Saturday, November 10, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 886 TO 900

886. பெண்கள் தங்களுடைய கற்பைப் பாதுகாக்க வேண்டும் என்று அலுக்காமல் கூறும் ஆண்கள் தங்களுக்கும் அதேபோல கற்பு உண்டு என்று நினைக்க வேண்டும்

887. திருமணமான ஆண்கள் தனது மனைவியைத் தவிர மற்ற பெண்களை தாய், சகோதரி, அல்லது மகள் என்று நினைக்கவேண்டும். அது ஆண்களின் கற்பு எனப்படும். 

888. திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களின் காலை முதலில் பார்க்க வேண்டும். காலில் "மெட்டி" இருந்தால், தாய் அல்லது சகோதரி மாதிரி கருத வேண்டும்.

889. பலவித கெட்ட குணங்களைக் கொண்டவர்கள் இறைவனைத் தரிசிக்க கோவிலுக்குச் செல்வதைப் பார்த்தால் அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.

890. வெள்ளிக்கிழமை பெண்களுக்கு ஒரு விசேஷமான நாள். அதனால் அவர்கள் அன்று கோயிலுக்குப் போகிறார்கள்.ஆண்கள் கூட்டம் ஏன் அங்கு அலை மோதுகிறது?

891. கோவிலுக்கு இறைவனை தரிசனம் செய்யப் போகும் போது, நமது உடல் சுத்தமாகவும், மனது, வாக்கு இரண்டும் இறைவனை பற்றி மட்டுமே நினைக்கவேண்டும்.

892. எத்தனை மாத்திரை சாப்பிடுகிறோம் என்பதைப் பொருத்தது ஆரோக்கியம். குறைந்த மாத்திரை அதிக ஆரோக்கியம். அதிக மாத்திரை குறைந்த ஆரோக்கியம்.

893. பெண்டாட்டி பேச்சைக் கேட்டு பெற்றோர்களைத் தவிக்க விடுவதும் தவறு, பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு பெண்டாட்டியைத் தவிக்க விடுவதும் தவறு.

894. நீச்சல் கற்றுக் கொள்ள தண்ணீரில் இறங்கினால் தான் கற்றுக் கொள்ள முடியும். வெறும் தரையில் எவ்வளவு முயற்சி செய்தாலும் கற்க முடியாது.

895. ஒருவர் வாழ்க்கையில் கஷ்டப்படுவது சகஜம்.அதற்காக எல்லாவற்றையும் சோகமாகப் பார்க்கக் கூடாது.மனதை மாற்றி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.

896. எப்பொழுதும் பிறருக்குக் கொடுக்க வேண்டும். வாங்கவே கூடாது. நமது உள்ளங்கை கீழ் நோக்கியே இருக்கவேண்டும், மேல் நோக்கி இருக்கக் கூடாது.

897. பிரபலமானவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போகும் மனப்பான்மை எப்போது இந்த மக்களிடம்  வருகிறதோ அப்போது தான் இந்த நாடு உண்மையில் முன்னேறும்.

898. பண்டிகை நாளில் நான் இறந்து விடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வேன். என் சந்ததி அந்தப் பண்டிகையைக் கொண்டாட முடியாது என்பதால்

899. ஒவ்வொரு தலைமுறையும், அதற்கு முந்திய தலைமுறையை விட, அதிகம் படித்திருக்கிறார்கள், புத்திசாலியாக இருக்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.

900. தீபாவளிக்கு குழந்தைகள் பெற்றோர்களுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். குழந்தைகளை ஆசீர்வதித்து ஒவ்வொருவருக்கும் பணம் கொடுக்க வேண்டும்.



No comments :

Post a Comment