1990க்கு முன்பு வாழ்க்கை எப்படி இருந்தது? எல்லோரும் கட்டாயம் படிக்கவேண்டியவை. சிரிப்போடு கண்ணீர் வரும். அப்போது பிறந்தவர்களுக்கு மட்டும் அந்த அருமை புரியும்.
1. காலை எழுந்ததும் பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.
2. ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்.
3. ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர, ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ நினைத்ததில்லை.
4. பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்.
5. மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக ஜடை போட்டுவிட்டார்.
6. உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் கட்டி, அக்கா தங்கைக்கு அம்மாவே சூட்டி அழகு பார்த்தார்.
7. நம் அக்காவும் தங்கையும் இரட்டைப் பின்னல் ஜடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்.
8. மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்.
9. தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமையன்று கிராம ஊராட்சி அலுவலகங்களில் நண்பர்களுடன் இரவு "ஒளியும் ஒலியும்" பார்த்தோம்.
10. அம்மாக்கள், அன்று "சீரியல்" என்னவென்று தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து பக்கத்து வீட்டுப் பெண்களுடன் அரட்டை அடித்தனர்..
11. ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்.
12. ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கித் தவித்தோம்.
13. ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கை பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது.
14. ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்தது.
15. உறவினர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்களா என காத்து கொண்டிருந்தோம்.
16. பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துடன் போனோம். வாங்கி கொடுத்த துணியை அணிந்தோம்.
17. காதலிப்பதே அபூர்வமாக இருந்தது. அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்.
18. 10வது மற்றும் 12வது வகுப்பு பரீட்சை ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்.
19. யாராவது சாதாரண செல்போன் ( Rs. 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்.
20. பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA [SLR] சைக்கிள் வைத்திருந்தார்கள்.
21. போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்.
22. வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது.
23. வீட்டில் திருமணம் நடந்தால், எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்.
24. ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்.
25. குறைந்த பட்சம் பத்துக்கு எட்டு கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது.
26. குறைந்த பட்சம் பத்துக்கு எட்டு ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது.
27. பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில்உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்.
28. கிணற்றில் மற்றும் ஆறுகள் ஆகிய இடங்களில் குளிக்கும் பழக்கம் இருந்தது. பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது.
29.பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் துணிப் பைகளையே உபயோகித்தோம்.
30. எவ்வளவு மணி நேரம் விளையாடினாலும், உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது.
31 இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்.
32. உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை. பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை. அன்றைய வாழ்நாள் தான் சொர்க்கம்.

No comments :
Post a Comment