Wednesday, August 1, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 586 TO 600

586. ஒருவர் தன்னுடைய காரியம் சீக்கிரம் நிறைவேற, அரசியல்வாதியிடம் அல்லது அரசு அலுவலர் இடம் லஞ்சம் கொடுக்கிறார். லஞ்சம் அங்கே பிறக்கிறது.

587. நானும் சமீபமாக அரசியல், மதம், சாதி, சினிமா பற்றி பதிவு போடுகிறேன். யாரும் கடுமையாக விமர்சிக்கவில்லை. ஒருவேளை உப்பு, காரம் இல்லையோ?


588. இந்தியாவில் ஹிந்து, கிருஸ்தவ, முஸ்லிம் பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறைகள் உண்டு.எந்த நாட்டிலேயும் இந்த முறை பின்பற்றப் படவில்லை.


589. எனக்கு இந்து,கிருஸ்தவ,முஸ்லிம் நண்பர்கள் உண்டு.என்னிடம் பிரியமாகவும் மரியாதையுடனும் இருக்கிறார்கள்.மாவின் மணம் பணியாரத்தின் குணம்.


590. இந்தியாவின் ஜனத்தொகை 131 கோடி. அதில் அரசியல்வாதிகள் 10000 பேர். எப்படி 10000 பேர் 131 கோடி பேரை லஞ்சம் கொடுப்பவராக மாற்ற முடியும்?


591. ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதற்கு முன் இருவரின் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட அவர்களின் மனப் பொருத்தம் பார்ப்பது மிகவும் நல்லது.


592. தமிழ் பண்பாட்டின் படி ஆண்கள் வேட்டி சட்டை,பெண்கள் புடவை ப்ளவுஸ்,சிறுவர்கள் அரை நிஜார் சட்டை,சிறுமிகள் பாவாடை தாவணி அணிந்தால் என்ன?


593. பலர் தான் சாப்பிட்ட எச்சில் தட்டை தானே கழுவுவது இல்லை. பிறருடைய சங்கடங்களை  யோசிப்பதும் இல்லை. இது மிகவும் கண்டிக்க தக்க செயலாகும்


594. உபசரித்தல் என்ற வார்த்தையே இப்போது மறைந்து விட்டது. தனக்கு வேண்டியதைத் தானே கேட்டு பெற்றுக்கொள்வது தான் இன்றைய நாகரீக முன்னேற்றம்.


595. பிறருக்கு கெடுதல், துரோகம் செய்யும் போது நமது மனம் சந்தோஷப்படும். அதே கெடுதல் துரோகம் நமக்கு வரும் போது மனம் பல மடங்கு கஷ்டப்படும்


596. ஒரு பெண் முதலில் தன்னுடைய தந்தையின் பாதுகாப்பிலும், பின் கணவன் பாதுகாப்பிலும், அதன் பிறகு குழந்தைகளின் பாதுகாப்பிலும் வாழ்கிறாள்.


597. மனைவிக்கு கணவன், கணவனுக்கு மனைவி இறைவன் கொடுத்த பரிசு. சிலர் அதைப் பொக்கிஷமாகப்  பாதுகாக்கிறார்கள். சிலர் சிறிதும் கவனிப்பதே இல்லை.


598. கணவன் மனைவி இருவரும் மற்றவரிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அதை வெளியே சொல்வதில்லை. கிடைத்தால் சந்தோஷம், இல்லாவிடில் வருத்தம்.


599. ஒருவர் ஒரு பாடலுக்கு இசை அமைக்கிறார்.அது வெற்றி பெறுகிறது. மற்றொருவர் இசை,பாடலை தவிர மற்றவற்றை மாற்றி பெயர் பெற பார்ப்பது நியாயமா?


600. ஏழைகள் இறைவனின் குழந்தைகள். அவர்களின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். நாம் எப்போதும் ஏழைகளுக்கு உதவ முன்வர வேண்டும். அது நமது கடமை.

No comments :

Post a Comment