Saturday, April 7, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 256 TO 270

256. வயதான தம்பதிகள் இருவரில், யாரேனும் ஒருவர் இல்லாமல் தனியாக கஷ்டப்படும் மற்றவரை பற்றி, நீங்கள் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்தது உண்டா?

257. ஒருவன் வெற்றி அடைந்தால் கல் எறிவார்கள். தோல்வி அடைந்தால் எள்ளி நகையாடுவார்கள். அது தான் சமூகம். அவர்களைச் சிறிதும் பாராட்டக் கூடாது.

258. உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள், அளவோடு சாப்பிடுங்கள், நேரத்துக்கு சாப்பிடுங்கள், ஜீரணம் ஆவதை சாப்பிடுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.

259. ஒரு பாடத்தை சரியான வயதில், சரியான முறையில் கற்பிப்பது ஆசிரியர் கடமை. அதை சரியான முறையில் கற்றுக்கொண்டு அதன்படி நடப்பது மாணவன் கடமை.

260. அரசாங்கம், எல்லா ஏழைகளுக்கும் "நெட்லான்" கொசுவலை இலவசமாக அவர்கள் வீட்டில் வைத்துக் கொடுத்தால் டெங்கு, மலேரியா வியாதிகள் வராதல்லவா?

261. ஸ்ரீஸைலம் ஜ்யொதிர்லிங்க மல்லிகார்ஜுன சுவாமியையும், ப்ரமரம்ப தேவியையும் தரிசித்த பின் எனக்கு ஸ்படிக மாலை வாங்கி கொடுத்தான் என் மகன்

262. தேவைகள் மாறுவதால் பாதைகள் மட்டும் மாறுகின்றன. காலங்கள், காட்சிகள் மாறுவதில்லை. மனிதனும் மாறுவதில்லை. புதியவை மட்டும் தான் பழசாகும்

263. காலங்கள் மாறும் போது மனிதர்களும் மாற வேண்டும்.வாழ்க்கை புதிதாகிக் கொண்டே இருக்கிறது.மனிதன் பழசாகிவிடக் கூடாது. முடியுமா, முடியாதா?

264. அமெரிக்காவில் குடியேறி விட்டதால், தான் ஒரு அமெரிக்கன் ஆகப் போகிறோம் என்ற எண்ணத்தில், இந்தியக் கலாசாரத்தை இழிவாகப் பேசுவது நியாயமா?

265. எதிர்த்துப் பேசும் குணம் எனக்குப் பிடிப்பதில்லை. கருத்து வேறுபாடா, ஒத்துப் போகவில்லையா, மௌனம் ஸர்வார்த்த சாதனம்.மௌனம் கலகம் நாஸ்தி.

266. என்ன காரணத்தினால் குழந்தைகளைக் குறைத்தோம்? ஒரு மகனின் தயவில் எப்படி வாழ முடியும்? அவனுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் என்ன செய்வது?

267. மற்ற மாநிலங்களில் இருந்து வந்து,தமிழ் நாட்டில் வேலை செய்து பொருள் சம்பாதித்தால் அது தமிழனின் "வந்தாரை வாழ வைக்கும் பண்பு" சரிதானே?

268. ஒரு மொழியின் அழகே, ஒரு சரியான வார்த்தையை, சரியான இடத்தில், சரியான அர்த்தத்தில், ஒரு நீர் ஓட்டம் போல உபயோகிப்பதில் தான் இருக்கிறது.

269. திருமணத்தில், மனைவி தன்னைக் கணவனிடம் அடமானம் வைக்கவில்லை. Marriage does not mean a woman morgages herself to her husband [ supreme court]

270. வெளி உலகத்துக்கு வந்து, பிரச்சனைகளை சந்தித்து, கஷ்டப் படுவதை விட கற்பத்திலேயே இருந்து இறைவனுடன், தாயுடன் பேசிக் கொண்டு இருக்கலாமே.




No comments :

Post a Comment