Sunday, September 3, 2017

குரு தக்ஷிணை PART 1 of 4

வைசம்பாயனர் சொன்னார், 

பீஷ்மர் விரும்பிய படி, வில்லாளிகளில் சிறந்த துரோணர் மகிழ்ச்சியுடன் பாண்டு மற்றும் திருதராஷ்டிரனின் மைந்தர்களை தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார். ஒரு நாள் அவர்களைக் கூப்பிட்டு, தனது காலில் விழுந்து வணங்க வைத்து, கனத்த இதயத்துடன், 


"நான் எனது இதயத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை வைத்திருக்கிறேன்நீங்கள் ஆயுதங்களில் நிபுணத்துவம் பெற்றதும், அந்த காரியத்தை நிறைவேற்றித் தருவதாக எனக்கு உண்மையுடன் உறுதி கூறுங்கள்." என்று சொன்னார்.


 "இந்த வார்த்தைகளைக் கேட்ட  அர்ஜூனன், அந்தக் காரியம் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றித் தருவதாக சத்தியம் செய்தான். மகிழ்ச்சியடைந்த துரோணர் அர்ஜூனனை மார்புறத் தழுவி, ஆனந்த கண்ணீர் விட்டார். 


பிறகு  துரோணர், பாண்டுவின் மகன்களுக்கு தெய்வீக மற்றும் மனித ஆயுதங்களில் பயிற்சி கொடுத்தார். ஆயுத அறிவியலில் தனக்கிருக்கும் அர்ப்பணிப்பாலும், நிபுணத்துவத்தாலும், கரங்களின் பலத்தாலும், விடாமுயற்சியாலும் எப்போதும் குருவின் அருகே இருந்து, அனைவரைக் காட்டிலும்  அர்ஜூனன் மேம்பட்டு இருந்தான். 


குரு எடுக்கும் பாடம் எல்லோருக்கும் ஒன்றாக இருப்பினும், அர்ஜூனன், தனது கரங்களின் லாவகத்தாலும், நிபுணத்துவத்தாலும் சக மாணாக்கரில் முதன்மையானவனாகத் திகழ்ந்தான்.பழக்கவழக்கத்தின் {HABIT} சக்தியை உணர்ந்த  பாண்டு மைந்தன் {அர்ஜூனன்}, இரவில் விற்பயிற்சி செய்யத் தீர்மானித்தான்.  


இரவில் வில்லிலிருந்து புறப்படும் நாணொலியைக் கேட்ட துரோணர், அவனிடம் வந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டு, "நான் உண்மையில் சொல்கிறேன். நான் உனக்கு கற்பிக்கும் வித்தையால் உனக்கு நிகரான வில்லாளி ஒருவனும் இவ்வுலகத்தில் இருக்க மாட்டான்." என்றார்.


Abridged from  முழு மஹாபாரதம்  

to be continued in part  2 of 4

No comments :

Post a Comment