தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பலர் ரசித்துப் பார்ப்பதைப் பார்த்திருக்கிறேன். அதைப் பற்றி என் தாழ்மையான அபிப்பிராயத்தைக் கூற விரும்புகிறேன்.
1. பாடும் பாடல்கள் எல்லாமே சினிமாப் பாடல்கள். அதில் ஒருவரின் திறமையைக் காண முடியாது.எனக்குப் பாடத் தெரியாது. ஆனால் ஓரிரண்டு சினிமாப் பாடல்களை நன்றாகப் பாடுவேன்.
2. சினிமாப் பாடல்களை யாராலும் ஒரிஜிநல் மாதிரிப் பாட முடியாது. சிறிது வித்யாசம் இருக்கவே செய்யும்.
3. பழைய காலத்துப் பாடலுக்கு தற்கால இசைக் கருவிகளை பயன் படுத்துவது பொருத்தம் இல்லாமலும் வேதனையாகவும் இருக்கிறது
4. ஒரே ஒரு பாடலை மட்டும் தயார் செய்து கொண்டு வந்து பாடினால் திறமை தெரியாது. முன் அறிவிப்பு இல்லாமல் நீதிபதிகள் சொல்லும் பாடலைப் பாடிக் காட்ட வேண்டும்.
5. நீதிபதிகள் எல்லோரும் பழைய பாடகர்களாக இருந்தாலும் அவர்கள் பாராட்டும் முறையும் மார்க் போடும் முறையும் செட்அப் போலத் தெரிகிறது.
6. தேவையில்லாத இசைக் கருவிகளும், காட்சி அமைப்பும், ஒளிப் பதிவும் பாடலின் தரத்தையும் நமது கவனத்தையும் குறைக்கின்றன.
7. ஓரிரு சினிமாப் பாடல்களைப் பாடியவருக்கு லக்ஷக் கணக்கில் பரிசுகள் வழங்குவதில் உள்ள உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
8. நீதிபதிகளைத் தவிர கைபேசியில் எஸ்எம்எஸ் மூலம் ஓட்டுப் போடச் சொல்வதன் அர்த்தம் என்ன என்று யோசிக்க வேண்டும்.
9. மேலை நாடுகளில் ஆங்கில இசையில் சிறந்த பாடகர்கள் மேடைகளில் தோன்றி லைவ் நிகழ்ச்சி நடத்துவதின் தாக்கம் இது.
10. கர்நாடக இசையில் தான் ஒருவருடைய திறமையைக் காண முடியும். இதனால் கர்நாடக இசையை வளர்க்க முடியும்.
11. பல வருடங்களுக்கு முன் ஒரு மலையாள தொலைக்காட்சியில் கர்நாடக இசையை வைத்து இந்த மாதிரி நிகழ்ச்சி நடந்தது.
12. கர்நாடக இசையில் தேர்ந்த பாடகர்கள், போட்டியில் பங்கு பெற்ற ஒவ்வொருவரையும் நுணுக்கமான கேள்விகள் கேட்டு அவர்களைப் பரிட்சை செய்தனர்.
13. ஆலாபனை, ராகம், தானம் , பல்லவி என்று பலவிதமான கேள்விகள் கேட்டு பரிட்சை செய்தது சிறப்பாக இருந்தது.
14. டி ஆர் பி க்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தி நம்மை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று நமக்கு நன்கு புரிய வேண்டும். அந்த மாதிரியான நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும். வெளுத்தது எல்லாம் பால் அல்ல.

No comments :
Post a Comment