Friday, December 1, 2017

DRESSES / ஆடைகள்

The dress is one of the three necessities of life viz food, shelter and clothing. It is just to protect us from the weather. We give a lot of importance to the dress. There are two different attitudes in dressing. 1. To dress for self-satisfaction. 2. To dress for other's appreciation. Most people dress for other's appreciation.

The irony is, no one observes what the other person is wearing. Everyone is busy on his own. You tell me honestly how many times you have observed other's dresses. No, you would not have done. Unless it is unbearable to look at or something very super and special, no one bothers.


I am unable to understand why people give so much importance to dresses. In the case of a new dress, you have an interest-only on the first time you wear it. Next time you don't give any importance to it. My suggestion is to wear a dress that is suitable for your age, profession, status, occasion and personal liking.



உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை மூன்றும் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. உயிர் வாழ இவை அவசியம். இவற்றில் நாம் உடைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

உடை அணிவதில் இரண்டு வகை உண்டு. 1. தனது திருப்திக்காக அணிவது. 2. பிறர் பாராட்டுவதற்காக அணிவது. எல்லோரும் பிறர் பாராட்டுவதற்கே உடை அணிகிறார்கள். ஏன் என்றே தெரியவில்லை.

இதில் அதிசயம் என்னவென்றால், யாரும் பிறர் என்ன ஆடை அணிந்து இருக்கிறார்கள் என்று கவனிப்பதே இல்லை [பெண்களைத்தவிர]. அவரவர் வேலையை பார்க்கவே நேரம் சரியாக உள்ளது. 

எங்கே நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் எத்தனை தடவை பிறர் ஆடையை ரசித்துப் பார்த்து இருக்கிறீர்கள்? முடியாது. நீங்கள் பார்த்தே இருக்க மாட்டீர்கள். அது பார்க்க சகிக்காமல் அல்லது புது விதமாகவோ இருந்தால் தான்.

உடைக்கு என் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு புது ஆடை வாங்கி அதை ஒரு முறை அணிந்தவுடன், அது பழசு ஆகிவிடுகிறது. அதில் உள்ள ஆர்வம் போய் விடுகிறது. அதை அப்புறம் கவனிப்பதே இல்லை. 

நமது வயது, உத்யோகம், தகுதி, சந்தர்ப்பம், சுய விருப்பம் இவைகளுக்கு தகுந்தால் போல் ஆடை அணிவது சிறந்தது. என்ன நான் சொல்வது சரிதானே?


No comments :

Post a Comment