Friday, May 4, 2018

தமிழ் நமது தாய் மொழி

1. சைனாவின் ஜனத்தொகை 138 கோடி. சைனீஸ் மொழி பேசுவோர் 120 கோடி. இந்தியாவின் ஜனத்தொகை 131 கோடி. ஹிந்தி மொழி பேசுவோர் 55 கோடி. 

2. உலகில் சைனீஸ்,ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்து ஆங்கிலம் அதிக மக்களால் பேசப்படுகிறது.அது எல்லா நாடுகளையும் இணைக்கும் மொழியாக இருக்கிறது


3. இந்தியாவில் ஹிந்தி 55 கோடி, ஆங்கிலம் 13 கோடி, பெங்காலி 9 கோடி, தெலுங்கு 8 கோடி, மராத்தி 8 கோடி, தமிழ் 6 கோடி மக்கள் பேசுகிறார்கள் 


4. ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் தனியாக ஒரு மொழி உண்டு. ஆனால் அந்த மாநிலத்தைச் சேராதவர்கள் பேசும் பொது மொழி ஹிந்தி. தமிழ் நாடு ஒன்றைத் தவிர  


5. வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் தமிழ் கற்று கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் பலருக்கு சரியாக தமிழில் பேச, எழுத தெரியாது. 


6. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். உண்மை. ஆனால் அந்தப் பாட்டையே எவ்வளவு நாளைக்குப் பாடிக் கொண்டிருப்பது? 


7. 1965இல் "ஹிந்தி எதிர்ப்பு" என்பதற்கு பதிலாக "தமிழ் ஆதரவு" என்று போராட்டம் செய்திருந்தால், பலர் இரண்டு மொழிகளையும் கற்றிருப்பார்கள்


8. தமிழ் ஒரு சிறந்த மொழிதான். ஆனால் கடந்த ஐம்பது வருடங்களாக அரசியல்வாதிகள் பாமர மக்களை வேறு மொழிகளை கற்க விடாமல் செய்து விட்டார்கள். 


9. சந்தேகம் இல்லை. தமிழ் மொழி  நம்முடைய தாய் மொழி தான். ஆனால் தமிழர்களைத் தவிர வேறு யாரும் தங்கள் மொழியைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதில்லை. 


10. தமிழ் தெரிந்தால், தமிழ் நாட்டில் மட்டும் வாழ முடியும். ஹிந்தி தெரிந்தால், இந்தியாவில் வாழலாம். ஆங்கிலம் தெரிந்தால், உலகில் வாழலாம்  


11. சில வகுப்பினர் மட்டும் எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப் படாமல், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளைக் கற்று முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


12. தமிழ் மக்களின் மேலும், தமிழ் நாட்டின் மேலும் உள்ள அக்கறையால் இதை எழுதினேன். பலருக்கு இது பிடிக்காது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு ஆசை. அதற்காக என்னை ஆள் வைத்து அடிக்க வேண்டாம். நான் வயதானாவன். என்னால் தாங்க முடியாது.

No comments :

Post a Comment