Sunday, September 3, 2017

குரு தக்ஷிணை PART 2 of 4

Continuation from part 1 of 4

அவரது நிபுணத்துவத்தைக் கேள்விப்பட்ட பல நாட்டு மன்னர்களும் இளவரசர்களும், துரோணரிடம் ஆயிரக்கணக்கில் வந்து குழுமினர். அப்படி வந்தவர்களில், ஏகலவ்யன் என்ற இளவரசனும் இருந்தான். அவன் நிஷாதர்களின் மன்னன் ஹிரண்யதனுசின் மகனாவான். 


இருப்பினும், தர்ம நீதிகள் அனைத்தையும் அறிந்த துரோணர், தனது உயர்குடி மாணவர்களை விட இந்த நிஷாதனானவன், திறமையில் விஞ்சிவிடப்போகிறான் என்று எண்ணி, அவனை மாணவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. 


ஆனால் அந்த நிஷாத இளவரசன், துரோணரின் பாதத்தைத் தனது தலையால் தொட்டு வணங்கி, வந்த வழியே கானகத்திற்குள் சென்றான். அங்கே களிமண்ணால் துரோணர் உருவத்தைப் பதுமை செய்து, அதை உண்மையான குருவாக ஏற்று வணங்கி, அப்பதுமைக்கு முன் தினசரி ஆயுதப் பயிற்சிகளைச் செய்து வந்தான். 


தனது குருவின் மேல் வைத்திருந்த அளவற்ற மதிப்பினாலும், விற்பயிற்சியில் அவன் கொண்டிருந்த அர்ப்பணிப்பினாலும், அவனுக்கு, நாணில் கணை பொருத்துவது, இலக்கு நோக்குவது, விடுப்பது ஆகிய மூன்றும் மிக எளிதானது. ஒரு நாள், கானகத்திற்கு வந்த அவர்கள், தங்கள் வேட்டையைத் தேடி உலவிக் கொண்டிருந்தனர். 


அதே வேளையில், கூட வந்த நாயும் தனியாக கானகத்தில் உலவி, நிஷாத இளவரசன் (ஏகலவ்யன்) இருக்குமிடத்திற்கு வந்தது. கறுப்பு உடையுடனும், உச்சந்தலையில் குடுமியுடனும், அழுக்கேறிய உடலுடனும் கறுத்த நிறத்துடனும் இருந்த நிஷாதனைக் கண்ட அந்த நாய், சத்தமாகக் குரைத்தது.


அதனால் அந்த நிஷாத இளவரசன், நாய் வாயை மூடும் முன்பே, அதன் வாய்க்குள் ஏழு கணைகளை அடித்தான். ஏழு கணைகளால் துளைக்கப்பட்ட அந்நாய், பாண்டவர்களிடம் திரும்ப வந்தது. இக்காட்சியைக் கண்ட அந்த வீரர்கள், ஆச்சரியத்தில் மூழ்கினர். 


தங்கள் திறனில் வெட்கமடைந்து, அவர்கள் அறியாத மனிதனின் லாவகம் கொண்ட கரத்தையும், செவித்திறன் கொண்டு தவறாது குறியைச் சரியாக அடிக்கும் திறனையும் புகழ ஆரம்பித்தனர். பிறகு, அந்தக் கானகவாசியைத் தேடிச் சென்றனர்.  


Abridged from முழு மஹாபாரதம்  

to be continued in part 3 of 4

No comments :

Post a Comment