Friday, October 5, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 736 TO 750

736. உயர் நிலையில் இருக்கும் ஒருவர் என்ன உளறினாலும் அது தத்துவம். தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவர் என்ன தத்துவம் பேசினாலும் அது உளறல்.

737. பகவான் கூறியபடி, இறை நம்பிக்கை உள்ளவர்கள் பத்து பிறவிகளிலும், இறை நம்பிக்கை இல்லாதவர்கள் மூன்று பிறவிகளிலும் இறைவனை அடைவார்கள்.

738. இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எப்பொழுதாவது இறைவனை நினைக்கிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் எப்பொழுதும் இறைவனையே நினைக்கிறார்கள்.

739. எதைப்பற்றி எழுதும் போதும் அறிவு பூர்வமாக எழுத வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு எழுதக் கூடாது.அவருடைய ஆரோக்கியம் கெடும்.மனம் பாதிக்கும்

740. ஈ என்றுஒருவரிடம் நின்று கேளாத இயல்பும்,ஒருவர் ஈதிடு என்ற போதுஅவருக்கு இல்லை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும்[வள்ளலார் கந்தகோட்டம்]

741. தன்னுடைய வீட்டிலேயே உணவைத் தானே எடுத்துச் சாப்பிடுவது சிலர் வழக்கம். அது தவறு. கொடுத்து உண்ண வேண்டும் அல்லது கேட்டு உண்ண வேண்டும்.

742. பாலும் மோரும் சமம் இல்லை என்று கூற "பாலும் பதக்கு, மோரும் பதக்கு"என்பார்கள். பாலில் இருந்து மோர் வரும். மோரில் இருந்து பால் வராது.

743. அந்த நாளில் சினிமாவுக்கு மேல் வகுப்பினர் ஒரு முறையும்.கீழ் வகுப்பினர் பல முறையும்  வருவார்கள்.அதனால் அவர்களை கவரும் படம் எடுத்தனர்

744. அந்தக் காலத்தில் சினிமாவுக்கு ஆண் தனியாக வருவான். பெண் குடும்பத்துடன் வருவாள். அதனால் பெண்களைக் கவரும் விதமாகப் படம் எடுத்தார்கள்.

745. மகளின் திறமையும், கெட்டிக்காரத்தனமும் தெரியும். ஆனால் வரும் மருமகளை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால் மருமகளை தேர்ந்தெடுப்பது கஷ்டம்.

746. மகளுக்கு திருமணம் செய்வது தான் கஷ்டமான காரியம் என்று பலர் கூறுவார்கள்.மகனுக்கு திருமணம் செய்வது அதைவிட கஷ்டம் என நான் நினைக்கிறேன்

747. சினிமாவில் நடிப்பவர்கள் சாதாரண மனிதர்கள் தான். ஆகாயத்தில் இருந்து குதிக்கவில்லை. அவர்கள் மீது மோகம் கொள்வது பைத்தியக்காரச் செயல்.

748. சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதைப் பார்த்தவுடன் மறந்து விட வேண்டும். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நமது வாழ்க்கை வீணாகிவிடும்.

749. சிறிது காலத்திற்கு முன்னால் அறை வெப்பத்தில் உறையும் குணம் கொண்ட தேங்காய் எண்ணை உடலுக்குக் கேடு என்றனர்.இப்போது நல்லது என்கின்றனர்.

750. நான் பெரிய அறிவாளியும் இல்லை, மேதையும் இல்லை. நான் கடற்கரையில் கிடக்கும் ஒரு சாதாரண கூழாங்கல், நீர்ச் சுழலில் ஒரு சிறிய கொப்பளம்.


No comments :

Post a Comment