Saturday, October 6, 2018

இது எப்படி இருக்கு?

இப்பொழுது  கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிறார்கள். வீட்டு வேலையும் பார்த்துக் கொண்டு, அலுவலக வேலையும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு பெண்கள் படும் கஷ்டத்திற்கு அளவேயில்லை . அதனால் அவர்கள் சிறு வயதிலேயே பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

நன்றாகப் படித்தும், வேலைப்பார்த்தும், சம்பாதித்தும்  பெண்களுக்கு  தன்னுடைய பணத்தை செலவு செய்யும் சுதந்திரம் இல்லை. பல குடும்பங்களில் பண விவகாரங்களை ஆண்கள் தான் கவனிக்கிறார்கள்.

இன்னும் ஆணுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். பெண்கள், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, அவர்கள் கணவனிடம் கொடுத்து விட்டு அனுமதிக்கப் பட்டதை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். 

சம்பாதித்த பணத்தை தங்கள் இஷ்டப்படி கையாள முடியவில்லை என்றால், ஏன் சம்பாதிக்கணும். இது உண்மையான  பெண்கள் மேம்பாடா? அந்தக் காலம் போல் மறுபடியும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள். 

இந்தக் குறைபாட்டை போக்க, பெண்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க, நான் ஒரு வழி சொல்கிறேன். ஆனால் பெரும்பாலோர் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

கணவனும் மனைவியும் வேலை பார்த்தால் :

1.இருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை பாக்கெட் மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. எல்லா குடும்ப செலவுகளையும் கணக்கு எழுதி அவர்களுடைய சம்பள விகிதத்தில் பிரித்துக் கொள்ள வேண்டும்.

3. மீதி உள்ள பணத்தை அவர்கள் விருப்பம் போல செலவு செய்யலாம்.

4. கடைசியில் மீதி உள்ள பணத்தை அவரவர் பெயரில் கூட்டுக் கணக்காக முதலீடு செய்யவேண்டும்.


No comments :

Post a Comment