841. தலையில் தூசு படியாமல் இருக்க ஒத்தைப் பின்னல், இரட்டைப் பின்னல் என்று பெண்கள் தங்கள் முடியை அலங்காரம் செய்த நாட்கள் மலையேறிவிட்டது.
842. நியூயார்க் தொ சென்னை வரும் விமானம் 16000 கிமீஐ 45000 அடி உயரத்தில் -50டிகிரி ஸீஇல் மணிக்கு 1000 கிமீ வேகத்தில்16 மணியில் கடக்கிறது.
843. எல்லா நீதிபதிகளையும் நியமிப்பது, வழக்குகளை ஒத்திவைப்பதை குறைப்பது, குறித்த காலத்தில் தீர்ப்பு சொல்வது, இவை வழக்குகளைக் குறைக்கும்.
844. ஒருவருக்கு வருவாய் அதிகம் ஆகும்போது, தான் மட்டும் சுகமாக வாழவேண்டும் என்ற எண்ணம் வரும்போது, தனியாக, சுதந்திரமாக வாழ ஆசை வருகிறது.
845. கூட்டுக் குடும்பங்களால் பலவித நன்மைகள் உண்டு. ஒருவருக்கு ஒருவர் நட்பு, ஆலோசனை, உதவி, குறைந்த செலவு, பாதுகாப்பு, சந்தோஷம் எல்லாமே.
846. மனைவியுடன் வீட்டு வேலைகளில் பங்கு கொள்ள விருப்பமில்லாத கணவன்மார்கள் ஏன் அவர்களை வேலைக்கு அனுப்பி அவர்கள் பணத்தில் வாழ வேண்டும்?
847. காய்கறிகள் செடியின் ஒரு பகுதி. அதைப் பறிப்பதால் செடி இறப்பதில்லை. முட்டை கோழியின் பகுதி இல்லை. அதை உண்பதால் கோழிக்குஞ்சு இறக்கிறது
848. இறைவனை அடையும் வழி. கடமையைச் செய்வது, ஆசையைத் துறப்பது, ஞானத்தை அடைவது, தியானம் செய்து பக்தி செலுத்துவது. வேறு வழி எதுவும் இல்லை.
849. பேசுவதை நிறுத்தி விட்டேன். இனிமேல், யாராவது ஏதாவது கேட்டால் பதில் சொல்வது ஒன்றைத் தவிர, வேறு பேச்சு பேசுவது இல்லை என்று தீர்மானம்.
850. அறுபது வயது வரை வாழும் வாழ்க்கையில் பணத்தைத் தேடுகிறோம். அதன் பிறகு வாழும் வாழ்க்கையில் நிம்மதியைத் தேடுகிறோம். இரண்டுமே கஷ்டம்.
851. அறுபது வயதுக்கு முன் ஒருவருக்கு நிகழ்காலமும் எதிர்காலமும் உண்டு. ஆனால் அறுபது வயதிற்குப் பின் இறந்த காலமும் நிகழ்காலமும் தான் உண்டு
852. உங்களுக்கு எது தேவையோ, அதை நன்றாக யோசித்து, முடிவு செய்து, இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். ஒருவேளை, கிடைத்தாலும் கிடைத்து விடும்.
853. யாருடனும் சண்டை போடுவது தவறு. அப்படிப் போட்டாலும் அவருடைய வயது, அறிவு, உடல் வலிமை, பணபலம் எல்லாம் நமக்குச் சமமாக இருக்க வேண்டும்.
854. காலையில் சீக்கிரம் எழாததால் அப்பாவிடம் தண்டனை அடைந்த நாட்கள் அன்று. சீக்கிரம் எழுவதால் குழந்தைகளிடம் தண்டனை அடையும் நாட்கள் இன்று.
855. தன்னுடைய சந்தோஷத்திற்காக மட்டும் வாழ்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். பிறருடைய சந்தோஷத்திற்காக வாழ்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

No comments :
Post a Comment