Wednesday, May 9, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 301 TO 315

301. தண்ணீரை எத்தனை முறை கலக்கினாலும் மறுபடியும் தெளிவு நிலை அடையும். எத்தனை சோதனைகள் வந்தாலும் நேர்மையான மனது தெளிந்த நிலையில் நிற்கும்.

302. வரவிலிருந்து செலவைக் கழித்தபின் மீதி சேமிப்பு என்பது நியதி. ஆனால் வரவிலிருந்து சேமிப்பைக் கழித்தபின் மீதி செலவு என்பது என் கோட்பாடு.

303. இறைவனை தினம் ஒருமுறை நினைத்தால் செய்த பாவங்கள் அழியும். இருமுறை நினைத்தால் தனம் வந்து சேரும். மூன்றுமுறை நினைத்தால் விரோதிகள் இல்லை.

304. சினிமாவில் காட்சிகள் நம் கண்களுக்குத் தெரிகின்றன. பின்னால் இருக்கும் திரை இல்லாமல் காட்சிகள் இல்லை. இறைவன் இல்லாமல் இயக்கம் இல்லை.

305. பிறரை மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. ஏனென்றால் ஒவ்வொருவரும் அவரவர் அறிவின் படி செயல் படுகிறார்கள் என்பது நன்கு புரிய வேண்டும்.

306. வயதாக வயதாக உணவு மற்றும் உறவுகளுடன் ஒட்டுதலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து "அவசியத்திற்கு மட்டும்" வைத்துக்கொண்டால் மனம் அமைதி பெரும்.

307. இன்றைய இளைஞர்கள் நிலை மிகவும் கஷ்டம். வீடு, குழந்தைகள் கல்வி, பெற்றோர்கள் மருத்துவம், பிற்கால சேமிப்பு என்று குருவி தலையில் பனங்காய்.

308. வெள்ளைத் துணியில் உள்ள கரும் புள்ளி தான் நம் கண்களுக்கு தெளிவாகத் தெரியும். பிறரிடம் உள்ள நல்ல குணங்கள் நம் எண்ணத்தில் நிலைக்காது.

309. ஒரு காலத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்று இருந்தனர். இப்பொழுது இரண்டுமே தெரியவில்லை. சொன்னால் கோபம் மட்டும் வருகிறது.

310. உங்கள் வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், திதி நாட்களில் உங்களால் முடிந்த அளவு பணத்தை அருகில் உள்ள கோயில் உண்டியலில் செலுத்தவும்.

311. திருமணத்திற்குப் பின் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரின் ஆக்ரமிப்பு அதிகம் காணப்படுகிறது. அனுசரிப்பு மிகக் குறைவாக இருக்கிறது.

312. ஒரு பெண் தன்னை மணக்கப் போகும் ஆணிடம் எதிர்பார்க்க வேண்டிய முதல் தகுதி "கெட்ட பழக்கம் / முன்கோபம்" எதுவும் அவரிடம் இல்லை என்பதுதான்.

313. கடமையில் தவறக் கூடாது. ஏப்ரல் மாதத்தில் அந்த ஆண்டுக்கான வீட்டு வரி, குடிநீர் வரி, சாலை வரி போன்ற வரிகளை தவறாமல் செலுத்த வேண்டும்

314. இனிமையான, காலத்தால் அழியாத தத்துவப் பாடல்களைத் தமிழ் சினிமாவில் ரசித்திருப்பீர்கள். உங்களுக்குப் பிடித்த சிறந்த தத்துவப் பாடல் எது?

315. தமிழ் சினிமா, சீரியல் எல்லாவற்றிலும் மது அருந்தும் காட்சிகள் அதிகம் வருவது மிகுந்த கவலையை அளிக்கிறது. எதிர் காலம் பாதிக்கப்படும்.


No comments :

Post a Comment