு மிக முக்கியம். ஆனால் சீரியஸ் ஆன விஷயத்தில் தமாஷ் செய்வதும், நகைச்சுவையான இடத்தில் சீரியஸ் ஆக இருப்பதும் சரியல்ல.

838. பிறருக்கு நல்லது செய்வது என்பது ஒரு உன்னதமான செயல். ஆனால் நல்லது செய்கிறோம் என்று கர்வப்படுவது அதனால் ஏற்படும் பலனை அழித்து விடும்.

839. பல ஊர்களையும், மக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும், வாழ்க்கை முறைகளையும் சந்திக்கும் போது, நான் இந்தியன் என்ற உணர்வு வருகிறது.

840. தனக்கு சாதகமாக இருந்தால் ஒரு விஷயத்தை நம்புவதும், பாதகமாக இருந்தால் அதை நம்பாததும் மனிதனின் இயற்கையான குணம். இது எப்படி வந்ததோ !!!



No comments :

Post a Comment