Sunday, August 5, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 631 TO 645

631. பெண்கள்,தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை,தங்கள் இஷ்டப்படி கையாள முடியவில்லை என்றால்,ஏன் சம்பாதிக்கணும், அடிமையாக வாழ வேண்டும்

632. அமெரிக்காவில் ஒரு பொருளை வாங்கி கொஞ்சம் உபயோகப்படுத்தி பார்த்து திருப்தி இல்லை என்று திருப்பி கொடுத்தால் பணம் கொடுத்து விடுவார்கள்


633. எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். நேர்மையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றுவது மிகவும் கஷ்டமான செயல்


634. கொடுப்பது இன்பம். வாங்குவது துன்பம். என் தந்தை சொல்வார், எப்போதும் உன் உள்ளங்கை கீழ்நோக்கியே இருக்கணும்,மேல்நோக்கி இருக்கக்கூடாது.


635. தனி மனித சுதந்திரம் ஒருவருக்கு அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு. அதில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.


636. எந்த ஒரு பெண்மணியும், ஒரு ஆணையோ, கணவனையோ, புகழ்ந்தோ, இகழ்ந்தோ, ஒரு கவிதையோ கட்டுரையோ எழுதி இதுவரை நான் பார்த்தது இல்லை.ஏன் அப்படி?


637. ஒரு பக்கம் பெண்களை புகழ்ந்து கவிதைகள் எழுதுகிறார்கள். இன்னொரு பக்கம் மனைவியை கிண்டல் செய்து எழுதுகிறார்கள். ஒன்றுமே புரியவில்லை.


638. எவ்வளவோ கஷ்டங்களுக்கு இடையில் பெண்ணைப் படிக்க வைத்து ஆளாக்கினேன். அவளால் எனக்கு ஒரு பயனும் இல்லையென்று அவள் பெற்றோர் கதறுகின்றனர்.


639. பெண்களைத் தங்களுடைய கண்களுக்கு மேலாக நினைத்து வளர்த்த பெற்றோர்கள் இன்று அவள் படும் கஷ்டத்தை நினைத்து ரத்தக்கண்ணீர் சிந்துகிறார்கள்


640. ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் , பாடற மாட்டைப் பாடிக் கறக்கணும். இன்றைய  இளைஞர்களுக்கு இந்தப் பாடம் மிக நன்றாகத் தெரிந்து இருக்கிறது. 


641. பெண்கள் நன்றாக படித்து, வேலைக்குப் போய், உழைத்து, சம்பாதித்து வெற்றி அடைந்தார்கள். ஆனால் இன்னும் ஆணுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள்


642. பெண் சுதந்திரம் என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்படுவது கொஞ்சமும் தெரியாமலேயே இன்றைய பெண்கள் கடினமாக உழைப்பது மிகவும் வேதனையான செயல்.


643. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. இன்றைய இளைஞர்கள் பெண்களின் உழைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்வது மிகவும் வேதனையான செயல்.


644. பல் போனால் சொல் போகும். பல்செட் வைத்துக் கொள்ளலாம். அது இல்லை என்றால் கடித்து சாப்பிடமுடியாது. அது இருந்தால் உணவின் ருசி தெரியாது.


645. வைரங்கள் எங்கு பார்த்தாலும் சாதாரண கற்களை போல விழுந்து கிடந்தால், அதற்கு கூழாங்கல்லுக்கு இருக்கும் மதிப்பு கூட துளியும் இருக்காது.

No comments :

Post a Comment