Tuesday, October 9, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 796 TO 810

796. தனது வாழ்க்கையை சீராக, நேர்மையாக வாழ்ந்தாலே போதும். மற்ற எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் ஒருவருக்கு இல்லை.

797. சுருக்கமாக கூறினால், எனக்கு என்னுடைய மதம், அதன் கோட்பாடுகள், நம்பிக்கைகள் தான் முக்கியம். மற்ற மதங்களைப் பற்றிய கவலை எனக்கு இல்லை.

798. நான் கோயிலுக்கு செல்லும் பழக்கம் கிடையாது' யாராவது வற்புறுத்தினால் போவது வழக்கம். பக்தி, சிரத்தை, தியானம் எல்லாம் வீட்டில் தான். 

799. என்னிடம் அன்பு காட்டுபவர்களுக்கு நான் இரண்டு பங்கு அன்பைத் தருகிறேன். வெறுப்பு காட்டுபவர்களுக்கு இரண்டு பங்கு வெறுப்பைத் தருகிறேன்

800. நம்மிடையே ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான வாழ்க்கைச் கூழலில் வாழ்கிறார்கள். அதற்குத் தகுந்தாற்போல தான் ஒருவருடைய மனோபாவமும் அமையும்.

801. அமெரிக்காவில் நாய் என்று சொல்லக் கூடாது. பெயர்,அவன்,அவள் என்று சொல்ல வேண்டும். நாயைப் பாதுகாக்கிறார்கள். தாயைப் பாதுகாப்பது இல்லை.

802. நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் வராது. அது அவர்கள் வாழும் வாழ்க்கையை பொருத்தது. அடையும் சந்தோஷத்தை பொருத்தது. குழந்தை மனது வேண்டும்

803. கறுப்புப் பணம்,பினாமி சொத்து,கற்பழிப்பு இந்த குற்றங்களுக்கு மரண தண்டனை.லஞ்சம் ஊழலுக்கு ஆயுள் தண்டனை விதித்தால் குற்றங்கள் குறையும்

804. வயதான காலத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தாமல் குழந்தைகள் மேல் கவனம் செல்லும் போது மனஸ்தாபம் வருகிறது.

805. அநேக தம்பதிகள் வயதான காலத்தில் ஒற்றுமையின்றி வாழ்கிறார்கள். சிறிது காலம் ஒருவரையொருவர் பிரிந்து இருந்தால் எல்லாம் சரியாகி விடும்.

806. நான் பரமாச்சாரியாரின் உபதேசங்களைப் படித்துத் தெளிந்தவன், வாழ்ந்தவன். அவைகளைப் பதிவாகப் போட்டால் ஒரு 5 பேர்கள் கூடப் படிக்கவில்லை. 

807. பட்டம் என்பது ஒருவருடைய அறிய செயலுக்காக அரசாங்கம் வழங்குவது.ஆனால் ஒரு அரசியல் கட்சியில் மட்டும் தாங்களே பட்டம் அளித்து கொள்வார்கள்

808. தொலைகாட்சி நிகழ்ச்சிகள் எதுவும் எனக்கு ரசிக்க வில்லை. பார்க்க பிடிக்கவில்லை. எல்லாம் ஒரே அபத்தமாக இருக்கிறது. காரணம் தெரியவில்லை.

809. லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கு அல்லது குறைப்பதற்கு வழி சொல்லாமல், வீணாக மற்றவர்களைக் குறை சொல்வதால் எவ்விதப் பலனும் இருக்கப் போவதில்லை.

810. ஒரு தனி மனிதன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது அல்லது தலைமையில் இருக்கும் போது ஊழலும் லஞ்சமும் ஆரம்பம் ஆகின்றன என்பது என் கருத்து.

No comments :

Post a Comment