Saturday, December 2, 2017

YOU CAN ALSO WRITE / நீங்களும் எழுதலாம்.

YOU CAN ALSO WRITE

Good communication through writing is the essence of life. Whether it is one para or one page, either English or Tamil, never be satisfied with what you have drafted. In case you have any doubt, refer to Google for grammar, usage, meaning, spelling, synonyms [words with similar meaning], etc. The more you use Google, the more the knowledge you gain. 

You read the passage again and again for any correction, improvement, modification, comprehension, etc. Do not hesitate or feel shy to clear your doubts from a learned person. Only when you are fully satisfied with the passage, you decide to publish it. 

To learn swimming, you must plunge into the water. You cannot learn on the floor. There is nothing impossible in this world. I wish you all success in good writing.

1. Express in simple words what you have in your mind.

2. Say a few words about the book you have recently read.

3. Post articles of value by our gurus like Paramacharya.

4. Write about a good movie you have recently seen.

5. Comedy tracks/songs from movies.

6. Post about the good music you have enjoyed.

7. Post poems by great authors like Thiruvalluvar etc.

8. Narrate an incident that happened to you today

9. Write about your past memories which are not secret/hurting

10. Write something you think useful for the younger generation.

11. Recent developments in engineering, medicine, etc

12. Any other item of your choice.

நீங்களும் எழுதலாம்.

நல்ல கருத்துக்களுக்கு வரி வடிவம் கொடுப்பது வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. ஒரு பாராவோ, பக்கமோ, ஆங்கிலம் அல்லது தமிழோ நீங்கள் எழுதியதில் சீக்கிரம் திருப்தி அடையக்கூடாது. இலக்கணம், அர்த்தம், போன்ற எந்த விதமான சந்தேகங்களுக்கும் கூகில் வலைத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம். கூகில் வலைத் தளத்தை அதிகம் உபயோகப் படுத்தினால்  அதிக அறிவு உண்டாகும். 

எழுதியதை பலமுறை படித்து, திருத்தங்கள், மாற்றங்கள், சுருக்குதல் எல்லாம் செய்ய வேண்டும். எந்த விதமான சந்தேகங்களுக்கும் அறிவில் சிறந்த பெரியவர்களை கேட்க வேண்டும். நீங்கள் எழுதியதில் முழுத் திருப்தி அடைந்த பிறகு அதைப் பதிவு செய்ய வேண்டும். 

நீச்சல் கற்றுக்கொள்ள தண்ணீரில் இறங்கினால் தான் கற்க முடியும். வெறும் தரையில் கற்க முடியாது. இந்த உலகத்தில் முடியாதது என்பது எதுவும் இல்லை. நீங்கள் நன்றாக எழுத என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

1. உங்கள் மனதில் தோன்றும் நல்ல விஷயத்தை சிறிய வார்த்தைகளில் எழுதுங்கள்.

2. நீங்கள் படித்த நல்ல புத்தகத்தைப் பற்றி எழுதுங்கள்.

3. பரமாச்சாரியா போன்ற ஞானிகள் கூறிய விஷயங்களை எழுதுங்கள்.

4. நீங்கள் கண்டு ரசித்த திரை படத்தைப் பற்றி எழுதுங்கள்

5. நல்ல திரைப்படப் பாடல்கள், நகைச்சுவை நிகழ்ச்சி பற்றி எழுதுங்கள்.

6. நீங்கள் விரும்பிக் கேட்ட கர்நாடக சங்கீதத்தைப் பற்றி எழுதுங்கள்.

7. திருவள்ளுவர் போன்ற சிறந்த கவிகள் எழுதிய பாடல்களைப் பற்றி எழுதுங்கள்.

8. அன்று நடந்த ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியைப் பற்றி எழுதுங்கள்.

9. உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சியைப் பற்றி எழுதுங்கள்.

10. இளைய தலைமுறைக்கு உபயோகமான நல்ல விஷயங்களைப் பற்றி எழுதுங்கள்.

11. மருத்துவம், பொறியியல் துறையில் உள்ள முன்னேற்றததை பற்றி எழுதுங்கள்.

12. உங்களுக்கு தோன்றும் வேறு நல்ல விஷயங்களைப் பற்றி எழுதுங்கள்.

No comments :

Post a Comment