Wednesday, November 7, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 871 TO 885

871. சைவர்கள் அஷ்டமி திதி வரும் நாளை கொகுலாஷ்டமி என்றும், வைஷ்ணவர்கள் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளை ஸ்ரீஜயந்தி என்றும் கொண்டாடுகின்றனர்

872. நமது இந்தியமுறை கக்கூஸ் தான் சிறந்தது. அடிவயிறு அழுந்த வேண்டும். மேல்நாட்டு முறைக் கக்கூஸ் உட்கார முடியாதவர்களுக்கு மட்டும் தான்.

873. ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த ஒருவர், மற்ற கட்சிகளைச் சாடுகிறாரே தவிர, தன்னுடைய கட்சியின் சாதனைகளைப் பற்றிக் கூறுவதே இல்லை.

874. ஒரு காலத்தில் தேசம் முழுவதும் தமிழர்கள் பதவியில் இருந்தார்கள்.தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி எல்லாம் தெரிந்தது.இப்போது ஒன்றும் தெரியவில்லை

875. உச்ச நீதி மன்றத்தின் செயல்முறை, நீதிபதிகளின் சட்ட அறிவு, அதிகாரம், அணுகுமுறை,அங்கு வக்கீல்களின் நிலை இவைகளை அறிந்து கொள்வது நல்லது

876. கிராமத்தில் படிக்காதவன் அரைநிஜார் அணிந்தால் அதற்கு ஒரு மரியாதை,வெளி நாட்டிலிருந்து வந்த படித்தவன் அணிந்தால் அதற்கு ஒரு மரியாதை.ஏன்?

877. அவன் யார் தலையில் கை வைத்தாலும் எரிந்து போகவேண்டும் என்று அசுரனுக்கு சிவன் வரம் அளித்தார்.அவன் அவர் தலையிலேயே சோதிக்க விரும்பினான்

878. தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன், உங்களிலும் என்னிலும் இருப்பார் எனில், உங்களுக்கு புரிபவர், எனக்கு புரியாமல் இருப்பது ஏன்?

879. எண்ணும் இல்லை, எழுத்தும் இல்லை. இலக்கணமும் இல்லை, இலக்கியமும் இல்லை, தமிழும் இல்லை, ஆங்கிலமும் இல்லை, பேசவும் முடியாது.அது தங்லிஷ்

880. இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்களை விட நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்களது நம்பிக்கையில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள் போலத் தெரிகிறது.

881. மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம் கிடைத்தால் அதை நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஒருவருக்கு ஏற்பட வேண்டும்.

882. அதிகாரத்தின் சக்தியை அறியாத பாமரர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.அந்த அதிகாரத்தைக் கொடுத்தவர்களே அவர்கள்தான் என்பது வேடிக்கை.

883. நாம் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.நன்மை செய்ய முடியவில்லையா. ஒருவருக்கு தீமை செய்யாமல் இருப்பதே அவருக்கு நன்மை செய்தது போல ஆகும்

884. ஒருவருடைய பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையில், அவர் செய்யும் பாவம், புண்ணியம் மட்டுமே மிஞ்சும். அவருடன் கடைசி வரை வருவதும் அவைகளே.

885. என்னதான் சட்டப்படி மகளுக்கு சொத்தில் சமபங்கு கொடுத்தாலும், திருமணமான பின் பெற்றோர்கள் அவளுடன் நிரந்தரமாக வாழ்வதை விரும்புவதில்லை.


No comments :

Post a Comment