Tuesday, December 5, 2017

TRUE HAPPINESS / உண்மையான சந்தோஷம்

TRUE  HAPPINESS  
When we were living in Chennai, we resided in T.Nagar for many years and then shifted to Anna Nagar after constructing our house. However, my wife and I used to go to Pondy Bazaar in T.Nagar for shopping since we were acquainted with many shops there. 

After our shopping, we always visited Balaji Bhavan for tiffin. We used to share the items so that we had variety and also the cost was less. Sometime back, after we finished our meal, I was given a bill for Rs.80/.  I gave an Rs.100/ note at the counter. To my surprise, he returned Rs.420/, assuming that I had given him an Rs.500 note. 


Jovially, I asked him whether he was paid a good salary. He was also surprised. When I told him that he had given me Rs.400/ in excess, he was so happy and said that his salary would be deducted for the shortage. I was also happy. But I didn't know whether his happiness was more or mine.


உண்மையான சந்தோஷம் 

நாங்கள் சென்னையில் வாழும் பொழுது, பல வருடங்கள் தியாக ராய நகரில் வசித்தோம். பிறகு சொந்த வீடு கட்டிய பின் அண்ணா நகருக்கு வீடு மாற்றினோம். இருந்தாலும், அங்கு பல கடைகளைத் தெரியும் என்பதால், பொருட்கள் வாங்குவதற்கு தியாக ராய நகருக்குச் செல்வது வழக்கம். 

நாங்கள் எப்பொழுது அங்கு சென்றாலும், பாண்டி பஜாரில் உள்ள பாலாஜி பவன் ஹோட்டலுக்கு டிபன் சாப்பிடப் போவோம். சமீபத்தில் ஒரு நாள் 3 மணி வாக்கில் அங்கு சென்றோம். நாங்கள் டிபன் சாப்பிட்ட பிறகு, சர்வர் ரூ 80 க்கு பில் கொடுத்தார். பணம் செலுத்த நான் கல்லாவுக்குச் சென்றேன். அவரிடம் 100 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தேன்.


கல்லாவில் இருந்தவர் எனக்கு மீதி ரூ 420 கொடுத்தார். நான் ரூ 500 நோட்டு கொடுத்ததாக நினைத்துக்க் கொண்டிருப்பார் போல. தமாஷாக நான் அவரிடம் உங்களுக்கு ஹோட்டலில் நிறைய சம்பளம் கொடுக்கிறார்களா என்று கேட்டேன். அவர் ஒன்றும் புரியாமல் திகைத்தார். 


பிறகு அவர் எனக்கு ரூ 400 அதிகம் கொடுத்திருப்பது பற்றிக் கூறினேன். அவருக்கு மிகவும் சந்தோஷம். நன்றிகள் பல கூறி பணம் குறைந்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள் என்று கூறினார். எனக்கும் சந்தோஷம் தான். ஆனால் யாருடைய சந்தோஷம் அதிகம் என்று தான் புரியவில்லை.




No comments :

Post a Comment