Wednesday, December 6, 2017

IDLY UPMA / இட்லி உப்புமா

IDLY UPMA 
Alfred Lord Tennyson said, " men may come, men may go, but I go on forever". So many new tiffins like poori, chapati, kurma, Barotta, naan, roti, raita etc, have come and gone but Idly is simple, delicious, healthy, cheap and everlasting. It is the poor man's delight and the rich man's favourite, and the patient's medicine. 

Idly is a food item known to Indians for over 700 years. Its original name was Intarika. The first mention of Idly in the Indian literature was in Kannada by Sri Sivakoti Achariyar in the epic "Vadaradane" The method of preparing Idly mentioned in literature was different from the present method. The present method is mentioned only in literature after 1250 AD. It is the method mentioned by the kings who ruled Indonesia says Food specialist Sri Akshaya in his work.


People prepare Idly Upma from the Idly cooked on the previous day. No other item will give you as much taste and satisfaction as that of Idly Upma made on the next day. I remember a scene in the movie "Surya Vamsam" where the rich father who visits his suffering daughter relishes the Idly Upma served by her and takes home some quantity for his wife also.

It is a pity that Indians who are so much associated with Idly when they are in India, totally forget our Idly and eat burritos, kesa Riya, enchiladas, tacos, carnitas, mole poblano, tamales, carne asada, chile Relleno, tilapia Veracruz, bacon, eggs scrambled, french toast, cinnamon rolls, etc., when they go overseas, which are not as healthy as Idly.


Courtesy: Tamil traditional foods.

இட்லி உப்புமா 

"மனிதர்கள் வருவார்கள். மனிதர்கள் போவார்கள். ஆனால் நான் இருந்து கொண்டே இருப்பேன்" என்று ஆல்ஃப்ரெட் லார்ட் டென்னிசன் [ Alfred Lord Tennyson] கூறினார். நமது தினசரி வாழ்க்கையில் இட்லி, தோசை, வடை, சப்பாத்தி, பூரி, பரோட்டா, நான், ரைத்தா என்று பலவிதமான பணியாரங்கள் வந்து போகின்றன. 

சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் இட்லி ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேஸியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுணர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இட்லி எப்போதும் இருக்கிறது. அது எளிமையானது, சுவையானது, ஆரோக்கியமானது, நிரந்தரமானது. ஏழைகளின் நண்பன். பணக்காரர்களின் விருப்பம். நோயாளிகளின் அருமருந்து. முதல் நாள் செய்த இட்லியை மறுநாள் உப்புமாவாகச் செய்வார்கள். அதன் சுவையோ திருப்தியோ வேறு எந்தப் பணியாரத்திலும் இருக்காது. 

"சூரிய வம்சம்" என்ற திரைப் படத்தில் ஒரு பணக்காரத் தந்தை, ஏழையை மணந்த தன்னுடைய பெண் வீட்டிற்க்கு வரும் பொழுது அவள் கொடுக்கும் இட்லி உப்புமாவை மிகவும் ரசித்துச் சாப்பிடுவார். தன்னுடைய மனைவிக்கு  கொஞ்சம் எடுத்துச் செல்வார். இரவில் அந்த தாயார் யாருக்கும் தெரியாமல் அதை சாப்பிட்டு மகிழ்வார்.

இந்த அளவு இட்லியுடன் பழகிய நமது இந்தியர்கள், வெளிநாட்டுக்குச்  சென்ற பின், மிகவும் மாறி விடுகிறார்கள். அங்கு பலவிதமான புதுப் புது பணியாரங்களில் விருப்பம் கொண்டு ஆரோக்கியமான நமது இட்லியை மறந்து விடுகிறார்கள் என்பது வருத்தப் பட வேண்டிய விஷயம்.

Thanks: Tamil Traditional Foods





No comments :

Post a Comment