Sunday, August 5, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 646 TO 660

646. அமெரிக்காவில் ஒரே கடை/பிராண்ட் பொன்னி பச்சரிசி வாங்குகிறோம்.ஒருதரம் பிரமாதமாக இருக்கும்.மறுதரம் மோசமாக இருக்கும்.ஏமாற்றும் இந்தியா

647. அமெரிக்காவில் சாலையில் உள்ள குப்பைகளை காற்றுத் துருத்தி மூலம் ஊதி, ஒன்று சேர்த்து இயந்திரம் மூலம் உறிஞ்சி எடுத்து கொண்டு போவார்கள்

648. அமெரிக்காவில் சாலையில் இடைஞ்சலாக உள்ள மரக்கிளைகளை இயந்திரத்தினால் அறுத்து, இயந்திரம் மூலம் பொடி செய்து எடுத்துக் கொண்டு போவார்கள்.

649. அமெரிக்காவில் சமயலறைக் கழுவுத் தொட்டியின் கீழே சிறிய கிரைன்டர் வைத்து இருக்கிறார்கள். அது குப்பையை அரைத்து வெளியே தள்ளி விடுகிறது.

650. அமெரிக்காவில் மரங்கள் உயரமாகவும், அடர்த்தியாகவும், அதிக எண்ணிக்கையுடனும் காணப்படுகிறது. அதனால் அங்கு மழையும் அதிகம், வளமும் அதிகம்

651. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்றார் ஓரிடத்தில்.சுந்தரதெலுங்கினில் பாட்டிசைத்து என்றார் இன்னோரிடத்தில்

652. யானை தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும். தேர்தலின் போது ஒட்டுப் போடுவதற்கு முன் இதை ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்.

653. நமது பாமர மக்கள் பொதுத் தேர்தலை ஒரு தமாஷாக நினைத்து ஒட்டுப் போடுகிறார்கள். அதன் முக்கியத்துவம் தெரியவில்லை என்று நான் நினைக்கிறேன்.

654. வாழ்க, ஒழிக என்று சத்தம் போட்டு பலனில்லை.அவர்கள் நன்கு படித்து விட்டு, அமெரிக்கா போய் நிறைய சம்பாதித்து கோடிஸ்வரன் ஆகி விடுவார்கள் 

655.திட்டமிட்ட வாழ்க்கை சிறப்பான வாழ்க்கை. நீங்கள் உங்கள் வரவு செலவு கணக்கு எழுதி திட்டமிட்டு சேமிப்பதில் நம்பிக்கை உள்ளவரா இல்லையா?

656. ஆண்களுக்கு ஒன்றும் கொம்பு முளைக்கவில்லை. வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்தால் அவர்கள் பதிலுக்கு உங்களை சந்தோஷப் படுத்துவார்கள்

657. நான் இன்று இருக்கும் உயர்ந்த நிலமைக்கு எனது தாய், தந்தையர் தான் முக்கியக் காரணம் என்ற எண்ணம் ஒருவருக்கு மேலோங்கி இருப்பது சிறந்தது

658. கணவன்,மனைவி இடையே கருத்து வேறுபாடு வரும்போது,இருவரும் சந்தோஷமாக இருந்த தருணத்தை கொஞ்சம் நினைத்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்.

659. ஒரு நாடு முன்னேற நல்ல ஆசிரியர்கள் தேவை. நன்கு படித்தவர்கள் ஆசிரியராக விரும்புவதில்லை. அதில் உள்ள சந்தோஷம் அவர்களுக்கு தெரியவில்லை.

660. எந்த காரணத்தைக் கொண்டு இந்தப் பாமர மக்கள் நமது அரசியல் தலைவர்களைப் போற்றிப் புகழ்கிறார்கள் என்று எனக்குக் கொஞ்சமும் புரியவே இல்லை.


No comments :

Post a Comment