Sunday, September 3, 2017

குரு தக்ஷிணை PART 4 of 4

Continued from part 3 of 4

ஏகலவ்யன் துரோணரைக் கண்டு, சில எட்டுகள் முன் வந்து, அவரது பாதத்தைத் தொட்டு, நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்தான். இப்படி துரோணரை வணங்கிய நிஷாத மன்னனின் மைந்தன், தன்னை அவரது சீடனாகத் தெரிவித்து, மரியாதையாகக் கரங்குவித்து அவர் முன் நின்றான். 


பிறகு துரோணர், ஏகலவ்யனிடம், "ஓ வீரனே, நீ எனது சீடனாக இருப்பின், எனக்குரிய கூலியைக் {தட்சணையைக்} கொடு" என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்ட ஏகலவ்யன் மிகவும் திருப்திகொண்டு, "ஓ குருவே, நான் உமக்கு என்ன தரட்டும்? எனக்கு கட்டளையிடுங்கள். 


வேதமறிந்த அனைத்து மனிதர்களைக் காட்டிலும் முதன்மையானவரே, எனது குருவுக்கு நான் தரமாட்டேன் என்று சொல்வதற்கு உலகில் எந்தப் பொருளும் இல்லை." என்றான். அதற்கு துரோணர், "ஓ ஏகலவ்யா, உண்மையில் எனக்கு பரிசு கொடுக்கும் நோக்கம் உனக்கு இருக்குமானால், உனது வலக்கைக் கட்டை விரலை நான் உன்னிடம் வேண்டுகிறேன்." என்றார்.


 "உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, தான் கொண்ட உறுதியை காக்க விரும்பிய ஏகலவ்யன், கூலியாகக் கட்டைவிரலைக் கேட்ட துரோணரின் கொடும் வார்த்தைகளைக் கேட்டும் கூட, மகிழ்ந்த முகத்துடன், இதயம் பாதிக்காமல், ஆரவாரமில்லாமல் தனது கட்டைவிரலை வெட்டியெடுத்து, துரோணரிடம் கொடுத்தான்.


அதன்பிறகு, மீதம் இருந்த விரல்களுடன் கணையடித்த அந்த நிஷாத இளவரசன்,  தனது லாவகம் கெட்டிருந்ததை அறிந்தான். இதனால் அர்ஜூனன், அவனிடம் இருந்த பொறாமை எனும் நோய் அகன்று மகிழ்ச்சியடைந்தான்.                   


Abridged from  முழு மஹாபாரதம்        CONCLUDED

No comments :

Post a Comment