Sunday, December 3, 2017

I MISS YOU / உன்னைத் தேடுகிறேன்

I MISS YOU
He is my FaceBook friend for a long time. He was liking and commenting on my posts regularly. I was very happy with him since he never made any negative or derogatory comments. 

Suddenly, one day he was missing. He was not seen in my posts. He may have many reasons which I did not know nor I was interested in.

After a long time, a few days back, he commented again on my post. I was so happy to get him back. I replied to his comment saying "Oh, friend, how are you? I missed you for a long time".

For this, he replied, "I am not missing. I am very well in facebook wishing my friends everyday"

"I miss you" is an expression to show care, love, affection, losing contact for long, etc. Many people think it should be used only between spouses and lovers. 

No. It is not so. Anyone can use it to show his affection to the other person when they are not able to meet in person or talk over phone and lose contact.

உன்னைத் தேடுகிறேன் 
அவர் நீண்ட நாட்களாக என் முகநூல் நண்பர். என்னுடைய பதிவுகளை தவறாமல் படித்து லைக் அல்லது கமண்ட் பண்ணுவார். ஒரு முறை கூட எதிர்மறையாக அல்லது மரியாதை இல்லாமல்  பதிவு செய்ய மாட்டார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

திடீர் என்று ஒருநாள் அவரைக் காணவில்லை. என்னுடைய பதிவுகளில் அவர் வருவதில்லை. அவருக்கு பல காரணங்கள் இருக்கலாம். எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது, விரும்பவும் இல்லை.

பல நாட்கள் கழித்து, சில நாட்கள் முன்பு எனது பதிவில் கமண்ட் செய்தார். எனக்கு அதைப் பார்த்து மிக சந்தோஷமாக இருந்தது. அவருக்கு பதில் அனுப்பினேன்."ஓ, நண்பரே. நலமாக இருக்கிறீர்களா? உங்களைக் காணாமல் பல நாட்கள் தேடுகிறேன்" என்று எழுதினேன்.

அதற்கு அவர் பதில் அனுப்பினார். "நான் ஒன்றும் காணாமல் போகவில்லை. முகநூலில் தான் தினமும் நண்பர்களுடன் இருக்கிறேன்" என்றார்.

"உன்னைத் தேடுகிறேன்" என்பது அன்பு, அக்கறை, பாசம், தொடர்பு விட்டுப் போதல் போன்ற காரணங்களுக்கு உபயோகிக்கப் படும் ஒரு சொற்றொடர். பலர் அது கணவன், மனைவி, காதலர்கள் இடையே தான் உபயோகிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.


அப்படி அல்ல. யார் வேண்டுமானாலும் தங்களிடையே உள்ள நட்பைக் காட்ட உபயோகிக்கலாம். ஒருவருக்கு ஒருவர் சந்திக்க, தொலை பேசியில் பேச முடியாமல் தொடபு விட்டுப் போகும் பொழுது அந்த வார்த்தைகளை உபயோகப் படுத்தலாம்.






No comments :

Post a Comment