571. விதி வலியது. அது இறைவனின் மறு அவதாரம். நாம் வெற்றி அடையும் போது அதை நினைப்பதில்லை. தோல்வி அடையும் போது அதைக் குற்றம் சொல்கிறோம்.
572. தாவர உணவு நமது உடலுக்கு நல்லது.மாமிச உணவு நமது உடலுக்கு கெடுதல்.நாம் மாமிசம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.நமது ஆரோக்கியம் முக்கியம்.
573. நமது வாழ்க்கையை நல்ல விதத்தில் வாழ முயற்சிக்க வேண்டும். மது, மாது, சிகரெட், புகையிலை போன்ற கெட்ட குணங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
574. மகாத்மா காந்தி அஹிம்சையை நமக்கு போதித்தார். வன்முறையால் எந்தப் பலனும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை. பின் எதற்கு நம்மிடம் வன்முறை?
575. இறைவன் மேல் நம்பிக்கை வை. தினமும் காலையும் மாலையும் குளித்து விட்டு இறைவனை தியானம் பண்ண வேண்டும். மனத்திடமும் நம்பிக்கையும் வளரும்
576. வயது முதிர்ந்த பெரியவர்கள் நமக்கு எப்பொழுதும் நல்லதை மட்டும் சொல்வார்கள்.கெட்டதை சொல்லமாட்டார்கள். அவர்கள் சொல்வதை மதிக்க வேண்டும்
577. மனிதனாக பிறந்த எல்லோருக்கும் சுய மரியாதை மிக முக்கியம். பிறரிடம் நம்முடைய தகுதி எப்போதும் தாழ்ந்து போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்
578. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். நாம் கற்ற கல்வியை பிறருக்கு சொல்லித் தருவது பெரிய செயல் ஆகும். அதனால் எல்லோரும் கற்றவர் ஆவார்கள்.
579. எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார். யாரையும்,எதையும் உடலாலோ,மனதாலோ துன்புறுத்த கூடாது. அந்தப் பாவம் நம்மை பின்னால் பாதிக்கும்.
580. வாய்மையே வெல்லும். எங்கும் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும். விளையாட்டுக்கு கூட பொய் பேசுதல் கூடாது. அதனால் மன நிம்மதி கிடைக்கும்.
581. பெற்றோர் தெய்வத்திற்கு சமமானவர்கள். அவர்கள் மனம் வருந்தும்படி நடத்த கூடாது. நாளைக்கு நமது பிள்ளைகளும் நம்மை அப்படித்தான் நடத்தும்
582. பாரதி கூறினார் கல்வி சாலைகள் வைப்போம் என்று. பிச்சையெடுத்தோ, கடன் வாங்கியோ, திருடியோ ஒருவர் எந்த வழியிலாவது கல்வியை கற்க வேண்டும்.
583. வாழ்க்கையில் எல்லா வயதினருக்கும் தனித் தனியாகக் கடமைகள் உண்டு. அந்தக் கடமைகளை நாம் விருப்பு வெறுப்பு இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.
584. மற்றவரைப் போல் வசதியாக வாழவில்லையே என்று நினைக்க கூடாது.நம்மை விட வசதியற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை நினைக்க வேண்டும்
585. கோவிலுக்கு சென்றால் தான் புண்ணியம் என்பதில்லை. ஏழைகளுக்கு உதவி, யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே கோவிலுக்கு சென்ற பலன் உண்டு.

No comments :
Post a Comment