Thursday, May 10, 2018

MEDICAL TREATMENT / மருத்துவம்

MEDICAL TREATMENT:

Anyone who is practicing medicine will vouch that his system is the best. Anyone who is cured of a serious ailment will swear that the system he is treated is the best.


It is found that 99.99% of the DNA of all people is the same. Only 0.01% makes the difference. There in that difference, God plays his trick.


I have read articles about treatment methods of geniuses, I have interacted with specialists in various fields and I have my own personal experience for 76 years.


There are mainly three reasons for getting sick. The first reason is genes-related, which is hereditary. The second reason is the food habits. The third reason is bad habits. Another reason may be Karma.


The constitution of the body varies from person to person. Therefore, what is medicine for one may be a poison for the other. For Eg. Ginger which is considered to be good for digestion may not be suitable for a person suffering from ulcer. Similarly, garlic may not be suitable for a person suffering from IBS. Hence it is not advisable to suggest medicines to others.


Whatever be the reason, it is wrong to self-medicate. It is dangerous. One should go to a good doctor. To avoid the expenses, many people self-medicate without going to the doctor.


There are three types of sickness. 1. Life-threatening. 2. Not life-threatening. 3. Common sickness. The same treatment cannot be given for all sicknesses. It varies from case to case.


Allopathy medicines are prepared from chemicals. Siddha medicines are prepared from metals. Ayurveda and homeopathy medicines are prepared from herbs. Each one has its own plus and minus.


In the preparation of Ayurveda, homeopathy, and Siddha medicines old systems are followed. There is no invention. In Allopathy, there are developments in surgery, investigation, and treatment.


If the sickness is life-threatening, Allopathy treatment can be preferred. If it is not life-threatening, Siddha, Ayurveda, or homeopathy treatments are good. Metals in Siddha medicines and chemicals in allopathy medicines have side effects.


Our ancestors had told us that starving is the best cure. To starve on certain days or occasions is good for health. It gives rest to the digestive system and improves health. Yoga, meditation, and regular exercise also help to a great extent.


Last but not least. In India everyone is a doctor, engineer, lawyer, judge, administrator, philosopher, etc., Everyone has his own belief. They will follow only according to their belief. They will change only after some experience. It is God's will.


Unlike the US, medical insurance is not popular in India. People think that insurance is a bad omen. Such superstitious views should be removed. Everyone should cover insurance.

மருத்துவம் 
நோய் வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதல் காரணம் மரபு அணு சம்பந்தப் பட்டது. இது பரம்பரையாக வருவது. இரண்டாவது காரணம் உண்ணும் உணவு முறை. மூன்றாவது காரணம் கெட்ட பழக்கங்கள். 

எதுவாக இருந்தாலும் தனக்குத் தானே மருந்துகள் சாப்பிடுவது தவறு. அது ஆபத்தானது. நல்ல மருத்துவரிடம் போக வேண்டும். பலர் செலவுக்கு பயந்து மருத்துவரிடம் போகாமல் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.


நோய்களில்  மூன்று விதம் உண்டு. 1. உயிருக்கு ஆபத்தானது. 2. உயிருக்கு ஆபத்து இல்லாதது. 3. சாதாரண வியாதிகள். எல்லாவற்றிற்கும் ஒரே விதமாக சிகிச்சை செய்ய முடியாது. சிகிச்சை முறை மாறு படும்.


ஆங்கில மருந்துகளில் இரசாயனப் பொருட்கள் உள்ளன. சித்தா மருந்துகளில் உலோகங்கள் உள்ளன. ஆயுர்வேத மருந்துகள் தாவரங்களில் இருந்து தயாரிப்பது. ஒவ்வொன்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது.


ஆயுர்வேத, சித்தா மருத்துவ முறைகளில் பழைய முறையையே பின் பற்றப் படுகிறது. விக்ஞான முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. ஆங்கில மருத்துவம் அறுவை சிகிச்சையிலும், மற்ற சிகிச்சையிலும், பரிசோதனை முறையிலும்  பெரும் அளவு முன்னேறியுள்ளது.


ஆங்கில மருத்துவர்கள் நோய் தீவிரமாக இருந்தால் தான் ஊசி மூலம் மருந்தைச் செலுத்து வார்கள். மற்றபடி மாத்திரை மூலம் தான் குணப் படுத்துவார்கள். ஆனால் கிராம மக்கள் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தினால் தான் அவர் சிறந்த டாக்டர் என்று நினைப்பதால் கிராம மருத்துவர்கள் ஊசி மூலம் மருந்தை செலுத்துவது உண்டு.


உயிருக்கு ஆபத்து என்றால் ஆங்கில மருத்துவம் சிறந்தது. உயிருக்கு ஆபத்து இல்லை ஆனால் சீக்கிரம் குணம் காண வேண்டும் என்றால் சித்தா முறை நல்லது. ஆனால் அதில் உலோகங்களின் பின் விளைவுகள் உண்டு. சாதாரண வியாதிகளுக்கு ஆயுர்வேத முறை நல்லது. பின் விளைவுகள் இல்லாதது.


கை வைத்தியம் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ளாது. ஒருவருக்கு மருந்தானது மற்றவருக்கு விஷமாகும். உதாரணமாக, இஞ்சி ஜீரணம் செய்ய நல்லது. அதுவே இரைப்பை நோய் உள்ளவருக்கு கெடுதல். வேண்டும் என்றால் முதல் சிகிச்சையாக செய்து பார்க்கலாம்.


லங்கணம் பரம ஔஷதம்" என்று கூறுவார்கள். குறிப்பிட்ட நாட்களில் உண்ணாமல் பட்டினி இருப்பது உடலுக்கு நல்லது என்று முன்னோர்கள் சொல்வார்கள். அது ஜீரணம் செய்யும் அவயவங்களுக்கு ஓய்வும், உணவை ஜீரணம் செய்யவும் உதவுகிறது என்பார்கள். இது எவ்வளவு தூரம் சரியானது என்பது ஒவ்வொருவர் அனுபவத்தைப் பொருத்தது.


கடைசியாக, ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதன்படி தான் அவர்கள் செல்வார்கள். நம்பிக்கையை மாற்ற முடியாது. அனுபவித்த பிறகு தான் அது மாறும். அது இறைவன் கையில்.

அமெரிக்காவைப் போல இந்தியாவில் மருத்துவக் காப்பீடு பிரபலமாக இல்லை. மக்கள் அதை ஒரு கெட்ட சகுனமாக நினைக்கிறார்கள். அந்த எண்ணம் தவறு. எல்லோரும் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.






No comments :

Post a Comment