Thursday, October 4, 2018

எது சிறந்த திருமணம் ?

நமது நாட்டில் திருமணம் புனிதமாகக்  கருதப் படுகிறது. ஆனால் மேலை நாடுகளில் திருமணம் ஒரு ஒப்பந்தமாக மட்டும் கருதப் படுகிறது.

நமது ஊரில் திருமணங்கள் எப்படி நடக்கிறது என்று நமக்கு நன்கு தெரியும். மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், திருமணங்கள் எப்படி நடக்கிறது என்பதை  நான் படித்து அறிந்த வரை எழுதுகிறேன்.


1. முதலில் ஆணும் பெண்ணும் ஏதோ ஒரு சூழ்நிலையில் சந்திக்கிறார்கள். பார்த்தவுடன் இருவருக்கும் பிடித்து இருந்தால் ஆண் முதலிலும் பிறகு பெண்ணும் ஹெலோ   சொல்கின்றனர்.


2. அத்துடன் சரி. பிறகு மறுபடியும் .வேறு இடத்தில் சந்திக்கும் போது மறுபடி ஹெலோ   சொல்லி இருவரும் சிறிது நேரம் பேசுகிறார்கள்.


3.  அதன் பிறகு, மறுபடியும் சந்திக்கும் போது, ஹெலோ   சொல்லி,  சிறிது நேரம் பேசிவிட்டு  காஃபி , டீ அல்லது டிபன் சாப்பிட ஆண் பெண்ணை அழைக்கிறான்.


4. பெண்ணுக்குப்  பிடித்து இருந்தால் சம்மதிக்கிறாள் . இதற்கு டேடிங் என்று பெயர். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் மறுத்து விடுகிறாள். 


5. அதன்பிறகு பலமுறை வெளியில் சாப்பிடப் போகிறார்கள். இருவரும் மனம் விட்டுப் பேசுகிறார்கள். தங்களுடைய பழைய வாழ்க்கை, குறை நிறைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.


6. அதன் பிறகும் ஒருவரை ஒருவர் விரும்பினால், ஒரு சந்திப்பிற்கு பிறகு ஆண் பெண்ணிற்கு முதல் முறையாக உதடுகளில் முத்தம் கொடுக்கிறான். 


7. இன்னும் நெருங்கிப் பழகிய பிறகு , பெண் அவனைத் தன்னுடைய பெற்றோர்களுக்கு அறிமுகப் படுத்துகிறாள். பெற்றோர்கள் அவனைப் பற்றி அவர்களுடைய அபிப்பிராயத்தை கூறுகிறார்கள் .


8. அதன் பிறகு ஆண் அவளைத் தன்னுடைய பெற்றோர்களுக்கு அறிமுகப் படுத்துகிறான். அவர்கள் அவர்களுடைய அபிப்பிராயத்தை சொல்கிறார்கள்/


9. இருவருடைய பெற்றோர்களும்  கூடுமானவரை தவறான அபிப்பிராயம் எதுவும் கூறாமல் அவர்கள் காதலை வாழ்த்துகின்றனர். 


10. அதன் பிறகு ஒரு நாளில் ஆண் அவளுடைய வீட்டில், அவளுடைய சம்மதத்துடன், அவளுடன் உடல் உறவு கொள்கிறான். இது பல நாட்கள் தொடர்கிறது.


11. அதற்குப் பிறகும் ஒருவரை ஒருவர் விரும்பினால் ஆண் முதலில் தன்னுடைய காதலைத் தெரிவிக்கிறான். அதன் பிறகு பெண்ணும் தன்னுடைய காதலைத் தெரிவிக்கிறாள்.


12. கிட்டத் தட்ட ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் மனம் விட்டுப் பழகிய பின் ஆண், அவள் முன்னால்  மண்டியிட்டு, மலர் கொத்து கொடுத்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகிறான்.


13. பெண் அதை ஏற்றுக் கொண்டவுடன் அவன் அவளுக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவிக்கிறான்.. அவளும் பதிலுக்கு மோதிரம்  அணிவிக்கிறாள்.


14. இருவரும் சேர்ந்து ஒரு சௌகரியமான  நாளை திருமணத்திற்கு நிச்சயம் செய்கின்றனர். அந்த நாளில் சர்ச்சில் உறவினர்கள் சூழ திருமணம் நடை பெறுகிறது.


15. அதன் பிறகு, மன வேறுபாடு வந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தால் நீதி மன்றம் கால தாமதம் இன்றி உடனே விவாகரத்து கொடுத்து விடுகிறது. 


இந்தத் திருமண முறை சிறந்த முறையா அல்லது நமது  திருமண முறை சிறந்த முறையா?

No comments :

Post a Comment