Saturday, December 1, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 916 TO 930

916. கழுதைக்கு எவ்வளவு தான் காதிலே உபதேசம் செய்தாலும், அது அவலமாகக் கத்தத் தான் செய்யும். மூடர்களுக்கு செய்யும் உபதேசமும் அதுபோலத்தான்.

917. வாழ்க்கையில் காதலும், காமமும் உணவில் போடப்படும் உப்பு மாதிரி. அதிகமானாலும், குறைந்தாலும் உணவின் ருசி கெட்டு விடும். அது போலத் தான்

918. அரசன்:மந்திரி, அரண்மனைக்கு வந்த திருடனை கண்டு பிடியுங்கள்.மந்திரி: சேவகா,திருடனை உடனே கண்டு பிடி. ஆஹா, மந்திரி வேலை ரொம்ப சுலபம்

919. குளிக்கும் போது ஷவரில் குளித்தால் தண்ணீர் செலவு கணிசமாக குறையும்.தோட்டத்திற்கு பூவாளியில் தண்ணீர் விட்டால் தண்ணீர் செலவு குறையும்.

920. மந்திரி, மக்களுக்கு இசையில் நாட்டம் இல்லை போல் தெரிகிறதே? ஆம் மன்னா, அவர்களுக்கு அரசியல், மதம், சாதி, இவற்றில் நாட்டம் அதிகம்.

921. ஒரு குடும்பத்தில்,தந்தை,தாய்,மகன்,மகள்,மருமகன், மருமகள் ஆகிய ஆறு பேர்களுக்குள்  சுய மரியாதை என்ற வார்த்தைக்கு சிறிதும் இடமேயில்லை.

922. ஸ்ரீ ஹனுமனுக்கு தெரியாத விஷயமே உலகில் கிடையாது. அவர் அறிவாளிகளுக்கு எல்லாம் அறிவாளி. அவர் யாருக்கும் எந்த உபதேசமும் செய்தது இல்லை.

923. "அழ அழ சொல்வார் தமர், சிரிக்க சிரிக்க சொல்வார் பிறர்" என்றொரு பழமொழி உண்டு. நமது நலனில் அக்கறை உள்ளவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

924. "நரி வலமாய் போனால் என்ன, இடமாய் போனால் என்ன, கடிக்காமல் போனால் சரி"  "துஷ்ட்டனைக் கண்டால் தூர விலகு" என்பார்கள். எல்லாம் நன்மைக்கே

925. திருமணமான தம்பதிகள் சட்டத்தால் அங்கீகரீக்கப்பட்ட ஒரு குடும்பம். அவர்கள் விருப்பமில்லாமல் அவர்கள் வாழ்க்கையில் தலையிட உரிமையில்லை.

926. மருமகளும் ஒரு மனுஷி தான். அவர் நம்மைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார் என்கிற  அச்சம் ஒருவருடைய மனதில் எப்போதும் இருக்க வேண்டும்.

927. வெளியில் இருந்து தனது வீட்டிற்குள் நுழைந்தவுடன் கை,கால் கழுவி, திருநீறு அணிந்து, இறைவனைத் துதித்து பிறகு வேலைகளை கவனிக்க வேண்டும்.

928. இறைவனின் திருநாமத்தை உச்சரித்தால் அவருக்குக் கேட்கும். அதனால் தான் அவர் திருநாமத்தைப் பெயர்களாக வைப்பது நமது பெரியோர்கள் நம்பிக்கை

929. உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்பது குறள்.ஒருவர் கேட்கிறார் இப்போது எல்லோரும் டவுசர் தானே அணிகிறார்கள்.

930. ஆண்கள் தினத்தில் பெண்கள் மட்டும் ஆண்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும்; ஆண்கள் தெரிவிக்கக் கூடாது என்பது யாருக்கும்  தெரியவில்லை.

No comments :

Post a Comment