Saturday, September 1, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 691 TO 705

691. பிறருக்கு சாபம் கொடுப்பது பாபம். சில சமயம் அது பலித்துவிடும். அதனால் ஏற்படும் விளைவு நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் பாதிக்கும்

692. நாம் நல்ல காரியங்கள் செய்யும் போது நமக்குப் புண்ணியம் சேருகிறது. கெட்ட காரியங்கள் செய்யும் போது புண்ணியம் குறைந்து கொண்டே போகிறது.


693. பண்டைய ரிஷிகளும், முனிவர்களும் தவத்தின் மஹிமையால் வரம் அளிப்பதும், சாபம் கொடுப்பதும் உண்டு. அதனால் தவத்தின் மஹிமை குறைந்துவிடும்.


694. மதச் சுதந்திரம் உள்ள நமது நாட்டில் யாரும் எந்த அபிப்பிராயமும் கொள்ளலாம். ஆனால் மற்றவர் மனதைப் புண் படுத்தும் படி பேச,எழுதக் கூடாது.


695. அமெரிக்காவில் வாசக சாலை அனுபவம் ஒரு அற்புதம்.வெளியே வரவே மனது வராது.புத்தகங்கள் அழகாக, ஒழுங்காக, சுத்தமாக வைக்கப் பட்டு இருக்கும்.


696. சில ஆண்களுக்கு பெண் குணம், சில பெண்களுக்கு ஆண் குணம் இருக்கும். மனைவிக்கு ஆண் குணம் இருந்தால் கணவனுக்கு பெண் குணம் இருப்பது நல்லது


697. மருத்துவக் காப்பீடு முக்கியம்.ஒருவருக்கு ரூ.25000/ ஆகும்.டிக்கெட் போக,வர ஒருவருக்கு ரூ. 60000/ ஆகும்.யாராவது செலவு செய்தால் நல்லது


698. எல்லா ஏர் இந்தியா விமானமும் இந்தியாவின் பல இடங்களில் இருந்து புறப்பட்டு, மும்பை அல்லது டெல்லியில் மாறி, நடுவில் நிற்காமல் செல்லும்


699. வயதானவர்களுக்கு, பாஷை தெரியாதவர்களுக்கு, தனியாகப் போகிறவர்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்வது சௌகரியம். விலை கொஞ்சம் அதிகம். 


700. கட்டார் [DOHA], எமிரேட்ஸ் [DUBAI], எடிஹாட் [ABUDHABI] வழியாகச் செல்லும். அந்த விமான நிலையங்களில் வேறு விமானத்திற்கு மாற வேண்டும். 


701. தர வரிசையில் சிறந்த விமான நிறுவனங்கள்: கட்டார், எமிரேட்ஸ், எடிஹாட் முதலியன.ஏர் இந்தியா விமானத்தில் மட்டும் இந்திய உணவு கிடைக்கும்.


702. இந்தியாவிலிருந்து அமெரிக்கா 16000 கி.மீ. 40000 அடி உயரத்தில்,மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் _50c வெப்பத்தில் 16 மணி நேரத்தில் சேரும்


703. விமான நிறுவனங்கள் நவம்பர்/டிசம்பர் மாதத்தில், சலுகை விலையில், அடுத்த வருட பயணத்திற்கு [போவதற்கு,வருவதற்கு ] முன்பதிவு செய்வார்கள்.


704. PASSPORT, VISA இரண்டும் காலவதி ஆகாமல் இருக்க வேண்டும். IMMIGRATION போது PASSPORT இல் நுழைவு, புறப்பாடு பற்றி முத்திரை  இடப் படும்.


705. இந்தியாவில் இருந்து வரும் எவரும் அமெரிக்காவில் எந்த விமான தளத்திலும் IMMIGRATION பரிசோதனைக்கு உட்பட்ட பிறகு அனுமதி வழங்கப்படும்.

No comments :

Post a Comment