பிராமணர் என்பது ஒரு ஜாதி என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது ஒரு வாழ்க்கை முறை.
மஹாபாரதத்தில் தர்மபுத்திரர் நச்சுப் பொய்கை என்ற பகுதியில் கூறுகிறார், "பிறப்பால் ஒருவன் பிராமணன் ஆக மாட்டான். நல்ல குணத்தாலே தான் ஒருவன் பிராமணன் ஆவான்" என்கிறார்.
பல ஆண்டு காலமாக அவர்களுக்கு நல்ல குணங்களை அடைவதற்கு பயிற்சி அளிக்கப் பட்டு இருக்கிறது. பலர் அந்தப் பயிற்சியில் வெற்றி அடைந்து இருக்கிறார்கள். பலர் தோல்வியும் அடைந்து இருக்கிறார்கள்.
வெற்றி அடைந்தவர்கள் பிராமணர். வெற்றி அடையாதவர்கள் பிராமணர் இல்லை. அந்த நல்ல குணங்கள் பின் வருமாறு:
1. பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது ஆன்றோர் வாக்கு. கல்வியின் முக்கியத்தைக் கூறுகிறது. கல்வி கற்ப்பதால் அறிவு வளரும்.
2. விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒருவர் தன்னுடைய கடமைகளைச் செய்ய வேண்டும். கடமைகளில் இருந்து எப்போதும் தவறக் கூடாது.
3. எந்த நிலையிலும் தாய் தந்தையைக் காப்பாற்ற வேண்டும். அவர்கள் மனம் கோணும்படி நடக்கக் கூடாது. அவர்கள் சந்தோஷம் முக்கியம்..
4. எப்போதும் உண்மையே பேச வேண்டும். விளையாட்டுக்குக் கூட பொய் பேசக் கூடாது. உண்மை பேசுவதால் மனத் தைரியம் உண்டாகும்.
5. யாரையும் வார்த்தையால், செயலால் மனம் புண் படும் படி நடக்கக் கூடாது. அவர்கள் மன வருத்தம் நம்மை பாதிக்கும்.
6. தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அதனால் சமுதாயம் மேம்படும். கற்ற கல்வி மறந்து போகாமல் இருக்கும்.
7. சுய மரியாதை முக்கியம். யார் தயவிலும் ஒருவர் இருக்கக் கூடாது. அடிமை எண்ணத்தை வளர்க்கும். தன்னம்பிக்கை குறையும்.
8. வயதில் மூத்த பெரியவர்களை மதிக்க வேண்டும். அவர்கள் சொற் படி கேட்க வேண்டும். அவர்கள் ஆசீர்வாதம் நன்மை பயக்கும்.
9. தெய்வ நம்பிக்கை வேண்டும். தினமும் காலையும் மாலையும் குளித்து விட்டு இறைவனைத் தொழ வேண்டும். மன நிம்மதி கிடைக்கும்.
10. வன்முறையை அறவே தவிர்க்க வேண்டும். இது வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம். அதனால் எந்தப் பலனும் கிடையாது.
11. மது, மாது, புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும்.
12. மாமிச உணவுகளை உண்ணக் கூடாது. அது பாவமான செயல். தாவர உணவுகளை மட்டும் உண்ண வேண்டும்.
இப்போது புரிந்ததா. இந்தக் குணங்களெலாம் யாரிடம் இருக்கிறதோ அவர் பிராமணர். அப்படி இல்லை என்றால் அவர் பிராமணர் இல்லை.
நான் ஒரு பிராமணன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். நீங்கள் யார்? ஒரு பிராமணர் தானே?

No comments :
Post a Comment