Friday, August 3, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 601 TO 615

601. நான் பெண்களை குறை கூறுவதாக நினைக்கக் கூடாது. எனக்கும் தாய், மனைவி, மகள் இருக்கிறார்கள். என்னை நேசிக்கும் அளவு அவர்களை நேசிக்கிறேன்

602. ராக்கம்மா கையைத் தட்டு, ராஜா கையை வச்சா போன்ற இலக்கியத் தரமான தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் போது உண்மையிலே எனது உடல் புல்லரிக்கிறது.


603. தாய், தாய் என்று புகழ்கிறோம். அந்தத் தாய் மருமகளைப் பாடாய்ப் படுத்துகிறாள். தனது ஆண் பெண் குழந்தைகள் இடையே பாரபக்ஷம் காட்டுகிறாள்.


604. வேறு வேலை ஒன்றும் இல்லையா. உடனே பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு ஏதாவது பெண்ணின் அழகைப் பற்றி கவிதை எழுதுவது தான் சிறந்த வேலை.


605. ஆணும் பெண்ணும் இறைவனால் அவரவர்களுக்கு என்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்கிறோம். இதில் எங்கிருந்து எப்படி வந்தது உயர்வும் தாழ்வும்?


606. பெண்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு அவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களும் அல்ல. ஆண்கள் தாழ்ந்தவர்களும் அல்ல.


607. 
நான் அவரை நேசிக்கும் அளவு அவர் என்னை நேசிக்கவேண்டும். இது என் நிபந்தனை. ஒருவரை கூட இதுவரை சந்திக்கவில்லை.இன்னும் காத்திருக்கிறேன்.

608. ஆண் பெண் இரு பிரிவிலும் திறமைசாலிகள் இருக்கிறார்கள். கணவன் மனைவியில் யார் திறமைசாலி என்பதைப் பொறுத்து அவர்களுடைய மனோபாவம் அமையும்.


609. திறமைசாலிகள் இருவகை. ஒன்று பிறவியில் இருந்தே. மற்றொன்று வாழ்க்கை ஆரம்பித்த பிறகு. ஏனோ தெரியவில்லை, எனக்கு இரண்டாவது வகை பிடிக்கும்


610. கணவன் மனைவி இருவரும் ஒருவரிடம் ஒருவர் முக்கியமாக எதிர்பார்ப்பது உண்மையாய் இருத்தல்.அப்படி இல்லாத தம்பதிகள் ஒற்றுமையாய் வாழ்வதில்லை


611. ஆண் பெண் இருவரும் சமம். உயர்வு தாழ்வு கிடையாது. ஆனால் பெண்களைப் பாராட்டிப் பேசும் ஆண்களைப் போல, ஆண்களைப் பாராட்டும் பெண்கள் அரிது.


612. ஒரு கைம்பெண் தன்னுடைய குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்ப்பது போல,மனைவியை இழந்த கணவனும் அதைப்போல் தன்னுடைய குழந்தைகளை பாதுகாக்க முடியும்


613. தன்னுடைய வாழ்க்கையில் நடப்பது தான் உலகில் நடக்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். உலகம் பல விதத்தில் நம்மிடம் இருந்து மாறுபடுகிறது.


614. மனம் ஒருமித்து வாழ்ந்த தம்பதிகள், அந்திம காலத்தில் ஒருவரை ஒருவர் பிரியும் போது மற்றவருக்கு ஏற்படும் மனக் கஷ்டம் அளவிட முடியாதது.


615. சரியான நேரத்தில் ஒருவர் மற்றொருவருக்கு செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும்,அதனால் ஏற்படும் பலனை  அறிந்தால் அது உலகைவிட மிக பெரிதாகும்

No comments :

Post a Comment