Monday, November 5, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 856 TO 870

856. ராணுவத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு, சம்பளத்தைத் தவிர்த்து, அவருக்கு அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

857. கற்பனைக்கு எட்டாத, கண்ணுக்கு தெரியாத கடவுளை பற்றி கஷ்டப்பட்டு கற்பனை செய்யாமல், கஷ்டப்படுவோருக்கு கால் வயிறு கஞ்சி கொடுப்பது மேல்.

858. உங்கள் அனுபவம் எனக்கு இருக்க வேண்டும் என நினைப்பது தவறு. என் அனுபவம்  உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைப்பது அதைவிட பெரிய தவறு

859. கடவுள் பக்தி இரண்டு வகைப்படும். ஒன்று இளமையில் வருவது. மற்றது முதுமையில் வருவது. முதலாவது உறுதியானது. இரண்டாவது பயத்தில் வருவது.

860. போன தலைமுறையில் கண்டிப்பும் தண்டனையும் உண்டு. அடுத்த தலைமுறையில் கண்டிப்பும் அன்பும் உண்டு. இந்தத் தலைமுறையில் அன்பு மட்டும் உண்டு

861. வயது ஆக ஆக அறிவும் ஞானமும் வளர வேண்டும். நாலு பேருக்கு அறிவுரை சொல்லும் தகுதி வர வேண்டும். தகுதியற்றவர் பேச்சில் மயங்கக் கூடாது.

862. ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசாமல், உணராமல், பகிர்ந்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்தால் மனம் துருப்பிடித்து வீணாகிப் போவது நிச்சயம்.

863.கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடிது இளமையில் வறுமை. கொடிது கொடிது தனிமை கொடிது, அதனிலும் கொடிது முதுமையில் தனிமை. இறைவா.

864. தினசரி வாழ்க்கையில் நடப்பதைப் பார்த்து எனது மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. அவைகளை வார்த்தைகளாக மாற்றித் துணுக்குகளாக எழுதுகிறேன்.

865. பெரியவர்களை நாம் நமஸ்காரம் செய்தால் அவர்கள் ஆசீர்வதிப்பார்கள். அதனால் நமக்குப் புண்ணியம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பலனும் கிடையாது

866. பலதரப்பட்ட மக்கள், பலதரப்பட்ட இடங்களில், பலதரப்பட்ட சூழ்நிலையில், பலதரப்பட்ட எண்ணங்களுடன், பலதரப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

867. இன்று அமெரிக்காவில் தொழிலாளர் தினம். மரத்தில் இலை கூட அசையவில்லை. அவ்வளவு அமைதி. இந்தியாவில் மே தினம் எவ்வளவு கோலாகலமாக இருக்கும்.

868. இன்றைய தலைமுறையினரிடம் பணம் அதிகமாக இருக்கிறது. அதனால் அவர்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற அஹங்காரம் இருக்கக் கூடாது.

869. திருமணமான மகளின் வீட்டில் என் பெற்றோர்கள் எப்போதும் தங்கியதில்லை. அதை நான் அப்போது ஒப்புக்கொண்டதில்லை. இப்போது ஒப்புக்கொள்கிறேன்.

870. ஒருவருடைய நியாயமில்லாத செயல்களைப் பார்க்கும்போது மனம் வேதனைப்படுகிறது. யார் எப்படிப் போனால் என்ன என்று சும்மா இருக்க முடியவில்லை


No comments :

Post a Comment