Sunday, September 3, 2017

குரு தக்ஷிணை PART 3 of 4

Continuation from part 2 of 4

வில்லிலிருந்து நிறுத்தாமல் தொடர்ச்சியாகக் கணைகளைச் சரமாக அடித்துக் கொண்டிருந்த ஏகலவ்யனைக் கண்டனர். அந்தக் கடும் முகம் கொண்டவனிடம், "நீ யார்? யாருடைய மகன் நீ?" என்று கேட்டனர். 


இப்படிக் கேட்கப்பட்ட அம்மனிதன், "வீரர்களே, நான் நிஷாத மன்னன் ஹிரண்யதனுசின் மைந்தன்.ஆயுதக் கலையில் நிபுணத்துவம் பெற்ற ஆசான் துரோணரின் மாணக்கனாக என்னை அறிந்து கொள்ளுங்கள்." என்றான்.


"அதன்பிறகு, அந்த நிஷாதன் தொடர்பாக அனைத்தையும் அறிந்து கொண்ட பாண்டவர்கள், நகரத்திற்குத் திரும்பி, துரோணரிடம் சென்று, கானகத்தில் அவர்கள் கண்ட அதிசயமான வில்வித்தைச் சாதனையைப் பற்றி அவரிடம் சொன்னார்கள். 


குறிப்பாக அர்ஜூனன், அவ்வளவு நேரமும் ஏகலவ்யனைச் சிந்தனை செய்து கொண்டு, பிறகு துரோணரைத் தனிமையில் சந்தித்து, தனது குரு தன் மீது வைத்திருக்கும் அன்பில் நம்பிக்கை கொண்டு, "நீர் என்னை அன்புடன் உமது மார்போடு அணைத்து, எனக்குச் சமமாக உமது மாணவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொன்னீர்.


இப்போது உமது மாணவனான நிஷாத மன்னனின் மைந்தன் என்னைவிடச் மேம்பட்டவனாக இருப்பது எவ்வாறு?" என்று கேட்டான்."இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணர் சிறிது நேரம் சிந்தித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து, அர்ஜூனனை அழைத்துக் கொண்டு நிஷாத இளவரசனிடம் சென்றார். 


அங்கே, உடலெங்கும் அழுக்கு பூசி, தலையில் குடுமியுடன், கந்தலாடையுடன், கையில் வில்லேந்தி, தொடர்ச்சியாக சரம்போல கணையடித்துக் கொண்டிருக்கும் ஏகலவ்யனைக் கண்டார். 


Abridged from  முழு மஹாபாரதம்  

to be continued in part  4 of 4

No comments :

Post a Comment